இதயம் பேத்துகிறது – 11

“என்ன சார் சொன்னீங்க?”

“க்யூட் சைல்ட் ன்னு சொன்னேன்”

“இல்லையே வேறே எதோ கடாஷி ஏனோஷிமான்கிற மாதிரி காதுல கேட்டது?”

“கவாயி கொடோமா ன்னு சொன்னேன்”

“அப்டீன்னா?”

“அதான் சொன்னேனே.. க்யூட் சைல்ட் ன்னு அர்த்தம்”

“வாடா நாமளும் கவாயி கொடோமா சொல்வோம். ரெண்டு ஸ்நாப் கிடைக்கும்”

“இருடா.. ரெண்டு ஸ்லாப் கிடைச்சா என்ன பண்றது? சித்ரா லக்ஷ்மணன் கவுண்டமணியை ரேக்கின மாதிரி இவரு ஏதாவது பண்ணிடுவாருடா. எனக்கென்னமோ கவாயி கொடோமான்னா கடவாயில கொடும்மா ங்கிற மாதிரி தோணுது”

“பாக்க வேண்டிய இடமெல்லாம் பாத்தாச்சு. ஊருக்குக் கிளம்ப வேண்டியதுதானே சார்?”

“பாக்க வேண்டிய இடமேல்லாம்ன்னு சொன்னதும் ஒரு ஜோக் ஞாபகத்துக்கு வருது”

“என்னது சார்?”

“ஒருத்தன் கல்யாணமாகி தேனிலவுக்கு இது மாதிரி சிங்கப்பூரோ, ஜப்பானோ வந்தானாம். வீட்டுக்கு போன் பண்ணி பேசிகிட்டு இருந்தானாம். பாக்க வேண்டிய இடமெல்லாம் பாத்தாச்சான்னு கேட்டாங்களாம்… அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா?”

“எதோ வில்லங்கமா சொல்லப் போறீங்க. ஆனா இதுல என்ன வில்லங்கம் பண்ண முடியும்ன்னு தெரியலையே…”

“இல்லை அவ ரொம்ப வெக்கப் படறான்னு சொன்னானாம்”

நாங்கள் ஜப்பானுக்கு குட் பை சொல்லி விட்டு சிங்கப்பூர் புறப்படுமுன் ஜப்பான் பற்றி சில புல்லட் பாயிண்ட்டுகள் :

 • ஜப்பானில் என்னை முதலில் கவர்ந்தது அவர்களின் முரட்டு டிசிப்ளின். எங்கே போனாலும் க்யூ. ரோட்டில் யாருமே இல்லாவிட்டாலும் சிக்னல் சிவப்பாக இருந்தால் வண்டியை நிறுத்தி விடுகிறார்கள்.
 • ரோட்டில் நாய் பூனை மாடு சாணி எதுவும் இல்லை.
 • மழை பெய்தால் ரோட்டில் தண்ணீர் நிற்பதில்லை.
 • வானிலை அறிக்கை துல்லியமாகவும், நம்பிக்கைக்குரியதாயும் இருக்கிறது.
 • மக்கள் அனாவசியமாக செலவு செய்வதில்லை. ஆடம்பரமே இல்லை. அதனால்தான் சின்ன நாடாக இருந்தாலும் உலகின் இரண்டாவது பெரிய எக்கானமியாக இருக்கிறது.
 • உழைப்பு என்கிற பேரில் காட்டுத்தனமாக வேலை செய்வதில்லை. வெள்ளிக் கிழமை சாயந்திரம் ஜூட் விட்டால் திங்கட் கிழமைதான் வருகிறார்கள். சாயந்திரம் ஐந்து மணிக்கு மேல் வேலை செய்வதில்லை.
 • அரசாங்கத்தின் போக்குவரத்து அம்சமாக இருக்கிறது. அடிக்கடி கிடைக்கிறது.
 • பொது இடங்களில் சிகரட் பிடிக்காதே என்று சொல்வதுடன் நிறுத்தாமல் அரசாங்கம் ஸ்மோக்கிங் பூத்கள் வைத்திருக்கிறார்கள். அது தவிர மற்ற இடங்களில் யாரும் புகைப்பதில்லை.
 • கடுகு எண்ணையும், உமி எண்ணையும் மட்டுமே உபயோகிக்கிறார்கள். பழக்கமில்லாதவர்களுக்கு எங்கே போனாலும் அடிக்கும் இந்த வாசனை வயிற்றைக் குமட்டும். பூனாவில் அடிக்கிற பாவு பாஜி வாசனை மாதிரி இது ஜப்பானின் தேசிய வாசனை.
 • மேற்சொன்ன எண்ணையின் ஆரோக்யமோ என்னவோ ஜப்பானின் சராசரி வாழும் வயது எண்பத்தி நாலாம். நூறு வயதைத் தொட்டவர்கள் நிறையப் பேரைப் பார்க்க முடிந்தது. எழுபதுக்கு மேற்பட்டவர்கள் வேலையில் இருப்பதை நிறைய பார்க்க முடிந்தது.
 • தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாம் ரொம்ப மடியாக இருக்கிறது. அனாச்சார சானல்கள் எல்லாமே பெய்ட் சானல்கள்.
 • போலிஸ் நிலையங்களோ, ஆச்பத்திரிகளோ, டாக்டர் வீடுகளோ ரொம்ப ரொம்பக் குறைவு.
 • சிகரட், தண்ணீர், குளிர் பானம் எல்லாம் வெண்டிங் மேஷிங்கள்தான் விற்கின்றன. யாரும் கண்ணாடியை உடைத்து திருடிக் கொண்டு போவதில்லை.

