சொக்கனும் கலீல் கிப்ரானும்

நண்பரின் மகளுக்குப் பிறந்த நாள்.

என்ன பரிசாகத் தருவது என்று யோசித்துக் கொண்டிருந்த போது அந்தப் புத்தகம் கண்ணில் பட்டது.

“அடேடே… நம்ம சொக்கன் எழுதினதாச்சே?” (http://nchokkan.wordpress.com/) என்று எடுத்துப் புரட்டினேன்.

அடுத்த சில நிமிஷங்களுக்கு எல்லாவற்றையும் மறந்து போனேன்.

கலீல் கிப்ரான் எனக்கு இதுநாள் வரை jargon ஆகத்தான் இருந்தது. (நம்பி சார் மன்னிக்கவும். jargon என்றால் குழுக் குறியா?). அவரது பல புத்தகங்களிலிருந்து, பல கதைகளைப் படித்து அவற்றில் மிகச் சிறந்தவைகளை எளிமையாக, சுவாரஸ்யமாக தமிழில் எழுதியிருக்கிறார் சொக்கன்.

சொக்கன் பற்றி சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதற்கு வேறொரு சந்தர்ப்பம் விரைவில் வருகிறது. இப்போது அவரது ‘மிட்டாய்க் கதைகள்’ நூலிலிருந்து ஒரே ஒரு மிட்டாய் உங்களுக்காக. சொக்கன் காபி ரைட் வழக்கு எதுவும் போட்டு விட மாட்டார் என்று நம்புகிறேன். (கிடைத்த ஒரே காபியை பரிசு கொடுத்து விட்டதால் ஞாபகத்திலிருந்து எழுதுகிறேன். தவறுகள் இருந்தால் சொக்கன் மன்னிக்கட்டும்)

தலைப்பு : அவரவர் மழை

அந்தப் பூனை நாயிடம் சொல்லிக் கொண்டிருந்தது.

“நம்பிக்கையைக் கைவிடாமல் கடவுளைத் தொடர்ந்து வழிபடு. நிச்சயம் அவர் உனக்கு ஒருநாள் அருளுவார். அவரது கருணைப் பார்வை உன் மேல் பட்டுவிட்டால் வானத்திலிருந்து எலிகளாகப் பொழியும். நீ வேண்டிய அளவு சாப்பிட்டு மகிழலாம்”

இதைக்கேட்ட நாய் புரண்டு புரண்டு சிரித்தது.

“அட முட்டாளே, எனக்கு ஒன்றுமே தெரியாது என்று முடிவு கட்டி விட்டாயா? என் வீட்டிலும் பெரியவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் முன்னோர்களும் எங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள். மனமுருகிப் பிரார்த்தனை செய்தால், எலி மழை பெய்யாது. எலும்பு மழைதான் பெய்யும். எடுத்து ஆசை தீரக் கடித்து மகிழலாம்.”

கடவுளை சுத்த சைவராக மதித்து சர்க்கரைப் பொங்கல், புளியோதரை நைவேத்யம் செய்கிறவர்களும் இருக்கிறார்கள், சாராயம் சுருட்டு படைக்கிறவர்களும் இருக்கிறார்கள். கடவுளை அவரவர் எப்படி perceive செய்கிறார்கள் என்பதை இதை விட சுவாரஸ்யமாக சுருக்கமாக எழுத முடியாது.

இது ஒரு சாம்பிள்தான்.

பாராட்டுக்கள் சொக்கன்ஜி. உங்கள் பணி தொடரட்டும். இன்னும் நிறைய நூல்கள் வரட்டும்.

 

Advertisements

12 comments

 1. //வானத்திலிருந்து எலிகளாகப் பொழியும். நீ வேண்டிய அளவு சாப்பிட்டு மகிழலாம்”//

  //மனமுருகிப் பிரார்த்தனை செய்தால், எலி மழை பெய்யாது. எலும்பு மழைதான் பெய்யும். எடுத்து ஆசை தீரக் கடித்து மகிழலாம்.”//

  பூனையின் ஆசை பூனைக்கு, நாயின் ஆசை நாயிக்கு..,

  ஏதோ உள்குத்தோடு இந்த பதிவினைப் போட்டது போல இருக்கிறதே தல.,

  1. டாக்டர், என்னை வம்பில் மாட்டாமல் விடுவதில்லை என்று குல தெய்வத்தின் கோயிலில் சத்தியம் செய்திருக்கிறீர்களா?

