எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்

முதியவர்கள் என்று சிலரைச் சொல்கிறோம்.
 
அதற்கு என்ன வரையறை வைத்திருக்கிறோம்? எந்த இடத்தில் கோடு போடுகிறோம்?
 
என் சூத்திரம் ரொம்ப எளிமையானது. பலவருடங்களுக்கு முன்னாலிருந்து, இன்று வரை, என்னைக் காட்டிலும் பதினைந்து வருஷம் மூத்தவர்கள்தான் முதியவர்கள். இன்னும் எழுபத்தைந்து வருஷம் கழித்துக் கேட்டாலும் என் சூத்திரம் இதுவே…
 
நீங்க எப்படி?
**********************************************************************************************************************************************************************************************
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி என்று நிறைய பயிற்சி வகுப்புகளில் படித்திருக்கிறேன். சில வகுப்புகள் எடுத்தும் இருக்கிறேன். என் அனுபவத்தில் சில சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறேன்.
 
சில பிரச்சினைகளுக்குத் தீர்வே இல்லை. அதோடு எப்படி வாழ்வது என்று கண்டறிவதுதான் தீர்வு.
 
சில பிரச்சினைகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகள் உள்ளன. அவற்றில் சிறந்ததை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பது இன்னொரு பிரச்சினை ஆகி விடும்.
 
ஒரே ஒரு தீர்வே இருக்கக் கூடிய பிரச்சினைகள் மிக சொற்பம்.
 
அவற்றுக்குத் தீர்வைக் கண்டறியும் போது பிரச்சினையே காணாமல் போய் விடும்.
 
சரிதானா?
**********************************************************************************************************************************************************************************************
அடிமுட்டாள்தனமான ஒரு விஷயத்தை பீட்டர் டெக்கர் சொன்னார் என்று சொல்லிப் பாருங்கள்.
 
ஜனங்கள் கேள்வி கேட்காமல் ஒத்துக் கொள்வார்கள். அது மட்டுமில்லை அதற்கு அவர்கள் தருகிற வியாஞானங்களைக் கேட்டால் அதிர்ச்சியில் நாக்கு இழுத்துக் கொண்டு விடும்.
 
அதே சமயம் கூட்டு வட்டி கண்டுபிடிக்கிற சூத்திரத்தை கொஞ்சம் எழுத்துக்கள் மாற்றி உங்கள் கண்டுபிடிப்பு என்று சொல்லிப் பாருங்கள்.
 
இது சொங்கித்தனம். இந்த முறையில் வட்டி கண்டுபிடிக்கவே முடியாது என்று நிரூபித்து விடுவார்கள்.
 
இந்த அனுபவம் உங்களுக்கும் இருக்கிறதுதானே?
*************************************************************************************************************************************************************************************************
எல்லா நிறுவனங்களிலும் எல்லாத் துறைகள் பற்றியும் ரொம்ப நன்றாகத் தெரிந்தவன் ஒருத்தன் இருப்பான்.
 
எந்த நிமிஷமும் அவனைக் கேட்டால் ஒவ்வொரு துறையிலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைச் சொல்வான்.
 
எந்த புது முயற்சியையும் ஆரம்பத்திலேயே இது இன்ன இடத்தில் ஸ்டக் ஆகிவிடும் என்று சொல்லி விடுவான்.
 
ரொம்ப காம்ப்ளிகேட் செய்து சொல்லப்படுகிற வாக்கியங்களை நாலு வார்த்தையில் மாற்றி இதைத்தானே சொல்கிறாய் என்று கேட்டு விடுவான். எத்தனை பெரிய விஷயம் செய்தாலும் அதை சாதனை என்று நினைக்காமல் தன பாட்டுக்க செய்து கொண்டிருப்பான்.
 
ஆள் குறைப்பு நடக்கும் போது இது மாதிரி ஆளுக்குத்தான் முதலில் வேலை போகும்.
*****************************************************************************************************************************************************************************************************
டீம் ஒர்க் பற்றி யாருக்கு எத்தனை எடுத்துச் சொன்னாலும் புரிவதில்லை.
 
