தீக்குளிப்புகளுக்கு யார் பொறுப்பு?

தீக்குளிப்பு மரணங்கள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிப்பவை என்பதில் சந்தேகமில்லை.

அவை நிகழாமல் தடுக்கப் பட வேண்டியவை என்பதிலும் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை.

எப்படித் தடுப்பது?

ஏன் நிகழ்கின்றன என்பது தெரிந்தால்தான் எப்படித் தடுப்பது என்பது புரியும்.

எந்த ஒரு பிரச்சினையையும் அறிவுப் பூர்வமாக அணுகும் போது பெரும்பாலும் தீர்வு கிடைத்து விடும். ஒருவேளை கிடைக்காமல் போனாலும் அந்தப் பிரச்சினையோடு வாழ்வது எப்படி என்கிற உபாயமாவது தெரியும்.

உணர்வுப் பூர்வமாக அணுகுகிற போது பெரும்பாலும் தீர்வு கிடைப்பதில்லை. கிடைக்காதது மட்டுமில்லை அதனால் வரும் ஏமாற்றத்தை தாங்கிக் கொள்கிற பக்குவமும் இல்லாமல் போகிறது. உயிரை மாய்த்துக் கொள்கிற அளவுக்கு உணர்வு தூண்டப்படுகிறது.

ஏன் உணர்வுப்பூர்வமான அணுகுமுறை?

அப்படித்தானே அரசியல்வாதிகள் நம்மைப் பழக்கி இருக்கிறார்கள்.

தேசப்பற்று என்பதை ஒரு உணர்வாக ஊட்டியவர்கள் தேசியக் கட்சி. மொழிப் பற்றை உணர்வாக ஊட்டியவர்கள் மாநிலக் கட்சிகள்.

அஹிம்சைத் தத்துவம் என்ன சொல்லிக் கொடுத்தது? செத்தாலும் பரவாயில்லை கொள்கையை விட்டுக் கொடுக்காதே என்றுதானே? நீ எத்தனை ஹிம்சைக்கு ஆளானாலும் கொள்கையை விடாதே என்றுதானே?

அதைத்தானே நம் லோக்கல் அரசியல்வாதிகள் தத்தெடுத்தார்கள்?

அஹிம்சை போதித்தவர்  அதிக ஹிம்சைக்கு ஆளாகவில்லை. ஆனால் அதைக் கற்றுக்கொண்ட எத்தனை பேர் செத்துப் போனார்கள்?

ராணுவத்தை சந்திக்கத் தயார், தூக்கு மேடைக்குப் போகத் தயார், சாவது ஒருமுறை அது இதற்காக இருக்கட்டுமே என்றெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு மேடையில் பேசுகிறவர்கள் கிழங்கு மாதிரி முழுசாக, சௌக்யமாக, சந்தோஷமாக இருக்கிறார்கள்.

அந்த உணர்வை ஏற்றிக்கொண்ட ஆசாமிகள் தீக்குளித்து செத்துப் போகிறார்கள்.

அத்தோடு நின்றாலாவது பரவாயில்லை.

தீக்குளித்தவர்களுக்கு தியாகிப் பட்டமும், மேடைக்கு மேடை பாராட்டும், ஊர் பூரா போஸ்டரும் ஒட்டுகிறார்களே, இது தீக்குளிப்புகளை மேலும் ஊக்குவிக்கத்தானே செய்யும்?

வருத்தப் படுவது சரிதான், அந்த வருத்தத்தை விளம்பரப் படுத்தாமலாவது இருக்கலாமே?

நம் ஜனங்கள் எப்போது அறிவுப்பூர்வமான அணுகுமுறையை கற்றுக் கொள்வார்கள்?

மொழி என்பது ஒரு உணர்வு அல்ல என்று சொன்னாலே படித்தவர்கள் கூட உணர்ச்சி வசப் படுகிறார்களே!

Advertisements

7 comments

  1. நானும் தீக்குளிக்க முடிவு செய்து விட்டேன் … ஆனால் அது இந்தப் பதிவை எதிர்த்தா, ஆதரித்தா என்று இன்னும் முடிவு செய்யாததால் முதலில் டீ குடித்து விட்டு வந்து விடுகிறேன்…

  2. தீக்குளிப்பிலிருந்து மீண்டுவிட்டால், தற்கொலை முயற்சி,அது, இது என்று போலீஸும், கோர்ட்டுமாக வேறு எறிச்சலில்அலையும்படி, ஆகிவிடும். அறிவு பூர்வமான அணுகுமுறை எப்போதுவரும். யோசனைகள் செய்தால்.

