இதற்கு எத்தனை கோடி வேண்டும்?

இந்தியாவில் புல்லட் ரயில்கள் வருமா என்கிற தலைப்பில் ஒரு செய்தித் தொகுப்பு நேற்றைய தினமலரில் படித்தேன்.

ஒரு கிலோமீட்டருக்கு நூறிலிருந்து நூற்றைம்பது கோடி வரை செலவாகிற கிராக்கியான தொழிற் நுட்பம் என்று எழுதியிருந்தார்கள்.

அதொன்றும் பிரச்சினையே இல்லை, நம்நாட்டில் புழங்கும் கறுப்புப் பணத்தை வைத்து கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் என்ன, விலாடிவாச்டக் வரை ரயில் பாதை போடலாம். நம்ம ஊரில் பிரச்சினையே வேறு.

லெவல் கிராசிங்குகளில் ஒழுக்கமே கிடையாது.

ஏதோ ராக்கெட் லான்ச் செய்யப் போகிறார் போல பைக்கை அவசர அவசரமாக விக்கெட் கேட்டுக்கு அடியில் தள்ளிக் கொண்டு ஓடுவார்கள். அந்தப் பக்கம் போனதும் பெட்டிக் கடையில் வண்டியை நிறுத்தி விட்டு “நாயர், ரெண்டு வில்ஸ் குடுங்க. சக்கரை கம்மியா ஒரு டீ” என்று சொல்லி விட்டு தந்தி பேப்பரில் கன்னித்தீவு படிப்பார்கள்.

காளமேகம் எம கண்டம் பாடினது மாதிரி பயங்கர ரிஸ்க் எடுத்து ரயில்வே லைன் ஓரத்தில் கக்கா போவார்கள்.

ரயில்வே லைனை கிராஸ் செய்ய அரசாங்கம் படிக்கட்டுகள் போட்டிருந்தாலும் அதை மலிவான விபச்சாரிகளுக்கு தத்தம் செய்து விடுவார்கள். பிளாட்பாரத்திலிருந்து குதித்து காலில் ஆயை ஈஷிக் கொண்டு கேட்டுக்கு ஓடுவார்கள்.

இதைத் தடுக்க அரசாங்கம் எத்தனை வலுவான சுவர் எழுப்பினாலும், கன்னக்கோல் திருடன் மாதிரி அதில் ஓட்டை போட்டு விடுவார்கள். எத்தனை உறுதியான இரும்புக் கிராதிகள் அமைத்தாலும் வியர்க்க விறு விறுக்க அதில் ஒரு ஆள் நுழைகிற அளவு இடைவெளியை உண்டாக்கி விடுவார்கள்.

இப்படிக் குறுக்கும் மறுக்கும் ஜனங்கள் ஓடுகிற போது மணிக்கு முன்னூறு கிலோமீட்டர் என்பது சினிமாவில் கனவுக் காட்சிகளில் மட்டுமே சாத்தியம்.

அடுத்தது, ஆரம்பத்தில் முன்னூறு கிலோமீட்டருக்கு ஒரு ஸ்டாப்தான் என்று ஆரம்பிப்பார்கள். அதற்கப்புறம், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், ரயில்வே ஊழியர்கள் இவர்கள் தலையீட்டால் மெல்ல மெல்ல மாறுதல்கள் வரும்.

அரக்கோணத்தில் ஸ்லோ செய்வார்கள். ஆம்பூரில் மட்டும் நிறுத்துவார்கள். அப்புறம் வாணியம்பாடியும் சேர்ந்து கொள்ளும். வடக்கே போய் விட்டால் ஆங்காங்கே செயினை இழுத்து விட்டு இறங்கிப் போக ஆரம்பித்து டிராம் சர்வீஸ் போல ஆக்கி விடுவார்கள்.

இவர்களை எல்லாம் திருத்த ஒரு கிலோமீட்டருக்கு முன்னூறு கோடி இருந்தாலும் போதுமா?

Advertisements

7 comments

 1. //ஜப்பானில் என்னை முதலில் கவர்ந்தது அவர்களின் முரட்டு டிசிப்ளின். எங்கே போனாலும் க்யூ. ரோட்டில் யாருமே இல்லாவிட்டாலும் சிக்னல் சிவப்பாக இருந்தால் வண்டியை நிறுத்தி விடுகிறார்கள்//

  இதுக்கு காரணம் நம்முடைய/மக்களுடைய கட்டுப்பாடற்ற ஒழுக்கம்.

