தஞ்சை மாவட்ட சொல்லாட்சிகள்

சமீபத்தில் நான் பிறந்த மாவட்டத்துக்குப் போய் வந்ததாலோ என்னமோ, தஞ்சை மாவட்டத்து சொல்லாட்சிகள் திடீரென நினைவுக்கு வந்தன. ஆமாம், நாகப்பட்டினம் அப்போது தஞ்சை மாவட்டம்தானே.. இப்போது, நாகை, திருவாரூர், தஞ்சை என பிரிக்கப்பட்டு விட்டது.

பரசுராமன் மளிகைக் கடையில் சாமான்கள் எல்லாம் பொட்டலம் கட்டப்பட்டதும்,

“செட்டியாரே, ரோக்காவை எடுத்துக்கங்க. ஒத்துக்கறீங்களா?” என்பார் பரசுராமன்.

அவரும் பய பக்தியோடு “சரிங்க” என்பார்.

பார்க்கிறவர்களுக்கு செட்டியார் எதோ குற்றம் செய்து விட்ட மாதிரியும் இவர் மிரட்டியதும் ஒத்துக் கொள்கிறார் போலவும் இருக்கும்.

பரசுராமன் “புளி அரைக் கிலோ” என்று attendance எடுக்கிற மாதிரி அறிவிப்பார்.

செட்டியார் பொட்டலங்களை லேசாக அழுத்திப் பார்த்து புளியை கண்டு பிடித்து அதை ஒரு ஓரமாக வைப்பார். வைத்து விட்டு அவர் ஒரு தரம்

“ஆங்.. புளி அரைக் கிலோ” என்பார்.

ஒத்து கொண்டாகி விட்டது.

அப்புறம் அடுத்த ஐட்டம்.

எல்லாம் முடிந்ததும் “மொத்தம் முப்பத்தி மூணு ஐட்டம்” என்பார் பரசுராமன்.

செட்டியார் எண்ணிப் பார்த்து “சரியா இருக்கு” என்பார்.

பிற்காலத்தில் யோசித்த போது ரோக்கா என்பது ரோல் கால் என்பதின் மருவலாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
********************************************************************************************************************
“ஆள வெடக்கிறியா?”

என்று ஒரு பிரயோகம் உண்டு.

பொய் சொல்வது,கிண்டல் செய்வது இரண்டுக்கும் இது பொருந்தும்.

“சீரியசாத்தான் சொல்றியா?”

“என்ன நக்கலா?”

“ரீல் உட்ரியா?”

இப்படி நிறைய அர்த்தம் உண்டு அதற்கு.

இதே காண்டேக்ச்டில் மெட்ராஸ் பாஷையில் ஒரு சந்தேகப் பார்வையோடு,

“ஐயே?” என்பார்கள். அந்த ஐயேவில் கேள்விக்குறி தொக்கி நிற்கும்.

திருவெண்காட்டில் கோயில் வாசலில் ஒரு ஆண்டி யாரிடமோ

“என்ன வெடைக்கிறியா?” என்று கேட்ட போது இன்பத் தேன் வந்து பாய்ந்தது காதில்.
**********************************************************************************************************************
போகும் போது சேலம்,நாமக்கல்,திருச்சி,தஞ்சாவூர்,கும்பகோணம் வழியாகப் போனேன்.

மயிலாடுதுறையில் இறங்கும் போது கடல் பயணம் முடித்த மார்கோ போலோ மாதிரி உணர்தேன். மயிலாடுதுறை நெருங்கும் போது ஒரு மரத்தடியில் இளநீர் சாப்பிட்டோம்.(முப்பது ரூபாயாம். பகல் கொள்ளை!)

அருகிலிருந்த இன்னொரு கார் பயணியிடம் வந்த பாதையை விளக்கி,

“இந்த ரூட்டை செலெக்ட் பண்ணது முட்டாள்தனம்ன்னு நினைக்கிறேன்” என்ற போது

இளநீர்க்காரர், “அட ஆமாங்குறேன்” என்று ஆமோதித்தார்.

“எது ஆமாம், நான் முட்டாள்ங்கிறதா?”

“அது தெரியல்லைங்க, ஆனா இந்தப் பாத சுத்துங்க. போவக்குள்ள திர்ன்னாமல பாதையில போங்க”

அட ஆமாங்குறேன் என்பதும், போவக்குள்ள, வரக்குள்ள என்பதெல்லாம் கேட்டு நெடு நாள் ஆயிற்று. சில சமயம் டி.ராஜேந்தர் படங்களில் இது மாதிரி வசனங்கள் வரும். மாயவரத்தில படிச்சவராச்சே!
*********************************************************************************************************************

Advertisements

24 comments

 1. இளநீ 30 ரூபாய் அதிகமாச்சுங்களே.. அதுவும் எங்க ஊரு அருகே.. கார்ல வந்து இறங்கினா தனி ரேட்டு சொல்லிட்டாரு போலருக்கு..

  அதைத் தவிர நீங்க ரூட்டு கேட்டதுக்கு இலவசமா கன்சல்டேஷன் சொல்லியிருக்காரு வேற..

