தேவை – இன்னும் சில சீமாச்சுக்கள்….

சீமாச்சு என்று ஒரு ப்ளாக்கர் இருப்பது உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம், பலருக்குத் தெரியாதிருக்கலாம்.

கீரன் அவர்கள், அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் என்கிற கம்ப இராமாயண வாசகம் பற்றி சொன்னதை நான் எழுதியிருந்தேன். அதைப் படித்து விட்டு அவரது ப்ளாக்கில் ஒரு இடுகை போட்டிருந்தார். அதுதான் அறிமுகம்.

அதற்கப்புறம் சில பல மின்னஞ்சல்கள் மூலமாகவும், அலைபேசி அழைப்புகள் மூலமாகவும் தொடர்பு ஏற்பட்டது.

அவர் அமெரிக்காவில் இருக்கிற ஒரு NRI.

மாயவரத்தில் அவர் படித்த பள்ளியை உயர்த்த வேண்டும் என்கிற நோக்கில் செயல் பட்டுக் கொண்டிருக்கிறவர். அந்தப் பள்ளிக்காக அவர் சம்பாதிக்கிற பணம் மொத்தத்தையும் செலவு செய்து கொண்டிருக்கிறவர். அமேரிக்கா போனவர்கள் கொஞ்சம் காசு பார்ப்பதையும், அந்தக் காசில் இங்கே செட்டில் ஆவதையுமே நோக்கமாகக் கொண்டிருப்பவர்கள். பிறிதொரு சாரார் இந்த நாட்டைப் பற்றி கவலையே இன்றி அந்த நாட்டு பிரஜை ஆனவர்கள்.

இவர் ரொம்ப வித்தியாசமானவர்.

அந்தப் பள்ளியிலிருந்து வருகிற ஒவ்வொரு குழந்தையும் தலை சிறந்த இந்தியப் பிரஜையாக வர வேண்டும் என்கிற உந்துதலில் இருக்கிறவர்.

ஒரு பள்ளியில் படித்து அவர் இன்று சிறப்பாக இருக்கிறார்.

அந்தப் பள்ளியில் படிக்கிற அனைவரும் சிறப்பாக இருக்க வேண்டும், அதனால் நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்.

அதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று கேட்டார்.

இதில் ரொம்ப சிறப்பு என்ன என்று கேட்டால், என் அடுத்த நடவடிக்கை என்ன என்று நான் சிந்தித்துக் கொண்டிருந்த போது இந்த அழைப்பு வந்ததுதான்!

என் தகப்பனார் அவரது தேசப்பற்று காரணமாகத்தான் நரசிம்மன் என்கிற என் பெயரை ஜவ(ஹ)ர்லால் என்று மாற்றினார்.

இந்த தேசத்துக்கு நான் ஏதாவது செய்ய விரும்பினால், அது நல்ல பிரஜைகளை உருவாக்குவது மூலம்தானே செய்ய முடியும்? ஷிவ் கேராவின் யு கேன் வின் படிக்கும் போது அவரது ஆதங்கமான பள்ளிகள் ஆட்டிட்யூடை சொல்லித் தருவதில்லை என்கிற செய்தியை கண்ணீருடன் படித்த நான், அந்த ஆட்டிட்யூடை குழந்தைகளுக்கு சொல்லித்தர ஒரு வாய்ப்பு கிட்டுகிற போது அதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியுமா?

என்னால் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறேன்.

சீமாச்சுவின் கிரீடத்திற்கு ஒரு இறகாகும் சிறிய முயற்சி இது.

இன்னும் சில சீமாச்சுக்கள் இந்த நாட்டுக்குத் தேவை!

Advertisements

9 comments

 1. சீமாச்சு சாரை பாராட்ட வார்த்தைகள் இல்லை. எல்லோருக்கும் இந்த மனம் வருவதில்லை. அப்துல் கலாம் அவர்கள் கூட மாற்றங்கள் குழந்தைகள் அளவில் உருவாக வேண்டும் என்று சொல்லி, மாணவர்களிடம் அதிகம் உரையாடுகிறார். எதிர்காலம் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் இவர்களுக்கு எல்லா நலமும் அமைய வாழ்த்துக்கள்.
  நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று தெளிவாய்ச் சொல்லவில்லை

 2. சீமாச்சுவை ஹரிகிருஷ்ணன் வீட்டில் ஒரு முறை சந்தித்து இருக்கிறேன். அவருக்கே நினைவில் இருக்குமே டெஹ்ரியவில்லை.

  அற்புதமான முயற்சி. என்னால் ஏதேனும் உதவி செய்யக்கூடுமெனில் தெரிவிக்கவும்.

 3. அற்புதமான முயற்சி. வாழ்த்துக்கள்!

  நல்ல நிரந்தர வருவாய் கிட்டும் வேலை இருந்தால், வீட்டின் அத்தனை ( எதிர்பார்க்கும் ) கடமைகள் முடித்தால், யாரும் இந்த நல்ல விசயத்தை செய்யலாம்.

  ஒவ்வொருவரும், முயற்சிக்க வேண்டும்.

  ராமாயணத்தில் அணில் உதவி செய்த கதை போல, சிறு உதவியும் வாழ்நாளில் நிறைய பலன்கள் கொடுக்கும்.

 4. எனக்கும் அறிவியல் விடயங்களை பள்ளி மாணவர்களுக்கு எளிய முறையில் படம் மற்றும் ஒளி காட்சிகள் மூலமாக பயிற்றுவிக்க ஆசை. அரசு பள்ளிகளுக்கு மட்டுமே. அதற்க்கான முயற்சிகளிலும் இறங்கி உள்ளேன்.

  1. ராம், உங்கள் நல்லெண்ணத்திற்கு நன்றியும் பாராட்டுக்களும். எங்கள் பள்ளிக்கும் உங்களை அழைப்போம். (“எங்கள்” என்று நான் சொந்தம் கொண்டாடும் பள்ளி நண்பர் சீமாச்சு அப் கிரேட் செய்து கொண்டு வரும் பள்ளிகள்!!)

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s