உஷார்… இணையத்தில் நூதன ஏமாற்றுகள்!

எனக்கு வந்திருந்த மின்னஞ்சலும், அதனுடன் இணைக்கப் பட்டிருந்த பணி ஆணையும் என்னை சில வினாடிகள் சந்தோஷத்தில் உறைய வைத்தன.

பார்த்தீர்கள் இல்லையா?

உடனே ஆள் காட்டி விரலால் காற்றில் கணக்குப் போட ஆரம்பித்தேன்.

வாடகையும், போக்குவரத்தும் இருக்கிற மேட்டுக் குடி குடும்பங்களே லண்டனில் மாசம் நாலாயிரத்தி சொச்சம் பவுண்டுகள்தான் செலவு செய்கிறார்கள். இரண்டும் இல்லை என்றால்? மூவாயிரமோ அதை விடக் குறைவோதான் ஆகும். அப்போது மாசம் நாலாயிரம் பவுண்டு மிச்சம். அதாவது சுமார் மூன்று லட்ச ரூபாய். இரண்டு வருஷத்தில் எழுபத்திரண்டு லட்சம்.

போதுமே, வந்து வேளச்சேரி ரோடில் ஒரு அபார்ட்மென்ட் வாங்கிக் கொண்டு சுக ஜீவனம் செய்யலாமே!

ஏனோ மனசுக்குள் ஒரு ரெட் அலர்ட் எரிந்தது.

கொஞ்சம் பின்னணியை சொல்கிறேன்.

சென்ற வாரம் ஒரு நாள் Sanford Wofz என்கிற நபரிடமிருந்து எனக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது.

பொறியியல் மற்றும் தொழில்நுட்பாளர்கள் வேலைகளுக்கு காலியிடங்கள் இருப்பதாகவும், என் படிப்பு மற்றும் அனுபவத் தகுதிகளை அனுப்புமாறும் கேட்டிருந்தார்கள். நான் இந்திரன், சந்திரன், வானத்தை வில்லாய் வளைப்பேன், காற்றைக் கயிறாய்த் திரிப்பேன் என்றெல்லாம் எழுதி உடனே அனுப்பினேன்.

முதலில் ஒரு அக்னாலட்ஜ்மென்ட் செய்தி வந்தது.

தொடர்ந்து, ‘Bel Valves’ என்கிற UK நிறுவனத்தின் Letter Head இல் interview form என்று ஒன்று வந்தது.

இந்த நிறுவனம் பற்றி உடனே இணையத்தில் படித்தேன். உயர்ந்த நிறுவனம். உலகம் பூரா சுமார் எட்டு இடங்களில் கிளைகள். எண்ணைக் கம்பெனிகளுக்கு பலதிறப்பட்ட வால்வுகள் செய்கிறவர்கள். கொஞ்சம் ஊக்கம் பிறந்தது.

அதில் நிறைய சுவாரஸ்யமான கேள்விகள். உன் பலம் என்ன, பலஹீனம் என்ன, உன்னை நாங்கள் ஏன் வேலைக்கு எடுக்க வேண்டும், நீ டீமாக வேலை செய்வாயா, தனியாகவா, உன் மேலதிகாரியிடம் என்ன எதிர்பார்க்கிறாய், நீ மேலதிகாரியாக இருந்தால் எப்படி நடப்பாய், உன்னுடைய சிறந்த மற்றும் மோசமான அதிகாரிகள் பற்றி சொல்லு, நீ செய்த பெரிய சாதனை என்ன, வேதனை என்ன இத்யாதி. இறுதியில் இந்த வேலையை நாங்கள் தராவிட்டால் எப்படி ரியாக்ட் செய்வாய் என்று வேறு ஒரு கேள்வி. எங்கள் கம்பெனி பற்றி உனக்கு என்ன தெரியும் என்பதும், வேறு ஏதாவது கேட்க விருபுகிறாயா என்பதும் நான் ரசித்த கேள்விகள். அதற்காக அந்த நிறுவனம் பற்றி நிறையப் படித்தேன்!

