இதயம் பேத்துகிறது – 6

நேற்றைக்கு பஜாரில் நின்று உரக்க அழைத்துக் கொண்டிருந்த பஜாரி பற்றி எழுதியிருந்தேன்.

போட்டோ விட்டுப் போய் விட்டது. இதோ-

விட்டுப் போன இன்னொரு விஷயமும் இருக்கிறது.
 
ஜப்பானில் பிச்சைக்காரர்கள் உண்டா என்று தெரிந்து கொள்கிற என் ஆர்வம்.
 
இது தன்னிச்சையாகவே உண்டு என்றாலும் இன்னொரு காரணமும் உண்டு. பார்த்து ரொம்ப நாளான என் நண்பன் ஒருத்தனோடு போனில் மட்டும் பேசி வருகிறேன். அவன் ஜப்பானில் பிச்சைக்காரர்களே கிடையாது என்று சாதித்தான். நானும், உலகின் இரண்டாவது பெரிய எக்கானமி ஆயிற்றே என்று நம்பினேன். ஆனால் அங்கே ஒரு பிச்சைக்காரனைப் பார்த்ததும் உடனே போட்டோ எடுத்துக் கொண்டேன்.
 
வந்ததும் முதல் வேலையாக அந்தப் படத்தை அவனுக்கு மின்னஞ்சல் செய்து ‘பிச்சைக்காரனுடன் ஜப்பானில் நான் எடுத்துக் கொண்ட படத்தை அனுப்பியிருக்கிறேன்’ என்று எழுதியிருந்தேன்.
 
அதற்கு அவன் அனுப்பிய பதில்,
 
“இதில் யார் பிச்சைக்காரன்?” 
 
அந்தப் படம்தான் மேலே இருப்பது.

அலுவலகத்துக்கு தினமும் ரயில்தான். பதினைந்து நாட்களுக்கு உண்டான ரயில் அப் அண்ட் டவுன் டிக்கட்டுகளை வாங்கிக் கொடுத்தார்கள். ஹோட்டலில் தினமும் காலைச் சிற்றுண்டிக்கு டோக்கன் வாங்கி பதினைந்து நாளுக்கு ஒட்டு மொத்தமாகக் கொடுத்து விட்டார்கள். பகல் உணவு அலுவலகத்தில் என்பதால் டோக்கன் இல்லை. ராத்திரி அவர்கள் அறிமுகப் படுத்திய இந்திய ரெஸ்டாரன்ட்டுக்குப் போவோம் என்கிற அண்டர்ச்டாண்டிங்கில் ராத்திரிக்கு டோக்கன் தரவில்லை.

இரண்டு காரணங்களால் அந்த இந்திய உணவுச்சாலைக்கு நாங்கள் அடிக்கடி போகவில்லை.

முதலாவது அந்த ஹிமாச்சல்காரி காமப் பார்வை பார்த்துக் கொண்டு அடிக்கடி குனிந்து பரிமாறினாள். இரண்டாவது அந்த நேபால்காரன் அவளை அவுட்டர் மோஸ்ட் ஆர்பிட்டில் இருக்கும் ப்ரீ எலெக்ட்ரான் ஆக வைத்திருக்கிறானோ என்கிற சந்தேகம் வருகிற மாதிரி நடந்து கொண்டான். (கோ வாலன்ட் பான்ட் ஞாபகம் இருக்கா?)

என்னடா இவனுக ஏர் போர்ட்டிலிருந்து வர பஸ், ஹோட்டலிலிருந்து ஆபிஸ் போக ரயில் என்று படுத்துகிறார்களே என்று முதலில் அலுப்பாக இருந்தது. கார் வைத்திருக்கிறவன் கூட ரயிலிலும் பஸ்சிலும்தான் போகிறான். அரசாங்கத்தின் போக்குவரத்து இல்லாத இடங்களுக்கு மட்டும்தான் கார். நாங்கள் போன கம்பெனியின் நம்பர் ஒன் ஆசாமி சீசன் டிக்கட் வாங்கிக் கொண்டு தினம் ரயிலில்தான் வருகிறார்.

அனாவசிய செலவுகளைத் தவிர்த்தல் அவர்களது தேசிய குணமாக இருக்கிறது.

ரயில்கள் சொன்ன நேரத்துக்கு வருவது மட்டுமில்லை ஆணி அடித்த மாதிரி ஒரே இடத்தில் நிற்கின்றன. தரையில் அம்புக்குறி போட்ட இடத்தில் சொல்லி வைத்த மாதிரி கதவு வருகிறது. படத்தைப் பாருங்கள்.

