ஒரே ஒரு மரணம்

“என்னது, ஆறு மாசம் முன்னாலே செக் பண்ண டாக்டர் ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டாரா?”

“ஆமாம் டாக்டர்”

“என்ன டாக்டர்… ஆர்.எம்.பி. யா?”

“இல்லை டாக்டர்”

“பின்னே, சித்த வைத்தியரா?”

“இல்லை டாக்டர்”

“ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட் இருக்கா அப்ப எடுத்தது?”

“இருக்கு டாக்டர்”

“குடுங்க”

ஜம்புநாதன் நடுங்குகிற கையோடு பைலை நீட்டினார்.

பைல் பூரா ரத்தப் பரிசோதனை அறிக்கைகளும், எக்ஸ் ரேவும், ஸ்கானுமாக இருந்தன.

டாக்டர் ரங்கராஜன் ரிப்போர்ட்டைப் பார்த்தார்.

“மை காட்… லிம்போசைட்ஸ் லெவலை பாருங்க. எய்ட்டி டூ. திஸ் ஈஸ் எ கிளியர் கேஸ் ஆப் அக்யூட் லிம்போப்ளாஸ்டிக் ல்யூகேமியா”

“அப்டீன்னா என்ன டாக்டர்?”

“கேன்சர்ய்யா.. ரத்தப் புற்று நோய்”

“ஐயய்யோ…… சுனிதாவை எப்படியாவது காப்பாத்துங்க டாக்டர்”

“மிஸ்டர் ஜம்புநாதன்… ஆர் யு கம்போஸ்ட்?”

“கம்போஸ்ட்டுங்களா?”

“ஐயம் சாரி. மனசை திடமா வெச்சிக்குங்க. உங்க மக….. ஷி ஈஸ் நோ மோர்”

“ஜாஸ்தியா இருக்குங்களா?”

“மன்னிக்கணும் ஜம்புநாதன். எல்லாம் முடிஞ்சிடுச்சு”

ஜம்புநாதன் முகத்தைக் கோணிக்கொண்டு சத்தமே வராமல் அழ ஆரம்பித்தார்.

“சிஸ்டர் டேக் கேர் அப் ஹிம். பெயின்ட் ஆனாலும் ஆயிடுவாரு”

போனை எடுத்து எண்களை அழுத்தினார். மறுமுனையில் எடுக்கப் பட்டதும்,

“அம் ஐ ஸ்பீகிங் டு டாக்டர் தேசிகன்?”

“எஸ்”

“டாக்டர் திஸ் ஈஸ் ரங்கராஜன்”

“டாக்டர் ரங்கராஜன்?”

“ஆமாம் டாக்டர்”

“சொல்லுங்க”

“நீங்க கோபப் படாம இருந்தா ஒண்ணு கேக்கணும்”

“கேளுங்க”

“சுனிதான்னு ஒரு கேஸ். ஆறு மாசம் முன்னே உங்க கிட்டே வந்திருக்காங்க. இட் ஈஸ் எ கிளியர் கேஸ் அப்….”

“ல்யூகேமியா”

“டாக்டர்!”

“என்ன… ஏன் அவங்க கிட்டே சொல்லல்லைன்னு கேக்கப் போறீங்க. இது தொழில் தர்மமா… நியாயமா…. சட்டப்படி சரியா எட்சத்ராவா?”

“……………………………………”

“லுக் ஹியர் ரங்கா. அந்தக் குடும்பம் ரொம்ப ஏழைக் குடும்பம். அந்தப் பொண்ணோட பிரதர் பி.ஈ. படிச்சிகிட்டு இருக்கான். இதான் கடைசி வருஷம். இந்தப் பொண்ணு ரயில்வேயில ஒர்க் பண்றா. இந்த விஷயம் தெரிஞ்சிருந்தா ஷி வுட் ஹேவ் காட் வோர்ன் அவுட் பாஸ்டர். அந்தப் பையனோட படிப்பு முடிஞ்சிருக்காது. இப்ப பாருங்க, அந்தப் பையன் முடிச்சிட்டான். ஹி ஈஸ் எ ப்ரைட் ஸ்டூடன்ட்.  ஹி வில் கெட் எ ஜாப் சூனர் ஆர் லேட்டர்.”