மறுபடியும் வானத்தை வில், காற்றைக் கயிறு. அனுப்பியாயிற்று.

மூன்றாம் நாள் இந்த பணி ஆணை!

ஆனந்த அதிர்ச்சியிலிருந்து கொஞ்சம் கழற்றிக் கொண்டு நுணுக்கமாகப் பார்த்தேன். கீழ்காணும் விஷயங்கள் உறுத்தின.

– கேட்டதை விட இரண்டாயிரம் பவுண்டு சம்பளம் அதிகமாகப் போட்டிருந்தது.
– மின்னஞ்சல் அனுப்பியிருந்தது Execs என்கிற நிறுவனம். பணி உத்தரவு Bel Valves இன் Letter Head இல்.
– carrier@belvalv என்கிற முகவரியிலிருந்து வந்திருந்தது. இந்த எழுத்துப் பிழை கொஞ்சம் யோசிக்க வைத்தது.

இன்னும் கொஞ்சம் இணையத்தில் மேய்ந்தேன்.

கையொப்பமிட்டிருந்த ஆட்கள் பெயரில் அந்த நிறுவனத்தில் யாருமில்லை. அவர்களுக்கே இது நிஜமா என்று கேட்டு அந்தப் பணி உத்தரவை பார்வார்ட் செய்திருக்கிறேன். இன்னம் பதில் வரவில்லை. பணம் ஏதாவது கேட்டாலோ, அக்கவுன்ட் நம்பர் கேட்டாலோ தருவதில்லை என்கிற முடிவோடு ஆட்டத்தைத் தொடர்ந்து ஆடிக் கொண்டிருக்கிறேன். மேலும் விவரம் கிடைத்ததும் சொல்கிறேன்.

உபரித் தகவல் : தனக்கு இது மாதிரி ஒரு பணி உத்தரவு வந்திருப்பதாயும், அது நிஜமானதுதானா என்றும் கேட்டு ஸ்ரீகுமார் என்கிற கேரளா வாலிபர் consumar complaints.in என்று பெயரிட்ட ஒரு தளத்தில் கேட்டிருக்கிறார். ஏறக்குறைய இதே போலவே எல்லாம் இருக்கின்றன. அவருக்குத் தருவதாகச் சொல்லப் பட்டிருக்கும் சம்பளம் எட்டாயிரத்தி முன்னூற்று நாற்பது பவுண்டுகள்.

அதாவது Field Manager ஐ விட Technician க்கு ஆயிரத்தி முன்னூறு பவுண்டு சம்பளம் அதிகம்!

லண்டனில் வசிக்கும் நண்பர்கள் யாராவது இதைப் படிக்க நேர்ந்தால் அதிக விவரங்கள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Advertisements

12 comments

  1. நன்றி கண்ணன்ஜி. என்ன இருந்தாலும் அந்த அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் பார்த்ததும் கொஞ்ச நேரம் எனக்குக் கிடைச்ச சந்தோசம், ஆஹா. எதிரியா இருந்தாலும் இப்படிப்பட்ட சந்தோஷத்தைக் கொடுத்த அவன் வாழ்க!

 1. at least telephonic interview கூட இல்லாமல் யாராவது வேலை கொடுப்பர்களா என்ன ??? இதிலிருந்தே தெரிகிறது அது போலி என்று !!!

 2. Sir,
  I too got a mail from Addict Clothing Co – UK, i got the appointment letter with some documents (kind of contracts) suddenly i contacted Addict clothing Co – (throu their official id), then i came to know about this scame…

  One second – Tharayil Kaal Pathiya Villai – Sampalaththai Paartha Udan 🙂

  Ha Ha….
  Thx for sharing this experience sir….. Nalla Akkappore 🙂

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s