எங்க ஊர்லயும் அப்படி ஒருத்தன்

நான் சொல்லப் போகிற மாதிரி கேரக்டர் ஒருத்தர் எல்லா ஊரிலும் இருப்பார்.

பதினாறு வயதினிலே, சின்ன ஜமீன், ராமன் எத்தனை ராமனடி உள்ளிட்ட பல சினிமாக்களில் இது மாதிரி கரெக்டர்களை சித்தரித்து விட்டார்கள்.

ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாது என்கிற சூத்திரத்தின் படி நான் பேரைச் சொல்லப் போவதில்லை. ஆனால் இதைப் படிக்கிற என் ஊர்க்காரர்களுக்கு கட்டாயம் தெரியும்.

அவனுடைய நிஜப் பெயர் அவனுக்கே ஞாபகம் இருக்கிறதா என்பது சந்தேகம்.

பெரும்பாலும் அவனைக் கோணங்கி என்றுதான் அழைப்பார்கள். அவனுடைய கல்வி அனுபவங்கள் வினைத்தொகை. என் அண்ணாவோடு மூன்றாம் வகுப்பு படித்தான், என் அக்காவோடு ஐந்தாம் வகுப்பு படித்தான், என்னோடு ஆறாம் வகுப்பு படித்தான்! (எனக்கொரு தம்பி இருந்திருந்தால் அவனோடு ஏழாம் வகுப்பு படித்திருப்பானோ?) ஆறாவது படிக்கும் போதே அவனுக்கு பத்தொன்பது வயதாகி விட்டது. ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு மூன்று வருஷம் படித்த அனுபவத்தின் அடிப்படையில் அவனுக்கு அடுத்த வகுப்புக்கு பிரமோஷன் கொடுத்தார்கள். ஆனால் ஆறாம் வகுப்பு வந்த பிறகு சுத்தமாக லூஸ் மோஷன் ஆகி விட்டது.

“அதான் மூணு வருஷம் ஆயிடுத்தே சார், ஏழாவதுக்கு போட்டுடுங்களேன்” என்று அவன் அப்பா நெகோஷியேட் செய்தார்.

“இதோ பாரும் கிருஷ்ணமூர்த்தி, ஒண்ணாம் கிளாசில ஒரு வருஷம், ரெண்டாம் கிளாசில ரெண்டு வருஷம், மூணாம் கிளாசில மூணு வருஷம்ன்னு தெளிவான பார்முலா வெச்சிருக்கான் உங்க பையன். இப்படியே போச்சுன்னா எஸ்.எஸ்.எல்.சி. முடிக்கறப்போ அவனுக்கு எழுபத்திரண்டு வயசாயிடும். நான் வரல்லை இந்த ஆட்டத்துக்கு. நீங்க கட்டய்யரைக் கேட்டுக்கங்க”

கட்டய்யர் என்று அன்பாக அழைக்கப் பட்ட தலைமை ஆசிரியர் சுப்பிரமணிய ஐயரை பார்த்தார்.

“இத பாருய்யா இவன் கேள்விக்கெல்லாம் சரியான பதில் எழுதணும்ன்னு நான் எதிர் பார்க்கல்லை. தப்பான பதில் எழுதனும்ன்னும் எதிர்பார்க்கல்லை. அர்த்தம் இருக்கிற மாதிரி ஒரு வார்த்தை எழுதட்டும். போரும். உம்ம வேர்கள் சிலோன்ல இருக்குன்னு நினைக்கிறேன். இதோ பாரும்….”

‘அடட… பிகட…விமல….கசப….மிபவ…பகுவ…’ என்று பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருந்த பேப்பர்களைக் கொடுத்தார்.

“ரொம்பப் பொறுமைய்யா உம்ம பையனுக்கு. இந்த சிங்கள ந்யூசை நாலு பக்கம் எழுதியிருக்கான். அவனை அறியாமைக் கூட அர்த்தம் இருக்கிற வார்த்தை ஒண்ணு கூட வரல்லை”

அத்தோடு கல்வி முயற்சி முடிந்தது.

அதற்கப்புறம் கொஞ்ச நாள் அவனுடைய அப்பா வேலை செய்த கல்யாண சமையல் கோஷ்ட்டியில் உதவிக்கு சிபாரிசு செய்தார்.

மைக்கேல் மதன காமராஜனில் வரும் வரதுக் குட்டி கஷ்கத்தை சொரிவது மாதிரி ஆட்சேபமான இடங்களை பந்தியில் நின்று கொண்டே சொரிய ஆரம்பித்தான். இதனால் வரக்கொடிய இல் ரேப்யூடேஷனை உத்தேசித்து சமையல்காரர் அவனை நிறுத்தி விட்டார்.

அழுக்கு வேஷ்டி பார்த்திருப்பீர்கள். அழுக்கையே வேஷ்டியாக கட்டியிருப்பான்.

பரப்பிரம்மம் மாதிரி எல்லா இடத்திலும் இருப்பான்.