  வேணும்தான் உங்களுக்கு…

 2. //செட்டியார் எண்ணிப் பார்த்து “சரியா இருக்கு” என்பார்//
  எங்க ஊரிலே பெரிய கடைத்தெருவின் அருகில் ரமா பேன்ஸி ஸ்டோருக்கு அடுத்து பெரியநாயகி மளிகை என்று ஒரு மளிகைக் கடை இருந்தது.. அங்கேயும் ஒரு செட்டியார்தான்.. கருப்பா குண்டா இருப்பார், காது முழுவதும் முடி இருக்கும்.. (என் நண்பரின் தந்தையார் அவர்… அப்புறம்தான் தெரிந்தது அது.. இது அதுக்கு முன்னர்.. அதனால் நண்பர் மன்னிப்பாராக…)

  அவர் இந்தமாதிரி ரோக்காவை ஒத்துக்கொண்டு முடித்ததும் அயிட்டங்களை எண்ணிவிட்டு ரொம்ப சத்தமாக வாடிக்கையாளரை பார்த்துக்கொண்டே.. (பணம் வாங்கணுமே)..” ஐயாவுக்கு 10 சாமான்..” என்று இரண்டு மூன்று அர்த்த்துல கத்துவார்.. கேட்கவே ஒரு மாதிரி நெளிய வேண்டிவரும்..

  சமயங்களில்…”தம்பீ.. ஐயா சாமானை எடுத்து இப்படி வையீ..” என்னு சத்தம் கேக்கும்..

  சமயங்களில் பெண்பாலரிடம் பேசும் போது இன்னும் சங்கடமாயிருக்கும்..

  தெரிஞ்சு சொல்றாரா ..தெரியாமல் சொல்றாரா என்பது கடைசி வரை தெரியவில்லை..

  பி.கு: பள்ளி நாட்களில் அந்த வார்த்தைக்கு இரட்டை அர்த்தங்கள் உண்டு.. தெரியாவிட்டால் என்ன வென்று கேட்காதீர்கள்.. பாதகமில்லை..

 3. எம்பளது ரூபாய்ன்னு ///

  இந்த மாதிரி ஓரிரண்டு மாற்றங்கள் செய்தால் அப்படியே கன்னடம் போய்விடலாம். இலடு என்கிறார்கள் இரண்டுக்கு கன்னடத்தில்…

  1. தென்னாட்டு மொழிகளுக்குள் ஒற்றுமைகள் நிறைய உண்டு. தமிழில் அங்காடி என்பதை தெலுங்கில் அங்கிடி என்பார்கள். பால் கன்னடத்தில் ஹாலு. தமிழின் பல வார்த்தைகள் மலையாளத்தில் அப்படியே உபயோகமாகின்றன.

 4. மற்ற மொழிகளாவது proto-dravidianல இருந்து பிரிஞ்சது. மலையாளம் ஆறாம் நூற்றாண்டுக்குப் பிறகோ தமிழில் இருந்து பிரிந்தது. ஒற்றுமைகளுக்கு குறைவிருக்காது

 5. Seemachu Said,
  “சமயங்களில் பெண்பாலரிடம் பேசும் போது இன்னும் சங்கடமாயிருக்கும்”?

  சென்னை Grand Sweets ல உடைந்த முறுக்குத் துண்டுகள் மக்கள் வாங்க வந்து கேட்கும்போது கேட்டிருக்கிறீர்களா?!!

  தஞ்சையில் இருந்து மதுரை வந்ததும் நானும் இந்த ‘வெடைக்கிறியா’ வார்த்தை உபயோகப் படுத்தி செம கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறேன். பதிலுக்கு நானும் சில மதுரை வார்த்தைகளை கிண்டல் செய்தது உண்டு அப்போது…(ஆட்டையப் போடுறது, ‘டர்’ ஆறது, etc., etc.,)

  1. டர்ர் ஆகிறதுங்கிறது ஹிந்தியிலிருந்து வந்த சொல்லா இருக்கலாம். ஜோ டர் கயா சம்ஜோ மர்கயா ன்னு கப்பர் சிங் பேசின வசனம் பாபுலர் ஆகும் போது அடாப்ட் ஆகி இருக்கலாம். கஸ்மாலம் ங்கிறது கூட சமஸ்கிர்தத்திலேர்ந்து வந்தது.

 6. ஆவணி அவிட்டத்தின் போது பழைய அழுக்குப் பூணூலைக் கழட்டிப் போடும்போது “கஸ்மல தூஷிதம்” என்று சொல்வார்கள். “கஸ்மலம்” என்றால் அழுக்கு. ‘கஸ்மல’த்திலிருந்துதான் கஸ்மாலம் வந்திருக்கு. அதனால் ‘கஸ்மாலம்’ என்பது பெரிய கெட்ட வார்த்தையல்ல.

  – சிமுலேஷன்

 7. அங்க இந்த technicians (தமிழ்ல டிரை பன்னேன் வரல) ஒரு language (சாரி சார் தமிழ் டைபிங்க்ல கொஞ்சம் பழகணும்) பேசுவாங்கலாம் அத சொன்னேன் (ஆமா நீங்க என்னா நினைச்சிங்க )

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s