உப்புமாவும் சிக்(கு)மாவும்

கடவுளை சக்தியாகவும், சிவனாகவும் சித்தரித்திருப்பதற்கு தெளிவான விஞ்ஞானப் பின்னணி உண்டு.

சிவம் என்பது நிலைச் சக்தி. சக்தி என்பது இயங்கு சக்தி. (Potential and Kinetic Energy)

உயரத்தில் தேக்கி வைத்த நீருக்கு சக்தி இருப்பது நிஜம்தான். ஆனால் அதைத் திறந்து விட்டு சக்கரங்களை சுழல விட்டு மின்சாரம் எடுக்கிற போதுதான் பலன் கிடைக்கிறது. எந்த Potential Energy யும் Kinetic ஆக மாறுகிற வரை பிரயோஜனமில்லை. இதை இன்னம் கொஞ்சம் எளிமையாக சொல்ல திருவிளையாடல் படத்தில் சக்தியும், சிவனும் தகராறு செய்து கொள்வதாகக் காட்டி இருக்கிறார்கள்.

புலவர் கீரன் இதற்கு இன்னும் சிறப்பான உதாரணம் சொல்வார்.

உடல்நிலை சரியில்லாமல் சோர்வாகப் படுத்திருக்கிறவனை,

“என்ன ஆச்சு?” என்று கேட்டால்,

“உடம்புல சக்தியே இல்லை, அதான் செவனேன்னு கிடக்கேன்” என்பானாம்.

அதாவது Kinetic Energy ஆக மாறுகிற வரை Potential Energy ஆக கிடக்க வேண்டியதுதான்.

நான் சொல்ல வந்த விஷயத்துக்கு இந்த முன்னுரை கொஞ்சம் ஓவர்தான்.

கடந்த மூன்று வாரங்களாக சக்தி இல்லாமல் சிவம் மட்டும் இயங்க வேண்டிய சூழ்நிலை எங்கள் வீட்டில்.

என் இல்லத்தரசி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு வெறும் Potential Energy ஆக மாறி விட்டார். Potential Energy ஆக இருந்த நான் இயங்கி Kinetic Energy ஆக மாற வேண்டியதாயிற்று.

என் கம்ப்யூட்டர் நாற்காலியில் இல்லத்தரசியை வைத்து ‘சுமை தாங்கி சாய்ந்தால்’ என்று பாடாத குறையாக தள்ளிக் கொண்டிருந்தேன்.

எலும்பு முறிவே பரவாயில்லை என்று நினைக்கிற மாதிரி சமைத்தும் போட்டேன்.

“சமையலா, நானா…. சான்ஸே இல்லை. ஒரு சமையல்காரியை வேணா வெச்சிக்கறேன்….. ஐ மீன், வெச்சிக்கலாம்”

“ஹும்ம்ம்… இவ்வளோதானா உங்க சிக்ஸ் சிக்மா, ப்ளாக் பெல்ட் எல்லாம்”

“என்ன, என்னை சீண்டிப் பாக்கறயா?”

“சீண்டவும் இல்ல வேண்டவும் இல்ல… ஒண்ணரை லட்ச ரூபா செலவு பண்ணி படிச்ச படிப்பு நமக்கு பிரயோஜனப் படல்லைன்னா, அது வெத்து வேட்டுதான்”

“அதுக்காக, பாத்திரம் தேய்க்கவும், வீடு கழுவவும், சமைக்கவும் அது யூஸ் ஆகணும்ன்னு நீ எதிர் பார்க்கிறது நியாயமே இல்லை”

“ஏன், இதெல்லாம் உங்களுக்கு சாமானியமான வேலையாத் தெரியுதா? அப்டீன்னா அலட்சியமாப் பண்ணிட்டு போக வேண்டியதுதானே?”

“அம்மா தாயே, இதெல்லாம் சாமானியமான விஷயம் இல்லைதான், ஒத்துக்கறேன். ஆளை விடு”

“அப்பா இதெல்லாம் கஷ்டமான விஷயம்ன்னு ஒத்துக்கறீங்க”

“ஆமாம்”

“இதைப் புரிஞ்சிகிட்டு செய்யற திறமை உங்களுக்கு இல்லை”

“அ….. ஆமாம்”

“அப்பா சிக்ஸ் சிக்மா வேஸ்ட்தான்”

“நீ என்ன சுத்திச் சுத்தி அங்கேயே வர்றே?”

