டீ சாப்பிட மூவாயிரம் ரூபாய்

கதை எழுதத் தூண்டுகிற மாதிரி சந்தர்ப்பங்கள் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி நடக்கும். சம்பவம் கதையை விட சுவாரஸ்யமாக இருந்ததால் கதையை வேறொரு சந்தர்ப்பத்தில் வெளியிடுகிறேன்.

போன மாசம் என் மனைவி காலில் அடிபட்டு நடக்க முடியாமல் இருந்ததாகச் சொல்லியிருந்தேன். அப்போது இது மாதிரி ஒன்றிரண்டு சம்பவங்கள் நடந்தன.

ஒரு நாள் காலையில் வாசலில் கொசு மருந்து அடிக்கிறவன் வந்து டீக்கு காசு கேட்டான். ஐந்து ரூபாய் தந்தேன். பின் மண்டையை சொரிந்தான். இன்னொரு ஐந்து ரூபாய் தந்தேன். அப்போதும் சொரிவது நிற்கவில்லை.

“இதுக்கப்புறமும் சொரிஞ்சென்னா மண்டை ஓடு தெரிஞ்சிடும். குடுத்ததை வாங்கிகிட்டுப் போய்ச் சேரு”

“வழக்கமா அம்மா கொடுக்கிற அமவுண்ட்டு…” என்று இழுத்தான்.

“என்ன அமவுண்ட்டு… யாருங்க அங்கே?” என்றாள் மனைவி உள்ளேயிருந்து.

நான் வாயைத் திறக்குமுன் அவன் முந்திக் கொண்டு,

“ரமேஷ் மேடம்” என்றான்.

“ஓ… ரமேஷா… ஏங்க, டிவி மேலே ஒரு கவர் வெச்சிருக்கேன். அதை எடுத்து அவன் கிட்ட குடுங்க”

குழப்பத்தோடு அந்தக் கவரை எடுத்து அவனிடம் நீட்டினேன்.

அதைத் திறந்து எண்ணிப் பார்த்த அவனுக்கு மூச்சே நின்று விட்டது.

“ஐய்யா… வாழ்க்கை பூரா கொசு மருந்து அடிச்சாலும் இந்தக் கடன் தீராதுங்க” என்றான் நெகிழ்ந்து.

அதற்குள் நொண்டி நொண்டி என் மனைவியே வந்து விட்டாள்.

“நீயா… என்னங்க இது, கொசு மருந்து அடிக்கிறவனுக்கு மூவாயிரம் ரூபாயை எடுத்து குடுக்கறீங்க?”

“நீதானே தரச்சொன்னே?”

“கஷ்ட காலம். எங்க ஜி.எம். வீட்டு டெனன்ட் வாடகை கொடுத்திருந்தான். அதை கலெக்ட் பண்ணிக்க ரமேஷ்ன்னு ஒரு ஆளை அனுப்பறதா சொல்லியிருந்தார். அவந்தான்னு நினைச்சி சொல்லிட்டேன். நீங்களாவது இது வேறே ஆள்ன்னு சொல்ல மாட்டீங்களா?”

“அடக் கடவுளே!”

“என்னது?”

“கொஞ்சம் முன்னாலே ஒரு ஆள் வந்து ஜி.எம். ரெண்ட்டு அது இதுன்னான். உங்க ஜி.எம். வந்து ஐ.க்யூவில தங்கியிருக்கார்ந்னு சொல்லியிருந்தே. நீங்கள்ளாம் பத்து ரூபாதானே ரெண்ட் கட்டுவீங்க?”

“அதனாலே?”

“உங்க ஜி.எம். சில்லறை இல்லாமத்தான் கேக்கறார் போலிருக்குன்னு ஒரு பத்து ரூபாயைக் கொடுத்து இதை உங்க ஜி.எம். கிட்ட குடுத்துடுன்னு அனுப்பினேன்”

“அடக் கடவுளே..”

“என்ன ஆச்சு?”

“வீட்டுக்கு நாலு பல்பு வாங்கிப் போட்டேன். அதைக் கழிச்சிக்கிட்டு மீதிப் பணத்தைக் குடுங்கன்னு ஜி.எம். சொல்லியிருந்தாரு. ரெண்டாயிரத்தித் தொள்ளாயிரத்தி தொண்ணூறு ரூபாய்க்கு நாலு பல்பா! அது என்ன வீடா, இல்ல சர்க்கஸ் டெண்ட்டா?”

Advertisements

14 comments

 1. வாடகை 10 ரூபாய். கொசு முருந்து அடிக்கிறவனுக்கு 3000 ரூபாய். நீங்க ரொம்ப நல்லவர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு எல்லாரும் சொல்லியிருப்பாங்களே சார்…. 🙂

 2. உங்களின் உப்புமாவு சிக்குமாவும் கட்டுரையை நமது வெள்ளிநிலா மாத இதழில் பிரசுரிக்க விரும்புகிறேன், தாங்கள் அதனை வெள்ளிநிலாவின் ஜிமெயில் முகவரிக்கு அனுப்பித்தர முடியுமா? – நன்றி !

 3. //ரெண்டாயிரத்தித் தொள்ளாயிரத்தி தொண்ணூறு ரூபாய்க்கு நாலு பல்பா! அது என்ன வீடா, இல்ல சர்க்கஸ் டெண்ட்டா?//

  ha..ha…can’t control my laugh… keep rocking.

 4. சார். தமிழில் முன்னொரு காலத்தில், மிர் என்ற ருஷ்ய பதிப்பகம் அறிவியலை எளிய தமிழில் அழகான எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி புத்தகங்கள் வெளியிட்டனர். தற்போது அந்த பதிப்பகம் இல்லை என்று நினைக்கிறேன்.

  அதுபோல நீங்களும் மேலாண்மை பாடங்களை சுவைபட கூறும் வகையில் புத்தகம் எழுதினால் என்ன?

 5. சார் வேற யாருக்காவது பணம் குடுக்க உங்க வீட்டுகாரம்மா வச்சிருக்கும்போது கொஞ்சம் எனக்கு போன் பண்னுங்க (மினிமம் பத்தாயிரமாவது இருககனும்)
  இப்படிக்கு
  அடுத்தவர்கள் பணத்திற்கு அலைவோர் சங்கம்

  1. ஹா.. ஹா.. ஹா… ஹார்ட் லக் ஷாஜஹான், இனிமே அவங்க பழைய பேப்பர் போடறதா இருந்தா கூட என் கிட்ட சொல்ல மாட்டாங்கன்னு நினைக்கிறேன்!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s