இதயம் பேத்துகிறது – 10

ரொமான்ஸ் கார் என்பது ஜப்பான் ரயில்வேசின் விடுமுறை சிறப்பு ரயில்.

உள்ளே சர்வ சௌக்யமாக இருக்கிறது. கொஞ்சம் பழங்களும் ஊதுபத்தியும் வைத்தால் தமிழ் சினிமா முதலிரவுக் காட்சி போல இருக்கும்.

“ரொமான்ஸ் கார் மட்டும்தான் அரேஞ் பண்றீங்களா, ரொமான்சும் அரேஞ் பண்றீங்களா?”

“அது.. நீங்க… சீரியசாத்தான் கேட்கறீங்களா?”

இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல சில வினாடி தாமதித்தாலும் மௌனம் சம்மதம் என்று முழுங்குப் பாப்பா மாதிரி இருக்கிற ஐந்தாறு பெண்களை அழைத்து வந்து விடுவாரென்கிற சந்தேகம் இருந்ததால் சட்டென்று,

“மிஸ்டர் பூரியா, இந்த பெட்டியில் பயணம் செய்தால் நாங்கள் ஜப்பானை முழுசாக ரசிக்க முடியாது. உங்கள் ஜனங்களோடு சேர்ந்து பிரயாணம் செய்யவே நாங்கள் விரும்புகிறோம்”

அதிவேக ரயிலில் சாதாரண பெட்டியில் பயணித்தோம்.

ரயிலுக்கும் என் மாதிரியே கூராக மூஞ்சி. உள்ளே விமானம் போலவே இருந்தது. மூன்றரை மணி நேரம் முக்கி முக்கி பிரயாணம் செய்த தூரத்தை முப்பத்தைந்து நிமிஷங்களில் கொண்டு சேர்த்தார்கள். பஸ்ஸில் மூவாயிரத்தைன்னூறு yen. அதிவேக ரயிலில் ஒன்பதாயிரம். சகாமி ஒனோவுக்கு அடுத்த ஸ்டேஷனிலிருந்து(அங்கே நிற்காதாம்) டோக்யோ வரை பிரயாணம் செய்தோம்.

ஜப்பானில் இயற்கை எழில் வாய்ந்த பகுதிகளைப் பற்றி எழுதிய போது இடத்தின் பேரை எழுதவில்லை என்று நிறைய பேர் கருத்துத் தெரிவித்தீர்கள். ஹகோனே யோமொடோ என்பது வெந்நீர் ஊற்று மற்றும் கேபிள் கார் பிரயாணங்கள் செய்த இடத்தின் பெயர். டோக்யோவிலிருந்து ஒடவாரா என்கிற இடத்துக்கு ஓடாக்யு ரயிலிலும், அதற்கப்புறம் ஹகோனே யோமொடோ வரை ஒரு மலை சிறப்பு ரயிலிலும் (டிரைவரே கிடையாது!) போனோம். அந்தத் தனிமையான ரெச்டாரன்ட்டேல்லாம் அங்கேதான். அதற்கப்புறம் கேபிள் காரை விட்டால் வேறே விமோசனமே இல்லை என்கிற மாதிரி பாதை. அதனால்தான் அதில் பிரயாணம்.

கப்பல் பயணம் டோக்கியோவில். அவர்கள் அதை வாட்டர் பஸ் என்கிறார்கள்.

“வாட்டர் பஸ்ன்னு சொல்றாங்களே, ஆத்தைக் கடந்து போற பஸ்ஸோ? பஸ் பூரா தண்ணி ஆய்டும்ன்னு நினைக்கிறேன்” என்றார் கிருஷ்ணமூர்த்தி வாஷிங்கடனில் திருமணத்தில் வரும் சாம்பசிவ சாஸ்திரிகள் மாதிரி.

கடல் பயணம், ஆற்றுப் பயணம் என்று இரண்டு ரகம் இருக்கிறது.

கடலில் போனால் வெறும் மலை புதர்கள் என்று இயற்கையை மட்டுமே பார்க்க முடிகிறது. ஆற்றில் போகிற போது டோக்யோவின் முழு அழகைக் காணவும், கேப்சர் செய்யவும் முடிந்தது.

ரொம்ப ஜியாக்ரபிக் விவரங்கள் எழுதினால் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை பாம்ப்லேட் மாதிரி போய் விடுமோ என்கிற அச்சத்தில் அவைகளைத் தவிர்த்தேன்.

யோமொடோவில் போர் நினைவு அருங்காட்சியகம் இருக்கிறது.
 
அதில் சாமுராய் ஸ்டைலில் இருக்கிற பாரம்பரிய ஆடையை வாடகைக்கு தருகிறார்கள். அதைப் போட்டுக் கொண்டு உற்சாகமாக எல்லாரும் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். நான் அதைப் போட்டுப் பார்த்தேன். எல்லாரும் வழித்துக் கொண்டு சிரித்தார்கள். சட்டென்று அவிழ்த்துக் கடாசி விட்டு ஒரு வாளை மற்றும் கையில் எடுத்துக் கொண்டு போஸ் கொடுக்கத் தயாரானேன்.
 
