இசைத்தட்டு ஜோக்ஸ்

பெங்களூரில் ஒரு பிரபல ஷாப்பிங் காம்ப்ளெக்சில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.  
 
ஒரு கடை வாசலில் நூறு வருஷத்துக்கு முந்தைய கிராமபோன் ஒன்றை வைத்திருந்தார்கள். பித்தளைக் கூம்பை புளி போட்டு தேய்த்து பள பளவென்று வைத்திருந்தார்கள். ஒரு சின்ன உந்துதல் ஏற்பட்டு விலையை விசாரித்தேன்.
 
அவர்கள் சொன்ன விலையில் சோனி பத்தாயிரம் வாட்ஸ் மியூசிக் சிஸ்டமே வாங்கலாம். பர்சில் சில அழுக்கு பத்து ரூபாய் நோட்டுகளும் ஒன்றிரண்டு நூறு ரூபாய்களும் மட்டுமே இருந்ததால் அடுத்த கடைக்கு நடையைக் கட்டினேன்.

கிராம போன் ஒரு அற்புதம்.

சாவி கொடுத்து ஓடுகிற மோட்டார்.  அதிர்வுகளை முழுக்க மெக்காநிக்கலாகவே ஒலிக்கூட்டுகிற அமைப்பு. ஊசியை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இசைத்தட்டை நோண்டி நுங்கெடுத்து விடும். இந்த மாசம் நூற்றாண்டு காணுகிற மறைந்த என் சித்தப்பா  சப்பாத்திக் கள்ளி முள்ளை வைத்து கிராம போனை ஓட்டி அந்தக் காலத்திலேயே value functional analysis செய்தவர். கிராமபோன் காலத்தில் ஒரே ஸ்பீடுதான். 78 ஆர்பிஎம். பாட்டுக்களை எல்லாம் மூணரை நிமிஷத்துக்கு செதுக்க வேண்டிய கட்டாயம்! அதனால்தான் அந்தக் காலப் பாட்டுக்களில் பல இரண்டாம் சரணம் முடிந்து பல்லவி வரும் போதே கிணற்றுக்குள் போய் விடும்.

ரிக்கார்டுகள் நாளா வட்டத்தில் தேய்ந்து நீடிலை எடுத்துப் போட்டதுமே கர்ர் என்று உப்புத்தாளை காரைச் சுவரில் தேய்த்த மாதிரி சத்தம் வர ஆரம்பித்து விடும். கொஞ்ச காலம் கழித்து வேறே ரிக்கார்ட் வாங்கியே ஆக வேண்டும்.

ஹெச் எம் வீக்கு நல்ல வியாபாரம் ஆயிற்று.

அதற்கப்புறம் வைர ஊசி வைத்த ரிகார்ட் ப்ளேயர்கள் வரும் போது நிறைய முன்னேற்றங்கள். நாலு வெவ்வேறு ச்பீடுகள். தாம்பாளம் சைசில் எல்பி ரிக்கார்டுகள். நாற்பத்தைந்து ஆர்பிஎம் வேகத்தில் ஓட வேண்டிய காருக்குறிச்சி அருணாச்சலத்தை பதினாறில் போட்டு ஜாஸ் இசையில் டிரம்ப்பெட் ஊதுவது மாதிரி இருப்பதை ரசிப்போம்.

முப்பத்திமூன்றில் ஓடவேண்டிய பாலமுரளி கிருஷ்ணாவை நாற்பத்தைதில் ஓட்டும் போது “என்ன இழவு இது, ஆம்பிளையா பொம்பளையான்னே தெரியாம ஒரு குரல். யாரு பாடறா?” என்று பயப்படுவார்கள்.

இசைத்தட்டுக்கள் தொடர்பான சில அனாச்சார ஜோக்குகள் நினைவுக்கு வருகின்றன.
 
தேர்தலில் தோல்வியடைந்த ஒரு கட்சி பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. 
 ‘சித்திரம் பேசுதடி’என்கிற பாட்டைப் போட்டார்கள். இசைத்தட்டில் ‘பே’ க்கு அப்புறம் கீறல் விழுந்து விட்டதாம். அடுத்த மூன்று எழுத்துக்களை மட்டும் திரும்பத் திரும்பப் பாடிக் கொண்டிருந்ததாம். அவசரமாக தலைவர் டென்ஷன் ஆகிவிடப் போகிறாரே என்று ரிக்கார்டை மாற்றினார்களாம்.
 
பிரம்மச்சர்யத்தின் சிறப்பைப் பற்றி பேசுவதற்காக ஒரு கூட்டம். அதில் ‘அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்’ என்கிற பாட்டைப் போட்டார்கள். அந்த நிலாவத்தான் என்று ஆரம்பித்ததுமே கீறல். அடுத்த மூன்று வார்த்தைகள் மாறி மாறி ஒலிக்க இசைத்தட்டைப் போட்டவர் ஓடிப்போய் நிறுத்தினார். 
 
