துபாய் ராஜா தந்த ஆனந்த அதிர்ச்சி!

நாம் எல்லோருமே ரெகக்னிஷன் க்கு ஏங்குகிறோம்.

எனக்கு அது தெரியும், இது தெரியும்… என்னன்னவோ தெரியும்… ஆனாலும் நான் விரும்புகிற ரெகக்னிஷன் இன்னும் கிடைக்கவில்லையே என்கிற ஏக்கம் எனக்கு, உங்களுக்கு எல்லாருக்கும் இருக்கிறது.

அதற்காகத்தான் ப்ளாக்.

ப்ளாக் என்கிற சமாச்சாரத்தை கொண்டு வந்தவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

இன்று காலை எனக்கொரு ஆனந்த அதிர்ச்சி.

தந்தவர் துபாய் ராஜா!!(ப்ளாக்கர்)

சென்னையிலிருந்து பெங்களுர் வருகிற சாலையில் நூற்றி இருபது கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்த போது என் அலை பேசியில் ஒரு அழைப்பு.

எடுத்தால்,

“நான் ராஜா பேசறேன், ஜவஹர்தானே?”

“நான் ஜவஹர்தான், நீங்க யாரு தெரியலையே?”

என்றதும், நான் பெற்ற பதில் நான் வாழ்வில் மறக்க முடியாதது!

“நான் உங்க ரசிகன் ராஜா”

ரஜினி ஒருமுறை கமல் பற்றி சொல்கிற போது

“அவர் நடிகருக்கு நடிகர்” என்றார்.

கமல் ஒரு ரசிகனுக்கு நடிகராக இருப்பது பெரிதல்ல. நடிகருக்கே நடிகராக இருப்பதுதான் பெரிய விஷயம். போட்டியாளர்கள் நம்மை ரசிப்பதை விட பெரும் பேரு வேறெதுவும் இல்லை. இந்த பெரும் தத்துவத்தைத்தான் அவர் சொன்னார் என்பதை நான் புரிந்து கொண்டது-

இன்று காலைதான்!

என்னுடைய சீனியர், கவிதையிலும், கட்டுரையிலும், கதையிலும் எனக்கு முன்னிருந்தே விற்பன்னராக இருக்கிற ஒருத்தர், உங்கள் ரசிகன் என்று அறிமுகப் படுத்திக் கொள்வது என் உடம்பை சிலிர்க்க வைத்தது!

அவர் சொன்னது நிஜமா தெரியாது, ஆனால் அதிலிருந்த பிரியம் என்னை சிலிர்க்க வைத்தது.

hats off ராஜா!!

இப்படிப் பேச ரஜினிக்கு அப்புறம் உங்களுக்குத்தான் தன்னம்பிக்கை இருக்கிறதோ?

Advertisements

23 comments

 1. சஞ்சய் சுப்ரமண்யம் கேக்கபோன இடத்துலே, திடீர்னு ஒருத்தர் வந்து கையைப்பிடிச்சுக் குலுக்கி, துளசிதளம் துKளசி கோபாலுன்னு சொன்னப்ப இப்படித்தான் இருந்துச்சு. இத்தனைக்கும் அவர் பதிவர் இல்லை. வாசகியாம்.

  எப்படிக் கண்டுபிடிச்சீங்கன்ன்னு ஆனந்தக்கண்ணீரோட கேட்டால் வச்சாங்க ஆப்பு……….. கோபாலை வச்சு அடையாளம் கண்டுக்கிட்டாங்களாம்!

 2. என்னடா 2 நாளா ஜப்பானில் இருந்து தகவல் (பதிவு) இல்லையே! என்று அடிக்கடி எட்டி பார்த்தேன்…

  ஜப்பானை பாதியில் விட்டுவிட்டு சென்னை பயணமா….?

  சார் 120கிமீ வேகத்தில் எழுதுங்க! கார் ஓட்டாதிங்க!

  உன்மைதான் பதிவுலகம் தரும் அங்கீகாரம் அலாதியானது. அந்த அங்கீகாரத்தால் கிடைக்கும் பதிவுபோதையும் அப்படியே!

