கதவைத் திற காமிரா உள்ளே வரட்டும்

கதவைத் திறந்த போது காற்றோடு சேர்ந்து காமிராவும் வந்திருக்கிறது.

பிளாக்கர்களுக்கும், மீடியாவுக்கும் அடுத்த சில தினங்களுக்குக் கொண்டாட்டம்தான்.

இது போல யாராவது மாட்டிக் கொண்டால் ஜாதி மதம் இரண்டையும் சந்திக்கு இழுக்கிறவர்கள் இம்முறை மதத்தோடு நிறுத்திக் கொண்டு விட்டார்கள். இந்த ஞானத்தை அவர்களுக்கு அளித்தது எந்த போதி மரமாக இருந்தாலும் அந்த மரத்துக்கு நம் பாராட்டுக்கள்.

சம்பந்தப் பட்டவர் விளக்கை அணைக்க முயலும் போது அந்தப் பெண் தடுப்பதை விடியோவில் பார்க்க முடிவதாகவும், அந்தப் பெண்ணின் முகம் மாஸ்க் செய்யப் பட்டிருப்பதாகவும் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

ஒரு பெண்ணுக்கு இழி பெயர் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் விடியோ எடுத்தவர்களுக்கும் வெளியிட்டவர்களுக்கும் இருக்கும் பொறுப்புணர்ச்சி சிலிர்க்க வைக்கிறது.

வேண்டுமென்றே அந்தப் பெண்ணை அனுப்பி சம்பந்தப் பட்டவரை உசுப்பேற்றி விட்டதாகவும், விடியோ எடுக்கப் படப் போவது அந்தப் பெண்ணுக்குத் தெரியும் என்றும் விஷமிகள் சொல்கிறார்கள். நான் நம்பவில்லை. எதேச்சையாக அந்தப் பெண் அங்கே போய், எதேச்சையாக சில அன்பான வெளிப்பாடுகள் ஏற்பட்டு, எதேச்சையாக ஒரு காமிராக்காரர் ஜன்னல் வழியாக காமிராவை நீட்ட, அது எதேச்சையாகப் படமாகி விட்டது. அது எதேச்சையாக ஒளிபரப்பப் பட, எதேச்சையாகப் பார்த்தவர்கள் எதேச்சையாக ஏதேதோ பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.

ஆன்மிகம் இன்று மார்க்கட்டில் நன்றாக விலை போகிறது.
 
பதஞ்சலி முனிவரைப் படிக்காதவனெல்லாம் யோகாவை கூறு கட்டி பிராண்ட் போட்டு புலி மார்க் சீயக்காய்த் தூள் போல விற்கிறார்கள்.
வெளிநாட்டில் ஆன்மிகத்தை டாலருக்கு விற்கிறார்கள். உள்நாட்டில் நாத்திகன், ஆத்திகன், நடிகை, நடிகன், அரசியல்வாதி என்று எல்லாரையும் கூப்பிட்டு விளம்பரம் தேடுகிறார்கள். கேள்வி கேட்டால் நடிகைகளின் தாயார்கள் மாதிரி கெக்கே புக்கே தமிழில் புரியாமல் பதில் சொல்கிறார்கள்.
 
நம் ஜனங்களுக்கு ஒருத்தன் காவி கட்டிக் கொண்டு முகத்திலோ பிடரியிலோ முடி இருந்து விட்டால் போதும்.
 
முதலில் நாம் திருந்த வேண்டும்.
Advertisements

16 comments

 1. மக்களோ , சாமியாரோ திருந்த வேண்டியது அவசியமில்லை., ஒரு வேலை நான் சொல்வது சரியில்லை எனில், இந்த விசயத்தில் நாம் என்ன செய்தோம் (கற்றோம்) என்று பார்போம்.!

  கும்பகோணம் பள்ளிகூட தீ விபத்து.,

  ஸ்ரீரங்கம் திருமண மண்டபம் விபத்து.,

  சுனாமி போன்ற விபத்துகளில் நாம்.,

  மாணவிகள் பஸ்ஸில் எரித்த வழக்கு.,

  பிரேமானந்தா.,

  கோயம்புத்தூர் மத கலவரங்கள் \விநாயக ஊர்வல கலவரங்கள்.,

  காசு கொடுத்தால் உடனடி கற்பக தரிசனம்.,

  இன்னும் பல.,

  தயவு செய்து திருந்திவிடாதீர்கள் ., லஜ்ஜை இல்லாமல் வாழ்வது நமது பிறப்புரிமை !

