ப்ளாக்கர்கள் பற்றி கிசு-கிசு பாணி கேள்விகள்.

நம்ம சக ப்ளாக்கர்கள் பற்றி ஒரு புதிர் நிகழ்ச்சி!

நான் தந்திருக்கிற க்ளூக்களை வைத்து அவர்கள் பெயரை கண்டு பிடிக்க முடிகிறதா பாருங்கள். ஒரு பொதுவான க்ளூ, அவர்களுடைய பாப்புலர் பெயரை வைத்துத்தான் புதிர் எழுதியிருக்கிறேன். ஆகவே நிஜப்பெயரை நினைத்துக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

ம்ம்க்குக்கூம். ஆரம்பிக்கலாமா? (ஆரம்ன்னா மாலை. மாலையை பிய்க்கிறது குரங்காயிற்றே. எடுத்ததுமே தன்னைப் பற்றி க்ளூவா என்று நினைக்க வேண்டாம். கேள்வி இனிமேதான்)

1. பெருமாள் கோயில் தீர்த்தத்தில் பசும் பாலை சேர்த்தால் இவர் பெயர்.

2. இவர் பெயருக்கு முன்னாலிருக்கும் ஆடை மொழியை ஷேக் இல்லாமல் சொன்னால் எடுபடாது!

3. பழைய்ய ஆனந்த விகடன்களில் கார்டூனிஸ்ட் ஸ்ரீதர் இந்த ப்ளாக்கர் பெயரில் ……………………….. சீரிஸ் என்று தொடர் கார்ட்டூன் போட்டிருக்கிறார். இந்த க்ளூ போதாது என்றால், சுஜாதா தன ஸ்ரீரங்கத்து அனுபவங்களை எழுதும் போது இந்தப் பேரில் இருக்கும் காரக்டர் ஒருத்தர் பற்றி அடிக்கடி எழுதுவார்.

4. தமிழ் இலக்கியங்களில் எந்த செய்யுளை வேண்டுமானாலும் கேட்கலாம் இவரை …………………… (fill in blanks for his name)

5. செல்வங்களே வேண்டாம் என்று ஒதுக்க வேண்டியவர். ஆனால் பெயரிலேயே கார் இருக்கிறது!

6. இவர் பெயரின் அடைமொழிக்கு அந்தக் காலத்தில் தந்தி என்று பொருள். ஆகவே வீடுகளுக்கு இது வந்தால் டென்ஷன் ஆவார்கள். அதே வார்த்தைக்கு இன்றைக்கிருக்கும் பொருள் வேறு. அது வராவிட்டால் டென்ஷன் ஆவார்கள்!

7. குழந்தைகளை “ஏய்.. அப்டிப் பண்ணாதே…” என்று அதடுகிற மாதிரி ஒரு அடை மொழி. அதைத் தொடர்ந்து வரும் பெயரில் ஒரு பழைய பின்னணிப் பாடகரும், குணச்சித்திர நடிகரும் இருக்கிறார்கள்.

8 . ஷேர் மார்க்கெட்டில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொல்லை நினைவு படுத்தும் பெயர். அத்துடன் சங்கரின் படத்தை சேர்த்து ப்ளாக் ஐ.டி.

9 . அதுவால் இதுவால் எல்லாம் விளக்க வேண்டாம். இவர் பேரைக் கேட்டதும் எஸ்.வி.சேகர் ஞாபகம் வருவார் என்று சொன்னாலே போதும்!

10௦. இவர் இனிஷியலுக்கு காலை உடைத்தால் ‘எப்படி அழுதாள்?’ என்கிற கேள்விக்கு விடையாகச் சொல்லலாம். முரண்பாடுகளுக்கு பேர் போனவர். இவர் ப்ளாக்கில் பின்னூட்டங்களில் குடுமிப் பிடி சண்டை நடக்கும்!

இப்போதைக்கு இவ்வளவு போதும். மீதி ப்ளாக்கர்களை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.

