கண்டதும் கேட்டதும்

சென்னை சபர்பன் மின்சார வண்டியில் பயணம் செய்து நீண்ட காலம் ஆயிற்று.

நேற்று ஒரு வாய்ப்பு கிடைத்தது.

ஸ்டேஷனில் உட்கார்ந்து கொண்டு சுற்றுப் புறத்தை கவனிப்பதே சுவாரஸ்யமாக இருந்தது. இரண்டு வண்டிகளை விட்டு விட்டு அதைச் செய்து கொண்டிருந்தேன். சலவைக்கல் பெஞ்ச்சில் அருகே உட்கார்ந்திருந்த ஆசாமியிடம் எங்கிருந்தோ பரபரப்பாக வந்த ஒரு ஆள்,

“பாஸ் வந்ததும் சொல்லிட்டுப் போகலாம்ன்னு பாத்தேன். அவர் வர லேட்டாகும் போலிருக்கு. அதுக்குள்ளே எடுத்துடுவாங்க”

“எடுத்துடுவாங்களா…. என்ன சொல்றீங்க?”

“எங்க அண்ணன் பையன் ஸ்கூலுக்கு கட் அடிச்சிட்டு நாலஞ்சு பசங்களோட பீச்சுக்கு போயிருக்கான். எல்லாரும் குளிச்சிக்கிட்டு இருந்திருக்காங்க. கொஞ்ச நேரம் கழிச்சி பாத்தா இவன மட்டும் காணும். பசங்க வீட்டுக்கு தெரியாம போனதாலே பயந்து கிட்டு யார் கிட்டயும் சொல்லவே இல்லை. பையனை காணும்ன்னு விசாரிச்ச அப்புறம் அன்னிக்கு நாலஞ்சு பசங்க ஸ்கூலுக்கு வரல்லைன்னு தெரிஞ்சிருக்கு. அப்புறம் தேட ஆரம்பிச்சதில திருவத்தியூர் கிட்ட பாடி ஒதுங்கியிருக்கு”

“அடக் கடவுளே!”

பையன்கள் கட் அடித்தாலும், சினிமா போனாலும் சைட் அடித்தாலும் அம்மாவிடம் சொல்லி விட்டு செய்கிற பல குடும்பங்களை எனக்குத் தெரியும்.

ஏன் எல்லாருமே குழந்தைகளுக்கு அப்படி ஒரு சுதந்திரத்தைத் தந்து வளர்க்கக் கூடாது?

இன்னொருத்தர் ஒரு கல்யாணப் பத்திரிகையை கொண்டு வந்து காட்டி “இந்த அட்ரஸ் எந்தப் பக்கம்… ஸ்டேஷனுக்கு இந்தப் பக்கமா, அந்தப் பக்கமா” என்று விசாரித்தார்.

அவருக்கு ஏறக் குறைய குரோம் பேட்டையின் லே அவுட் டிராயிங்கே போட்டு விளக்கினேன். கழுதை கூட சுலபமாகப் புரிந்து கொள்கிற அளவுக்கு வழி சொன்னேன்.

கொஞ்ச நேரம் கழித்து புக் ஸ்டால் பக்கம் போன பொது அதே ஆசாமி இன்னொருத்தரிடம் இதே கேள்வியைக் கேட்டுக் கொண்டிருந்ததை கவனித்தேன்.

கல்யாண மண்டபத்தைக் கண்டு பிடிப்பதை விட அவருக்கு வேறே எதோ நோக்கம் இருப்பதாகப் பட்டது. செவப்பா கனமா சுருட்ட முடியோட இருக்கிற ஆளைத் தெரியுமா என்கிற சிங்க முத்து-வடிவேலு காமெடி போல தன வீட்டுக் கல்யாணம் நடக்கப் போகிற இடம் எவ்வளவு பிரபலம் என்று கேட்டு சந்தோசம் அடைந்தாரோ என்னவோ…

இன்னொருத்தர் வந்து “டிக்கெட் கவுண்ட்டர் எங்கே?” என்று விசாரித்தார்.

அவருக்கும் படம் வரைந்து பாகங்களைக் குறித்தேன்.

அவர் கேட்ட அடுத்த கேள்விதான் சுவாரஸ்யமானது.

“டிக்கெட் வாங்கிக்கிட்டுத்தான் ஏறணுமா?” என்றார் நின்று கொண்டிருந்த ரயிலைக் காட்டி.

“வாங்காம கூட ஏறலாம். இறங்கறப்ப உங்களை வேறே இடத்துக்கு கூட்டிக்கிட்டுப் போய்டுவாங்க.”

இதைப் பத்தி இன்னும் தெரிஞ்சிக்கனும்ன்னா என் ப்ளாக்கில ‘ஆர்டர்..ஆர்டர்’ ன்னு ஒரு ஆர்டிக்கில் எழுதியிருக்கேன். படிங்க என்று சொல்ல நினைத்தேன். ஆனால் ஆசாமியைப் பார்த்தால் தமிழ் சினிமாவில் பட்டணத்துக்கு முதன் முதலாக வருகிற கேரக்டர் மாதிரி இருந்தார். அவரிடம் பிளாக், இன்டர்நெட் பற்றி எல்லாம் வியாசம் எழுதிக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லாததால் அந்த ஐடியாவைக் கை விட்டேன்.