“உங்க தொழிலை குறைச்சி சொல்றேனே… ரத்தம் கொதிக்கலை? மீசை துடிக்கலை? என் சிக்ஸ் சிக்மாவாலே முடியாதது ஒண்ணுமே கிடையாதுன்னு நிரூபிக்கிற துடிப்பு வரல்லை?”

வரத்தான் வந்தது.

“ஒண்ணும் வேண்டாம், ஒரு ரவா உப்புமா பண்ணி கொண்டாங்க முதல்ல…. உங்க சிக்ஸ் சிக்மாவோட கேபபிளிட்டி என்னன்னு பாக்கறேன்”

அடக்கடவுளே…. இது என்ன தர நிர்ணய உலகத்துக்கு வந்த சோதனை!

என்னுடன் போட்டியிட்டுப் பாட பாணபத்திரன்தானா கிடைத்தான்! என்று பாலய்யா மாதிரி அலுத்துக் கொண்டு தயாரானேன்.

“சரி.. முதல்ல ப்ரீபா எப்படிப் பண்றதுன்னு சொல்லிடு”

“பூ.. இது வாச்சாங்குள்ளி ஆட்டம்”

“இத பார், நீ சிக்ஸ் சிக்மான்னு சொன்னதாலே சொல்றேன். சிக்ஸ் சிக்மாங்கிறது ஒரு பிராசசை டிசைன் பண்ற ஆக்டிவிட்டி இல்லை. சிறப்பா செய்யற வேலை. அதில முதல் படியே Understand the Process தான்”

இப்போது ரவா உப்புமா செய்வது பற்றி நூறு வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு கட்டுரை வரைவது என் இல்லத்தரசிக்கு தவிர்க்க முடியாததாயிற்று. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டேன்.

அடுத்த இருபத்தைந்து நிமிஷங்களில் ரவா உப்புமா ரெடி.
 
கொண்டு போய்க் கொடுத்தேன்.
 
“ரொம்ப சீக்கிரம் ஆனா மாதிரி இருக்கே, எதோ தப்பு பண்ணியிருக்கீங்க”
 
“முதல்ல உப்புமாவை சாப்பிடு. அப்புறமா விமர்சனம் பண்ணலாம்”
 
சாப்பிட்டாயிற்று.
 
“எக்சல்லன்ட் வில் பி எ ஸ்மால் வோர்ட். நான் சொன்னதை அப்டியே பிடிச்சிகிட்டீங்க. என்னை விட நல்லா பண்ணியிருக்கீங்க”
 
“நன்றி. ஆனா ஒரு விஷயம். நீ சொன்னதை அப்படியே பண்ணியிருந்தா நீ பண்ற மாதிரியேதான் வரும். அதை விட பெட்டராவும் வராது, அதை விட மட்டமாவும் வராது. சேம் ப்ராசஸ் வில் ஆல்வேஸ் புரோட்யூஸ் சேம் ரிசல்ட்.”
 
“சரி. அப்ப எதை மாத்தினீங்க?” 
 
“சொல்றேன், ஆனா சொன்னப்புறம் அதானே பார்த்தேன், அப்பவே எனக்கு சந்தேகம். இதை இது பண்ணா இப்டித்தான் ஆகும்ன்கிற மாதிரி பேச மாட்டேன்னு பான்ட் எழுதி கையெழுத்துப் போடு”
 
“அய்யோ கடவுளே, என்னைத் தெரியாதா உங்களுக்கு? சொல்லுங்க”
 
“சீக்கிரம் பண்ணதுக்கு முக்கிய காரணம் நான் ரவையை வறுக்கலை”
 
“ஐயேய்யே அப்ப கட்டி கட்டிடுமே….”
 
“இப்ப கட்டியா இருந்ததா?”
 
“இல்லை”
 
“அப்ப அது தேவையில்லைதானே?”
 
“அதெப்புடி சொல்ல முடியும்?”
 
“இத பார், ரவை ஈரமா இருந்தா கட்டி கட்டும். அதுக்குத்தான் வறுக்கிறது. ஈரம் இல்லாட்டா வறுக்க வேண்டாம். அப்படியே ஈரமா இருந்தாலும், தண்ணியை சுத்த விட்டிட்டு ரவையை தூவிகிட்டே இருந்தா கட்டி கட்டாது”
 
“ஆஹா… கிரேட்”
 
“கிரேட் நானில்லை. பூர்ணம் விஸ்வநாதன். சுஜாதாவோட வந்தவன் நாடகத்திலே அவர் சொன்னதைத்தான் செஞ்சேன்”
 
“அடேங்கப்பா… அப்பறம்… வேறென்ன வித்யாசம்?”
 
