யார் கிட்டே பேசறே?

ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒரு கலாச்சாரப் பின்னணி இருக்கும்.
 
இந்தப் பணிக் கலாச்சாரம் நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடுகிறது.
 
ஒழுங்காக வேலை செய்யாவிட்டால் கதை கந்தல் என்கிற பயத்தைப் பணியாளர்களுக்கு உண்டாக்கி வைத்திருக்கும் நிறுவனங்கள் உண்டு. அமெரிக்க வகை கலாச்சாரமான இதை ஆங்கிலத்தில் ‘Hire and Fire Policy’ என்பார்கள். People deliver their best only under pressure என்றும் சொல்வார்கள்.
 
பன்னெடுங்காலமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனம் இந்த கொள்கையை உறுதியாகக் கடை பிடித்து வருகிறது. அந்த நிறுவனத்தில் ஒரு செயலாக்கத் திட்டத்தை மேலாண்மை இயக்குனர் சொல்லிக் கொண்டிருக்கும் போது எந்த மேலாளராவது எழுந்து அதில் இன்ன பிரச்சினை இருக்கிறது என்று ஆரம்பித்தால் அவர்களுக்குக் கிடைக்கும் பதில்,
 
“பிரச்சினைகளுக்கு தீர்வு காணத்தான் மேலாளர்கள். பிரச்சினையே இல்லை என்றால் நேரடியாக தொழிலாளர்களிடம் வேலை வாங்கி விடலாம். சிட் டவுன்”
 
ரிசல்ட் காட்டாத மேலாளர்களை கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.
 
ஒரு இனிய காலைப் பொழுதில் கையில் காசோலை கொடுத்து வாசலைக் காட்டி விடுவார்கள்.
 
எனக்குத் தெரிந்து ஒரே நாளில் பதிமூன்று மேலாளர்களை நுழை வாயிலில், கார் சாவியை வாங்கிக் கொண்டு, காசோலை கொடுத்து டாட்டா சொன்ன ஒரே நிறுவனம் அது.
 
அவர்களைப் பார்த்து வேறு சில நிறுவனங்கள் அந்தக் கொள்கையை தழுவின.
 
பணியாளர்களுக்கு பயத்தில் பேதி, ஜுரம் எல்லாம் வர ஆரம்பித்து அவர்களின் வேலைத்திறன் பாதியாகக் குறைந்தது. டக்கென்று சுதாரித்துக் கொண்டு விட்டார்கள்.
 
ஆனால், ஒரு குறிப்பிட்ட துறையில் நாட்டில் இரண்டாவதாக இருந்த மேற்படி Hire and Fire நிறுவனம் மூன்று நான்கு என்று கீழே போய்க் கொண்டிருக்கிறார்கள். வடிவேலு மாதிரி ‘கொஞ்சம் ஓவராத்தான் போய்கிட்டு இருக்கமோ?’ என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
 
சரி, வேலை போய் விடும் என்கிற பயமே துளிக்கூட இல்லாத அரசுப் பணியாளர்கள் எப்படி வேலை செய்கிறார்கள்?
 
இதை நான் சொல்லி வம்பில் மாட்டிக் கொள்ள உத்தேசமில்லை.
 
அனுதினமும் ஏதாவது ஒரு அரசு அலுவலகத்துக்கு ஏதாவது ஒரு வேலைக்கு போய்க் கொண்டுதான் இருப்பீர்கள். அவர்களது ரெஸ்பான்ஸ் டைம் என்ன என்பதும் தெரிந்திருக்கும்.
 
அதுவும் பிரயோஜனமில்லை, இதுவும் பிரயோஜனமில்லை.
 
பின்னே இன்றைக்கு நல்ல நிறுவனங்கள் எப்படி இயங்குகின்றன?
 
என் பையன் அலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான்.
 
“கிருஷி, நான் வர லேட்டாகும். எனக்காகக் காத்திருக்காமல் கச்டமரைப் பார்க்க நீ போயிட்டு வந்துடு. என் ப்ராஜக்ட் அக்சப்டன்ஸ் டெஸ்டிங் ஸ்டேஜுக்கு வந்துடிச்சி. ஐ வில் கம்ப்ளீட் இட் அட் ஹோம். மூணு மணிக்குதான் வருவேன்”
 
“……………………….”
 
“இன்னைக்கு எங்க அப்பா பர்த் டே. வி ஆர் கோயிங் டு ஐநாக்ஸ் டு செலேப்ரெட்”
 
இதைப் பார்த்துக் கொண்டிருந்த நான்,
 
“பரவாயில்லடா, சப் ஆர்டிநேட்ஸ் கிட்ட உரிமையா, பிரெண்ட்லியா பேசறே” என்றேன்.
 
“அது என் பாஸ்ப்பா” என்றான்.
Advertisements

7 comments

  1. //“கிருஷி, நான் வர லேட்டாகும். எனக்காகக் காத்திருக்காமல் கச்டமரைப் பார்க்க நீ போயிட்டு வந்துடு”//
    இப்படித்தான் நாங்களும் ட்ரை பண்ணிணோம். ரெண்டு நாளுக்கு மேல தாக்கு பிடிக்க முடியல. ஆபீஸ்பாய் எங்க பொதுமேலாளரை பார்த்து ‘மாதாவா… காபி கொண்டு வரவா…’
    ஹ்ம்…அன்றைக்கு நாங்க வாங்கிய அடியெல்லாம் சொல்லிகறத்துக்கில்லை.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s