காக்கா பிள்ளையார் கோயிலில் தண்ணீர் இழுத்துக் கொடுப்பது, கணேசய்யர் கடையில் டேபிள் துடைப்பது, பரசுராமன் கடையில் டெலிவரி பாய் வேலை என்று ஏதேதோ செய்வான். வீடுகளில் ரேஷனுக்குப் போய் வரச் சொன்னால் போவான். யார் வீட்டுத் திண்ணையில் வேண்டுமானாலும் படுப்பான். யார் எவ்வளவு திட்டினாலும் அச்செர்ட்டிவாக இருப்பான்.

அழகான பெண்களைப் பார்த்தால் வேஷ்டி நனைகிற வரை ஜொள்ளு விடுவான்.

அவனைப் பிடரியில் அறைந்து அந்த வீட்டுக் காரர் தெருவில் தள்ளினாலும் அடுத்த நாள் போய்,

“மாமா, ரேஷன்ல சக்கரை போடறான். கார்டும் பையும் குடுங்கோ” என்கிற போது அவர் முன்னாள் நடந்ததை மறந்தே ஆக வேண்டும்.

திடீர் திடீரென்று ஒரு மானசீகத் தவிலை கையால் வாசித்துக் கொண்டு,

“டண்ட குண்டா… டண்ட குண்டா” என்று தெருவில் ஓடுவான்.

இடுப்பு வேஷ்டி நழுவி தெருப் பெண்கள் ஜன்னியில் பிதற்றுவார்கள்.

ரொம்ப நாள் கழித்து ஊருக்குப் போகிற போது பஸ்ஸில் என்னோடு ஒரு பெண் பயணம் செய்தாள். ஐ.ஐ.டி. யில் படிக்கிறவள். எதற்கெடுத்தாலும் என் டாடி, என் டாடி என்று பெருமை பேசிக் கொண்டே வந்தாள். பஸ்ஸிலிருந்து இறங்கும் போது அவளை ரிசீவ் செய்ய அவர் வந்திருந்தார். யாருடா அந்த டாடி என்று பார்த்தால்…….

அது கோணங்கி இல்லை, வேறு யாரோ.

Advertisements

20 comments

 1. அந்தக் கடைசி வரிதான் கதையின்சிறப்பே. அந்தமாதிரி கோணங்கிகளுக்கெல்லாம் கல்யாணம் எப்படியாவது ஆகிவிடும் குழந்தைகள் ஐ.ஐ.டியிலோ, பிட்ஸ் பிலானியிலோ படித்துவிட்டு யு.எஸ்சில் இருப்பார்கள். இந்தக் கோணங்கிகள் அப்படியே இருப்பார்கள்

 2. ‘வைதேகி காத்திருந்தாள்’ பட செந்தில கேரக்டர் நியாபகம் வந்தது. 🙂

  மேலும் பதிவின் தலைப்பை பார்த்ததும் ‘மகராஜன்’ பட
  கவுண்டமணி- செந்தில் காமெடி நினைவிற்கு வந்தது.

  ஒரு சாம்பிள்…

  செந்தில் : இப்படித்தான் எங்க ஊர்ல ஒருத்தனுக்கு விக்கி,விக்கி நாக்கு வெளியே வந்து விழுந்துட்டு…

  கவுண்டமணி : இதென்ன பிரமாதம். எங்க ஊர்ல ஒருத்தனுக்கு தும்மி, தும்மி மூக்கு கீழே விழுந்துட்டு…

  அதிர்ச்சியான செந்தில் : அது எப்படிண்ணே…

  அசராத கவுண்டமணி : ஏண்டா, விக்கி,விக்கி உள்ளே இருக்கிற நாக்கு கீழே விழும்போது தும்மி,தும்மி வெளியே உள்ளே இருக்கிற மூக்கு கீழே விழாதா…. என்று கூலாக கூறுவார். 🙂

 3. நல்லவேளை.. அது கோணங்கி இல்லை…
  மைக்கேல் மதன காமராஜன் புகழ் வரது குட்டியின் “காமேஸ்வரா.. புளிப்பு மிட்டாய்..” ஜோக் ஞாபகம் வந்தது… 😉

  1. நன்றி மணி… வரத்துக் குட்டியே ஒரு ரியலிஸ்டிக் பாத்திரப் படைப்புதான். காமெடி படம்ங்கிரதாலே யாரும் சீரியஸா எடுத்துக்கலை!

 4. //Jawahar said
  ராஜா… பரவாயில்லையே, சம்பந்தப்பட்ட ஜோக்குகளை சரமாரியா வீசறீங்க!//

  நன்றி சார். ரசிப்பதற்குதானே வாழ்க்கை… 🙂

 5. டாடியைப் பார்த்த பிறகு மம்மியைப் பார்த்தால் டாடியுடைய ஜோடியாக இருக்கும். மம்மியுடைய டாடியைப் பார்த்தால் செழிப்பின் விழிப்பு புரியும். யதார்த்தம் உங்கள் கதையில்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s