நம்ம ஊர் எலெக்ட்ரிக் ட்ரெயினில் எவ்வளவு கால்குலேட் பண்ணி நின்றாலும் வென்டர் கம்பார்ட்மென்டோ, லேடீஸ் கம்பார்ட்மென்டோ வந்து பிளேடு போடுவதும், வண்டி நின்ற பிறகு என்ட்ரன்ஸ் தேடி ஓடுவதும் அங்கே சுத்தமாக இல்லை.

ஒரு பெட்டியில் ஏற மூன்று பேர் இருந்தாலும் ஒருத்தர் பின்னல் ஒருத்தராகத்தான் ஏறுகிறார்கள்.

ரயில் உள்ளே சர்வ சௌக்யமாக இருக்கிறது. ஆட்கள் புளி அடைகிற மாதிரி அடையாத அளவுக்கு பிரீக்வன்சி இருக்கிறது. எல்லாப் பெட்டிகளும் குளிர் பதனம். செக்கிங் ஸ்குவாட் எல்லாம் கிடையாது. ஸ்டேஷனுக்குள்ளே வருகிற போதே டிக்கட்டை பஞ்ச் செய்ய எந்திரங்கள் இருக்கின்றன. அப்படிச் செய்யாவிட்டால் டோல் கெட் மாதிரி இருக்கிற சமாச்சாரம் திறப்பதில்லை. எகிறிக் குதித்தால் சீருடை அணிந்த ஆசாமி வருகிறான். வெளியே போகிற போதும் இதே சிஸ்டம். ரிடர்ன் டிக்கட்டாக இருந்தால் டிக்கட் வெளியே வரும், இல்லாவிட்டால் சாப்பிட்டு விட்டு கேட்டை திறந்து விடும். சீசன் டிக்கட்டாக இருந்தால் ஸ்கேன் பண்ணி விட்டு அனுமதிக்கிறது.

ரின்கான் என்கிற வார்த்தை அங்கே பேட்டை என்கிற மாதிரி போலிருக்கிறது. மினாமி ரின்கான், இகாஷி ரின்கான் என்று ஸ்டேஷன் பெயர்கள் எல்லாம் ரின்கான் மயம்.

ரன்னிங்கில் ஏறுவது இறங்குவதெல்லாம் சாத்தியமில்லை.

ஆட்கள் ஏறினதும் ஆட்டோமேட்டிக் கதவு மூடிக் கொள்கிறது. ரயில் நிற்கும் வரை திறப்பதில்லை.

அடுத்த ஸ்டேஷன் பெயர் என்ன என்பது எல்.ஈ.டி. யில் எல்லாக் கதவுக்குப் பக்கத்திலும் வருகிறது. ஒலிப்பதிவு செய்த அறிவிப்பாகவும் வருகிறது. இப்போது கூட ‘மினாமி ரின்க்கான்’ என்று கிளி கொஞ்சும் குரல் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

(தொடரும்)

Advertisements

40 comments

  1. ஸ்ரீராம் ; முதல்ல வந்தது மட்டுமில்லை, கல்யாணங்கள்ளே சில பொறுப்பான ஆசாமிங்க கடைசி ஆள் சாப்பிடற வரைக்கும் இருந்து விசாரிச்சிட்டு அப்புறம் அடுத்த வேலையை பார்ப்பாங்க. அது மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கீங்க! நன்றி.

 1. அரசாங்கத்தின் போக்குவரத்து இல்லாத இடங்களுக்கு மட்டும்தான் கார். நாங்கள் போன கம்பெனியின் நம்பர் ஒன் ஆசாமி சீசன் டிக்கட் வாங்கிக் கொண்டு தினம் ரயிலில்தான் வருகிறார்”//

  நம்மூர்க் காரங்க கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று…

 2. ரயில்கள் சொன்ன நேரத்துக்கு வருவது மட்டுமில்லை ஆணி அடித்த மாதிரி ஒரே இடத்தில் நிற்கின்றன. தரையில் அம்புக்குறி போட்ட இடத்தில் சொல்லி வைத்த மாதிரி கதவு வருகிறது. படத்தைப் பாருங்கள்//

  ம்…………………………..ஹூம்……(நீண்ட பெருமூச்சு)

 3. ஸ்ரீராம் இது நியாயமே இல்லை – எல்லா மெடலும் உங்களுக்குத்தானா? இந்தப் பதிவைப் படித்துவிட்டு, பிறகு நான் வேளுக்குடி கிருஷ்ணன் பாகவதம், காயத்ரி வெங்கட்ராகவன் திருப்பாவை, சிக்கில் குருசரண் திருவெம்பாவை எல்லாம் கேட்டு வந்து இங்கே கருத்துத் தெரிவிக்குமுன் கோப்பையைத் தட்டிச் சென்றுவிட்டீரே! (அதுமட்டுமல்ல – நான் சொல்ல நினைத்த கருத்துக்களையும் – எழுதி வாயடைக்கச் செய்துவிட்டீர்கள்)

 4. //ரின்கான் என்கிற வார்த்தை அங்கே பேட்டை என்கிற மாதிரி போலிருக்கிறது.//

  நல்ல அப்சர்வேஷன்.. நீங்க எழுதறதைப் பார்த்தா ஜப்பானே போயிட்டு வந்த மாதிரியேயில்லருக்கு!!