  இன்று பலர் எழுதினாலும் எளிதாக பலரை உங்கள் பதிவுகள் சென்றடைந்ததற்கு உங்கள் எழுத்து திறமையும் / எழுத்து நடையும் தான் காரணம்.

  நான் அதிகம் பின்னூட்டம் எழுதுவதில்லை என்றாலும், தினமும் உங்களை பின்தொடருகிறேன்.. தொடருவேன். 🙂

  நான் எழுதுவது என் தொழில்/துறை சார்ந்த பதிவுகள் என்றாலும்…. கடந்த இரண்டு வருடங்களில் நூற்றுக்கணக்கான நண்பர்களை பெற்றுதந்துள்ளது.

 3. சென்ஷியை வழிமொழிகிறேன்..
  அப்புறம் சார்.. உங்களின் ஹாஸ்யமான எழுத்து நடைக்கு எங்களைப் போன்ற நிறைய பேர் ரசிகர்களாய் இருக்கிறோம் சார்.. வாழ்த்துக்கள்.. 🙂

 4. சார், என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க.. எனக்கு வெக்கம் வெக்கமா இருக்கு… 🙂

  வாழ்க்கையில் எனக்கு ரொம்ப கூச்சமான விஷயம்ன்னா அது பாராட்டுதான். நல்ல ரசிகனா இருப்பவர் தான் நல்ல மனிதராக இருக்கமுடியும் என்பதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினி கூட எளிய மனிதன் என்னையும் ஒப்பிட்டு இருப்பது நெகிழ்ச்சியாகவும், மிக்க மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

  உங்களுக்கு ஒரு விருது தந்தேனே. அது பற்றி ஒண்ணும் சொல்லலை.

  இருங்க நானும் சீக்கிரம் பதிவு போட்டு உங்களை பழிவாங்குறேன். 🙂

 5. //எனக்கு அது தெரியும், இது தெரியும்… என்னன்னவோ தெரியும்… ஆனாலும் நான் விரும்புகிற ரெகக்னிஷன் இன்னும் கிடைக்கவில்லையே என்கிற ஏக்கம் எனக்கு, உங்களுக்கு எல்லாருக்கும் இருக்கிறது.

  அதற்காகத்தான் ப்ளாக்.//

  அருமை. நானும் ஒரு ப்ளாக் ஆரம்சிருக்கேன் (எல்லாம் உங்களை பார்த்துத்தான். நன்றி. மீண்டும் எப்போ ஜப்பானுக்கு போறோம்…..)

  அன்பன்
  க. சுரேந்திரன்

 6. துபாய் ராஜா தந்த இன்ப அதிர்ச்சியில் இன்னும் “இதயம் பேத்துகிறது -7” போடாத அண்ணன் ஜாவர்லால் அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்..

  இது போன்று தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கும் போது.. பொறுப்பில்லாமல் ஆறாவது பாகம் முடிந்த பின்னரே..இன்ப அதிர்ச்சி தந்த துபாய் ராஜாவையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

  அன்புடன்,
  “அடுத்த சுஜாதா” அண்ணன் ஜாவர்லால் ரசிகர் மன்றம்.
  அமெரிக்க நார்த் கரோலினா வட்டம், 67வது கிளை..
  வட்டச் செயலாளர், சீமாச்சு

 7. எனக்குக்கூட இம்மாதிரி பிடித்த பதிவர்களுடன் பேசினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை வெகு நாட்களாகவே உண்டு.அதுவும் இந்தியாவந்திருக்கும் போது.இப்படியும் செய்தே காட்டி இருக்கும் மேலான பதிவரின் அறிமுகம் பார்த்து உங்கள் இருவரையும் பாராட்டுகிறேன். நானே அவ்விடம் இருந்ததாக கற்பனையில் சஞ்சரித்து விட்டேன். எனக்கும் சான்ஸ் கிடைக்கும். நிறைய எழுத மிஸ் பண்ணிக் கொண்டு இருக்கிரேன் பின்நூட்டங்கள் உங்களுக்குக் கொடுக்க.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s