  செல்ஃப் டிசிப்ளின். இது இருந்தாதான் நாம முன்னேற முடியும். அதுக்கு முதல்ல சில/பல விஷயங்கள (குறிப்பா பொது இடங்கள்ல எச்ச துப்புறது/கண்ட இடத்துல மூச்சா போறது/க்யூவில முண்டியடிக்கறது…)விட்டு சமுதாயத்துக்கு நம்மளால முடிஞ்ச நல்லது செய்யணும். (தீயது செய்யாதிருத்தலே நல்லது)

  ஹ்ம்… பாக்கலாம்.

 2. இவர்களை எல்லாம் திருத்த ஒரு கிலோமீட்டருக்கு முன்னூறு கோடி இருந்தாலும் போதுமா?//

  போதாது நண்பரே..
  கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள்..
  விலைபோகும் மனிதர்கள் இருக்கும் வரை இது சாத்தியமில்லைதான்..

 3. //இவர்களை எல்லாம் திருத்த ஒரு கிலோமீட்டருக்கு முன்னூறு கோடி இருந்தாலும் போதுமா?//

  அவர்களைத் திருத்த ஒரு கிலோமீட்டருக்கு முந்நூறு கேடிகளை நிறுத்தினால் ஒருவேளை முடியுமோ என்னவோ?

 4. //ஒரு கிலோமீட்டருக்கு நூறிலிருந்து நூற்றைம்பது கோடி வரை செலவாகிற//

  அது யாருக்கு செலவாக போகிறதுன்னு சொல்லியிருக்காங்களா சார்.. நல்லா பாருங்க.. அது ப்ராஜெக்ட் அப்ரூவ் பண்றதுக்கே லஞ்சமா செலவாகப் போகிற அமவுண்ட்டா இருக்கப் போறது..

  ஹும்ம்ம்.. வருசா வருஷம் டாக்ஸ் கட்டறதுதான் மிச்சம்.. 😦

 5. முதலில் இருக்கிற ரயில்கள் எல்லவற்றயும் ஒழுங்காகப் பராமரித்தாலே போதும். அடுத்தது நேரம் தவறாமை. குறித்தநேரத்தில்ம் அதாவது 8.58 என்றால் 8.58க்கு ரயில் வரவேண்டும். இந்த “வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” சமாசாரம் எல்லாம் கூடவே கூடாது. பெட்டிகளீன் பராமரிப்பு, வித்தவுட் பயணிகள் (எலி, கரப்பான்பூச்சி) முதலியன முற்றும் தடை செய்ப்படவேண்டும்.

  ஏற்றுக்கொண்ட பணிகள் தாமதமில்லாமல் முடிவுபெறவேண்டும். இது எல்லம் முடிந்தால் புல்லட் ரயில் சாத்தியமே

 6. /
  இவர்களை எல்லாம் திருத்த ஒரு கிலோமீட்டருக்கு முன்னூறு கோடி இருந்தாலும் போதுமா?
  /

  சரியா சொன்னீங்க!
  :)))))))

 7. நம்மாளுங்க ரயில்வே ட்ராக்குல பண்ற அட்டூழியங்கள் அனைத்தையும் ஆராய்ச்சி முடிவு மாதிரி தெளிவா எழுதிட்டிங்க… 🙂

  //அ.நம்பி

  //இவர்களை எல்லாம் திருத்த ஒரு கிலோமீட்டருக்கு முன்னூறு கோடி இருந்தாலும் போதுமா?//

  அவர்களைத் திருத்த ஒரு கிலோமீட்டருக்கு முந்நூறு கேடிகளை நிறுத்தினால் ஒருவேளை முடியுமோ என்னவோ…//

  நம்பி சார், தமிழ்நாடு எவ்வளவோ பரவோயில்லை.ஓரளவு மனசாட்சிக்கு பயந்த மக்கள். வடக்கே இருந்து கூட்டமா ஆயிரக்கணக்கானோர் கிளம்பி புனித யாத்திரைங்கிற பேருல மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி வரை டிக்கெட் எடுக்காம எல்லா கம்பார்ட்மெண்ட்லயும் ஏறி வந்துட்டு போற கொடுமை வருடா வருடம் நடந்துகிட்டுதான் இருக்கு. 😦

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s