  அந்த குட்டி ரொம்ப நல்லாருக்கு.. போட்டோ மட்டுந்தான் எடுத்தீங்களா?

  1. சீமாச்சு, குட்டி பத்தியெல்லாம் காமென்ட் அடிக்கறீங்க, வீட்ல எல்லாரும் ஹாப் இயர்லி லீவுக்கு ஊருக்குப் போயிட்டாங்களா?

 5. நம்மூரில் “பஜார்ல பேஜார் பண்ணினே நிஜார கழட்டிடுவேன்”ன்னு சொல்லுவாங்க.. இங்க அந்த பஜாரியே நிஜார் இல்லாம நிக்கறா..
  (அட.. ரெண்டாவது போட்டோலேயும் நிஜார் சம்பந்தப் பட்டிருக்கே..!!)
  😉

 6. ஜப்பான் பீச் போயிருந்திங்களா . இன்னும் கலர் கலரா கண்ணுக்கு குளிர்ச்சியா போட்டோ எடுத்திருக்கலாம்.

  // முதலாவது அந்த ஹிமாச்சல்காரி காமப் பார்வை பார்த்துக் கொண்டு அடிக்கடி குனிந்து பரிமாறினாள். இரண்டாவது அந்த நேபால்காரன் அவளை அவுட்டர் மோஸ்ட் ஆர்பிட்டில் இருக்கும் ப்ரீ எலெக்ட்ரான் ஆக வைத்திருக்கிறானோ என்கிற சந்தேகம் வருகிற மாதிரி நடந்து கொண்டான். (கோ வாலன்ட் பான்ட் ஞாபகம் இருக்கா?) //

  இது மட்டும் கொஞ்சம் விளங்கல..

  1. கார்த்தி, பீச்சுக்குப் போயிருந்தோம், கப்பல்லே கூட பிரயாணம் பண்ணிப் பார்த்தோம். முடிக்கிறதுக்குளே அந்தப் படங்களைப் போட முடியுதான்னு பார்க்கறேன்.

   அவுட்டர் மோசட் ஆர்பிட்டில் இருக்கும் ப்ரீ எலெக்ட்ரான்கள் ஷாரிங்குக்கு தயார் நிலையில் இருப்பவை. இது மாதிரி மூலகங்கள் சேரும் போது கிடைக்கிற பாண்டிங்குக்கு கோ வாலன்ட் பாண்டுன்னு பேர் கெமிஸ்ட்ரியிலே….

 7. முதல் முறையாக வருகிறேன். தங்களின் பதிவு அருமையாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி.

  அன்பன்
  க. சுரேந்திரன்

 8. பஜார்ல நிக்கறதுனால பஜாரியா..? பஜாரிங்கறதால பஜார்ல நிக்கறாளா? நிச்சயமா நிஜாரி இல்லை…அதுதான் ‘அன்புடன் மணிகண்டன்’ அவ நிஜார் போடல்லைன்னு சொல்லிருக்காரே…

 9. ரொம்ப ரொம்ப ரசித்தேன். பழைய parts-ம் படிதேன். ஜப்பான் எனக்கு பிடித்த நாடு இது வரை சென்றதில்லை. உங்களின் நகைச்சுவையான நடையில் தொடர்ந்து படிக்க ஆவலாக உள்ளேன்

 10. பிச்சைக்காரனை ஃபோட்டோ எடுத்தேன் அப்படிங்கறதப் படிச்சுட்டு போட்டவைப் பாக்குறப்பவே உங்க நண்பர் என்ன கேள்வி கேட்டுறுப்பாருன்னு நான் யூகம் பண்ணின அதே கேள்வியே அவர் கேட்டதுதான் இதுல ஆச்சர்யம். !

  அவ்வவ்வவ…

  ட்ரெய்ன் சிங்கப்பூர்லயும் இதே போலத்தான்.இந்தியா நிறைய விதயங்களில் மாற வேண்டியிருக்கிறது.

  டில்லி ட்ரெயின் சர்வீஸ்-மெட்ரோ- கொஞ்சம் இது போல இருக்கிறது என்கிறார்கள்.

  அப்புறம் அந்தக் கறுப்பு உடை அம்மணியை சரியாக சைட் போஸில் எடுத்திருக்கிறீர்களே எப்படி???????

  {Very simple, because I visited Japan 2 years ago!}

  இந்தப் பதிவிலேயே நான் ரசித்த ரொம்பக் காமெடியான வாசகம் இதுதான்!