ரயிலில் ஒரு பார்வை இல்லாதவர் நானாக நானில்லை தாயே பாட்டை புல்லாங்குழலில் விளாசினார். ஆர்கேச்ற்றேஷன் முதற் கொண்டு நுணுக்கமாக வாசித்தார். உபரியாக சில சங்கதிகள் போட்டு ஹிந்தோளத்துக்கு வால்யூ ஆட் செய்தார்.

அவருக்கு ஐந்து ரூபாய் போட்டு விட்டு முதுகில் தட்டிக் கொடுத்தேன்.

“சார், நீங்க காசு எவ்வளவு போட்டீங்களோ தெரியாது. ஆனா நீங்க தட்டிக் கொடுத்தீங்களே, அது ஐயாயிரம் பொரும்” என்றார் நெகிழ்ந்து.

இதைச் சொன்னபோது என் பையன் சொன்ன காமென்ட் சுவாரஸ்யமாக இருந்தது.

“ரயில்ல வர்ற பார்வையில்லாதவங்க எந்தப் பாட்டை வாசிச்சாலும் விவேக் அழுது கிட்டே ஓ போடு பாடற மாதிரி அதுக்கு ஒரு சோகச் சாயல் தந்துடுவாங்க. இந்தப் பாட்டே சோகம். அதான் வாத்யார் பூந்து விளையாடி இருக்காரு”

அதை விட கொஞ்ச நேரம் கழித்து வந்த ஒரு பிச்சைக்காரர் ஹை டெக்கில் பிச்சை எடுத்தார்.

தோளில் மாட்டின ஆம்பளி ஸ்பீக்கர் வழியே மைக்கில் பாடி ஒலிபரப்பு செய்தார்.

பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில் வருகிறவர்களை விட நன்றாகவே பாடுகிறார்.

மின்சார வண்டியில் ஒருதரம் பீச் வரை போய் வந்தால் எழுத நிறைய விஷயம் கிடைக்கிறது.

Advertisements

6 comments

 1. நம்மை சுற்றி நடக்கும் விசயங்களை கூர்ந்து கவிந்த்தால் பல சிருகஹைகள் கிடைக்கும் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும், நம்ம தல சுஜாதா சொன்னதாச்சே !

 2. //ஏறக் குறைய குரோம் பேட்டையின் லே அவுட் டிராயிங்கே போட்டு விளக்கினேன்.//

  //அவருக்கும் படம் வரைந்து பாகங்களைக் குறித்தேன்.//

  நீங்க ரொம்ம்ம்ம்ம்ப நல்லவருருருன்னு சொல்லியிருப்பாங்களே… 🙂

 3. பீக் ஹவர்ஸ் கூட்டத்துல போனா தெரியும்…இவ்வளவு விஷயங்கள் கவனிக்க முடியாது. நம் பர்சையேதான் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்..
  நம் கழுத்தில் மூச்சு விட்டுக் கொண்டிருப்பவர் என்ன பிராண்ட் குடித்தார் என்பது கூடத் தெரியும்..நமக்கு லேசா ஏறும்…கோவத்தைச் சொன்னேன்.

 4. ஒரு கல்யாண ரிசெப்ஷன் போனேன். நான் சென்ற நேரம், மெல்லிசை குழுவில், “உலவும் தென்றல் காற்றினிலே…..”(ஜிக்கி, திருச்சி லோகநாதன் பாடிய மந்திரிகுமாரி பாட்டு) மிக அழகாக பாடிக்கொண்டிருந்தார்கள். அதில் ட்ரம்பெட் தான் முக்கிய ஆர்கெஸ்ட்ரேஷன். கீ போர்டில் அதை அனுபவித்து வாசித்தார். வாங்க சாப்பிடப் போகலாம் என்றார் நண்பர். இந்த் பாட்டு முடிந்ததும் வருகிறேன்னு சொல்லி உட்கார்ந்து முழுதும் கேட்டேன். முடிந்ததும் எழுந்து நின்று கை தட்டினேன். பாடியவர்கள் முகத்தில் மகிழ்ச்சி பார்க்கணுமே. நிகழ்ச்சியில் முதல் பாராட்டு என்னுடையதுதான் போல. குழுவின் தலைவர் பாராட்டுக்கு நன்றி சொன்னார்.

  //ஆனா நீங்க தட்டிக் கொடுத்தீங்களே, அது ஐயாயிரம் பெறும்//

  படித்ததும் என் நினைவு வந்தது இந்த சம்பவம்தான். அவங்க பணம் வாங்குகிறார்கள், பாடுகிறார்கள் என்று மட்டும் நினைத்து கேட்டு விட்டு போவதுதான் காரணம்.
  நாம் நிறைய மாறணும்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s