ஏ டி எம் எரிச்சல்கள்

ஏ டி எம் இல் பணம் எடுக்க வேண்டும் என்று நமக்கு நினைவு வரும் போது மாதத்தின் முதல் வாரமாக இருந்து தொலைக்கும்.

வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஏ டி எம் வேலை செய்யாது.

தூர இருக்கிற ஏ டி எம்மில் ஒரு மிஷின் வேலை செய்யாது, ஒன்றில் அப்போதுதான் பணம் லோட் செய்து கொண்டிருப்பார்கள்.

பணம் லோட் செய்த மிஷினில் ஸ்டேட்மென்ட் வராது.

நாம் பதினைந்தாவது அல்லது இருபதாவது ஆளாகப் போய் நிற்போம். ஆனால் நமக்குப் பின்னால் எவனுமே வரமாட்டான்.

அன்றைக்குப் பார்த்து கத்துக் குட்டிகள் நிறையப் பேர் வருவார்கள்.

முதலில் ஒரு மினி ஸ்டேட்மென்ட் அப்புறம் ஒரு ஆயிரம், மறுபடி ஒரு ஆயிரம் என்று சர்வ நிதானமாக செய்து கொண்டிருப்பார்கள்.

சிலர் தங்கள் பத்து வயதான குழந்தைகளுக்கு அப்போதுதான் ஏ டி எம் இயக்கத்தை கற்பிப்பார்கள்.

சிலர் எதோ ராணுவ ரகசியம் மாதிரி அகலமாக நின்று கொண்டு சுற்று முற்றும் ஆயிரம் தரம் பார்த்து விட்டு கடவு எண்ணை அழுத்துவார்கள்.

இன்னும் சிலர் டிரான்சாக்ஷன் முடிந்த பின்னும் நகர மாட்டார்கள். பணத்தை எழுநூத்தி முப்பத்தேழு முறை எண்ணுவார்கள். கார்ட் தங்களுடையதுதானா என்று ஐந்தாறு முறை சரி பார்ப்பார்கள். (இவர்களெல்லாம் கை குலுக்கினால் கூட விரலை எண்ணிப் பார்க்கிற ஜாதி)

இதெல்லாம் பரவாயில்லை, நமக்கு முன் ஆள் போனதும் கார்ட் உள்ளே மாட்டிக் கொள்ளும், பணமும் வராது. புகார் செய்ய அருகில் யாருமே இருக்க மாட்டார்கள்.

எனக்கென்னமோ விஞ்ஞானம் வளர வளர கடவுளுக்கு மனிஷனை தண்டிக்கிற வாய்ப்புகள்தான் அதிகமாகிக் கொண்டு வருவது மாதிரி தெரிகிறது.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்… உங்கள் ஏ டி எம் அனுபவம் என்ன சொல்கிறது?

Advertisements

17 comments

  1. நமக்கு முன்னாடி போனவன் ரொம்ப நேரம் கழிச்சு வந்து.. “சட்டன்லி இட்ஸ் நாட் வொர்கிங்” அப்படின்னு சொல்லி உதட்ட பிதுக்கிட்டு போவான் பாருங்க..

    அதைவிட சுவாரஸ்யம் (பல்ப்ன்னு கூட வச்சிக்கலாம்).. Insufficient Balance மெசேஜ் தான்… 🙂

  2. ஜவஹர் இதெல்லாம் புறபிரச்சினைகள். பணமே வராமல் கணக்கில் கழித்துக் கொள்ளுதல்தான் பெரிய பிரச்சினை. அதிலும் உங்கள் அட்டை ஒரு வங்கியிலும் ஏ டி எம் வேறொரு வங்கியாகவும் இருந்தால் அவ்வளவுதான். குறைந்த மட்டும் 10000 க்கு கீழே உள்ள தொகைக்கு ஏ டி எம் பயன்படுத்துதல் நலம்.

    ஜெயமோகனுக்கு ஏற்பட்ட அனுபவம் பாருங்கள் http://www.jeyamohan.in/?p=778

  3. பெங்களூரில் சில (அல்லது பல) சமயங்களில் ஐ சி ஐ சி ஐ ஏ டி எம் களில் நூறு ரூபாய் நோட்டுகள் மட்டுமே வைத்துவிடுகிறார்கள். அதிக பட்ச அளவு பணத்தை எடுப்பதற்குள் அந்த யந்திரத்தைத் தவிர எல்லோருக்குமே அலுப்பு, களைப்பு வந்துவிடுகிறது.

  4. இதற்கான உடனடி தீர்வு, உங்கள் பணம் எடுக்கும் சுழற்சியை மாற்றுவது. முதல்வாரத்தில் உலகமே எடுக்கும். மாற்றி, மாத நடுவுக்கு ஓடிவிடுங்கள். கணக்கை தேசிய வங்கி ஒன்றில் மாற்றிவிடுவது இன்னும் உசிதம்.