பிடிக்காத சில விஷயங்கள் :

 • கருப்பன் வெளுப்பன் பேதங்கள் இருக்கிற மாதிரி தெரிகிறது. பஸ்சிலோ ரயிலிலோ பக்கத்தில் நாம் போய் உட்கார்ந்தால் சட்டென்று எழுந்து விடுகிறார்கள்.
 • குடிக்கிற தண்ணீரை காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. ஒரு லிட்டர் தண்ணீர் நூற்றி எழுபது yen.
 • ஒரே குடும்பமாக இருந்தாலும் ஒருத்தருக் கொருத்தர் பொது இடங்களில் பேசிக் கொள்வதில்லை. ஒரே நிசப்தம்.
 • ஆண்கள் போய் பேசினாலே “வெட்கம் அவளைப் பிடுங்கித் தின்றது” என்கிற மாதிரி எக்ஸ்பிரஷன் காட்டுகிறார்கள் பெண்கள். ஆனால் கிளர்ச்சியூட்டுகிற மாதிரி ஆடை நிறைய பேர் அணிகிறார்கள். சில பெண்கள் பொது இடங்களில் தம் இழுக்கிறார்கள்.

 • அங்கே கிடைக்கிற உணவுப் பொருட்களை வைத்துப் பார்த்தால் சாப்பிடுவது வாழ்க்கையில் ரசித்துச் செய்ய வேண்டிய ஒன்று என்பதே தெரியாமல் இருக்கிறார்களோ என்று தோன்றியது.
(தொடரும்)
Advertisements

19 comments

 1. சார், ஜப்பான் ல பிடிச்ச விஷயம்னு நீங்க சொன்ன பட்டியல பாத்தவுடனே எனக்கு பொறாமையா இருந்துசி, நம்ம நாட்லையும் இப்டி இருந்தா நல்லாருக்குமேனு. ஆனா பிடிக்காத விஷயம்னு சொல்லிருந்தீங்கல்ல அட பாத்தஉடனே அப்டி ஓவர் டிசிப்ளின் தேவையே இல்லைனு தோணிடுச்சி. முக்கியமா…இத படிச்ச உடனே….
  //கருப்பன் வெளுப்பன் பேதங்கள் இருக்கிற மாதிரி தெரிகிறது. பஸ்சிலோ ரயிலிலோ பக்கத்தில் நாம் போய் உட்கார்ந்தால் சட்டென்று எழுந்து விடுகிறார்கள்.//

  அது சரி, சிங்கப்பூர் போனீங்க, மலேசியா வந்துருக்கீங்களா?

  1. ரேவதிஜி, மலேஷியா வந்ததில்லை. ஆனா உங்கள் மாதிரி ப்ளாக்கர்கள், தமிழர்கள் கலைவிழா ஏதாவது அர்ரெஞ் பண்ணா, இன்வைட் பண்ணா, வந்து என்டர்டெயின் பண்ணத் தயார்! 🙂

 2. பேத்தலும் அருமைதான் ஜவஹர்.

