ஆறாங்கிளாசில் பனிரெண்டு வருஷம்

படிப்பை முடித்து வேலைக்குப் போன என் மகனும் அவனது பள்ளிக்கூட ஆசிரியரும் ஓசூர் கடைத்தெருவில் சந்தித்தார்கள்.

“ஏய்… என்ன பண்ணிக்கிட்டு இருக்கே இப்போ?”

“எம்.டெக். முடிச்சிட்டேன் மிஸ். சி.டி.எஸ். ல இருக்கேன்.. நீங்க?”

“நான் இன்னம் ஆறாங்கிளாஸ்தான்”
***********************************************************************************************************************************************************************************
நானும் என் நண்பர்களும் படித்து முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தோம்.

“ச்சே.. எங்க போனாலும் எக்ஸ்பீரியன்ஸ் கேக்கறான். வேலை கிடைச்சாத்தானே எக்ஸ்பீரியன்ஸ். சிஸ்டமே மாறணும் ஓய். எக்ஸ்பீரியன்ஸ் இல்லாதவனுக்கு மார்க்கட் வால்யூ அதிகமா இருக்கிற மாதிரி ஆகணும்” என்று என் நண்பன் அலுத்துக் கொண்டான்.

“இப்பக் கூட அப்படி ஒரு சிஸ்டம் இருக்கு. எக்ஸ்பீரியன்ஸ் இல்லாதவங்களுக்கு சம்பளமும் ஜாஸ்தி.ஆனா அந்த வேலை உன்னால செய்ய முடியாது.” என்றேன்.

“என்ன வேலைடா அது?”

“ரொம்பப் புராதனமான வேலை….”

“எஸ்.கே. ஜாஸ்திடா உனக்கு”
*****************************************************************************************************************************************************************************************************
“ச்சே… வேலை வேலைன்னு போரடிச்சிப் போச்சு மாப்ளே. பேசாம ரிசைன் பண்ணிட்டு வீட்ல உட்காரலாம் போல இருக்கு” என்று நண்பன் ஒருத்தன் அலுத்துக் கொண்டான்.

“எனக்கு அப்படி எல்லாம் அலுப்பு வரல்லை” என்றான் இன்னொருத்தன்.

“எப்படிடா… அந்த மாதிரி அலுப்பு வராம எப்படி ஆக்டிவா இருக்கே?”

“ரொம்ப சிம்பிள். தினமும் காலைல இன்டர்நெட்ல ஒரு பேஜை பிரவுஸ் பண்ணி பார்ப்பேன். பார்த்ததும் வேலைக்குப் போய்டுவேன்”

“என்ன பேஜ் அது?”

“இந்தியாவின் டாப் பத்து பணக்காரங்க லிஸ்ட்”

“ஓ… அவங்களை மாதிரியே உழைச்சி பெரியாளா வரணும்ங்கிற இன்ஸ்பிரேஷனா?”

“நாட் எக்சாக்ட்லி…. அந்த லிஸ்ட்டுல என் பேர் இருக்கான்னு பார்ப்பேன். இல்லைன்னதும் ஆபீஸ் கிளம்பிடுவேன்”
********************************************************************************************************************************************************************************************************
புரமொஷனுக்கு போட்டா போட்டியாக இருக்கிறது என்று வேறே கம்பெனிக்கு வேலைக்கு விண்ணப்பித்திருந்தான் நண்பன் ஒருவன். இன்டர்வ்யூவில்,

“கடுமையான போட்டிக்கு நடுவில் வேலை செய்யப் பிடிக்குமா, போட்டியே இல்லாத வேலையில் ஜாலியாக இருக்கப் பிடிக்குமா?” என்று கேட்டிருக்கிறார்கள்.

“போட்டி இல்லாமல்” என்றிருக்கிறான் உற்சாகமாக.

“இந்தக் கம்பெனியில் இரண்டு வகை ஆசாமிகள் இருக்கிறார்கள். ஒன்று கடுமையாக உழைக்கிறவர்கள். இன்னொன்று அதை பார்த்து ஆச்சரியப் படுகிறவர்கள். முதல் வகையில் போட்டியே இல்லை. அதை நீ எடுத்துக் கொள்.” என்று பதில் வந்திருக்கிறது.
**********************************************************************************************************************************************************************************************************
ஆரம்ப காலத்தில் எங்களில் சிலருக்கு வேலை கிடைத்திருந்தது. சிலருக்குக் கிடைக்கவில்லை.

