காலைத் தூக்கத்தின் சுகத்துக்காக கணவரையே விவாக ரத்து செய்ய வேண்டும் என்றாலும் கவலைப் படாத மனைவிகள் இருக்கிறார்கள்.
அதே சுகத்துக்காக வேலையையே விட வேண்டும் என்றாலும் அஞ்சாத ஆம்பிளைகளும் இருக்கிறார்கள்.
குழந்தைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
“என்னப்பா இது, இன்னிக்கி என்ன தீபாவளியா? இவ்வளவு சீக்கிரம் எழுந்து (மணி காலை ஏழு!) என்ன பண்ணப் போறேன்?” என்று சொல்லி விட்டு தலைகாணிக்கு அடியில் முகத்தை நுழைத்துக் கொள்வார்கள்.
அதற்கு மேல் அவர்களை தொல்லை செய்தால் இல்லத்தரசிகள் மாகாளி அவதாரம் எடுத்து விடுவார்கள்.
“ஏங்க, உங்களுக்கு தூக்கம் வரலைன்னா உழவர் சந்தைக்கு போய் காய்கறி வாங்கிட்டு வாங்க. ஏன் ஊரையெல்லாம் எழுப்பிகிட்டு இருக்கீங்க?” என்று அதட்டுவார்கள்.
நமக்கு மட்டும் என்ன, வார நாட்களாக இருந்தால் நாமும் அலாரத்தை ச்நூஸ் செய்து விட்டு புரண்டு படுக்கிற ஜாதிதானே! ஆனால் ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் ஒரு இனந்தெரியாத உற்சாகம் அலாரம் அடிக்குமுன்பே எழுப்பி விடுகிறது!
நீளமான விடுமுறை தினமாக இருக்க வேண்டும் என்கிற பேராசையா?
இன்றைக்கு அலுவலகம் போக வேண்டாம் என்கிற சுதந்திர உணர்வு தரும் உற்சாகமா?
நாளின் அந்த நேரத்தை அடிக்கடி பார்த்திராததால் வருகிற கவர்ச்சியா?
சூரியன் இன்னும் வந்திருக்காத மெல்லிய பகல் ஒளி. காற்றில் ஒரு ஜில். எதோ ஒரு இனந்தெரியாத வாசனை. எங்கேயோ காக்காய் கத்தும் சத்தம். தோட்டத்து மரத்தில் இதுவரை பார்த்திராத புது வண்ணத்தில் ஒரு பறவை. காதலன் சீண்டும் போது பாதி வெட்கமும் பாதி எதிர்பார்ப்புமாக சிணுங்கும் பெண் மாதிரி கத்தும் வேறொரு பறவை. ஆகாசத்தில் இன்னும் மறையாத நட்சத்திரங்களும் நிலவும். நிர்வாணமான ஆகாயம் திடீரென்று வெளிச்சம் வந்ததால் வெட்கப் படுவது மாதிரி சிவந்திருக்கும் கிழக்கு.
இதையெல்லாம் பார்க்கிற போது மனசில் பிறக்கிற கவிதையும், புது மெட்டும்.
செந்நிற ஒளியிலே வந்தது உதயமே
அழகிய விடியலே தருவது கவிதையே
பாடும் பறவை கூவும் குரலில் கானம்
மேகப் பெண்ணின் கன்னம் எங்கும் நாணம்
பொன்னானக் காலையினை
கண்ணாரக் காணுகிறேன்
தென்றலும் வந்தது மெல்லெனவே
என்மனம் பொங்குது சில்லெனவே
அட!
பார்த்தீர்களா, காலை பொழுதின் சக்தியை. பாட்டு வந்து விட்டது. இதற்கு மெட்டுப் போட வேண்டும். பவர் கட் ஆவதற்குள் முயற்சிக்கிறேன்.
சண்டே காபியோடு ( முகத்தருகில்! ) லேட்டாக எழுந்திருக்கும் சுகம்… சுகானுபவம்!
சரி படம், எந்த ஊரில் எடுத்தது?
விஜயசங்கர், கேட்க மாட்டீங்கன்னு நினைச்சேன். இது ஹரியானாவிலே ஒரு மூலிகைத் தோட்டத்திலே எடுத்தது. கொஞ்சம் பொருத்தமா இருந்ததாலே யூஸ் பண்ணிட்டேன்!
காந்தக் கன்னியின் பிடியிலிருந்து இப்போ தான் வந்தேன்.. காலைத் தூக்கத்திலிருந்து இப்போதான் எழுந்தேன்னு சொல்ல வந்தேன்.. ஹி.. ஹி..
கவிதையை பார்த்தாக்க திரும்ப தூங்கணும் போல இருக்கே.. (பின்ன… கனவிலேயும் கவிதையிலேயும் தானே அந்த விஷயங்களை உணர முடிகிறது) 🙂
உண்மைதான். காலைதோறும் கண்களை பிரிக்க முடியாமல் காந்தம் போல் இழுத்துவைத்து கொள்கிறாள் இந்த கன்னி. 🙂
உண்மை தான் ஜவஹர்ஜி! லீவு நாட்களில்
மட்டும் ஏன் தான் சீக்கிரம் விழிப்பு வருகிறதோ,
ஆனாலும் விடுவோமா,குறைந்தது எட்டுக்கு முன் எழுவதில்லையின்னு
உறுதி எடுத்து இருக்கிறோமே!- எழிலரசி பழனிவேல்
//தென்றலும் வந்தது மெல்லெனவே
என்மனம் பொங்குது சில்லெனவே//
கவித…கவித…
NICE SIR…
ஜவஹர் சார்…..
இந்த விஷயத்துல ஒரு போட்டி வச்சா கண்டிப்பா போட்டியின்றி தேர்வு பெறுவேன் நான். ஹி ஹி!
//நாளின் அந்த நேரத்தை அடிக்கடி பார்த்திராததால் வருகிற கவர்ச்சியா?//
அனேகமா இதுதான் காரணமா இருக்கும்!
நன்றி.
http://www.padmahari.wordpress.com