ஒழுங்கீனமான ஒழுக்கங்கள்

ஒழுக்கத்திலேயே நிறைய ஒழுங்கீனங்கள் இருக்கின்றன.

ஒழுங்கு நடவடிக்கைகள் எடுப்பது எப்படி என்று பயிற்சி வகுப்பு நடத்தினார்கள். நடத்தியவர் டெபுடி கமிஷனர் ஆப் லேபர். வகுப்பை ஆரம்பிக்கு முன் அவர் சொன்னார்,

“டிசிப்ளினரி ஆக்ஷன் பத்தி தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாலே டிசிப்ளின்ன்னா என்னன்னு தெரிஞ்சிருக்கணும்”

வாஸ்தவம்தான்.

ஆனால் இது கூடத் தெரியாத கூமுட்டைகள் கூட இருப்பார்களா என்ன?

“என்ன, டிசிப்ளின்னா என்னான்னு தெரியுமா?” என்று எல்லாப் பக்கமும் பார்த்து மாற்றி மாற்றிக் கேட்டார்.

எல்லாரும் தவில் வித்வான் மாதிரி தலையை ஆட்டினோம்.

ராண்டமாக ஒரு ஆளைப் பார்த்து,

“எங்கே, நீங்க சொல்லுங்க?” என்றார்.

அவர் எழுந்து,

“இது… டிசிப்ளின்னா ஒரு இது. அதாவது எல்லாத்திலையும் இதுவா இருக்கிறது. நல்லவனா இருக்கிறது. தப்பு பண்ணாம இருக்கிறது”

“எதெல்லாம் தப்பு? தப்பு பண்ணாம இருக்கிறவன் நல்லவனா?”

ம்ம்ஹூம். சாதாரண பதிலில் இவர் திருப்தி அடையப் போவது இல்லை. எதோ பெரிய விஷயத்துக்கு அடி போடுகிறார் என்பது புரிந்தது.

“சரி, டிசிப்ளின்னு சொன்னதும் உங்க மனசில உடனே தோணறதை ஒரு வார்த்தையில சொல்லுங்க. அது தப்புன்னு நான் நிரூபிக்கறேன்” என்று ஆட்டத்தை ஆரம்பித்தார்.

முதல் ஆள் எழுந்து “காந்தி” என்றார்.

“சட்டங்களை எதிர்க்கிறதும், எதிர்க்கச் சொல்லி எல்லாரையும் தூண்டறதும் ஒழுங்கீனமான செயல். அரசாங்கத்தின் பார்வையில அவர் ஒழுங்கீனமானவர்”

இன்னொருத்தர் எழுந்து “உண்மை” என்றார்.

“அப்ப திருவள்ளுவர் தப்பா? புரை தீர்ந்த நன்மை பயக்கும்ன்னா பொய் சொல்லலாம்ன்னு அவரே சொல்லி அதை பாடத்திலையும் வெச்சிருக்காங்களே?”

அடுத்தவர் “கற்பு” என்றார்.

“தப்பு. எஸ்கிமோக்கள் வீட்டுக்கு விருந்தாளியாப் போனா ‘உன் பொண்டாட்டியோட படுக்கணும்’ ன்னு நீங்க கேட்டாலும் அவன் ஒப்புகிட்டாகணும்”

“எஸ்கிமோ பத்தி எல்லாம் நமக்கென்ன கவலை. நம்ம ஊருக்கு வாங்க”

“நான் சொல்ல வந்தது டிசிப்ளின்கிற வார்த்தை காலம் மற்றும் இடத்துக்கு தகுந்த மாதிரி மாறுது. காந்தி பண்ணதை இன்னைக்கி யாராவது பண்ணா அது சட்ட விரோதம். எஸ்கிமோக்களுக்கு மத்தியிலே ஒழுக்கத்துக்கு வேறே அர்த்தம். எல்லா இடத்துக்கும் பொருந்தர மாதிரி, எல்லாக் காலத்துக்கும் பொருந்தர மாதிரி ஒரு வரையறை சொல்ல முடியுமா?”

யாரும் முன்வரவில்லை.