 11. அந்த பஜாரியின் முக்கால் காலை விட நிஜாரில் நீங்கள் இரண்டு அரைக்காலையும் முழுக்கா(லாக) காட்டி நிற்பது கவர்ச்சியாக இருக்கிறது. 🙂

  நீங்கள் இப்படி கை கால் தெரியுமாறு கவர்ச்சி உடை அணிந்து கொண்டு இரவு உணவு சாப்பிட சென்றிருந்தால் நிச்சயம் உங்கள் கால் அழகில் மயங்கிதான் அந்த பெண் காமப்பார்வை பார்த்து இருப்பாள். 🙂

  எப்ப போடுவீங்க, எப்ப போடுவீங்க… அந்த ஹிமாச்சல்காரி குனிந்து பருமாரும் போது எடுத்த படத்தை எப்போ போடுவீங்க….. 🙂

  அவுட்டர் மோஸ்ட் ஆர்பிட் உதாரணம் அருமை சார்.

 12. //நீங்கள் இப்படி கை கால் தெரியுமாறு கவர்ச்சி உடை அணிந்து கொண்டு இரவு உணவு சாப்பிட சென்றிருந்தால் நிச்சயம் உங்கள் கால் அழகில் மயங்கிதான் அந்த பெண் காமப்பார்வை பார்த்து இருப்பாள். //

  அவனா நீயீ !!!!!!!

 13. வெளி நாட்டு பெண் என்றாலும்… ஒரு பெண்ணின் படத்தை போட்டு அவரை விபச்சாரி என்று சொல்வது எந்த வகையிலும் தவறு…. சட்டப்படி குற்றமே…

  அவர் அழைத்தார் அல்லது அப்படிபட்டவர்தான் என்பதை நிருபிக்க ஆதாரம்??

  இது போல் இன்னொரு வெளிநாட்டு காரன் நமது பெண்களின் படத்தை போட்டு நான் இந்தியா செல்லும் போது ஒருத்தி இப்படி அழைத்தால் என்று சொன்னால்?

  ஜப்பானில் மட்டுமில்லை…. நமது நாட்டில் அனைத்து முக்கிய நகரங்களிலும் தெருவோரம் நின்று “அழைக்கும்” பாலியல் தொழில் புரிவோர் இருக்கத்தான் செய்கிறார்கள்..

  அதை செய்தியாக எழுதியவரை சரி…. படம் போட்டது தவறு.

  கூடுதலாக பஜாரி என்று பலரும் வார்த்தை பிரயோகம் செய்வதும் தவறே…..

 14. //அதற்கு அவன் அனுப்பிய பதில்,

  “இதில் யார் பிச்சைக்காரன்?”//

  ஆஃபீஸ்ல இருக்கிறப்போ ஒரு மனுஷனை இப்படியெல்லாம் சிரிக்க வைக்கக்கூடாது. நானும் எவ்வளவு தான் நரசிம்மராவ் அளவுக்கு சிரிக்காமலே இருக்க முயற்சி செஞ்சாலும்….. முடியல

 15. //ஜப்பானில் பிச்சைக்காரர்கள் உண்டா என்று தெரிந்து கொள்கிற என் ஆர்வம்.//

  ஜப்பானில் பிச்சைக்காரர்கள் இல்லை. சிலர் உங்களுக்கு அப்படித் தெரிந்திருந்தாலும் அவர்கள் “அம்மா…தாயே” என்று பிச்சை எடுப்பவர்கள் அல்ல. (மாறாக homeless people ஆகத்தான் இருப்பார்கள்!) காரணம் homeless peopleக்கும் ஜப்பான் அரசு மாதாமாதம் உதவித்தொகை வழங்குகிறது!
  உங்க பயணக் கட்டுரையை முழுசா படிக்கல. படிச்சிட்டு மறுமொழிகிறேன். நன்றி.

  1. பத்மஹரி, நீங்க சொல்றது சரிதான். படத்தில இருக்கிற ஆள் கூட டிரெடிஷனல் பிச்சைக்காரர் இல்லை. என் சங்கீதம் பிடிச்சிருந்தா காசு போடுங்கன்னு எழுதி (பார்க்க, கித்தார் பெட்டி) வெச்சிட்டு வாசிச்சிக்கிட்டு இருந்தார். உங்க ஊர் லெவலுக்கு அது பிச்சைதானே?

 16. //அவுட்டர் மோஸ்ட் ஆர்பிட்டில் இருக்கும் ப்ரீ எலெக்ட்ரான் ஆக வைத்திருக்கிறானோ என்கிற சந்தேகம் வருகிற மாதிரி நடந்து கொண்டான். (கோ வாலன்ட் பான்ட் ஞாபகம் இருக்கா?)//

  இதான் எழுத்துல கெமிஸ்டிரி வேணுங்கறதா……… 😉

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s