இதயம் பேத்துகிறது – 8

உயரமான கட்டிடங்களில் இருப்பவர்கள் ஜாக்கிரதை என்று எச்சரித்தார்கள்.

எங்கள் அறை இருந்தது பதினாலாவது மாடி.

“காகித ஓடம் கடலலை மீது போவது போலே நால்வரும் போவோம்” என்று மனசுக்குள் பாட்டு கேட்டது.

சரிதான் இன்னிக்கு கரண்ட் கிடையாது, போன் கிடையாது என்று அலுவலகத்திலிருந்தே வீட்டுக்கு போன் செய்து சொல்லிவிட்டோம். போகும் போது கொஞ்சம் காண்டில் எல்லாம் வாங்கிக் கொண்டோம். அவசரமாகச் சாப்பிட்டு விட்டு நாலு பெரும் ஒரே அறைக்கு வந்தோம். கையில் டிராவல் இன்சூரன்ஸ் டாக்குமென்ட்டை கெட்டியாகப் பிடித்தபடி,

“ஒண்ணா வந்தோம், ஒண்ணாவே போய்டுவோம்ய்யா” என்று பீத்தல் தமிழ் சினிமா மாதிரி வசனம் பேசிக் கொண்டு உட்கார்ந்திருந்தோம்.

நம்ம ஊரில் புயல் என்றால், ‘அங்கே மையம் கொண்டிருக்கிறது, இங்கே மையம் கொண்டிருக்கிறது, வலுவடைந்தது, மேலும் தீவிரமடைந்தது, வடக்கு வடமேற்கு திசையில் நகரக் கூடும்’ என்றெல்லாம் சொல்வார்கள். கரண்ட்டை சுத்தமாக சவரம் செய்து விட்டு இந்த அறிவிப்புகளை ரேடியோவிலும் டிவியிலும் சொல்வார்கள்! கன்னியாகுமரியில் கரையைக் கடக்கும் என்பார்கள். கடைசியில் அனவேர்சாக காக்கிநாடாவில் பாவாடை நாடா அறுக்கிற அளவுக்கு அடித்து நாசம் செய்யும்.

ஜப்பானில் அவர்கள் சொன்ன நேரத்துக்கு புயல் அடித்தது.

ராத்திரி பூரா கரண்ட் இருந்தது. போன் வேலை செய்தது. காலையில் ஊர் சர்வ சாதாரணமாக இயங்கிக் கொண்டிருந்தது. சரிதான் நம்ம ஊர் மாதிரி புயல் ஏமாற்றி விட்டு தாய்லாந்துக்குப் போய் விட்டதாக்கும் என்று பேப்பர் பார்த்தால் டைபூண்-9 இதுவரை வந்ததிலேயே மோசமானது என்று போட்டிருந்தார்கள். சாயந்திரம் மராமத்து வேலைகள் எவ்வளவு வேகமாக நடந்தன என்று டிவியில் காட்டினார்கள்.

அந்த வார இறுதியில் ஜப்பானை சுற்றிப் பார்க்கும் வேலையை ஆரம்பித்தோம். விடுமுறை நாட்களில் வெறிச்சென்று இருக்கிறது. டோக்கியோவில் காலை எட்டரை மணிக்கு நாங்கள் எடுத்த படத்தைப் பாருங்கள்.

ரொம்பப் பழமையான புத்தர் கோயில்களை முதலில் பார்த்தோம்.

நம்மூர் மாதிரியே கோயில் இருந்த சன்னதியில் ஏகப்பட்ட கடைகள், கூட்டம்.

இதே போலவே, கண்ணாடி, கயிறு,புத்தர் அச்சிட்ட விசிறி, போட்டோ பிரேம்கள் என்று ஏதேதோ விற்கிற கடைகள். ஜனங்களும் உற்சாகமாக பேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். சிற்சில விஷயங்கள் எல்லா நாட்டிலும் ஒரே போலத்தான் இருக்கும் போலிருக்கிறது.

 

அதற்கப்புறம் அக்கிஹாபாரா என்கிற ஷாப்பிங் ஸ்பெஷல் இடத்துக்குப் போனோம். அங்கே ஏகப்பட்ட இந்தியர்கள், தமிழர்களைப் பார்க்க முடிந்தது. கட்டிடத்துக்குள் யானை விலை சொல்கிற ஐட்டங்களை வெளியே பிளாட்பாரத்தில் பூனை விலைக்கு விற்றார்கள். நம்ம மூர் மார்க்கட் மாதிரி செகண்ட் ஹான்ட் பொருட்கள் நிறைய கிடைக்கின்றன. இங்கே ஏதும் வாங்காதீர்கள், சிங்கப்பூரில் எல்லாம் மலிவு என்று அங்கே பலரும் அறிவுரை செய்தார்கள். (சிங்கப்பூரில் என்ன சொன்னார்கள் என்று அப்புறம் சொல்கிறேன்)

மனிஷ உடம்பு போலவே சூடு இருக்கிற மாதிரி ஹீட்டர்கள் வைத்த, காற்றடித்தால் உருப்பெருகிற பொம்பிளை பொம்மைகள் விற்றார்கள். விலை நம்மூர் காசில் இருபத்தையாயிரம்.
 