“டாக்டர்… ஐ… ஐயம் சாரி…”

“ரங்கா… மரணத்தை விட மரண பயம் கொடுமையானது”

“நிஜம் டாக்டர்”

“அந்த கொடுமையை அந்தப் பொண்ணுக்கு தர எனக்கு மனசு வரல்லை”

“ஐ அண்டர்ஸ்டாண்ட்”

“அது மட்டுமில்லை, டெத் ஈஸ் நாட் பெயின்புல் டு தி விக்டிம். இட் ஈஸ் பெயின்புல் டு தேர் பிலவுட். அவ உயிரோட இருந்த ஒவ்வொரு நாளும் நம்பிக்கையா சந்தோஷமா இருந்துட்டு செத்துப் போயிருக்கா. அவளோட கடமையை முடிச்சிட்டு போயிருக்கா. விஷயம் தெரிஞ்சிருந்தா அவ தினம் தினம் செத்திருப்பா.  அவ மட்டுமில்லை, அவ மேல பிரியம் வெச்ச எல்லாரும்! அப்ப எத்தனை மரணத்துக்கு நான் பொறுப்பாகி இருப்பேன்?”

“ட்ரூ”

“இப்ப ஒரே ஒரு மரணம்தானே?”

Advertisements

31 comments

 1. சூப்பர் சார்…

  அந்த கடைசி ஒரு வரியில மரணம் விளைவிச்சதை, மனசுல தூக்கி கொண்டாட வைக்கற சாமர்த்தியம் ரொம்ப அழகு..

  அன்னிக்கே சூப்பர் ஸ்டார் சொன்னாரு. சாகற நாளு தெரிஞ்சுட்டா வாழற நாள் நரகமாயிடும்ன்னு.

 2. /*டெத் ஈஸ் நாட் பெயின்புல் டு தி விக்டிம். இட் ஈஸ் பெயின்புல் டு தேர் பிலவுட். */
  என் அம்மாவுக்கும் கேன்சர் தான் . அவங்க கிட்ட இதை சொல்லவில்லை . ஆனா அவுங்க இப்போ உயிரோட இல்லை. நினைத்தாலே மனசு கனகின்றது . நான் அனுபவிச்சதை சொன்னிங்க.

  1. சுப்பராயன், என்ன சொல்றதுன்னு தெரியலை. அம்மாவை இழந்திருக்கிற உங்களுக்கு ஆறுதலா, என்னை அக்னாலட்ஜ் பண்ணதுக்கு நன்றியா, என்னாலே ஜனங்களோட மனசைத் தொட முடிஞ்சதுக்கு சந்தோஷமா….. என் மனசை நீங்க தொட்டுட்டீங்க!

  1. நிஜம்தான் அறிவன், நிஜத்தில சாத்தியமா இருக்கிற விஷயங்கள் அசாத்யமா இருக்கிறதும், அசாத்தியமான விஷயங்கள் சாத்யமாகிறதும்தான் கதை. அதனாலதான் நம்ப முடியாத விஷயம் சொல்றப்போ கதை விடாதேன்னு சொல்றோம்!

 3. ரொம்ப அருமை சார்… இந்த உலகத்துல மரணத்த விட கொடுமயானது வேற எதுவுமே கிடையாது. நம்ம கூட இருக்குறவங்க திடீர்னு இறந்துடா அத தாங்கிகிற பக்குவம் எல்லாருக்கும் இருக்காது…

  1. நன்றி ரேவதிஜி, நான் சொல்ல விரும்பின கருத்தில ஒண்ணு மரணம் மரணிக்கிறவங்களை விட பிரியமானவங்களுக்குத்தான் வலியானதுங்கிறது. அது உங்களை வந்தடைஞ்சிருக்கு. இன்னொண்ணும் சொல்லியிருக்கேன்.

 4. மனதைத் தொட்ட கதை. சாவைத் தெரிந்து கொண்டு அணுஅணுவாகச் சாகாமல் கடமையைச் செய்ய வாய்ப்பு. ஆனால் கேன்ஸர் நோயாளியை மட்டுமல்ல, குடும்பத்தையே அரித்து, அழித்து விடுகிரது.

  1. டாக்டர், படிக்கத் தவறினது பரவாயில்லை. கருத்து என்னன்னு சொல்லத் தவறிட்டீங்களே, அதுலயும் ஒரு டாக்டர், உங்க கருத்து எனக்கு ரொம்ப முக்கியம். அதை முதல்ல சொல்லுங்க.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s