பொங்கலின் சரித்திரமும்-பூகோளமும்

பொங்கல் பண்டிகை சங்க காலத்திலிருந்தே கொண்டாடப் படுகிற பண்டிகையாகச் சொல்கிறார்கள்.

சங்கராந்தி என்கிற பெயரில் பல்வேறு மொழியினரும் அறுவடைத் திருநாளாகக் கொண்டாடினாலும், தமிழுக்கு இது குறித்து ஒரு சிறப்பு உண்டு.

‘பாவை நோன்பு’ என்கிற பெயரில் மணமாகாத பெண்கள் மார்கழி மாதத்தில் நோன்பு இருந்ததை சொல்கிறார்கள். பெண்களுக்கே உரித்தான அலங்கரித்துக் கொள்ளும் பழக்கங்களை ஒத்திப் போடுகிறார்கள். (மையிட்டெழுதோம், மலரிட்டு நாம்….. கேட்டிருப்பீர்கள்). பால் மற்றும் பால் தொடர்பான விஷயங்களை உண்பதில்லை(நெய்யுண்ணோம், பாலுண்ணோம் நாட் காலே நீராடி). இதெல்லாம் எதற்கு என்றால் நாட்டின், மக்களின், பயிர்களின் செழுமைக்காகவாம்.

தை முதல் நாளன்று ‘தை நீராடல்’ என்கிற பெயரில் விரதத்தை முடித்துக் கொண்டு, நிறைய பால் போட்டு செய்த பொங்கல் சாப்பிடுகிறார்கள்!

சூரியன் உத்ராயணத்தை ஆரம்பித்து மகர ராசியில் நுழைவதால் ‘மகர சங்கராந்தி’ என்றும் சொல்கிறார்கள்.

பார்த்தீர்களா, பொங்கல் பண்டிகைக்குத்தான் சரித்திரம், பூகோளம் ரெண்டும் இருக்கிறது!

எங்களுக்கெல்லாம் படிக்கிற காலத்தில் பொங்கல்தான் உற்சாகம் தரும் பண்டிகை.

பெரிய்ய காரணம் எதுவுமில்லை, மற்ற பண்டிகைகளுக்கு ஒரு நாள்தான் விடுமுறை, பொங்கல் பண்டிகைக்கு நான்கைந்து நாள் விடுமுறை கிடைக்கும். வித விதமான பொங்கல் வாழ்த்துக்கள் வரும். இப்போதெல்லாம் வெறும் எஸ்.எம்.எஸ். தான்! பள்ளி நாட்களில் பொங்கலன்று கேளிக்கையே ஆல் இந்தியா ரேடியோவில் வரும் ‘பொங்கல் கவியரங்கம்’ தான். அறுபத்தேழாம் வருஷத்துக்குப் பிறகு ஏறக்குறைய ஒவ்வொரு ஆண்டும் அதில் கலைஞரின் கவிதை தவறாது இடம் பெரும். இப்போதெல்லாம் தொலைக் காட்சிகளில் முட்ட முட்ட கேளிக்கை. அவர்களுக்கென்று ஒரு வரையறையும் உண்டாக்கிக் கொண்டு விட்டார்கள்.

பட்டி மன்றம், புதுப் பாடல்கள், புதுசாக வந்த படம் பற்றி கலந்துரையாடல், கிளி கொஞ்சுகிற மாதிரி ஒரு நடிகையின் பேட்டி-பல கிளிகள் ஆங்கிலத்தில்தான் கொஞ்சுகின்றன.

மாட்டுப் பொங்கல் அன்று கங்கை அமரனின் லாவணி.

தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் பண்டிகையின் ஒரு அங்கமாகவே ஆகி விட்டன.

முனிசிபல் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பொங்கல் பண்டிகை பற்றி வியாசம் எழுதினால் ராஜா மற்றும் பாரதி பாஸ்கரின் பட்டி மன்றப் பேச்சைப் பற்றி கூட எழுதுவார்கள். பட்டி மன்றப் பேச்சுக்கள் கூட ஒரு சூத்திரத்தில் அடங்கி விடுகின்றன. பொண்டாட்டிக்கு அடங்குவது, பிள்ளைகள் அதிகப் பிரசங்கித் தனமாய்ப் பேசுவது, பிரபல சீரியல்கள் பற்றி குறிப்பிடுவது, திரைப் படங்களில் வந்த பஞ்ச டயலாக்கை சொல்வது, லேட்டஸ்ட் காதல் பாட்டை கிழவர்கள் பாடுவது, எதிரணியில் பேசியவர்களை இனார்டிநேட்டாக நையாண்டி செய்வது இதை எல்லாம் செய்த பிறகு உபயோகமாக ஏதாவது சொல்ல எங்கே நேரமிருக்கும்?

