3840 அடுக்கு மாடி – இது அடுக்குமாடீ?

“பேப்பர் பாத்தியா சுஜாதா, செம்மொழி மாநாட்டை ஒட்டி கோவைலே 3840 அடுக்கு மாடி வீடாம்”

“3840 அடுக்கு மாடி…. ! இது அடுக்குமாடீ?”

“அறுக்காதே, 3840 அபார்ட்மென்ட் ஹவுசஸ்”

“அதானே பாத்தேன், அத்தனை மாடியா இருந்தா கடைசி மாடிக்கு லிப்டில போனாலும் மூணரை மணி நேரம் ஆகும்”

“அது மட்டும்தானா, ஆம்பியன்ட் டெம்பரேச்சர் மைனஸ் இருபத்தி மூணு இருக்கும்”

“சரிதான், செம்மொழி புண்ணியத்தைக் கட்டிக்குது”

“அது மட்டுமில்லை, இன்னும் என்னன்னவோ சீரமைக்கறாங்க கோவைலே”

“எனக்கென்னமோ நம்ம ஊருக்கு அடுக்கு மாடி எல்லாம் தேவையே இல்லைன்னு தோணுது”

“ஏன்?”

“ஜனங்க ஏற்கனவே நெரிசலா இருக்கிற இடங்கள்லையே போய் போய் அடையறாங்க. அங்கே கிரவுண்டு யானை விலை குதிரை விலை விக்கிது. இன்னைக்கு மெட்ராஸ் சிடியிலே ஒரு சிங்கிள் பெட் ரூம் அபார்ட்மென்ட் வாங்கணும்ன்னாலே ஐம்பது லட்சம் ஆகுது.”

“பாம்பே பல வருஷமா அப்படித்தான் இருக்கு. அங்கே சிடியை எவ்வளவோ டெவெலப் பண்ணியிருக்காங்க. நவி மும்பை எல்லாம் கூட வந்தாச்சு. எழுபத்தாருலையே ஸ்லம் ட்வேல்லிங் பைலட்ஸ்ன்னு வீக்லியிலே ஒரு ஆர்டிக்கிள் வந்திருந்தது”

“ஆமாமாம். ஏர் இந்திய பைலட்ஸ் எல்லாம், பிரிஜ், டிவியோட ரயில்வே லைன் பக்கம் கூடாரம் போட்டுக்கிட்டு இருக்கிற மாதிரி போட்டோ எல்லாம் கூட வந்திருந்தது”

“பாம்பேயிலே முப்பத்தஞ்சு மாடி அபார்ட்மென்ட்ஸ் இப்ப சர்வ சாதாரணம்”

“அங்கே யாராவது செத்தா கூட நிக்க வெச்சிதான் புதைக்கணும்ன்னு சொல்வாங்க இருபது வருஷம் முன்னேயே”

“மெட்ராஸ்ல அந்த மாதிரி அடுக்கு மாடிக்கு அக்யூட் நேசெச்சிடி இல்லை. வாங்கிப் போட்டு இருபத்தஞ்சு வருஷம் ஆன ஏரியாவெல்லாம் இன்னமும் டெவலப் ஆகாமையே இருக்கு”

“தெரியுமே, வெங்கம்பாக்கத்திலே நைன்டீன் எய்ட்டி சிக்சிலே பதிநாறாயிரத்தி சில்றைக்கு வாங்கின கிரவுண்டுன்னு ஆரம்பிச்சிடாதே..”

“இன்னைக்கு வேறே மாதிரி சொல்லலாம்ன்னு பாக்கறேன்”

“எப்டி?”

“இந்த செம்மொழி மாநாட்டை வெங்கம்பாக்கத்திலே நடத்தியிருக்கலாம்”

“அது சரி, அதுக்கப்புறம் படப்பைலே நடத்தச் சொல்வே. அப்பறம் வாலாஜாபாத்துக்கு வரணும்பே…”

“பண்ணணும்ப்பா… அப்பதானே சிடி டெவலப் ஆகும்”

“எனக்கொரு சந்தேகம்”

“என்ன?”

“அரசாங்கம் வசதிகள் பண்ணப்புறம் ஜனங்க குடி போறாங்களா, ஜனங்க குடி போனப்புறம் வசதி பண்றாங்களா?”

“அதுக்கு முன்னே இதுக்கு பதில் சொல்லு”

“என்னது?”

“முட்டை முதல்லையா, கோழி முதல்லையா?”

“எதை முதல்ல ஆர்டர் பண்றோமோ அதான் முதல்லே வரும்”

“அடக் கடவுளே, நீ ஏன் இப்டி இருக்கே?”

“ஏன் நீ மட்டும்தான் இப்டி இருக்கணுமா என்ன?”

Advertisements

5 comments

 1. //“இந்த செம்மொழி மாநாட்டை வெங்கம்பாக்கத்திலே நடத்தியிருக்கலாம்”//

  சிடி டெவலப் ஆகறத்துக்கு செம்மொழி மாநாடெல்லாம் ஒண்ணும் நடத்த தேவையேயில்லை.
  ஒண்ணு ரெண்டு ஐடி பார்க் திறந்தாங்கன்னாவே போதும். எப்படி இருந்த ஓ ம் ஆர் ரோடு இப்படி ஆயிருச்சு பாருங்க…

 2. எனக்குத் தெரிந்து நெறைய இடங்கள் ஜனங்கள் குடிபோனப்புறம் தான் வசதிகள் செய்து தருகிறார்கள்..

  //“எதை முதல்ல ஆர்டர் பண்றோமோ அதான் முதல்லே வரும்”//

  சார்.. எது இருக்கோ அதை தானே ஆர்டர் பண்ண முடியும்?
  எப்பூபூபூபூடி???
  🙂

 3. //“முட்டை முதல்லையா, கோழி முதல்லையா?”

  “எதை முதல்ல ஆர்டர் பண்றோமோ அதான் முதல்லே வரும்”

  //

  அங்கே தான் நீங்க நிக்கறீங்க !! ( மத்த இடத்துலன்னு இடக்கா கேக்க கூடாது )

  1. சேவியர், உங்க காமன்ட் நீங்க என்னை எவ்வளவு ஆழமா புரிஞ்சிகிட்டிருக்கீங்கன்னு காட்டுது. நன்றி, நம்ம குரூப்புக்கு ஒரு பொருத்தமான ஆள்!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s