“இந்தப் போசுக்கு என்ன அர்த்தம்?” என்றார்கள்.
 
“சுத்த வீரனிடம் சவரக் கத்தியைக் கொடுத்தால் கூட சிரச் சேதம் செய்து விடுவான். என் மாதிரி ஆட்களிடம் சரக் கத்தி கொடுத்தாலும் சவரம்தான் செய்வேன்” என்றேன்.
ஜப்பானில் ஷாப்பிங்கிற்கு பிரபலமாக இருக்கிற இடங்களில் அழகான(?) இளம் பெண்களுக்கு கவர்ச்சி ஆடை அணிவித்து சேல்ஸ் புரமோஷன் செய்கிறார்கள்.
 
அவர்களைப் படமெடுக்க சிலர் முயன்ற போது லஜ்ஜையோடு திரும்பிக் கொண்டார்கள்.
 
அவர்களில் ஒருத்தியிடம் காதோடு ஒரு வாக்கியம் சொன்ன போது உற்சாகமாக போஸ் கொடுத்தாள்.
 
“என்ன சார் சொன்னீங்க?” என்று ஆவலாக நண்பர்கள் கேட்டார்கள்.
 
(தொடரும்) 
Advertisements

19 comments

 1. {அவர்களில் ஒருத்தியிடம் காதோடு ஒரு வாக்கியம் சொன்ன போது உற்சாகமாக போஸ் கொடுத்தாள்.}
  என்ன,உன் ஃபோட்டோவை டைம் மாகசின் அட்டைக்காக எடுக்கிறேன் என்று சொன்னீர்களா?

 2. {எல்லாரும் வழித்துக் கொண்டு சிரித்தார்கள். சட்டென்று அவிழ்த்துக் கடாசி விட்டு }

  இந்த சொல்லாக்கத்தை பா.கு. ஆரம்பித்து வைத்து பலரும் உபயோகிக்கிறீர்களே,என்ன அரத்தம் ஐயா?

  1. அன்புள்ள அறிவன், இதை பாலகுமாரன் ஆரம்பித்தாரா, தி.ஜானகிராமன் ஆரம்பித்தாரா என்பதெல்லாம் தெரியாது. “ridiculous ” என்பதற்கு தஞ்சை மாவட்டத்தில் சொல்கிற வார்த்தை இது. “இதை யார் கிட்டயும் சொல்லாத, வழிச்சிக்கிட்டு சிரிப்பாங்க” என்பார்கள்.

 3. //அவர்களில் ஒருத்தியிடம் காதோடு ஒரு வாக்கியம் சொன்ன போது உற்சாகமாக போஸ் கொடுத்தாள்.//

  வருங்காலத்தில் உன் போட்டோவை மணிகண்டன் பார்க்க நேரலாம் என்று தானே சார் சொன்னீங்க?

  🙂

 4. முதலிரவுக் காட்சி, முழுங்கு பாப்பா… நல்ல மூடுல தான் இருந்திருக்கீங்க… 🙂

  அந்த நண்பர் போட்டிருக்கிற
  ‘எமகிங்கரர்’ டிரெஸ்தான் சாமுராய் ட்ரெஸ்சா சார்… 🙂

  லஜ்ஜாவதிகள் படங்களும், ரயில், படகு பயணப்படங்களும் அழகோ அழகு.

  அப்படி என்ன சார் இரகசியம் சொன்னீங்க… 🙂

 5. 1) ரோமன்ஸ் காரிலும் போய்ப் பார்த்திருக்கலாம்.

  2) மலையின் பின்னணியில் எடுக்கப் பட்ட படத்தைப் பார்க்கும்போதே அழகு மனதை அள்ளுகிறது.

  3) ம்….ஹூம்…மூணாவது கேள்வியைக் கேட்க மாட்டேனே…

 6. பயண அனுபவத்தை மிகவும் ரசிக்கும் படி எழுதுகிறீர்கள் சுவையாக இருக்கிறது. நான் இங்கு வருவது நீங்கள் இடும் படங்களுக்காகத்தான். அதுவும் பெண்கள். நன்றி.

  1. ராம், நீங்கள் பாராட்டுகிறீர்களா, இடித்துரைக்கிரீர்களா? எல்லாப் படங்களும் போடுகிறேன், சில பெண்கள் படங்களும் போடுகிறேன். ஒரு நாட்டைப் பற்றி முழுமையான புரிதல் வரவேண்டும் என்பதே என் நோக்கம். மற்றபடி பெண் ஆண் என்று தனித் தனியாக கணக்கு வைத்துக் கொள்வதில்லை. ஆண்டவா…. சிங்கப்பூர் எபிசொட் பார்த்தால் என்ன சொல்வீர்கள்!!

 7. Bullet Trains are called as Shinkansen travelling approximately 225 kmph. You wont even feel the speed while travelling. If you travel on the Reserved Green Cars that is a touch of royalness.
  Each time the train conductors pass through the car, by each door they bow at the passengers Japanese style.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s