சாமியார்மேனியா – அரசுக்கு ஆலோசனைகள்

தமிழ்நாடு சாமியார் வாரியம் என்று ஒன்றை உண்டாக்க வேண்டும். சாமியார்களையும் ரெகுலேட் செய்த மாதிரி இருக்கும், கட்சிக்காரர்களுக்கு வாரியத் தலைவர் பதவி கொடுத்த மாதிரியும் இருக்கும்.

சிறு தொழிலுக்கு விண்ணப்பிக்கிற மாதிரி சாமியார் ஆக விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஹார்மோன் ஊசி போட்டு testosterone சுரப்பிகள் சுத்த சவரம் செய்யப்படும்.

கோவணம் மட்டுமே உடுத்த அனுமதிக்கப்படும். இதன் காரணமாக பெண்கள் ஆசிரமம் பக்கம் வருவது தவிர்க்கப்படும்.

சாமியார் லைசன்ஸ் வழங்கும் போது RSP சீரிஸில் (Registered Samiyar Practitioner) ஒரு நம்பர் தரப்படும். அதை ஆசிரம வாயிலில் கொட்டை எழுத்தில் எழுத வேண்டும். கோவணத்திலும் அச்சிட்டுருக்க வேண்டும்.

யாசித்துதான் சாப்பிட வேண்டும். வெங்காயம், முருங்கைக்காய் வாசனை வருகிற தெருக்களில் சாமியார் காணப்பட்டால் லைசன்ஸ் ரத்து செய்யப்படும்.

ஆன்மிகம் தவிர்த்து வேறு எதைப்பற்றி ஒரு வார்த்தை பேசினாலும் லைசன்ஸ் ரத்து.

சொற்பொழிவுகளுக்கு ஏதாவது சன்மானம் தர விரும்புபவர்கள் அரசிடம் செலுத்த வேண்டும். அது சாமியார்கள் நிர்வாண-சாரி நிவாரண நிதியில் சேர்க்கப்படும்.

ஒரே ஒரு குடிலும் அதில் ஒரு ஸ்டீல் கம்பிக் கொடியும் மட்டுமே அனுமதிக்கப்படும். கட்டிக்கொள்ள ஒன்று காயப்போட ஒன்று என்று இரண்டு கோவணங்கள் வழங்கப்படும். மூன்றாவது கோவணம் வாங்க வேண்டும் என்றால் முதல் இரண்டில் ஒன்று கிழிந்து விட்டது என்று நிரூபித்தாக வேண்டும்.

குடில் என்று சொன்னோமே, அது நாற்புறமும் கண்ணாடியால் ஆனது. வெஸ்டன் டாய்லேட் தரப்பட்டு, அதிலும் இடுப்புக்கு மேல் கண்ணாடி இருக்கும்.

நிஜமான தீர்வுகள் ஞாயிற்றுக் கிழமை…

Advertisements

28 comments

 1. //முதல் இரண்டில் ஒன்று கிழிந்து விட்டது என்று நிரூபித்தாக வேண்டும்.// முடிந்தால் அரசிடம் ஒப்படைக்கவேண்டும்!

  வேறு ஊர்களுக்கு சென்று ஆசிரமம் அமைக்க மியூச்சுவல் டிரான்ஸ்பர் சிஸ்டத்தின்படி நடக்கவேண்டும் !

  ரொம்ப முக்கியமாக இலவச டிவி கூட இருக்கப்பிடாது ! பய மக்க தேவாரம் திருவாசகம் படிக்கவேண்டிய ஸ்டேஜ்ல டிவி என்னா வேண்டிக்கெடக்கு! 🙂

 2. விண்ணப்ப பாரங்களுக்கு கட்டணம் உண்டா என்று கேட்கிரவங்களுக்கு என்ன பதில். கேட்டுச் சொல்கிறேன் என்று சொல்லி விட்டேன்.

 3. //கோவணம் மட்டுமே உடுத்த அனுமதிக்கப்படும். இதன் காரணமாக பெண்கள் ஆசிரமம் பக்கம் வருவது தவிர்க்கப்படும்.
  //

  பெண் சாமியார்களுக்குமா? தெளிவா சொல்லுங்க. உங்க மேல கேஸ் போடனும்

  1. ஜெய், பெண் சாமியார்கள் கேஸ் நேர் ஆப்போசிட். கண்ணு ரெண்டு மட்டும்தான் தெரியலாம். மீதி எல்லாம் மூடி இருந்தாகணும்.

