உப்பு போட்டு பேஸ்ட்டு தின்கிறவனா இருந்தா…

“உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா? நாங்க வந்துகிட்டே இருக்கோம்”

என்று திரிஷா சொல்வதைக் கேட்டதிலிருந்து உப்பு டூத் பேஸ்ட் தான் வாங்குகிறோம். திரிஷாவுக்கு யாராவது எங்க அட்ரசைச் சொன்னா தேவலை. அவர் வருவதற்குள் கொஞ்சம் பழசை அசை போடுவோம்.

ஆரம்பத்தில் காளிகாட் பல்பொடி, பயோரியா பல்பொடி எல்லாம் வைத்து பல் தேய்ப்போம். (பயோரியாவில் இருக்கிற நம்பர் என்ன, 1431 ஆ?). அப்போது எங்க அப்பா கரி, உப்பு இரண்டும் பிரதானமாகவும் காய வைத்து இடித்த ஆரஞ்சுத் தோல், கிராம்பு, படிக்காரம் என்று ஏதேதோ அடங்கிய ஒரு பொடியைத்தான் பல் துலக்கப் பயன் படுத்துவார். (நாகப்பட்டினம் தேவய்யர் தெருவில் நாங்கள் எழுபது வரை வசித்த வீட்டின் பெரிய திண்ணையில் அப்பா பல் தேய்த்த கரிக்கறை போன வருஷம் வரை இருந்தது)

அதற்கப்புறம் கோபால் பல்பொடி.

அதை நான், என் அக்கா பையன்கள் எல்லாரும் சாப்பிட்டு விட்டு இன்னும் கொஞ்சம் கேட்போம். அதைக் கேள்விப்பட்ட வைத்தியர் கந்தசாமிப் பிள்ளை எங்களுக்கு கால்சியம் குறைவாக இருப்பதாகக் கண்டறிந்து ஒரு சூரணம் கொடுத்தார். எலும்பைப் பொடி பண்ணின நிறமாகவே இருக்கும் அந்த சூரணம் விபூதியை பனங்கள்ளில் குழைத்து சாப்பிடுவது மாதிரி இருக்கும்.

கோல்கேட் பல்பொடி வந்ததும் கோபால் பல்பொடியை விட அதிகமாகச் சாப்பிட ஆரம்பித்தோம்.

வேறு வழியில்லாமல் கரிப்பொடியை தேசிய மயமாக்கி விட்டார்கள் வீட்டில்.

புளோரைட் அடங்கியது என்று ஜல்லியடித்து பினாகா புளோரைட் வந்த போது அதில் வரும் பொம்மைகளை சேமிப்பதற்காக அதை வாங்க ஆரம்பித்தோம். நிறைய மாமிகள் அந்த பொம்மைகளை வைத்து நவராத்திரி கொலுவில் மிருகக் காட்சி சாலை அமைத்தார்கள். பினாகா சிபாக்கா ஆனதும் அதிலிருந்த பற்று குறைந்து போனது.

அதற்கப்புறம் கிராம்பு வாசனையும், கண்ணாடிச் சிவப்புமாக இருந்த குளோசப்.

அதைக் கையில் எடுக்கிற போதெல்லாம் “குலோசாப் ஸ்மைல்” என்று மந்திர ஸ்தாயியில் பின்னணி கேட்க, மனசில் அழகான பெண் தோன்றி சிரிப்பாள்.

இப்படி ஏதேதோ பண்ணிப் பார்த்தும் (அல்லது அதனால்தானோ?) பற்கள் ஒன்றும் பச்சரிசிப் பற்களாக இல்லை. எல்லாருக்கும் மேலே ஒரு வரிசை கீழே ஒரு வரிசைதான் இருக்கும். எனக்கு பற்களிலேயே மெயின் ரோட், கிராஸ் ரோட், முட்டு சந்து எல்லாம் உண்டு.

“பல்லு ஆடுது டாக்டர்”

என்று ஒருதரம் வேலூரில் ஒரு டாக்டரிடம் போயிருந்தேன்.

“இப்படிப் பொதுவா சொன்னா எப்டி சார், மேலே மூணு வரிசை இருக்கு. கீழே நாலு வரிசை இருக்கு. எந்த வரிசைலே எத்தனாவது பல்லுன்னு சொல்லுங்க” என்றார்.

அங்கே பல்லில் சில்வர் அமால்கம் அடைத்தது ஒரு மெமரபிள் நிகழ்ச்சி. அதை வேறொரு சமயம் சொல்கிறேன்.