  ( அண்ணன் ஈரோடு கதிர் வாழ்க! )

 2. // நம் ஜனங்களுக்கு ஒருத்தன் காவி கட்டிக் கொண்டு முகத்திலோ பிடரியிலோ முடி இருந்து விட்டால் போதும். //

  :(((((((((((((((((((

 3. //இது போல யாராவது மாட்டிக் கொண்டால் ஜாதி மதம் இரண்டையும் சந்திக்கு இழுக்கிறவர்கள் இம்முறை மதத்தோடு நிறுத்திக் கொண்டு விட்டார்கள். இந்த ஞானத்தை அவர்களுக்கு அளித்தது எந்த போதி மரமாக இருந்தாலும் அந்த மரத்துக்கு நம் பாராட்டுக்கள்//

  நி்்ய ஒரு பிரம்ணர் இல்லை என்று நினைக்கிறேன்

 4. //இது போல யாராவது மாட்டிக் கொண்டால் ஜாதி மதம் இரண்டையும் சந்திக்கு இழுக்கிறவர்கள் இம்முறை மதத்தோடு நிறுத்திக் கொண்டு விட்டார்கள்//

  ஒருவர் பதிவு போட்டு நித்திஸ் என்ன ஜாதி என்று சொல்லியிருக்கிறார். தமிழ்மணத்தில் இருக்கிறது.

 5. //ஆன்மிகம் இன்று மார்க்கட்டில் நன்றாக விலை போகிறது.//

  நித்திஸ் லீலாவுக்குப்பின்னர்தான் தெரிகிறதாக்கும்.

  ஆன்மிகம் என்றுமே விலை போகும். செக்ஸ் மாதிரி. மனிதன் தோன்றியதிலிருந்து அவன் இப்பூவுலகிலிருந்து மறையும் வரை இந்தவிரண்டும் இருக்கும்.

 6. ஜவஹர்

  ஜாதியைத் தோண்டுகிறவர்களை விடுங்கள். நீங்கள் எப்படி?

  ‘கறுப்புச்சட்டை’ என்றுதானே எழுதுகிறீர்கள்.

  சுட்டிக்காட்டிய என் பின்னூட்டத்தை தடை செய்து விட்டீர்களே!

  Every action has an equal reaction.

  1. ஜோ, எப்படி காவல்துறையினர் தங்களை காக்கிச் சட்டை என்று பெருமையோடு அழைத்துக் கொள்கிறார்களோ அது போல கறுப்புச் சட்டை என்று சொல்வதிலும் ஒரு பெருமை இல்லையா?

 7. //நம் ஜனங்களுக்கு ஒருத்தன் காவி கட்டிக் கொண்டு முகத்திலோ பிடரியிலோ முடி இருந்து விட்டால் போதும்.

  முதலில் நாம் திருந்த வேண்டும்…..//

  வெறும் உணர்ச்சிகளின் வெளிப்பாடாகவே பதிவு போட்டால் தவறில்லை. ஆனால் அதில் என்ன இண்ட்ரஸ்ட் இருக்கிறது?

  நித்திஸ் லீலா பல எண்ணங்களைப் பலரிடம் எழுப்ப் அவர்கள் பதிவுகள் எழுதுகிறார்கள். ஆனால் நீங்கள் ஜாதியில் உட்கார்ந்து விட்டீர்கள். இல்லையா?

  ஏன் மக்கள் இப்படி இருக்கிறார்கள் என ஆராய்ந்து எங்களுக்குச் சொல்லுங்கள். நீங்கள் ஒரு நல்ல சிந்தனையாளர் என எனக்குத்தெரியும்.

  ஏன் நீங்கள் சொல்லக்கூடாது.

  இப்போது பாருங்கள் நித்திஸ் லீலா எந்தவிதத்திலும் சாமியார்கள் மேலுள்ள் கவர்ச்சியைக் குறைக்காது என்கிறேன்.

  புதுபுது சாமியார்கள் வருவார்கள். புதுபுது ஆசிரமங்கள் திறப்பார்கள். மக்கள் கூட்டம் அலைமோதும். பணம் புரள் சாமியார்கள் சுகபோக வாழ்ககை வாழ்வார்கள்.

  இதை மறுக்கிறீர்களா? ஆம் என்றால் ஏன்? இல்லையென்றால் ஏன்?

  ஜாதிக்குள்ளே அடைபட்டு, என் ஜாதியைப்பற்றி எவனும் எழுதிவிடுவானோ என்ற கவலையை விடுங்கள்.

  கூட்டுக்கு வெளியே வாருங்கள்

  1. ஜோ, நீங்கள் கொடுத்திருப்பது நல்ல டாஸ்க். முயற்சிக்கிறேன். ஜாதியைத் தொடர்புப் படுத்தி எடை போடுகிறவர்களைக் கண்டு நான் பரிதாபப் படுவேனே ஒழிய கவலை கொள்ள மாட்டேன். ஏனென்றால், எழுத்து சிந்தையிலிருந்து வருவது, ஜாதியிலிருந்து அல்ல!

 8. {ஏனென்றால், எழுத்து சிந்தையிலிருந்து வருவது, ஜாதியிலிருந்து அல்ல!}
  ஜவஹர்,ஆனால் சிந்தனையின் கூறு சாதியக் காரணங்களால் உருவாக வாய்ப்பிருக்கிறது !
  :))

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s