 4. அடுத்த சாமியார்களின் தலைவர் ஜவர்லாலானந்தா வாழ்க! ஆசி வழங்குக! இப்போது மஞ்சள் துண்டு வாங்கப்படும்… அடுத்த வருடம் பச்சை துண்டு வரும் வாய்ப்பு உள்ளது!

  1. ஐயய்யோ, விஜய்…. உங்களுக்கு என் மேல் கோபம் இருந்தால் ஒரு நாற்பத்திரண்டு கிலோ மீட்டர் பயணம் செய்து வந்து என்னை செவிட்டில் அறைந்திருக்கலாமே! அதுக்காக இப்படியா!!

 5. Jawahar !
  நான் இதை வாசிக்கும் போது பாரிசில்
  அதிகாலை 1.40, தனியே குலுங்கிக் குலுங்கிச் சிரித்தேன். இதைச் சொல்லிச் சிரிக்க எல்லோரும் நித்திரை

  3 வது கோவணத்துக்கு, முதல் கோவணம் கிழிந்ததென அத்தாட்சி காட்ட வேண்டுமென்பது அட்டகாசம்.

 6. //அதை ஆசிரம வாயிலில் கொட்டை எழுத்தில் எழுத வேண்டும். கோவணத்திலும் அச்சிட்டுருக்க வேண்டும்.//

  கொட்டை, கோவணம் எதுகை மோனை பிளிருகிறதே..,

  1. டாக்டர், இந்த சீக்குக்கு அக்யூட் திராவிடோ தமிழோ மேனியா என்று பெயர். படிக்கிறப்போ சாய்ஸ்ல விட்டுட்டீங்களா!

 7. ஹார்மோன் ஊசி போட்டு testosterone சுரப்பிகளை சவரம் செய்வதற்கு பதிலாக, பழைய காலங்களில் மேலை நாடுகளில் பயன் படுத்திய ‘ chastity belt’ எனும் ஒரு இரும்பு கவசத்தை அணிவிக்கலாம். அதை பூட்டி சாவியை சாமியார் வாரியம் பாதுகாப்பில் வைக்கலாம். வாரம் ஒருமுறை பூட்டை திறந்து toilet கழுகும் மனிதனை வைத்து அதையும் கழுகி விடலாம். ஹ… ஹா… ஹா…

 8. Romba pramadam. “Idellam appadiye varradudan illa.” Orina serkai samiyara irunda enna pannalam. Asrama vasalla “Oh avana nee”nu ezuda sollalam.

  Nalla nagai chuvayagavum soodana talaipilum ezudinaduku ungalukku “Alert Arumugam”nu pattam kudukalam.

  Thondu thodara vazthukkal

  RS

 9. ஜவஹர்,

  நீங்கள் இது விஷயத்தில்
  ஏற்கெனவே
  பரீட்சிக்கப்பட்ட
  குறைந்த பட்ச வசதிகளையாவது
  அனுமதிப்பது தான் நியாயம் .

  அதாவது,
  கோவணத்தை எலி கடித்து விடும்
  என்பதால், எலியைப் பிடிக்க
  ஒரு பூனையையும்,
  பூனைக்கு பால் கொடுக்க
  தேவைப்படும் என்பதால்,
  ஒரு பசுவையும்,
  பசுவை பார்த்துக்கொள்ள
  ஒரு பெண்ணையும் மட்டுமாவது

  சாமியாருடன் தங்க
  அனுமதிக்க வேண்டும் !

  (உங்களின் அற்புதமான
  நகைச்சுவை உணர்வுக்கு
  என் பாராட்டுகள் ! )

  யாத்ரிகன் –
  http://www.yatrigan.wordpress.com

  1. வாங்க யாத்ரிகன், ரொம்ப நாளாச்சு…! ஒருக்கால் எல்லா சாமியார்களும் அப்பீல் பண்ணா நீங்க ரெக்கம்மண்ட் பண்ண ஃபெசிலிட்டிஸ் எல்லாம் கன்சிடர் பண்ணலாம்!

  2. கூடவே ஒரு விண்ணப்பம், அந்தப் பெண் உடல் நிலை கோளாறு இன்ன பிற காரணங்களுக்கு ஆசிரமப்பணி செய்ய இயலாமை நேரும்போது ஒரு ப்ரிவெண்டிவ் காரணியாக அவருடைய தங்கையையோ தங்கையொத்த தோழியையோ சாமியாருக்கு உதவியாளராக அனுமதிக்கணும்!! அப்போதான் ஆ’சிரமப்’ பணிகளில் சிரமம் தொய்வு இல்லாமல் இருக்கும்!!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s