“சரி. நீங்க இந்த தொழிற்சாலையின் பொது மேலாளர். நான் இண்டர்வ்யூவுக்கு வரேன். எனக்கு எல்லாத் தகுதியும் இருக்கு. உங்களுக்குப் பிடிச்சி போச்சு. என்னை தேர்ந்தேடுத்துட்டீங்க. ஆர்டர் டைப் பண்ணப் போறீங்க. அப்ப ஒரு போன் வருது. முதலமைச்சரோட காரியதரிசி பேசறார். அல்லது மாவட்ட ஆட்சியாளரோட காரியதரிசி பேசறார். அந்த வேலைக்கு சொக்கலிங்கம்ன்னு ஒரு ஆளை அனுப்பியிருக்கேன். அவனை அப்பாயின்ட் பண்ணிடுங்கன்னு சொல்றாரு. அப்ப நீங்க என்ன பண்ணுவீங்க… அங்கே எது டிசிப்ளின்?”

என்று கேட்டார்.

நீங்களும் கொஞ்சம் யோசிச்சிப் பாருங்களேன். அவர் என்ன சொன்னாருன்னு அப்புறமா சொல்றேன்.

Advertisements

7 comments

 1. நல்ல கேள்வி தான் சார்.. பதில் தான் இல்லை.. எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் நாம் நல்லவனாய் இருக்க முடியாதென்பது நான் எனது அனுபவத்தில் உணர்ந்த ஒன்று.. அதுவும் இன்றைய காலகட்டத்தில் நாம் செய்யும் செயல்கள், எடுக்கும் முடிவுகள் எல்லோரையும் திருப்தி படுத்துகிறதா என்பதும் கேள்விக்குறியே..

 2. சில நேரங்களில் குடும்ப சூழ்நிலை கருதி ஒழுங்கீனம் நல்லது தான்!

  ரிசசென் வந்தால் அதிக சம்பள ஆளை தூக்கு… போ வெளியே… ( கழுதை பிடித்து தள்ளாது குறை )

  டிமேண்ட் வந்தால், எவ்வளவு சம்பளமானாலும் கொடுத்து ஆளை காம்பெடிட்சனிடம் இருந்து அமுக்கு…

  எப்படி?

 3. எல்லா மனிதர்களும் அவரவர்களுக்கு ஏற்ற மாதிரி, அவரவர் குணங்கள் +அவரவர் தொழில் + அவரவர் குடும்பம் + அவரவர் பொருளாதாரம் + அவரவர் extra extra + இவைகளெல்லாம் ஒன்று கலந்து, அவரவர் இரத்தங்களுக்குள் நிர்மாணிக்கப்பட்டு எழுப்பப்பட்டு உறுதிப்படுத்திக்கொண்ட அவர்களுக்கான ஒழுக்கமே அவரவர் ஒழுக்கம். இதில் மற்றெந்த ஒழுக்கமும் அவர்களுக்குத் தெரியாது “எக்சிமோக்கள்” மக்கள் மாதிரி. நமக்கு தீமையாய் தெரியும் அவர்களின் செயல்கள், அவர்களுக்கு அது ஏற்றதாய் தெரியும். ஒழுக்கவாதிகள் அவர்களிடமிருந்து வழுக்கிக்கொண்டு போகத்தான் பார்க்கவேண்டும்.

  *இராக்கியர்

 4. இன்னொன்று சொல்ல மறந்துபோனதை இப்போதே சொல்லிவிடவேண்டும்.
  என்னவென்கிறேர்களா?
  “எக்சிமோக்கள்” விருந்துபசாரத்தை பற்றி நீங்கள் சொன்ன வெட்டவெளிச்ச உண்மையை உங்கள் பதிவில் படித்துவிட்டு அங்கே விருந்துக்குப் போக ஏங்கிடும்…
  இத்தோடு மரியாதையாய் நிறுத்திக்கொள்கிறேன்

  1. ராக்கியார், இந்த ஆசை வந்துட்டா என்ன பண்றதுன்னுதான் அவங்க போட்டோவை போட்டிருந்தேன். அப்படியுமா!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s