எல்லாரும் தனித் தனித் தீவாக செயல்படவே விரும்புகிறார்கள்.
 
டீம் பில்டிங் பற்றி வகுப்பு நடத்தும்போதெல்லாம் தவறாமல் ஒரு விஷயம் சொல்வேன். எப்படிப்பட்ட கொனஷ்டை பிடித்தவனாக இருந்தாலும் டீமாக செயல்பட ஆரம்பித்து விடுவான்.
 
அது என்ன என்கிறீர்களா?
 
“எதைச் செய்தாலும் ஒரு டீமாக செய்யுங்கள். தப்பு நடக்கும் போது ஆள் காட்ட உதவியாக இருக்கும்”
*******************************************************************************************************************************************************************************************************
Advertisements

23 comments

  1. டாக்டர், பிரச்சினையையே தீர்வாகப் பயன்படுத்துகிற இந்த டெக்னிக்கையும் நம்ம இடுகையில் சேர்த்திருக்கலாம் போலிருக்கே!

 1. அடிப்படையில் நான் உங்கள் மாதிரியா ஆள்தான் சார்., நீங்கள் சொல்லும் பல அடிப்படை விசயங்களில் அடியேனின் கருத்துக்களும் அப்படியே…

 2. //ரொம்ப காம்ப்ளிகேட் செய்து சொல்லப்படுகிற வாக்கியங்களை நாலு வார்த்தையில் மாற்றி இதைத்தானே சொல்கிறாய் என்று கேட்டு விடுவான். எத்தனை பெரிய விஷயம் செய்தாலும் அதை சாதனை என்று நினைக்காமல் தன பாட்டுக்க செய்து கொண்டிருப்பான்.

  ஆள் குறைப்பு நடக்கும் போது இது மாதிரி ஆளுக்குத்தான் முதலில் வேலை போகும்.//

  am confused, why would management remove a person with wide perspective and good capabilities ? is it because others are irritated by him? or something else?

  1. Mani, to answer your question I must write a big article. However let me try to make it as short as possible. Today’s top managers are youngsters. When they take a decision the person or persons whom I am referring to point out the impracticabilities of the decision. The ‘Do what I say’ attitude extinguishes them. Finally, the top is compelled to switch over to the idea of our person. This repeatedly happens, because this fellow knows nook and corner of the organisation. The top gets uncomfortable and looks for the day of getting rid of him. I am trying a short story in these lines. Hopefully that would communicate more clearly.

   By the way, are you the R.K.Mani of Kothari chemicals?

 3. நம்மை விட இளையவர்களோடு வேலை செய்யும்போது நாமும் இளமையாக ஃபீல் பண்ணுவோம் என்றாலும் நம்மை விட மூத்தவர்களோடு வேலை செய்யும் போது புதிய புதிய அனுபவங்கள் கிடைக்கும் என்பது உண்மை தானே சார்…. 🙂

  யுவர் ஹானர்,சீமாச்சு சார் சொன்ன கடைப்பணியாளர் பேச்சு போல் இதில் இரட்டை அர்த்தம் ஏதும் இல்லை… இல்லை.. இல்லை. 🙂

 4. Now it makes sense for me after reading your explanation. But I do have lot of thoughts/questions about this. Can I ask them through mail if you don’t mind?

  //The top gets uncomfortable and looks for the day of getting rid of him. I am trying a short story in these lines. Hopefully that would communicate more clearly.//

  Waiting for your story…

  //By the way, are you the R.K.Mani of Kothari chemicals?//

  No Sir, I am not that person. Am in software industry.

 5. Sir..

  I have some of above like
  ரொம்ப காம்ப்ளிகேட் செய்து சொல்லப்படுகிற வாக்கியங்களை நாலு வார்த்தையில் மாற்றி இதைத்தானே சொல்கிறாய் என்று கேட்டு விடுவான். எத்தனை பெரிய விஷயம் செய்தாலும் அதை சாதனை என்று நினைக்காமல் தன பாட்டுக்க செய்து கொண்டிருப்பான்.

  ஆள் குறைப்பு நடக்கும் போது இது மாதிரி ஆளுக்குத்தான் முதலில் வேலை போகும்.

  How to avoid that

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s