பட்டி மன்றங்களில் சில சமயம் நல்ல விஷயங்களும் அகப் படுகின்றன.

நம்முடைய பாடத் திட்டம் கேள்வி கேட்டு பதில் எழுதுகிற மாணவர்களை சிறப்பான மானவர்களாகக் காட்டுகிறது. உண்மையில் கேள்வி கேட்க வைக்கிற மாதிரி நம் பாடத் திட்டம் இருக்க வேண்டும் என்று பர்வீன் சுல்தானா பேசினார்.

கேள்வி கேட்கிற மாணவர்களை என் காலத்தில் தேசத் துரோகியாக நடத்தினார்கள்.

புத்தகத்தில் இருப்பதை விட ஒரு மில்லிமீட்டர் கூட அதிகம் போக மாட்டார்கள். இருப்பதை விட அதிகம் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினால்,

“பெரிய்ய மேதாவின்னு நினைப்பா? தெரிஞ்சிகிட்டு என்ன பண்ணப் போறே?” என்று ஸ்கேலால் அடிப்பார்கள்.

இந்தக் கோபத்துக்குக் காரணம் அவர்களின் வரையறைகள், இயலாமை.

இப்போது எப்படியோ தெரியாது.

Advertisements

29 comments

 1. ஆசிரியர் கொடுத்த நோட்ஸை யார் சிறப்பாக கமா, புல்ஸ்டாப் விடாமல் பரிட்சையில் வாந்தி எடுக்க வேண்டும் அவனே சிறந்த மாணவன். கொஞ்சம் சொந்தமாக யோசித்தாலோ, எழுதினாலோ அவன் ஓரங்கட்டபடுவான்.”சார் நம்ம நோட்ஸையெல்லாம் படிக்கமாட்டார். அவரே சொந்தமாக எழுதுவார்” என்று கமெண்டுவார்கள். மதிப்பெண்கள் குறையும். வேறு வழியில்லாமல் சொந்தமாக்ச் சிந்திக்கும் மாணவனும் மனப்பாடம் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

 2. //இந்தக் கோபத்துக்குக் காரணம் அவர்களின் வரையறைகள், இயலாமை.//

  வரையறைகளும் காரணமாக இருக்கக்கூடும். ஆனால் முதன்மையான காரணம் இய்லாமைதான்; அவர்களின் இயலாமைக்கு இன்னொரு சொல் அறியாமை.

 3. //பொண்டாட்டிக்கு அடங்குவது, பிள்ளைகள் அதிகப் பிரசங்கித் தனமாய்ப் பேசுவது, பிரபல சீரியல்கள் பற்றி குறிப்பிடுவது, திரைப் படங்களில் வந்த பஞ்ச டயலாக்கை சொல்வது, லேட்டஸ்ட் காதல் பாட்டை கிழவர்கள் பாடுவது, எதிரணியில் பேசியவர்களை இனார்டிநேட்டாக நையாண்டி செய்வது இதை எல்லாம் செய்த பிறகு உபயோகமாக ஏதாவது சொல்ல எங்கே நேரமிருக்கும்?//

  ரீ ரீ ரீ ரீபிட்டேய்………………,

 4. உங்க உப்புமா மாதிரி, ஹை டெக் பொங்கல் செய்முறை விளக்கமும் எழுதி பொங்கலில் சரித்திரம், பூகோளத்தோடு விஞ்ஞானமும் உண்டுன்னு சொல்வீர்கள் என்று எண்ணியிருந்தேன்…

 5. நான் பத்தாம் வகுப்புப் படிக்கும் போது ஆசிரியர் சொன்னதைப்போலில்லாமல் சொந்தமாக essay எழுதினேன்.என்னைத் தனியாய் அழைத்த ஆசிரியர் அப்படிச் செய்யாதே என்றும் பொதுத் தேர்வில் திருத்துபவர்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் மிக வருத்தத்துடன் சொன்னார்!அந்த நிலையே இப்போதும் நீடிக்கிறது என்பதை என் அண்ணன் மகனிடம் பேசும் போது அறிந்து கொண்டேன்!

