தமிழ்ப் படம் – சில புல்லட் பாய்ண்ட்ஸ்

ஆறரை மணிக்கு ஆரம்பித்த படத்தை ஏழரையில் இருந்துதான் பார்க்க முடிந்தது. அதனால் கதை ஒன்றும் புரியாமல் போகவில்லை. கதை என்றெல்லாம் ஒன்றை வைத்து அந்த சிரமத்தை இயக்குனர் தரவில்லை.

ஏறக்குறைய ஒரு டசன் படங்களிலிருந்து டைரக்டர்கள் தங்கள் pride என்று நினைக்கிற காட்சிகளை லொள்ளு சபா செய்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்களும் புன்னகையோடு பார்க்கிற மாதிரி உறுத்தாத ரகம் எல்லாமே.

லொள்ளு என்பதற்காக காட்சிகளை அலட்சியமாக எடுக்கவில்லை. லோக்கேஷன்களும், போட்டோகிராபியும் அசத்துகின்றன.

ஹரிஹரன் மற்றும் அனுராதா ஸ்ரீராம்(?) பாடியிருக்கும் முழுப் பேத்தல் டூயட் படம் முடியும் போதும் ரிப்பீட் ஆகிறது. அந்தப் பாட்டு சூப்பர் ஹிட் ஆகிவிட்டதாமே? சும்மா சொல்லக் கூடாது, அந்த கஜிலி பிஜிளியையும் சிரத்தையோடு, பிருகாவெல்லாம் போட்டுப் பாடியிருக்கிறார் ஹரி.

பறவை முனியம்மாவுக்கு கோல்டன் குளோப் அவார்ட் தருவதும் அவர் “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று அதை சிலிர்ப்போடு ஏற்பதும் குசும்பின் உச்சம்.

ஹீரோவின் யூத் நண்பர்கள் வெ.ஆ.மூர்த்தி, மனோபாலா மற்றும் ஹேமா பாஸ்கரின் உரையாடல் குசும்புக்கு இன்னொரு எடுத்துக் காட்டு.

“மச்சி, நேத்தும் அடல்ட்ஸ் ஒன்லி படத்துல அண்டர் ஏஜ் ன்னு உள்ள விடல்லடா”

ஹீரோவின் பாட்டி, பாழடைந்த வீட்டின் வாசலில் சாணி தெளித்துக் கொண்டு “ஏன் பொண்ணு வீட்ல கல்யாணத்துக்கு ஒத்துக்கலை?” என்று கேட்டதும்,

“அவங்க ரொம்ப பணக்காரங்க பாட்டி. நம்மளை மாதிரி சோத்துக்கு இல்லாதவங்களை….” என்று சொன்னபடி கதவைத் திறக்க வைட் ஆங்கிளில் அசீம் பிரேம்ஜியின் வீடு மாதிரி இருக்கிற உட்புறம் தெரிகிறது.

இது மாதிரி நிறைய சொல்லலாம்.

கஸ்தூரியின் டிரஸ்ஸும், அவர் ஆட்டம் போட்டிருக்கிற விதமும் ramaining on the screen என்பது ஒருத்தரை எத்தனை தூரம் காம்ப்ரமைஸ் செய்ய வைக்கிறது! என்று வியக்க வைக்கிறது.

ஒரு முழுப்படம் இந்த மாதிரி எடுக்கிற துணிச்சல் டைரக்டருக்கு இருக்கலாம். அதை நன்றாக ஓட விட்டு ஆதரிக்கிற பரந்த மனம் தமிழ் ரசிகர்களுக்கும் இருக்கலாம்.

எனக்குக் கொஞ்சம் அலுப்புத் தட்டிற்று.

உங்களுக்கு?

Advertisements

11 comments

 1. பிற்பாதியில் கொஞ்சம் அலுப்பாக இருந்தது உண்மையே..
  ஆனால் அந்த குடும்பப் பாட்டு சீனில் இருந்து மீண்டும் சிரிக்கத் துவங்குகிறோம்..
  மொத்தத்தில் வெகு நாட்களுக்கு அப்புறம் நல்ல நகைச்சுவை திரைப்படம்..

 2. ‘தமிழ் படம் ‘ தனியாக பார்த்தால் கொஞ்சம் அலுப்பு தட்டத்தான் செய்யும். நண்பர்களோடு சேர்ந்து பார்த்தால் கண்டிப்பாக ரசிக்கலாம் !!!

 3. இரண்டாம் பாதிதான் கொஞ்சம் போர் அடிச்சது. ஆனா இடைவேளை வரையிலான படத்திற்கு நிச்சயம் நான் ரசிகன் தான் :)))

  (ஊருக்குப் போயிருந்தேன் சார். நீங்க மாயுரம் வரை வந்திருக்கீங்க. காண முடியாம போச்சு! 😦 )

 4. //கஸ்தூரியின் டிரஸ்ஸும், அவர் ஆட்டம் போட்டிருக்கிற விதமும் ramaining on the screen என்பது ஒருத்தரை எத்தனை தூரம் காம்ப்ரமைஸ் செய்ய வைக்கிறது//
  Correct-a note panni solli irukeenga…

  Padam ella class audience-kkum pidikara madhiri nalla eduthu irukkanga.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s