இசைத்தட்டுக் கடையில் ஒரு பிரபல பாடகியின் பெயரை எழுதி, ‘மாலைப் பொழுதினில், காலைத் தூக்கி, கண்டதுண்டோ’ என்று எழுதியிருந்தார்கள். பயந்து போய் விசாரித்தால் அவர் பாடிய அந்த மூன்று பாடல் இசைத்தட்டுக்களும் வந்திருப்பதாகச் சொன்னார்கள்.
 
உதைக்க வேண்டும் என்கிற உந்துதல் எழுந்தால் பல்லைக் கடித்துக் கொண்டு ஒரு தரம் புத்தம், சரணம், கச்சாமி என்று சொல்லிக் கொள்ளவும். உடம்புக்கு நல்லது.
 
கடைசியாக ஒரு கேள்வி, (பழசுதான்) ஹெச் எம் வி இன் லோகோவில் இருக்கும் நாய் ஆம்பிளையா பொம்பிளையா?

20 comments

 1. //“என்ன இழவு இது, ஆம்பிளையா பொம்பளையான்னே தெரியாம ஒரு குரல். யாரு பாடறா?” //
  ஹைய்யோ ஹைய்யோ….

  சிரிச்சுச்சிரிச்சு இப்போ வயித்து வலி.

  நடை அருமை.

  இனிய பாராட்டுகள்.

 2. ”கடைசியாக ஒரு கேள்வி, (பழசுதான்) ஹெச் எம் வி இன் லோகோவில் இருக்கும் நாய் ஆம்பிளையா பொம்பிளையா?”–
  ஒருவேளை ‘திருநங்கை”யாக இருக்கலாமோ?

 3. கத்தி கூப்பாடு போடாம, வாலை சுருட்டிண்டு சிவனேன்னு பவ்யமா உக்கார்ந்திருக்கறதைப் பார்த்தாலே தெரியலியா…நாய் ஆண் நாய்தான்னு ?

 4. //ஒரு கடை வாசலில் நூறு வருஷத்துக்கு முந்தைய கிராமபோன் ஒன்றை வைத்திருந்தார்கள். பித்தளைக் கூம்பை புளி போட்டு தேய்த்து பள பளவென்று வைத்திருந்தார்கள். ஒரு சின்ன உந்துதல் ஏற்பட்டு விலையை விசாரித்தேன்//

  1. ஜெய், அதையும் அவர்களிடமே வாங்க வேண்டியதுதான்! வீணை தனம்மாள், ராஜரத்தினம் பிள்ளை எல்லாம் இருந்தது அவர்களிடம்.

 5. //ஒரு கடை வாசலில் நூறு வருஷத்துக்கு முந்தைய கிராமபோன் ஒன்றை வைத்திருந்தார்கள். பித்தளைக் கூம்பை புளி போட்டு தேய்த்து பள பளவென்று வைத்திருந்தார்கள். ஒரு சின்ன உந்துதல் ஏற்பட்டு விலையை விசாரித்தேன்//

  இதுக்கு இப்போ இதுக்கு இசைத்தட்டு கிடைக்குதா

 6. ”சத்தம் சரணம் கச்சாமி” – நல்லா சத்தம் போட்டு வாய் விட்டு சிரிச்சோம்ன்னேன்…. 🙂

  //ஹெச் எம் வி இன் லோகோவில் இருக்கும் நாய் ஆம்பிளையா பொம்பிளையா?..//

  அந்த லோகோ படத்தை போட்டு இருந்தால் சரியா பார்த்து சொல்லியிருப்போம் சார்…. 🙂

 7. ///..என் சித்தப்பா சப்பாத்திக் கள்ளி முள்ளை வைத்து கிராம போனை ஓட்டி அந்தக் காலத்திலேயே value functional analysis செய்தவர்.///

  உங்க டச் தெரியுது. கலக்குங்க

 8. //அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்’ என்கிற பாட்டைப் போட்டார்கள். அந்த நிலாவத்தான் என்று ஆரம்பித்ததுமே கீறல். அடுத்த மூன்று வார்த்தைகள் மாறி மாறி ஒலிக்க….

  இசைத்தட்டுக் கடையில் ஒரு பிரபல பாடகியின் பெயரை எழுதி, ‘மாலைப் பொழுதினில், காலைத் தூக்கி, கண்டதுண்டோ’ என்று எழுதியிருந்தார்கள். பயந்து போய் விசாரித்தால்….///
  – கலக்கல் தலைவா!

  கடைசியாக ஒரு கேள்வி, கோபப்படக்கூடாது!
  உங்களுக்கு வயசு என்ன?

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s