ஒரு லட்ச ரூபாயை என்கிட்டே குடுத்தா சந்தோஷப் படுவேனா?
படுவேன். அந்தப் பணம் செலவாகிப் போகிற வரை.
ஒரு லட்சம் வைரக் கற்களை என் கிட்டே குடுத்தா?
அதுவும் அப்படித்தான். அந்தப் பணம் செலவாகவும் ஒரு கால தூரம் இருக்கிறது. அதுவரைதான் அதுவும்.
ஆனா நீங்கள்ளாம் எனக்குத் தந்திருப்பது ஒரு லட்சம் பார்வைகள். அதுவும் ஐந்து மாதங்களில். இது உங்கள் அன்பையும் நம்பிக்கையையும் காட்டுகிறது. இதற்குக் கால பரிமாணமே கிடையாது. இது எடெர்னல். இது நான் சாகிற வரை மறக்காது, மறையாது.
என் அன்பு சக ப்ளாகர்களே, என் அன்பு வாசகர்களே, மதிப்புக்குரிய வோர்ட் ப்ரெஸ் நிர்வாகமே, மதிப்புக்குரிய தமிழ்மணம், திரட்டி உள்ளிட்ட வலைத் திரட்டி நிர்வாகத்தினரே,
உங்கள் யாவருக்கும் என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள், நன்றிகள்!!
இந்த மிகப் பெரிய ப்ளாக்கர் குடும்பத்தில் என்னை ஏற்றுக்கொண்டு, ஆதரித்து, பாராட்டி, விமரிசித்து என் வளர்ச்சிக்கு உறு துணையாக இருந்திருக்கிறீர்கள். இதற்கு நன்றி என்று எளிதாக மூன்றெழுத்தில் ஒரு சொல்லைச் சொல்வது போதவே போதாது. என் சந்தோஷத்துக்கு இணையாக கைம்மாறு செய்வது கடினம்.
பெயர்களைக் குறிப்பிட்டு சொல்வதானால் ஒரு இடுகை போதாது.
ஏறக்குறைய ஒருத்தர் விடாமல் எல்லாரும் படிக்கிறீர்கள், முடிந்த போதெல்லாம் பின்னூட்டமும் போடுகிறீர்கள்.
உங்கள் அன்புக்கு நான் அடிக்ட் ஆகி விட்டேன்.
விட்டு விடாதீர்கள்.
தப்பு செய்தாலும் அப்பா அம்மா மாதிரி குட்டி விட்டு பிரியத்தை தொடருங்கள்.
நீங்கள் ரசிக்கிற மாதிரி என் பணியைத் தொடருவேன்.
அன்பு உள்ளங்களுக்கு மீண்டும் மீண்டும் என் நன்றி!!