Advertisements

26 comments

 1. // ஆரம்பிக்கலாமா? (ஆரம்ன்னா மாலை. மாலையை பிய்க்கிறது குரங்காயிற்றே. எடுத்ததுமே தன்னைப் பற்றி க்ளூவா என்று நினைக்க வேண்டாம். கேள்வி இனிமேதான்) //

  :))))))))))))))))))))

 2. பதிவை பார்த்தவுடன் வேகமா ஸ்க்ரோல் பண்ணி 100 பதிவர்களை பட்டியலிட்டுடாரா என குழம்பினேன் 🙂

  5 ஆம் புதிர் பதிவர் பற்றி எனக்கு தெரியும். அந்த புத்திசாலியான, அழகான, அற்புதமான பதிவரை தானே சொல்லறீங்க 😉 ?

 3. ஜவஹர்,

  //10௦. இவர் இனிஷியலுக்கு காலை உடைத்தால் ‘எப்படி அழுதாள்?’ என்கிற கேள்விக்கு விடையாகச் சொல்லலாம். முரண்பாடுகளுக்கு பேர் போனவர். இவர் ப்ளாக்கில் பின்னூட்டங்களில் குடுமிப் பிடி சண்டை நடக்கும்!//

  முரண்பாடு இல்லை, தலைப்பாடாக அடித்துச் சொல்கிறேன். அது ‘சர்சை’ என்று இருக்க வேண்டும்.

  🙂

  1. கண்ணன்ஜி முரண்பாடு என்கிற வார்த்தை ஆட்சேபத்துக்குரியது அல்ல. புதுமையின் இலக்கணமே முரண்படுவதுதான். கிரியடிவிட்டி என்பதே முரண்படுவதுதான். Thinking ouside the box என்பார்களே… பெரும்பான்மையிலிருந்து முரண்படுகிறோம் என்கிற நம்பிக்கை ஒவ்வொரு படைப்பாளிக்கும் இருக்கும். அதுதான் தன்னம்பிக்கை.

 4. 1.துளசி கோபால்
  5. ஓம்கார் சுவாமிகள்
  6. கேபிள் சங்கர்
  9. வால் பையன்

  வலைப் பூக்கள் மிகச் சமீப காலமாகத்தான் பார்வையிடத் தொடங்கி இருக்கிறேன். அதனால் இவ்வளவுதான் பதில் தெரியும்.

  நிற்க.(பரவாயில்ல, பரவாயில்ல, டேக் யுவர் சீட்!) உங்களுடைய ஜப்பான் பயணக் கட்டுரை தொடர்ந்து படிக்க்கிறேன், ரசிக்கிறேன், பின்னூட்டம் கொடுக்க இப்போதுதான் நேரம் கிடைத்தது.

  அன்புடன்

  மதுரை சுப்பு

 5. 10. கோவி.கண்ணன்
  9.வால்பையன்
  7. Dont-do இராகவன்
  6.கேபிள் சங்கர்
  5.ஓம்கார் ஸ்வாமிகள்
  3.சீமாச்சு
  2.எங்கள் அருமைத் தம்பி புதுகை (ஷேக்) அப்துல்லா
  1. துளசிகோபால்

 6. நானும் இந்த கிசுகிசுக்கு ரொம்ப யோசிச்சேன்.. கோவி. கண்ணனுக்கு பதில் கேவியார் என்று தப்பாத்தான் விடை வந்தது..

  6 வருஷம் பதிவராயிருந்தது ஒண்ணுத்துக்கும் பிரயோசனமில்லை 😦

 7. ஹைய்யா… 8 வது கேள்விக்கு யாருக்குமே பதில் தெரியலையே… 🙂

  அது நான் தானாம்…

  டிஸ்கி: நான் பதிலைப் படிச்சப்புறம்தான் அது எனக்குத் தெரிஞ்சது :))

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s