    தனியார் வங்கிகள் சர்வீஸ் சார்ஜ் என்று வங்கியில் வேலை செய்யும் பெண்ணை சைட் அடிப்பதற்கு கூட சார்ஜ் போட்டுவிடுகிறார்கள் – நீங்கள் பார்ப்பதை சர்வைலன்ஸ் காமிரா மூலம் பார்த்து.

    கொஞ்சம் அழுக்காக இருந்தாலும், அதில் வேலை செய்யும் பெண்கள் வயதானவர்களாக இருந்தாலும், இன்னும் கூட கம்ப்யூட்டரை ET போல முறைத்து பார்த்தாலும்… நமக்கு நல்ல சர்வீஸ் தருவதில் சால சிறந்தவை தேசிய வங்கிகளே, என்று கூறி என் சிற்றுரையை முடித்துக்கொள்கிறேன்.

  5. இந்த பிரச்சனைகளை பல முறை அனுபவித்தவன் என்பதால், நான் மற்றவர்களுக்கு இதே பிரச்சனையை கொடுக்காமல் இருப்பதில் கவனமாக இருப்பேன்.

  6. //எனக்கென்னமோ விஞ்ஞானம் வளர வளர கடவுளுக்கு மனிஷனை தண்டிக்கிற வாய்ப்புகள்தான் அதிகமாகிக் கொண்டு வருவது மாதிரி தெரிகிறது.//

    Really very nice words.

  7. ATM nu சரியாதான் வெச்சிருக்காங்க ! Always Troubleshooting Machine. பணம் எடுத்துகிட்டு சந்தோஷமா சிரிச்சுகிட்டு “இது ரொம்ப நல்ல மஷின்” பா என்றார் ஒருவர் . ஏனென்றால் இன்னொரு அக்கவ்ண்டிலிருந்து பணம் எடுத்ததா ரசீது வந்திருக்கு என்கிறார்;

  8. //நமக்கு நல்ல சர்வீஸ் தருவதில் சால சிறந்தவை தேசிய வங்கிகளே, என்று கூறி என் சிற்றுரையை முடித்துக்கொள்கிறேன்.//

    ayya national banknala nan padra avastai tanga mudiyathu. veetuku pakkthila irukara national bank atm varathuku 2 or 3 daysthan velai pannum athu namaku kaasu tevai padtha naala irukum

    1. Karthik,

      வீட்டுக்கு பக்கத்தில் (எங்களுக்கு, திருவல்லிக்கேணியில்) ஸ்டேட் பாங்க், கனரா, பஞ்சாப் நேஷனல், இந்தியன் ஓவர்சிஸ் என்று அரசாங்க வங்கிகளும், ஹெச்டிஎஃப்சி என்கிற தனியார் வாங்கியும் இருக்கின்றன. அரசு வங்கி ஏடிஎம் வேலை செய்யாமல் இருப்பது மிக மிக அரிதான சமாசாரமாகவே இருந்துள்ளது என்று கூறி இந்த பதிலுரையை முடித்துக் கொள்ளுகிறேன்.

  9. // (இவர்களெல்லாம் கை குலுக்கினால் கூட விரலை எண்ணிப் பார்க்கிற ஜாதி)//

    🙂

    நான் வீட்டுக்கு பக்கத்திலிருக்கிற ICICI ATM-க்கு போனால் இரண்டு மெஷினில் Sorry! your card is invalid” என்று சொல்லி வெளியே துப்பிவிடும். மூன்றாவது மெஷின் அதிகம் படுத்தாமல் ஏற்றுக்கொள்ளும். Do you want a printed receipt? என்று சிரத்தையாய் கேட்டுவிட்டு “ஆமாம்” என்றால் மவுனம் சாதிக்கும். அதன் வாயையே சிறிது நேரம் பார்த்துவிட்டு திரும்பிவிட வேண்டியதுதான்.

    1. சித்ரன், இந்த ரெசிப்ட் விஷயத்தில வித விதமான டென்ஷன்கள் இருக்கு. Do you want a printed ரெசிப்ட் ன்னு கேட்டுட்டுதான் unable to print ன்னு சொல்லும்.

  10. ரொம்ப ரசித்து சிரித்தேன்!! வரிக்கு வரி அத்தனையும் உண்மை! நகரின் மையமான இடங்களில் அமந்திருக்கும் ஏடிஎம்கள் கூட நம்ம ஜாதகப்படி வேலை செய்யாமல் கைவிரித்துவிடும். பழம் சாப்பிட்டு வரவேண்டியது தான்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s