 2. //கலீல் கிப்ரான் எனக்கு இதுநாள் வரை jargon ஆகத்தான் இருந்தது. (நம்பி சார் மன்னிக்கவும். jargon என்றால் குழுக் குறியா?).//

  குழூஉக்குறி: பிறர் அறியாதபடி ஒரு கூட்டத்தாருக்குள் வழங்கிவரும் குறிப்புச்சொல். (எடுத்துக்காட்டு: வெள்ளைக்குதிரை – கள்). இவ்வாறு பயன்படும்போது அதனைக் (jargon) குழூஉக்குறி எனலாம்.

  ஆனால் `கலீல் கிப்ரான் எனக்கு இதுநாள் வரை jargon ஆகத்தான் இருந்தது’ என்னும் வாக்கியத்தில் அச்சொல் குழூஉக்குறியாகத் தோன்றவில்லை.

  `பிதற்றொலி, விளங்காத தொடர்கள் நிரம்பிய மொழிநடை, விளங்காத மொழி (confused unintelligible language, a strange, outlandish or barbarous language or dialect) என அகரமுதலிகள் சொல்லும் பொருளில் அச்சொல்லை எடுத்துக்கொள்ளலாமே ஐயா.

  1. நம்பி சார், நீங்கள் இரண்டாவது சொல்லியிருக்கும் விளக்கம் மிகப் பொருத்தம். நன்றி. இந்தத் தகவல் எல்லோருக்கும் பயன் படும்.

 3. புத்தக அறிமுகத்துக்கு நன்றி ஜவர்லால்!

  ஒரு தகவல். இந்தப் புத்தகம் இப்போது அச்சில் இல்லை. எங்கேயாவது பழைய காப்பி கிடைத்தால்தான் உண்டு.

  இந்தத் தொகுப்பைச் சேர்ந்த வேறு சில கதைகளை இங்கே படிக்கலாம்:

  http://groups.google.co.nz/group/panbudan/browse_thread/thread/f28c6e2f3b5df130/edf702f36508eef4?#

  இவைபற்றி நான் எப்போதோ எழுதிய பதிவு ஒன்று:

  http://www.tamiloviam.com/unicode/pettagampage.asp?fname=10130503&pfname=Pet-Thiraivimarsanam

  – என். சொக்கன்,
  பெங்களூரு.

 4. அவரவர் எப்படி perceive செய்கிறார்கள் என்பது இருக்கட்டும். சாராயம் சுருட்டு படைக்கிற சாமிக்கு சர்க்கரைப் பொங்கல் படைச்சா அத சாமி எப்படி perceive செய்வார்னு சுவாரஸ்யமா விளக்கமா இங்க ஒருத்தர் எழுதியிருக்காரு பாருங்க..

 5. தங்கை அநன்யா வின் ”வலையுலக சுஜாதா” என்ற வரியை பார்த்தவுடன் .. தலை தெறிக்க ஓடிவந்தேன் …எல்லா பதிவும் படிக்கவேண்டும் .. மிட்டாய் பதிவு .. அருமை … எலி , எலும்புத்துண்டு இப்படி சாமி விஷயத்துல உள்நோக்கம் மாறிகிட்டே இருப்பதை அழகாக காட்டி உள்ளீர்கள் .. வேண்டுதல் .. வேண்டாமை .. நிலை தாண்ட ரொம்ப பயணிக்கவேண்டும் .

  1. நன்றி பத்மநாபன், மிட்டாய் பதிவின் சிறப்புக்கு பாராட்டியிருக்கீங்க. அந்தப் பாராட்டெல்லாம் நண்பர், எழுத்தாளர் சொக்கனைச் சேரும். (nchokkan.wordpress.com). நம்ம பதிவை எல்லாம் பொறுமையா படிச்சிட்டு சொல்லுங்க. வருகைக்கு நன்றி, மீண்டும் மீண்டும் வருக.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s