 6. //உங்க உப்புமா மாதிரி, ஹை டெக் பொங்கல் செய்முறை விளக்கமும் எழுதி பொங்கலில் சரித்திரம், பூகோளத்தோடு விஞ்ஞானமும் உண்டுன்னு சொல்வீர்கள் என்று எண்ணியிருந்தேன்…//
  Repeat…

 7. //பல கிளிகள் ஆங்கிலத்தில்தான் கொஞ்சுகின்றன.//
  “கன்னடத்துப் பைங்கிளி” யாய்க்கூட இருக்கலாம்!

  //பட்டி மன்றங்களில் சில சமயம் நல்ல விஷயங்களும் அகப் படுகின்றன.//

  அப்படியா?
  ஒருவேளை டைரக்டர் ஷங்கர் இந்த நல்ல விஷயத்தைப் பார்த்துத் தான், பட்டிமன்ற ராஜாவை ஸ்ரேயாவுக்கு அப்பாவா நடிக்க வைத்தார?

 8. //‘பாவை நோன்பு’ என்கிற பெயரில் மணமாகாத பெண்கள் மார்கழி மாதத்தில் நோன்பு இருந்ததை சொல்கிறார்கள். பெண்களுக்கே உரித்தான அலங்கரித்துக் கொள்ளும் பழக்கங்களை ஒத்திப் போடுகிறார்கள். (மையிட்டெழுதோம், மலரிட்டு நாம்….. கேட்டிருப்பீர்கள்). பால் மற்றும் பால் தொடர்பான விஷயங்களை உண்பதில்லை(நெய்யுண்ணோம், பாலுண்ணோம் நாட் காலே நீராடி). இதெல்லாம் எதற்கு என்றால் நாட்டின், மக்களின், பயிர்களின் செழுமைக்காகவாம்.//

  அப்படியா சொன்னார் ஆண்டாள்? அவர் நோன்பாடியது ஏதோ இரங்கரை அடைவதற்காக என்றல்லவா சொல்வார்கள்.

 9. //பொங்கல் பண்டிகை சங்க காலத்திலிருந்தே கொண்டாடப் படுகிற பண்டிகையாகச் சொல்கிறார்கள்//

  //சூரியன் உத்ராயணத்தை ஆரம்பித்து மகர ராசியில் நுழைவதால் ‘மகர சங்கராந்தி’ என்றும் சொல்கிறார்கள்//

  சொல்கிறார்கள்…சொல்கிறார்கள்…என்று பிடிகொடுக்காமல் எழுதுகிறீர்கள்.

  இல்லையென்றால், பகுத்தறிவுப்பாசறைக்காரன் என்ற முறையில் உங்களை ஒரு பிடி பிடித்திருக்கிறேன்.

 10. //நம்முடைய பாடத் திட்டம் கேள்வி கேட்டு பதில் எழுதுகிற மாணவர்களை சிறப்பான மானவர்களாகக் காட்டுகிறது. உண்மையில் கேள்வி கேட்க வைக்கிற மாதிரி நம் பாடத் திட்டம் இருக்க வேண்டும் என்று பர்வீன் சுல்தானா பேசினார்.//

  பொங்கலில் ஆரம்பித்து புத்தகத்தில்போய் முடிந்துவிட்டீர்கள்.

  பையமார் உங்கள் வலைப்பூவுக்கருகில் வரமாட்டார்கள். ‘இவர் ஸ்கூலுக்கே கொண்டு போய்விட்டிருவார்’ என்று.

 11. //பெரிய்ய காரணம் எதுவுமில்லை, மற்ற பண்டிகைகளுக்கு ஒரு நாள்தான் விடுமுறை, பொங்கல் பண்டிகைக்கு நான்கைந்து நாள் விடுமுறை கிடைக்கும்.//

  நாலைந்து நாட்கள் விடுமுறை இக்காலத்தில்தான்.

  இருநாட்கள் மட்டுமே அக்கால விடுமுறை என நினைக்கிறேன்

 12. //நிறைய பால் போட்டு செய்த பொங்கல் சாப்பிடுகிறார்கள்!//

  banal.

  பொங்கல் அன்று பொங்கல் பண்ணிச் சாப்பிடுவார்கள்.