  3. கொள்கைக்காக எந்த அரசியல்வியாதி வீட்டுப்பிள்ளையாவது தீக்குளிக்க முன்வருகிறானா… அப்பாவி தொண்டர்கள்தானே உணர்ச்சிவசப்பட்டு உயிரை விடுகிறார்கள். அதன்பின் அவர்கள் குடும்பமும் என்ன பாடுபடுகிறது… 😦

  4. ட்ரான்ஸாக் ஷனல் அனாலிஸிஸ்(Transactional Analysis) எனப்படும் பறிமாற்றப் பகுப்பய்வு என்ற உளவியல் தத்துவத்தின்படி நமது செயல்களை அரவணைக்கும் பெற்றோர், கண்டிப்பான பெற்றோர், ஜாலியான குழந்தை, எதிர்வினை குழந்தை, மனமுதிர்ச்சி பெற்றவர் என்று 5 வகைகளாகப் பிரிக்கின்றார்கள். பிறந்த குழந்தை முதல் தொண்டு கிழம் வரை இந்த 5 வகைக் குணங்களை வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கின்றோம். இதில் மனமுதிர்ச்சி பெற்ற மனோபாவம்தான் சிறந்தது. ஆனால் என்ன செய்வது? பெரும்பாலோனோர் பெரும்பாலான சமயங்களில் மற்றைய மனோபாவங்களைத்தான் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அதுவும் நம்ம ஓர் ஆரசியல்வியாதிகள் தம் தொண்டர்கள் மனமுதிர்ச்சி மட்டும் அடைந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார்கள்.

    – சிமுலேஷன்

  5. குடித்து மகிழ வேண்டிய பீர் அபிமான நடிகர் கட் அவுட்டுகளுக்கு அபிஷேகம் செய்யப் படுவது போல நமது மகா ஜனங்களுக்கு எவ்வளவோ பைத்தியங்கள். பைத்தியம் முற்றினால் வெறி. யாரோ ஒரு அறியாத இளைஞன் ஈழத்துக்காக தீயில் வெந்து செத்தான். ஈழப் போராளித் தலைவர்களிலே சிலர் நாங்கள் சரண் அடைய வரும்போது எங்களை சுட்டார்கள் என்று குற்றம் சாட்டினார்கள். கீழ் மட்டத்தில் இருப்பவர்களின் அறியாமை அல்லது வெறித்தனமான பக்தி இவைதான் தீக்குளித்தல் களுக்குக் காரணம். அதை வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று கண்டிக்காமல் பாமாலை பாடும் தலைகள் இருக்கும் வரை இந்த பைத்தியக் காரத் தனம் தொடரத்தான் செய்யும். தீக்குளித்து ஒரு பிரச்னையை கவனத்துக்கு எடுத்து வருவது ஒரு நல்ல வழி என்று இந்த மகானுபாவர்கள் நினைத்தால் முதலில் அவர்கள் தீக்குளித்துத் தொலைக்கட்டும் என்று எரிச்சல்தான் ஏற்படுகிறது. யாரோ ஒரு வழக்கமான மட்டறாகத் தலைவர் ” என்னை சிறையிலிட்ட போது எவ்வளவு
    பஸ்கள் எரிக்கப் பட்டன, எத்தனை பேர் தீக்குளித்தார்கள் என்று கோபமாகக் கேட்டதாகச் சொல்வார்கள். அதாவது, பஸ் எரிக்கப் படவில்லை யாரும் தீக்குளிக்க முயற்சிக்க வில்லை என்ற ஆதங்கம்!!! நீ தீக்குளிக்கிற மாதிரி குளி நாங்கள் காப்பாற்றி விட்டு உனக்கு பண உதவி தரப்பட ஏற்பாடு செய்கிறோம் என்று சொல்லி ஏமாற்றி சாக அடித்ததாகவும் சொல்வதுண்டு. கடவுள் புண்ணியத்தால் இது பொய்யாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளலாம். வேறு என்ன செய்வது?

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s