அக்கிஹாபாரா ஏரியாவில் நிறைய உயர்ந்த கட்டிடங்கள். பழைய படங்களில் கதாநாயகன் பாரின் போனதாக காட்ட வரிசையாகக் காட்டி பின்னணியில் மோகன ராகத்தில் ஜலதரங்கம் வசிப்பார்களே, அந்த மாதிரி. அங்கே நின்று ஆசை தீர நிறைய புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.
ஷாப்பிங் போகிற போது ஆளுக்கொரு பக்கமாகப் போயிருந்தோம்.
 
சரியாக  ஒருமணிக்கு குறிப்பிட்ட இடத்தில் சந்திப்பதாக ஏற்பாடு. 
 
சந்தித்த போது யார் யார் என்னென்ன வாங்கினோம் என்று பேசிக் கொண்டோம். நண்பர் கிருஷ்ணமூர்த்தி என்ன வாங்கினார் என்று கேட்டால் ஒரு மாதிரி சிரித்து மழுப்பிக் கொண்டே இருக்க, பையைப் பிடுங்கி சோதனை செய்ய முற்பட்டோம்.
 
“இரு… இரு…” என்று தடுத்து விட்டு
 
“இந்த காத்தடிக்கிற இது… அதான் பொம்மை…. காத்தடிச்சா…” என்று குழற,
 
“ஐய்யய்யோ… அதெல்லாம் ப்ரோஹிபிட்டட் ஐட்டம், கஸ்டம்ஸ்ல பாத்தா அரெஸ்ட் பண்ணிடுவாங்க” என்றோம்.
 
(தொடரும்)
Advertisements

22 comments

  1. கவிதாஜி, நக்கல் அடிக்கணும்ன்கிற முடிவோட வந்திருக்கீங்க. ஓக்கே… ஓக்கே… இந்த நாட்டில இளைஞர்களை பெண்கள் ரொம்ப நக்கல் அடிக்கறாங்கப்பா…

 1. புத்தர் கோயிலில் எடுத்த அம்மன் படங்களும்… 🙂 கைகட்டி அடக்கமாக அமர்ந்திருக்கும் புத்தர் முன் அடங்கா ஜித்தர் நீங்கள் நிற்கும் படமும் 🙂 ஜப்பான் கட்டிடப் படங்களும் அருமை.

  வார்த்தை,வர்ணனைகளில் வழக்கம் போல் விளையாடி இருக்கிறீர்கள்.

  அப்படியே அடிச்சு ஆடுங்க சார். 🙂

 2. நல்லாருக்கு… அடுத்த பகுதிக்கு வெயிட்ட்டிங்…

  எல்லாருக்கும் ஃபோன் நம்பர் அனுப்பற மாதிரி என்க்கும் அனுப்பவும்..

  என் ப்ளாகில் வந்து பின்னூட்ட்ம போடவும்.. I will not publish it.

  சீமாச்சு

  1. அப்பாதுரைஜி, டோக்யோ ஸ்டேஷனிலிருந்து இருபது நிமிஷ நடை தூரத்தில் இருந்த ‘Hotel Villa Fountaine’ வாசல் அது. இடத்தின் பெயர் Tokyo Mita வாம்.

 3. ஒரு போட்டோவில் சூப்பர் மேன் மாதிரி நீங்க நிற்கிறத பார்த்துட்டு , பின்னாடி இருந்த புத்தர் சிலை கூட சிரிச்ச மாதிரி இருக்குதுங்க. 🙂

  1. கார்த்தி, அங்கே இருந்த சில சூப்பர் வுமன்கள் கூட சிரிச்சாங்க. அந்தப் படத்தைப் போட்டால் என்னவாம்ன்னு கேட்பீங்க. அனாவசியமா கவர்ச்சியை புகுத்தறேன்னு எல்லாரும் திட்டுவீங்க! 🙂

  1. வாங்க டாக்டர் சரவணன், புதுசா ப்ளாக் ஆரம்பிச்சிருக்கீங்க போல! நான் ஒரு மயக்க நிபுணன்ன்னு அறிமுகம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க… உங்க எழுத்திலே மயக்குங்க. பாராட்டுக்கு நன்றி. வலையுலகத்திலே மேலும் ஒரு டாக்டர். ஏற்கனவே டாக்டர் சுரேஷ், டாக்டர் ப்ரூனோ எல்லாம் நம்ம நண்பர்கள்தான்.

 4. //நம்ம ஊரில் புயல் என்றால், ‘அங்கே மையம் கொண்டிருக்கிறது, இங்கே மையம் கொண்டிருக்கிறது, வலுவடைந்தது, மேலும் தீவிரமடைந்தது//

  இன்னிக்கும் சொன்னாங்களே. /வானம் மேகமூட்டமுடன் காணப்படும்/ நல்லா வெயில் அடிக்குது.
  ஹ்ம்…. முடியல….

 5. உங்க நண்பர ப்ளோக்ல எழுதி வசமா போட்டு குடுத்திட்டீங்க போலிருக்கே.

  //“இந்த காத்தடிக்கிற இது… அதான் பொம்மை…. காத்தடிச்சா…” என்று குழற,

  “ஐய்யய்யோ… அதெல்லாம் ப்ரோஹிபிட்டட் ஐட்டம், கஸ்டம்ஸ்ல பாத்தா அரெஸ்ட் பண்ணிடுவாங்க” என்றோம் //

  ஊர் சுத்தி பாக்கறதல்லாம் சரி …. ஒரே ஒரு சந்தேகம். ஏன் ஊர் சுத்தி பாக்கும்போது கழுத்து கோவணத்தோட… (அதான் டை) இருக்கீங்க?

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s