“நீ ரெண்டு பச்ச மொளகா போடச் சொன்னே, நான் ஆறு போட்டிருக்கேன்”
 
“அதானா… கொஞ்சம் இதுவா இருக்………”
 
“நோ….”
 
“ம்ம்ம்… சரி… அப்புறம்?”
 
“நீ தண்ணி ஒண்ணுக்கு மூணு போடச் சொன்னே. நான் அப்டியெல்லாம் அறித் மெட்டிக்கா போகல்லை. கிளர்ற வரைக்கும் அஸ் அண்ட் வெண்  ரிக்கொஐயர்ட ஊத்திகிட்டே இருந்தேன். மொத்தமா மூணரை வந்திருக்கும்”
“சரி…. வேறே?”
 
“தக்காளியை வெங்காயம் வதககறப்போ  போடல்லை. தண்ணி கொதிச்சப்புறம்தான் போட்டேன்”
 
“இதெல்லாம் சரி, அந்த சீக்கிரம் ஆனதுக்கு இன்னமும் ஜஸ்டிபிகேஷன் வரல்லையே?”
 
“அடுப்பைப் பத்த வச்சதிலேர்ந்து ஊத்த வேண்டிய தண்ணியை பர்னர் பக்கத்திலேயே வச்சிருந்தேன். ஊத்தறப்பவே அது பாதி சூடா இருந்தது”
 
“அய்யைய்யோ, அப்ப கேசும் மிச்சமாச்சே?”
 
“ஆமாம்’
 
“அட… இதையெல்லாம் எப்படி தெரிஞ்சிகிட்டீங்க?”
 
“நீ கொம்பு சீவி விட்டதாலே”
 
“அப்ப சிக்ஸ் சிக்மாவுக்கு கொம்பு சீவ ஒரு ஆள் தேவைன்னு சொல்லுங்க?”
 
“நிஜம்தான், ஆனா அதுக்கு முக்கியமா இன்னொன்னு தேவை”
 
“என்னது?”
 
“கொம்பு”
Advertisements

77 comments

  1. மூர்த்திஜி, படிச்சப்புறமும் தைரியம் இருந்தா எப்ப வேணா வரலாம். இல்லைன்னா ஒரு டப்பர் வேர் பாக்ஸ்ல போட்டு குரியர் பண்றேன்!

 1. GEM of an article. எவ்ளோ காம்ப்ளெக்ஸ் மேட்டரையும் இப்படி ஒரு ஸ்டைல்லயும் சிம்பிளாவும் எழுத ஒரே ஒருத்தர்தான் இருந்தார், இப்ப அவர் இல்லை – அவர் உயிரோட இருந்து சிக்ஸ் சிக்மாவைப்பத்தி கலகலன்னு எழுதியிருந்தா இப்படிதான் இருந்திருக்கும்ன்னு சொல்றமாதிரி கண்ணில ஒத்திக்கிற தரத்தில எழுதியிருக்கீங்க ஜவஹர், வீட்ல சொல்லி சுத்திப்போடச் சொல்லுங்க, Wonderful!

  – என். சொக்கன்,
  பெங்களூரு.

   1. உங்களைச் சந்திக்கணும்ன்னுதான் ரொம்ப நாளா நினைச்சுகிட்டிருக்கேன், பொங்கல் கலாட்டா முடிஞ்சப்புறம் ஒரு சனி, ஞாயிறு ப்ளான் செய்வோமா? (மெயில்ல பேசுவோம்)

    – என். சொக்கன்,
    பெங்களூரு.

   1. இந்த சனி ஜனவரி பதினாறு, தம்பிசெட்டிபட்டி வரை குடும்பத்தோடு ஒரு டிரைவ் செல்லலாம் என்று இருக்கிறேன். ஹோசூரில் அப்படியே உங்களை பார்க்கலாமா? அங்கிருக்கும் ஸ்கூல், அபார்ட்மண்ட்ஸ், வாழ்க்கை பற்றி தெரிந்துக்கொள்ள ஆவல்.

    தனி மடல் இட vijayashankarindia @ gmail

 2. ஜவஹர் மிகவும் அருமையாக எழுதியிருக்கீங்க!

  சந்திக்க வேண்டிய மனிதர் நீங்கள்!

  ப்ராசஸ் ஏக்டிவிடியை கோல்ட்ரேட்டும் ( கோல் ) இவ்வளவு ஈசியாக சொல்லியிருக்க முடியாது!

