இளங்கோவின் உள்ட்டாதான் கோவலன்

தன்னுடைய கதாநாயகனுக்கு கோவலன் என்று இளங்கோ அடிகள் பெயர் சூட்டியதில் ஒரு உள்ளர்த்தம் இருக்கிறதோ என்று தோன்றுகிறது.

இளங் – கோ என்றால் இளவரசன். அவரோ துறவியானவர். அரசனாவதற்கு பதில் ஆண்டியானவர். அதாவது தலைகீழ்.

இளங் – கோ, கோ – இலன் ஆனார். (ங் ஈற்றெழுத்தாக வராது என்பதால் அதே ஓசை தரும் ன்)

கோ – இலன் என்றால் அரசனில்லை என்கிற பொருளும் வருகிறது. பெயரின் எழுத்துக்களைத் தலைகீழாக்கினால் பொருளும் தலை கீழாகிறது!

அலன், இலன் இரண்டுமே ஒரே பொருள் தரும் விகுதிகள்தான். ஆகவே கோ – அலன் என்றும் சொல்லலாம். கோ வும் அலனும் இணையும் போது கோவலன் ஆகிறது.
*********************************************************************************************************************************************************************************************************
கண்ணகி என்றால் என்ன அர்த்தம்?

கண் + நஹி கண்ணில்லை என்று அர்த்தமா?

நகை என்றால் சிரிப்பு. கண் நகி என்றால் கண்ணால் சிரிக்கிறவள் என்று அர்த்தம்.
*********************************************************************************************************************************************************************************************************
காலையில் சந்தித்த நண்பர்,

“சிலப்பதிகாரத்துக்கு உரை போட்டிருக்கிறேன், பாருங்கள்” என்று புத்தகத்தை நீட்டினார்.

அடேடே, இப்படிப்பட்ட தமிழ்ப் பண்டிதர் அருகிலேயே இருப்பது தெரியாமல் போய் விட்டதே என்று பிரித்துப் படித்தேன். வெறும் செய்யுள்தான் இருந்தது. உரை இல்லை.

“உரை இல்லையே?” என்றதற்கு,

“புத்தகத்துக்கு காக்கி கலரில் உறை போட்டிருக்கிறேனே, அதைச் சொன்னேன்” என்றார்.

நல்ல வேளையாக கி.வா.ஜ. உயிரோடு இல்லை!
******************************************************************************************************************************************************************************************************

மணிமேகலை என்கிற பெயரில் ஒரு பெரிய தத்துவம் இருக்கிறது.

 
Money-May-கலை, அதாவது செல்வம் நம்மை விட்டுக் கலைந்து போகலாம்.
 
இதைப் பார்த்து விட்டு சீத்தலை சாத்தனாரின் ஆவி என்னை தலையில் சாத்தியது என்றால் பார்க்கிறவர்கள்,
 
see, தலை சாத்தினார் என்பார்கள்.
********************************************************************************************************************************************************************************************************

24 comments

  1. // see, தலை சாத்தினார் // என்றால் உங்கள் பாக்கெட் சாராயத்தை (அதாங்க உரை) வெறுமே பார்த்ததுக்கே “ஸ்ப்பா கண்ண கட்டுதே” என்று சீத்தலை சாத்தனார் தலையை (பக்கத்தில் உள்ள) சுவற்றில் சாத்தினார் அல்லது தரையில் கிடத்தினார் என்று வருகிறது…

    ஆனால் சீத்தலை சாத்தனாரின் தொண்டர்கள் “see, தலை (ஜவர்லாலை) சாத்தினார்” என்றால் பொருத்தமாக இருக்கிறது. இதிலிருந்து அறியப்படும் நீதி என்னவென்றால் (அப்பாடா நீதி சொல்லி எவ்வளவு நாளாச்சி) –

    சீத்தலை சாத்தனார்தான் தமிழ்நாட்டின் முதல் தலை என்பதால், அஜீத் இன்று முதல் தறுதலை ச்சை குறுந்தலை என்று அழைக்கப்படுவார்.

      1. // ஞானமடா ராமா // நல்லா தெளிவா “டா” போடுங்க.. யாராவது ஒற்றுப்பிழைன்னு ”டா” வ ”ட” வாக்கி சந்திப்பிழைன்னு ராமாவுக்கு முன்னாடி இருக்கிற சந்த (gap analysis) நீக்கிட போறாங்க.

  2. ஆசிரியர்: திருமுருகாற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை…. இவைகளிலிருந்து என்ன தெரிகிறது..?

    மாணவன்: அந்தக் காலத்திலேயே படை நோய்க்கு ஏகப்பட்ட மருத்துவ நூல்கள் எழுதப்பட்டுள்ளன என்று தெரிகிறது….