“ஒரு ஐநூறு ரூபா குடேன். சம்பளம் வர்ற வரைக்கும் மேனேஜ் பண்ணிக்கறேன்” என்றான் நண்பன் ஒருத்தன்.

“என்னைக்கு சம்பளம்?” என்றேன்.

“அது உனக்குத்தான் தெரியும், நான் சொன்னது உன் சம்பளத்தை” என்றான்.
********************************************************************************************************************************************************************************************************
எனக்கு இசையில் ஆரம்பத்திலிருந்தே ஆர்வம் அதிகம்.

ஆனால் வெறும் கேள்வி ஞானம்தான். யாரிடமும் முறையாகக் கற்றுக் கொண்டதில்லை.

“திறமையில்லாத ஆசிரியரும், ஒண்ணும் தெரியாத மாணவனும் சேர்ந்தால் ஏதாவது கற்றுக் கொள்ள முடியுமோ?” என்று ஒருநாள் என் நண்பன் கேட்டான்.

“கஷ்டம்தான்” என்றேன்.

“அதனாலதான் சொல்றேன், சுயமா கற்றுக்கிற முயற்சியை விட்டுட்டு யார் கிட்டயாவது சங்கீதம் கத்துக்க” என்றான்.
*********************************************************************************************************************************************************************************************************

Advertisements

15 comments

 1. Good one…

  //“இந்தக் கம்பெனியில் இரண்டு வகை ஆசாமிகள் இருக்கிறார்கள். ஒன்று கடுமையாக உழைக்கிறவர்கள். இன்னொன்று அதை பார்த்து ஆச்சரியப் படுகிறவர்கள். முதல் வகையில் போட்டியே இல்லை. அதை நீ எடுத்துக் கொள்.” என்று பதில் வந்திருக்கிறது.//

  Very Impressive!!!

 2. ‘சிரிக்காமல்உங்கள் பதிவைஆபீசில்
  படிப்பது எப்படி’ என்று ஒரு பதிவை
  இடுங்களேன், ப்ளீஸ்!

  அன்புடன்,
  எழிலரசி பழனிவேல்

 3. பாஸ்ஸ்ஸ்ஸ்..

  நல்லா இருக்கு… சிலது படிச்சதுன்னா கூட, திருப்பி படிக்கறப்போ, சிரிச்சேன்..

  வாழ்த்துக்கள்…

  நேரமிருப்பின் இங்கேயும் வருகை தாருங்கள்….

  http://www.jokkiri.blogspot.com

  http://www.edakumadaku.blogspot.com

 4. அமரர் சுஜாதா அவர்களின் எழுத்தில் நகைசுவையும் அறிவும் இருக்கும். உங்களிடம் ஒன்று நன்றாகவே இருக்கிறது. அது நகைசுவை. இன்னொன்று? அதை பற்றி மட்டும் நான் சொல்ல மாட்டேன். 🙂

  1. //அமரர் சுஜாதா அவர்களின் எழுத்தில் நகைசுவையும் அறிவும் இருக்கும். உங்களிடம் ஒன்று நன்றாகவே இருக்கிறது. அது நகைசுவை. இன்னொன்று? அதை பற்றி மட்டும் நான் சொல்ல மாட்டேன். … //

   பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் பெருமையை தாங்கள் சொல்வதற்கு பதில் மற்றவர்கள் சொல்லும்போது பெருமையும் சந்தோஷமும் அடைவார்கள். ஆசிரியர்களும் அப்படியே. நண்பர்கள் குறைந்தவர்களா! அவர்களும் தாங்கள் பாராட்ட மாட்டார்கள், மற்றவர்கள் பாராட்டும் போது ரசிப்பார்கள். நீங்கள் என் நண்பர், அப்படித்தானே இருப்பீர்கள்!! (நான் உங்கள் நண்பன்தானே?)

 5. ஆறாம் கிளாஸிலேயே இருக்கும் ஸாரும், கடுமையாக உழைக்கும்.போட்டி இல்லாத ஜாபும் மனதைக் கவர்ந்த நகைச்சுவைகள்.. எப்படிதான் தோன்றுகிறதோ .

 6. அய்யா, நகைச்சுவை எல்லாம் பிரமாதம்!
  ஆனா…..
  //‘சிரிக்காமல்உங்கள் பதிவைஆபீசில்
  படிப்பது எப்படி’ என்று ஒரு பதிவை
  இடுங்களேன், ப்ளீஸ்!//

  ரிப்பீட்டேய்ய்ய்……….. நன்றி.

  http://padmahari.wordpress.com

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s