தமிழ் சினிமா இசை

எழுபத்தைந்தாம் வருஷம் வரை தமிழ் சினிமா இசையில் எழுதப்படாத சில வரையறைகள் இருந்தன.

அக்கார்டின் வாசித்தால் கதாநாயகி தொடர்பான லைட்டான காட்சி. டொயின்டோற டொயின்டோற என்று வீணை வாசித்தால் பாசப்பிணைப்பு. டுடுடுடுடுடு டும் என்று டிரம் வாசித்தால் போலீஸ். மேல் ஸ்தாயியில் ஷெனாய் வாசித்தால் சோகம். கித்தாரை தளர்ந்த கம்பியில் மீட்டி வயலினில் ஒரு தூக்கு தூக்கினால் காமெடி. சந்தூர் அல்லது சைலோபோனில் கீழ் சுரத்திலிருந்து மேல் சுரம் வரை ஒரு ஓட்டு ஓட்டினால் ‘வடுமாங்காய் பிலிம்சார் வழங்கும்’ என்று படம் ஆரம்பிக்கிறது. வயலின் கோஷ்டி ‘ச..நி…ச..’ என்கிற ஸ்வரத்தில் தேய்த்தால் எழுத்து முடிந்து டைரக்டர் பேர் வந்து விட்டது.

கதாநாயகனுக்கு டிஎம்எஸ் தான் பாட வேண்டும். கதாநாயகிக்கு பிசுசீலா அல்லது சில சமயம் ஜானகி. விதி பாடுகிற பாட்டுக்களை சீர்காழி பாடுவார். காமெடியனுக்கு ஏ.எல்.ராகவன், கமேடிச்சிக்கு ஜமுனாராணி. கவர்ச்சி நடிகைக்கு எல்.ஆர்.ஈஸ்வரி. ஏ.எம்.ராஜாவை ஏறக்குறைய ஜெமினி கணேசனுக்காகவே ஒதுக்கி வைத்திருந்தார்கள். பி.பி.ஸ்ரீநிவாசும் அப்படியே. அவர் ஜெமினிக்கும் சில சமயம் முத்துராமனுக்கும் பாடுவார்.

எம்ஜிஆரோ, சிவாஜியோ பிபிஎஸ் அல்லது ஏஎம் ராஜா குரலில் பாடுவதை ரசிகர்கள் ஏற்கவில்லை.

ஆனால் எம்ஜியார் இதை அந்தக் காலத்திலிருந்தே மெதுவாக உடைக்க முயன்றிருப்பது தெரியும்.

‘பால் வண்ணம் பருவம் கண்டு’ பாடலை பிபிஎஸ் ஐப் பாட வைத்தார்.

அடிமைப்பெண் படத்தில் எஸ்பிபி யைக் கொண்டு வந்தார்.(இன்னொரு டேக் கேட்டதற்கு டிஎம்எஸ் ஒப்புக் கொள்ளாததால்தான் இந்த மாற்றம் என்று பரவலாக ஒரு பேச்சு உண்டு. நிஜமோ இல்லையோ யாமறியோம்). உரிமைக்குரல் படத்தில் யேசுதாசை ரீ எண்ட்ரி செய்தார்.

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தில் ஜெயச்சந்திரனை பாட வைத்தார்.

ஆனாலும் கமல் ரஜினி காலத்திலும் இந்த மித் முழுசாக உடையவில்லை.

இளைய தலைமுறைக்கு டிஎம்எஸ் பாடுவதில்லை. எஸ்பிபிதான் பாடுவார். மலேஷியா வாசு பெரும்பாலும் ரஜினிக்குதான் பாடுவார். கமலுக்கு அவர் பாடுவது கேரக்டரைப் பொறுத்தே இருக்கும்.

கதாநாயகன் அறிமுகப் பாட்டு, குத்துப் பாட்டு (அல்லது ஐட்டம் சாங்), கிளைமாக்சுக்கு முன்னால் ஒரு பாஸ்ட் நம்பர் என்கிற மாதிரி சின்னச் சின்ன சூத்திரங்கள் இப்போதும் இருக்கின்றன.

ஆனாலும் இசைக்கென்று ஒரு சுதந்திரமும், நடிகர்களோடு தொடர்புப் படுத்தி நிறைய கட்டுப்பாடுகள் இல்லாமல் இருப்பதும் ஒரு நல்ல நிலை என்று நினைக்கிறேன்.

என்ன சொல்கிறீர்கள்?

Advertisements

9 comments

  1. அத்தனையும் உண்மை ஜவஹர்.
    ஹ்ம்ம்.
    டிஎமெஸ் மறுத்தாரா.எம் ஜி ஆர் வேண்டாம்னார தெரியாது. ஆனால் நாங்கள் ஒரு மாதிரி எங்களைப் பழக்கிக் கொள்ளுவதற்குள் நாட்கள் ஆகிவிட்டது. சுவாரஸ்யமாக இருந்ததும்மா.

  2. அலை பாயும் கடலோரம் டூயட், கற்பூரக் காட்டினில் கற்பிழந்த கதாநாயகிக்காக ஒப்பாரி, தன்னைத் தானே நம்பாதவர்களுக்காக தத்துவம், ராவணன் தர்பாரில் காம்போதி என்று கலக்கிய சி.எஸ். ஜெயராமனை விட்டுவிட்டீர்களே….

  3. நல்ல ஆராய்ச்சி சார்…

    விழியே கதை எழுது…. மஞ்சள் வானம்.. தென்றல் சாட்சி…

    ஆயிரம் நிலவே வா… ஓராயிரம் நிலவே வா…

    ஏனோ பதிவைப் படித்தவுடன் இந்த பாடல்கள் நினைவிற்கு வந்தன.

    ரஜினிக்கு கார்த்தி பாடியதும் கூட சேர்த்து கொள்ளலாமா சார்… 🙂

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s