  தீபாவளி அன்று பட்டாசு கொளுத்தி விளையாடுவார்கள்.

  ரமலான் அன்று பிரியாணி செய்து சாப்பிடுவார்கள்.

  ரொம்ப independent thinking சார் உங்களுக்கு!

 13. //இனார்டிநேட்டாக //

  இப்படி ஒரு சொல்லை நான் கண்டதுமில்லை. கேட்டதுமில்லை.

  என்ன அர்த்தம் சார்?

  இங்கிலிசா?

 14. //எங்களுக்கெல்லாம் படிக்கிற காலத்தில் பொங்கல்தான் உற்சாகம் தரும் பண்டிகை.//

  காரணம்..மூணுநாள் விடுப்பு இல்லையா? ஊர் சுத்தலாம். காணும்நாளன்று ‘கலர்’ பாக்கலாம். கலர் கலரா தாவணி உடுத்தி வருவார்கள். இல்லயா?

  frankஆ எழுதுங்க சார். ஏன் மறைக்கிறீங்க?

 15. //தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் பண்டிகையின் ஒரு அங்கமாகவே ஆகி விட்டன.//

  அக்காலத்தில் சினிமா ரிலீஸ். ஊரே பொங்கல் சாப்பிட்டுவிட்டு, கரும்பை கடித்துக்கொண்டே சினிமாக்கொட்டகை நோக்கிச்செல்வார்கள். ‘அன்பே வா’ பொங்கல் ரிலீஸ். சினிமாக்கொட்டகை முன்பே பொங்கல் பானையில் பொங்க்லிட்டார்கள்.

  இன்று தொலைக்காட்சி.

  மக்களுக்கு கேளிக்கை அவசியம். அஃது எங்கு கிடைத்தாலென்ன?

  காலங்கள் மாறும். ஆனால் காட்சிகள் மாறா.

 16. //கேள்வி கேட்கிற மாணவர்களை என் காலத்தில் தேசத் துரோகியாக நடத்தினார்கள்.//

  தேசத்துரோகியல்ல. பள்ளிக்குத் துரோகி.

  பள்ளி பாஸ் பெர்சண்டேஜை வைத்து பிரிஸ்டிஜ் தேடுகிறது. அதற்கு நீங்கள் இடைஞ்சல் பண்ணுகிறீர்கள்.

  மார்க்குகள், பெர்செண்டேஜ், பிரிஸ்டிஜ் என்றெல்லாம் போன பிறகு, கல்வி ஒரு வியாபாரத்த்ந்திரம்.

  ஆசிரியர்களை எப்படி குறை சொல்லமுடியும்.

  அவர் வகுப்பில் எததனை பெயில் எததனை பாஸ் என்றுதானே பள்ளி நிருவாகம் கேட்கிறது?

  நீங்க independentஆ out of syllabus படித்து அரை மார்க்கு வாங்கி வாத்தியார் மானத்தை வாங்குவீர்கள். அவர்கள் வேலைக்கு வேட்டு.

 17. வீட்டில் மனைவி இல்லை. அதனால் நானே ராஜா. இல்லாங்காட்டி ஒரு காமேண்டு போடக்கூட விட மாட்டாங்க. ‘பையனுக்கு ரிவ்சன் டெஸ்ட் போது. போய் சொல்லிக்கொடுங்க’

  சாய்ங்காலம் மனைவி வந்துடுவார். அப்புறம் இன்னொரு நாள் freedom கிடைச்சா உங்க வலைபதிவுக்கு வந்து 10 காமெண்டு போடுறேன்.

 18. //பொங்கல் பண்டிகை சங்க காலத்திலிருந்தே கொண்டாடப் படுகிற பண்டிகையாகச் சொல்கிறார்கள்.

  சங்கராந்தி என்கிற பெயரில் பல்வேறு மொழியினரும் அறுவடைத் திருநாளாகக் கொண்டாடினாலும், தமிழுக்கு இது குறித்து ஒரு சிறப்பு உண்டு.//

  சன் மற்றும் கலைஞர் டிவிக்களில் மட்டும் கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டு என்ற சிறப்பும் உண்டு.

 19. பொங்கலோ பொங்கல்… தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  கால வேக மாற்றத்தில் எவ்வளவோ நல்ல விஷயங்களை இழந்து கொண்டிருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. 😦

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s