Advertisements

22 comments

 1. என்ன இருந்தாலும் விக்கோ வஜ்ரதந்தி’ய விட்டிருக்கக் கூடாது சார்.. 🙂
  “(18வகை) ஆயுர்வேத மூலிகைகளாலே உள்நாட்டிலே தயாரானது” அப்படின்னு வர விளம்பரத்தை எத்தனை சினிமா தியேட்டரில் பார்த்திருப்போம்..

 2. வாய்க்கு தேவையான நல்ல அசை.

  சிறு வயதில் கிராமங்களூக்கு செல்லும் போது அடுப்பில் இருந்து சாம்பல் எடுத்து அப்படியே (சாப்பிடுவோம்) பல் தேய்ப்போம். 🙂

  ஆலும்,வேலும் பல்லுக்கு உறுதி. அதை விட்டுட்டிங்களே சார்.. வேப்பமரக்குச்சி வச்சு தேய்த்ததில்லையா… ஹைதராபாத்தில் மரங்கள் அடர்ந்த மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை பார்ர்க்கும் போது இரவு பணி முடிந்து அரை மணி நேரம் பல் தேய்த்து கொண்டே நடந்தே இல்லம் திரும்புவோம். முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. பழகியபின் விட கஷ்டமாக இருந்தது.பேட்டரி பிரஸ் எல்லாம் வேப்பம்குச்சி முன் எம்மாத்திரம்…..

  ம்ம்ம். அது ஒரு அழகிய பல் தேய்த்த காலம்…..

 3. என்னது வாயில் மெயின் ரோடு, கிராஸ் ரோடு முட்டு சந்தா? விட்டா மேம்பாலம் கட்டி அழகிரிதான் திறக்கனும்னு அடம் பிடிப்பீங்க போல

 4. பல்பொடிக்கெல்லாம் டூத் பிரஷ் செட்டாகாது. ஆள்காட்டி விரல்தான். பல் பொடிய விரலால தொட்டு இப்படி அப்படின்னு ரண்டு தேய் தேய்ச்சுட்டு இடது கையில் இருக்கிற பல்பொடிய கீழ கொட்டிட்டு டிரைளசரில் ஒரு தட்டு.. “ பாட்டீ.. பல்லு விளக்கியாச்சு காபி ரெடியா…”

  ஹ்ம்.. இப்பல்லாம் பல்லு தேய்க்கறதோட நாக்கெல்லாம் வேற வடிக்க சொல்றாங்க சார்…

 5. சோப் பற்றி நான் ஒன்னு எழுதிக்கிட்டு இருக்கேன்:-)

  நானும் சுத்தோ சுத்துன்னு சுத்திட்டு இப்போ விக்கோ வஜ்ரதந்தி.

  நம்ம பெரிடாண்டிஸ்ட் கேட்டது, உன் ஆடும் பல் இன்னுமா விழலை? என்ன பேஸ்ட் போடறே?

  டட்டடாய்ங்…… வீக்கோ…வஜ்ரதந்தி!

  இஸ் இட் அ பேஸ்ட் வித் C urry?

 6. பதினாலு முப்பத்தி ஒண்ணு தான், சற்று காரமிருக்கும்… இப்போது கூட, யாராவது சிங்கபூர், மலேசியா, மொரிஷியஸ் எல்லா எடத்துலயும் பாடியிருக்கிறேன் என்றால், oh… சுருக்கமா, performed in payoria countries-னு சொல்லு என்பதுண்டு… 🙂

  1. ஆஹா, நாகராஜ் சார், உங்க விரல் லயம் பேசுது, குரல் நயம் பேசுது! உங்க இசை விழா அனுபவங்களை எங்க வாசகர்களோடு பகிர்ந்துக்கறீங்களா?

 7. :-)) . உங்களுக்கு முட்டுச்சந்து, மெயின் ரோடு என்றால், எனக்கு கோட்டை வாசல் மாதிரி நடுவுல ஒரு கேப்.

  பல் டாக்டரிடம் போன நாளை யாராலும் மறக்க முடியாது. அந்த டாக்டரை கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போகலாம்னு தோணும்

  1. அண்ணாத்தே, எனக்கும் அப்டித்தான் தோணிச்சு. ஒரு வித்யாசம். கொலை பண்ணிட்டு ஜெயிலுக்குப் போகாம தப்பிக்கனும்ன்னு தோணிச்சு!

  1. மூர்த்திஜி, ஓர் பல்லா…. நமக்கு ரெண்டு பல் தவிர எல்லாம் இருக்கு சாரே…. அது சரி, அப்பப்ப வரீங்க, அப்பப்ப போய்டறீங்க, ரொம்ப பிசியோ?

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s