ஜொனபொன்டாவில் அட்வான்ஸ்ட் இங்க்லீஷ்

நேற்று மதிய உணவை ஓட்டலில் சாப்பிடலாம் என்று முடிவு செய்தோம்.

நானும் இல்லத்தரசியும் அறுசுவை உணவகத்துக்குப் போனோம்.

ஓசூரில் மதிய உணவுக்கு எந்த ஓட்டலுக்குப் போனாலும் வைட்டிங் லிஸ்ட்தான். நண்பர் விஜயசங்கர் ஆனந்த பவனில் எத்தனை நேரம் நின்றாரோ? எல்லா இருக்கைகளும் நிரம்பி, இரண்டே இரண்டு மட்டும் காலியாயிருந்தது. சினிமாவுக்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு பேன் காற்று வருகிற சீட்டையோ அல்லது யாராலும் மறைக்க முடியாத முன் வரிசை சீட்டையோ பிடிக்க ஓடுவது போல ஓடினேன். ஓடிப் போய் உட்கார்ந்து பக்கத்து இருக்கையில் கையை வைத்துக் கொண்டு, இல்லத்தரசியை கை காட்டி அழைத்தேன்.

கை மேல் பச்சக் என்று யாரோ உட்கார்ந்தார்கள்.

திரும்பிப் பார்த்தால் நான் செய்த அதே வேலையை ஒரு பெண் செய்து கொண்டிருந்தாள்.

நல்ல வேளை, எதிரில் இருந்த ரெண்டு பேரும் சாப்பிட்டு முடித்து மோரை சுழற்றி சுழற்றி உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். வேஷ்டியை இழுத்துப் பிடித்துக் கொண்டு காத்திருந்தேன்.

அந்த பச்சக் பெண்ணுக்கு பதினெட்டு வயசிருக்கலாம். அவள் அழைத்த பையனுக்கு இருபத்தைந்து வயசிருக்கும். அவன் அவ்வப்போது பையிலிருந்து மொபைலை எடுத்து ‘எஸ்’ ‘நோ’ ‘ஐ வில் கம்’ ‘நோ, லஞ்ச்’ என்று யாருடனோ தந்தி அடித்த மாதிரி பேசிக் கொண்டிருந்தான். அந்தப் பெண் பேசும் போதெல்லாம் கிறக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பேசுகிற போதெல்லாம் அவள் வெட்கப் பட்டாள். அவள் போட்டிருந்த பவுடரின் ஆட்சேபத்துக்குரிய மணம் மூக்கை தொந்தரவு செய்கிற தூரத்தில் இருந்தும் எதுவும் கேட்கவில்லை.

ஆர்டர் எடுக்க வெய்ட்டர் வந்ததும் ஒரு மீல்சும், ஒரு கேர்ட் ரைசும் ஆர்டர் செய்தார்கள்.

ஆர்டர் செய்கிற போது அந்தப் பையன் கேட்ட ஒரு கேள்வி, வெய்ட்டரை மட்டுமல்ல எங்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

“கேர்ட் ரைசில எக் போடுவீங்களா?”

“இல்ல சார் புல்லி வெஜிடேரியன்”

ஐட்டங்கள் வந்தன.

“என்னது? தயிர் சாதம் மாதிரி இருக்கு?”

“ஆமாம், நீங்கதான ஆர்டர் பண்ணீங்க?”

“ப்ச் நான் ஆர்டர் பண்ணது கேர்ட் ரைசுங்க”

“கேர்ட் ரைஸ்தாங்க இது”

“இப்பதானே தயிர்சாதம்ன்னு சொன்னீங்க?”

“இப்பவும் அதேதாங்க சொல்றேன். இது தயிர் சாதம்தான்”

“நான் ஆர்டர் பண்ணது கேர்ட் ரைசுங்க”

வெய்ட்டருக்கு தன் ஆங்கிலப் புலமையில் சந்தேகம் வந்ததா அல்லது கையில் கிடைத்ததால் அடித்து விடுவானோ என்கிற பயமோ தெரியவில்லை. போய் சூப்பர்வைசரை அழைத்து வந்தான்.

இந்த வாழைப்பழ காமெடி திரும்ப ரீடேலிகாஸ்ட் ஆகுமுன் என் இல்லத்தரசி குறுக்கே புகுந்தாள்.

“நீங்க ஆர்டர் பண்ணதும் கர்ட் ரைஸ்தான், வந்திருக்கிறதும் அதான். உங்களுக்கு என்ன குழப்பம்?”

“உங்களுக்கு பிரைட் ரைஸ் வேணுமா?” என்று நானும் திருவாய் மலர்ந்தேன்.