 3. உப்புமாவுக்கு இப்டி ஒரு explanation ஆ!!!!!!! சூப்பர் சார். ஆரம்பத்துல ஆன்மீகத்துல start பண்ணி, physics, family,cooking அப்டினு எல்லா subject லயும் நீங்க expertனு நிருபிச்சிட்டீங்க….

  1. நன்றி ரேவதிஜி, நான் எழுதறது informative ஆவும் interesting ஆவும் இருக்கணும்ன்னு விரும்புவேன். அது convey ஆகியிருக்கு.

 4. Jawahar,

  Super-a ezhudhi irukkeenga..I have been a silent reader of your articles for a few months now. but this article made me to write this comment.Romba elimayana nadaiyila nagaichuvai kalandhu arumaya ezhudhareenga. keep up the good work. Thanks to Chokkan for the link to your blog site.

  1. நன்றி KVR. எனக்குத் தெரிஞ்ச மேனேஜ்மென்ட் தத்துவங்களையும் தொழிற் நுட்பத்தையும் எளிமையாவும் சுவாரஸ்யமாவும் சொல்லன்னும்ன்கிறது நான் எழுதறதோட நோக்கங்கள்ள ஒண்ணு.

  1. நல்லா இருக்காங்க ரேவதிஜி. இன்னைக்குதான் கட்டு பிரிச்சோம். நடக்க ஆரம்பிச்ச குழந்தை ரெண்டடி வெச்சிட்டு பெருமையாவும், சந்தோஷமாவும் சிரிக்குமே அதுமாதிரி நடந்து நடந்து சிரிக்கிறாங்க.

 5. ஜவஹர், சும்மா கைக்கு வந்த மாதிரி எழுதியிருக்கீங்கன்னு நினைச்சேன். அதே methodology folloow பண்ணி உடனே பண்ணிப் பார்த்துட்டேன். பிரமாதம். நீங்க ரெண்டு பேர் கணக்குக்கு பண்ணியிருப்பீங்க, எங்க வீட்ல நான், இவர், பசங்க ஸ்ரீராம், ஸ்ரீகாந்த் நாலு பேர். அதனால முப்பத்திரண்டு நிமிஷம் ஆச்சு. ரவையை வறுக்காததும், தக்காளி பாதி வெந்த பத்மாவும் இருக்கிறதிலே ஒரு எக்ஸ்ட்ரா பிளேவர் கிடைக்குது. hats off !

  1. நன்றி உஷாஜி, என் சமையலை ஒரு பெண் பாராட்டறது ரொம்பப் பெருமையா இருக்கு. ஸ்ரீராம் யாருன்னு கேட்டிருந்தேன், அதுக்கு பதில் இப்பதான் சொல்லியிருக்கீங்க.

  1. ஓ…. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் மணி, பொண்ணு எந்த ஊரு? நாங்கல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்காரன்களா பந்தாவா ஆஜராயிடுவோம்! அதிலயும் நான் முத நாளே வந்துடுவேன், பஜ்ஜி, கேசரி சாப்ட்டு ரொம்ப நாளாச்சு!

   1. இப்போ தான் சார் பார்க்க ஆரம்பிச்சிருக்கோம்.. ஏதும் பிக்ஸ் ஆனா கண்டிப்பா சொல்றேன்.. நீங்கல்லாம் இல்லாமலா? நீங்க சொன்னா மாதிரி முத நாளே வந்துட்டா ரொம்ப சந்தோஷப் படுவேன்.. 🙂

 6. நீங்க ரவா உப்புமா தவிர வேறு எதைப் பண்ணியிருந்தாலும், நான் உங்க விலாசம் தேடி வந்து சாப்பிட்டுப் பார்த்திருப்பேன். ரவா உப்புமா என் அப்பாவுக்குப் பிடிக்கும், என் பையனுக்குப் பிடிக்கும் – எனக்கு பிடிக்கவே பிடிக்காது. ஆனா பாருங்க அப்பாவுக்காக அம்மா பண்ணிய நாட்களிலும், இப்போ பையனுக்காக அவனுடைய அம்மா பண்ணுவதையும் வேண்டா வெறுப்பாக நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்!

 7. Whatever I wanted to say, Mr Sokkan put it succinctly..
  //GEM of an article. எவ்ளோ காம்ப்ளெக்ஸ் மேட்டரையும் இப்படி ஒரு ஸ்டைல்லயும் சிம்பிளாவும் எழுத ஒரே ஒருத்தர்தான் இருந்தார், இப்ப அவர் இல்லை – அவர் உயிரோட இருந்து சிக்ஸ் சிக்மாவைப்பத்தி கலகலன்னு எழுதியிருந்தா இப்படிதான் இருந்திருக்கும்ன்னு சொல்றமாதிரி கண்ணில ஒத்திக்கிற தரத்தில எழுதியிருக்கீங்க ஜவஹர், வீட்ல சொல்லி சுத்திப்போடச் சொல்லுங்க, Wonderful!