  தொடர் முழுசும் ரசிச்சுப் படிச்சேன். நகைச்சுவை இயல்பாய் வந்து விழுகிறது உங்க எழுத்தில்.

  அப்படியே பிடிச்சுக்கிட்டு இன்னும் மேலே போங்க!!!

  ‘புல்லெட்’ பாய்ண்ட்ஸ் சூப்பர். பலதும் ‘ஊரை’ நினைவு படுத்தியது.

  ‘ஹோம்சிக்’கிண்டு இருக்கேன்(-:

 3. //’பொது இடங்களில் சிகரட் பிடிக்காதே என்று சொல்வதுடன் நிறுத்தாமல் அரசாங்கம் ஸ்மோக்கிங் பூத்கள் வைத்திருக்கிறார்கள். அது தவிர மற்ற இடங்களில் யாரும் புகைப்பதில்லை”//

  //”சில பெண்கள் பொது இடங்களில் தம் இழுக்கிறார்கள்”//

 4. உழைப்பு என்கிற பேரில் காட்டுத்தனமாக வேலை செய்வதில்லை. வெள்ளிக் கிழமை சாயந்திரம் ஜூட் விட்டால் திங்கட் கிழமைதான் வருகிறார்கள். சாயந்திரம் ஐந்து மணிக்கு மேல் வேலை செய்வதில்லை.”//

  நாமும்தான்….! இன்னும் கொஞ்சம் கூட முன்னேறிய நாடு நாம்…வேலை நேரத்தில் கூட வேலை செய்வதில்லை…!

 5. பிள்ளைக் கூட்டங்களைப் பார்க்கையிலே…. பிஞ்சு மொழிகளை கேட்கையிலே…. ன்னும்,

  சிக்குமங்கு சிக்குமங்கு சின்னபாப்பா,
  சிக்குமங்கு சிக்குமங்கு சின்னபாப்பா ன்னும் எம்.ஜி.ஆர் மாதிரி பாட்டெல்லாம் பாடியிருப்பீங்க போலிருக்கு….. 🙂

  பார்க்க வேண்டிய இடமெல்லம் பார்த்துட்டு, அதை எங்களுக்கு படமா காட்டுற உங்க பண்பு எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சார்…

  நீங்கள் சொன்னது மிகவும் சரி. ஜப்பானியர்கள் சிஸ்டமேட்டிக்கா இருக்கிற அளவிற்கு சிநேகமாக பழக மாட்டார்கள்.

  சார், இரண்டாம் உலகப்போருக்கு பின் ஜப்பானிற்கு ராணுவம் வைத்து கொள்ளும் உரிமை கிடையாதாமே. மேலும் அமெரிக்காவிற்கு இன்னமும் கப்பம் கட்டி கொண்டிருக்கிறார்களாமே. இப்போது இல்லையென்றாலும் இது குறித்த விவரங்களை அப்புறமாவது விரிவான பதிவாக இட்டு விளக்குங்கள்.

 6. உ.சு.வா.வில் எம் ஜி ஆர் சொல்லும் அந்த மூன்று கோட் வார்த்தைகளும் சரிதானா என்ன அர்த்தம் என்று கேட்டறிந்தீர்களா?

 7. உங்களோட ஜப்பான் பயண அனுபவம் ரொம்பவே அருமையா எழுதப்பட்டிருந்தது….. நகைச்சுவை கலந்து ரொம்ப இன்ஃபர்மேட்டிவாவும் இருந்துச்சு…

  அடுத்து எங்கே போனீங்க? எப்போ எழுதுவீங்க…?

 8. Jawahar
  A good post. I would like to clarify few if you dont mind –
  I had the opportunity to mingle with Japanese for the past 10 years. I dont accept that Japanese are racial – these are things that cant be said based on a single trip.
  One thing is Japanese are Obsessive Compulsive on cleanliness. Maybe using masks, cleaning hands repetitively when touching a public place are the things that made you think racial.
  I am not sure if there were any particular incidents that made you think so. As compared to Europe, US and Down Under I still vouch that Japanese are more courteous and helpful.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s