“அதேதாங்க, பிறவுனா இருக்குமே… எங்க ஊர்ல கேர்ட் ரைச்ன்னு சொன்னதும் கரெக்ட்டா கொண்டாந்துடுவாங்க”

“உங்க ஊர் எது, லாஸ் ஏன்ஜல்சா?”

“ஜல்சாவா?”

“ஊர், ஊர்… உங்க ஊர் எதுன்னேன்”

“ஜொனபொன்டா”

“அது எங்க இருக்கு, உத்தர்கன்ட்லையா?”

“இல்ல சார், இங்க ராயக்கொட்டா போற வழி”

“ஓ… அந்த அளவு இங்கிலீஷை இங்க எதிர்பார்க்கிறது தப்புதான். நீ எங்கம்மா, டைட்டனா?”

“எப்டி சார் தெரியும்?”

‘இதுக்கப்புறமும் தெரியல்லைன்னா நான் ஹோசூர்ல பதினஞ்சு வருஷம் இருந்ததே வேஸ்ட்’ என்று நினைத்துக் கொண்டேன், சொல்லவில்லை

Advertisements

25 comments

 1. //“அதேதாங்க, பிறவுனா இருக்குமே… எங்க ஊர்ல கேர்ட் ரைச்ன்னு சொன்னதும் கரெக்ட்டா கொண்டாந்துடுவாங்க”

  “உங்க ஊர் எது, லாஸ் ஏன்ஜல்சா?”//

  சார்… இருந்தாலும் ஓவரா கலாய்கிறீங்க…

 2. ஜவஹர் சார்,

  இந்த தயிர் சாதா மேட்டர படிச்சதும் ஆபீசில் சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தேன். அதோடு எனக்கு “உப்புமா ” காமெடி தான் நினைவுக்கு வந்தது. நல்ல விவரிப்பு !

 3. //“அதேதாங்க, பிறவுனா இருக்குமே… எங்க ஊர்ல கேர்ட் ரைச்ன்னு சொன்னதும் கரெக்ட்டா கொண்டாந்துடுவாங்க”

  “உங்க ஊர் எது, லாஸ் ஏன்ஜல்சா?”//

  ஹி.. .ஹி….

 4. ‘தமிழ் படம்’ (சினிமா) பார்த்த போது சிரித்த சிரிப்பு, உங்கள் “கேர்ட் ரைஸ்’ பதிவு கொடுத்தது…

  நான் ஜொனபொன்டா உடனே போய் ஆக வேண்டும்! ( மனதில் மின்னலடிக்குது ‘வேட்டா’ கோச்சிங் ஆபர்சுனிட்டி )

  //நண்பர் விஜயசங்கர் ஆனந்த பவனில் எத்தனை நேரம் நின்றாரோ?//
  காணும் பொங்கல் அன்று பரோட்டா மட்டும், சாதம் இல்லை கூட்டம் இல்லை!
  குழந்தைகள் விருப்பம் – லேயர் லேயராக தமிழ்நாட்டில் தான் வரும், பெங்களூரில் அட்டை மாதிரி இருக்கும்!
  சுட்டு வைத்தது பத்து நிமிடத்தில் சூடேற்றி வந்தது. என்ன ஐஸ் க்ரீம் தான் – பக்கத்து கடைக்கு சென்று வாங்கி வர லேட் செய்தார்கள்.

 5. ஓசூர் வந்த புதிதில் மசுரூம் பிரைட் ரைசு கேட்க, அவர் மொசுரு ரைசு என்று சொல்ல. வந்தது தயிர் சாதம். 🙂

  இது எந்த உணவகத்தில் நடந்தது..?

  1. வரதராஜுலு, நண்பர் சம்பத்குமாரின் பின்னூட்டத்தைப் படியுங்கள். ஜோனபண்டா என்றால் என்ன அர்த்தம் என்பது உள்பட எழுதியிருக்கிறார்.

 6. ஜொனபன்டா என்பது ஒசூர் அருகே கெலமங்கலம், ராயக்கோட்டை ஊர்களுக்கு செல்லும் வழியில் அமைந்திருக்கும் சிறிய கிராமம் ஆகும். அங்கே தெலுங்கு மொழி பேசும் மக்கள் அதிகம். விவசாயம் தான் பிரதான தொழில். ஜொனபன்டா என்றால் நீரை சிந்தும் பாறை என்று பொருள்.தட்பவெப்பம் டெல்லியை போலவே தான்.

  1. சம்பத், நம்ம வாசகர்களுக்காக விவரங்கள் தந்ததுக்கு நன்றி. ஜொனபண்டா பெயருக்கான பொருள் சொன்னதுக்கு உபரி நன்றி.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s