இதயம் பேத்துகிறது – 7

நம் மின்சார வண்டிகளில் ‘பீச் டு தாம்பரம்’ என்று எழுதுகிற இடத்தில் ‘கடாஷி-இநோஷிமா’ என்று எழுதியிருந்தது.

“கடேயசீலே இநோஷிமா ஸ்டேஷன்னு போட்டிருக்கானோ?”

“நீ இறங்க வேண்டிய மினாமி ரின்க்கான்லே இறங்கல்லைன்னா இநோஷிமாவிலே கொண்டு கடாசிடுவானுங்க”

மினாமி ரின்கானில் இறங்கி நாங்கள் போக வேண்டிய டாய்-கி-ஷா கம்பெனிக்கு டாக்சியில் போனோம்.

டாக்சி டிரைவரைப் பார்த்து ஸ்ரீ ஆனந்தன்,

“எண்பத்தி அஞ்சு இருக்குமா?” என்று கேட்க,

எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி, “இன்ச்ல சொல்றியா செண்டிமீட்டரா?” என்றான்.

“ஓட்டுனரைப் பாருடா… எங்க பாக்கறே?”

“ஓ… இவரா, இவர் ரிடயராகியே எண்பத்தி அஞ்சு வருஷம் இருக்கும் போலிருக்கே”

“ஹிரோஷிமா நாகசாகி சம்பவத்தை நேர்ல பார்த்தவரா இருப்பாரு”

“அந்த அதிர்ச்சியில கோணிகிட்ட வாய் இன்னம் சரியாகலை பாரு”

நாங்கள் போன கம்பெனி எல்லாவற்றையும் அவுட் சோர்ஸ் செய்திருந்தது. வாங்கி அசெம்பிள் செய்து தருவதோடு சரி. கோடிக்கணக்கில் சம்பாதிக்கிற அந்தக் கம்பெனியின் சைஸ் ஒரு டென்னிஸ் கோர்ட் அளவே இருந்தது. ரொம்ப டெக்னிகல் விஷயங்கள் வேண்டாம். நாங்கள் வாங்கப் போன ரோபோவின் படம் மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்.

மதியம் இந்திய உணவு ஏற்பாடு செய்கிறேன் என்று எங்கிருந்தோ நான் வாங்கி வந்திருந்தார்கள்.

ஆப்பிரிக்கா கண்டம் வடிவத்தில் இருந்த அந்த நானை மடகாச்கருக்கு அருகே பிடித்துக் கொண்டு ஜாம்பியா வால் யாரையாவது அடித்தால் ஆள் குளோஸ்.

“கொஞ்சம் தடியா இருக்கு போலிருக்கு” என்றான் பூரியா.

“கொஞ்சமா, இடது காலுக்கடியில் மிதித்துக் கொண்டு ரெண்டு கையாலும் இழுத்தாலும் பிக்க முடியலை. எங்களோட 3516 வண்டிகள்ளே டிரைலரை இழுக்க யூஸ் பண்ணலாம் போலிருக்கு!”

மொத்த ஜப்பானுமே லேசாக ஆடிக் கொண்டே இருப்பது மாதிரி உணர்வு இருந்து கொண்டே இருந்தது. எப்போதுமே ஒரு லிப்டில் போகும் உணர்வு இருந்தது.

இப்படி எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்த போது ஒரு நாள் எங்களை சீக்கிரமே பாக் பண்ணி அனுப்பினார்கள்.
 
ஏன் என்ற போது இன்றைக்கு டைபூன் என்றார்கள்.
 
அப்படி என்றால் என்ன என்ற போது புயல் என்றார்கள்.
 
(தொடரும்) 
Advertisements

8 comments

  1. //ஆப்பிரிக்கா கண்டம் வடிவத்தில் இருந்த அந்த நானை மடகாச்கருக்கு அருகே பிடித்துக் கொண்டு ஜாம்பியா வால் யாரையாவது அடித்தால் ஆள் குளோஸ்//

    நான வச்சி காமடி கீமடி ஒண்ணும் பண்ணலியே…. (போட்டாவ பார்த்தா நீயா நானா மாதிரியில்ல)

  2. தமாசான பேச்சிலே ஊர் விவரத்தை சும்மா புட்டு புட்டு வச்சிடுறீங்க சார்.

    5 S ரூல்ஸ் படி பச்சை பெயிண்டு அடிச்சிருக்கிறதைப் பார்த்தா டென்னிஸ் கோர்ட் மாதிரிதான் இருக்கு. உங்க பாணியில் டெக்னிக்கல் விஷயங்களையும் லைட்டா தூவி கொடுங்க. இல்லைன்னா கடைசியில் ஒரு தனிப்பதிவா போட்டுடுங்க சார்.

    ரோபோ கிட்ட கூட ரொம்ப சேஃபா தள்ளிதான் நிக்கிறீங்க. .. 🙂

    நான் வாங்கிட்டு வந்த ஆளை நாக்கு துருத்தி நானாலே அடிச்சுடுவேன் மிரட்டும்போது எடுத்த போட்டோவா அது…. 🙂

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s