  – என். சொக்கன்,
  பெங்களூரு.
  //

  Another ace in your sleeve. Eagerly looking forward to meeting you some time.. I am from Krishnagiri.

 8. நல்லா இருந்திச்சி.. அனுபவிச்சிப் படிச்சேன்..

  நீங்களெல்லாம் ஆசிரியராப் போனால் அடுத்த தலைமுறை நல்லா இருக்கும்..

  ரிட்டயரான உடனே எங்க ஸ்கூலுக்கு (மயிலாடுதுறை DBTRNHSS) கௌரவ ஆசிரியரா வருவதற்குச் சம்மதமா ? இப்பவே துண்டு போட்டு வெச்சிக்கிறேன்..

 9. ஐயா,கலக்கிட்டீங்க..
  சுஜாதா மாதிரியே எழுதுறது ஒரு மைண்ட ப்ளாக்கா இருக்குன்னு ஒரு கமெண்டில் சொல்லியிருந்தேன்..
  இப்பவும் அதையே வேற விதமா சொல்றேன்..ஆனா மைண்ட ப்ளாக்கா இல்லை..

  கலக்கல்.ஸிக்ஸ் ஸிக்மா புக்குக்கு வெயிட்டிங்..

  1. நன்றி அறிவன். எளிமையாவும் நிறைய தகவல் உள்ளதாவும், affordable price ஆவும் இருக்கிற மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கேன். இன்னும் இரண்டு மாதங்களில் தயாராகி விடும்.

 10. தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

 11. பதிவு பிரமாதம்!
  ஆனா….
  //அஸ் அண்ட் வெண் ரிக்கொஐயர்ட ஊத்திகிட்டே இருந்தேன்//
  இதுமாதிரிதான் அங்கங்க கொஞ்சம் நெருடல்கள்!
  இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 12. தல ,

  சான்சே இல்ல அசால்டு பண்றீங்க.ரெம்ப எளிமையான நடையில் சிக்குமாவை உப்புமாவில் கலந்து அடிசுருகீங்க.

  உங்க இதயம் மேலும் மேலும் பேத்த வாழ்த்துக்கள்

 13. அன்னிக்கு சொக்கன் சுட்டிய பின் வேகமா படிச்சேன். இன்னிக்குதான் மெதுவா. உப்புமான்னாலே தமிழர் பலருக்கு மூஞ்சி கோணலகிவிடும்.

  டெண்ட் கட்டும் விருந்தாளியை ”மோப்ப குழையும் அனிச்சமாக்கும்” அருமருந்து இது. இதை இப்படி அழகாக பண்ண வைத்துவிட்டால் டெண்டை எதை வைத்து பிரிப்பது.

  உங்க மேல கஸ்டமர் சர்வீஸ் கம்ப்ளைண்ட் போடணும்!

 14. அன்பு ஜவஹர், சிக்ஸ் சிக்மாவை இவ்வளவு எளிமையாக நீங்கள் தான் சொல்லியிருக்கீங்க.

  வாழ்த்துகள்.

  என்றென்றும் பாலா பதிவிலிருந்து சொக்கன் பதிவிற்கு போய் அங்கிருந்து இங்கு வந்தேன்.

  நல்லதொரு பதிவு.

 15. அன்புள்ள ஜவர்லால்,

  பத்ரி பதிவிலிருந்து சொக்கன் பதிவிற்குப் போய் அங்கிருந்து இங்கு வந்தேன்.

  உங்களது Best பதிவு இது என்பது எனது கருத்தும் கூட.

  உங்களுக்கு நகைச்சுவை சரளமாகக் கை வருகிறது. என்ன இருந்தாலும் சாவியின் மோதிரக் கையால் குட்டுப்பட்டவர் ஆயிற்றே….

  உங்களிடமிருந்து மேலும் நிறைய எதிர்பார்க்கிறேன்….

  அன்புடன்,
  ஸ்ரீனிவாசன்

 16. அருமையா எழுதியிருக்கீங்க.
  உங்ககிட்ட வகுப்புக்கு வரலாமான்னு யோசிச்சிகிட்டு இருக்க்கேன்.

  உங்க தொடர்பு எண் பதிவில் இல்லை.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s