  3. உலக செம்மொழி மாநாட்டிற்க்கு இன்னும் உங்களுக்கு அழைப்பு வந்திருக்கிறதா?.. வரவில்லையென்றால் சொல்லுங்கள்.. எப்பாடுபட்டாவது கலைஞரின் கைகால்களில் விழுந்தாவது உங்களுக்கு ஒரு சீட் வாங்கித்தந்துவிடுகிறேன்…
    (வர வர..நம்மள படுத்தறதுக்கு ஒரு அளவில்லாமப்போச்சு..)

  4. //“உரை இல்லையே?” என்றதற்கு,

    “புத்தகத்துக்கு காக்கி கலரில் உறை போட்டிருக்கிறேனே, அதைச் சொன்னேன்” என்றார்.//

    நம்மளை விட பெரிய மொக்கையா இருப்பாரு போலருக்கே :)))

  5. //இளங்கோவின் உள்ட்டாதான் கோவலன்//

    உல்ட்டா வை – உள்ட்டான்னு எழுதினதுக்குள்ள ஏதும் உள்ளர்த்தம் இருக்குதா.. இல்லை உள்ளர்த்தத்தைத்தான் சுருக்கி உள்ட்டாவாக்கியாச்சா?

  6. அனைத்து பதிவுகளையும் ஹோட்டல் மெனு மாதிரி பார்த்துக்கொண்டிருக்கும்போதே …. சூடா பக்கோடா வந்த மாதிரி இன்றைய
    பதிவு . நின்னு அடிக்கிற மாதிரி நகைச்சுவைகள் …. ஒண்ணுலேயே ரெண்டு முணு ஜோக்ஸ் …. உங்க பாணி எல்லாத்தையும் படிக்க வைக்குது.. ( மற்றொரு ஒற்றுமை ..உங்க புகைப்படம் போன்றே . சன்ன கற்றை முடி நெற்றியில் இருக்கும் வாத்தியார் சுஜாதா வண்ணப்படம் வைத்து ஒரு சின்ன பதிவு போட்டுள்ளேன் …முடிந்தால் வந்து ஒரு கால் புள்ளியோ , அல்லது அரை புள்ளியோ வைத்தீர்கள் என்றால் , கத்துக்குட்டி கொஞ்சம் ஜிவ்வும் …நன்றி )

  7. //தன்னுடைய கதாநாயகனுக்கு கோவலன் என்று இளங்கோ அடிகள் பெயர் சூட்டியதில் ஒரு உள்ளர்த்தம் இருக்கிறதோ என்று தோன்றுகிறது.//

    அதுதானே.., மலையாள தேச எழுத்தாளர் மதுரைக்கு எதற்கு வருகிறார்? சேரன் செங்குட்டுவன் வேறு தலையிடுகிறார், போன்ற கேள்விகள் எனக்குள் ஏற்கனவே உண்டு. மதுரையில் இல்லாத புலவர்களா?

    ஒருவேளை மதுரை தமிழ்சங்கத்தில் இளங்கோவிற்கு இடம் கிடைக்காததால் மதுரைஎரிக்கப் பட்டதாக எழுதியிருப்பாரோ என்று கூட நினைத்ததுண்டு. ஆனால் இந்தக் கோணம் இதுவரை யாரும் சொல்லாதது. பல விஷயங்கள் வெளியே வருவது போல இருக்கிறதே..,

  8. தமிழ் என்ன பாவம் பண்ணுச்சோ ? இப்படி பாடாய் படுகிறது. அரசன் தெரியும் மொரசன் தெரியுமா.? அது நீங்களே தான்.

    முதல் இரண்டு விஷயங்கள் மிகவும் புதிது. சுவையும் கூட. பாராட்டுக்கள் சார்.

  9. சார் நீங்க எப்போதுமே கலக்குறீங்க சார்! உங்க கலக்கலுக்கு இன்னும் கொஞ்சம் மசாலா சேர்க்கற மாதிரி ஒரு நாவல் லிங்க் இணைத்துள்ளேன். புதியது இல்லை மிகவும் பழைய நாவல் தான். பிரதாப முதலியார் சரித்திரம். வயிறு வலிக்க சிரித்துவிட்டேன் சார். உங்களுக்கும் வயிறு வலிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனுப்பிகிறேன். இப்பொழுதெல்லாம் உங்கள் ப்ளாக்கை ஒரு முறை பார்க்காவிட்டால் கூட எதோ அன் பிநிஷ்ஹுடு வொர்க் போல தோன்றுகிறது.
    தங்கள் வாசகன்:
    இராமன் அழகிய மணவாளன்
    டவுன்லோட் : https://www.yousendit.com/download/THE2b3BORkVIcWQzZUE9PQ

  10. சமீபத்தில் 1982-ல் நெஞ்சில் ஓர் ராகம் என்னும் படம் வந்தது. தியாகராஜன் (வில்லன் கம் கதாநாயகன்) மற்றும் சரிதா ஜோடி.

    மனைவியை துரத்திய தியாகராஜன் ஒரு விபத்தில் கண்ணை இழக்கிறான். பிறகு நண்பனிடம் (டி.ஆர்.) புலம்புகிறான், “கண் நஹீன்னு போனப்புறம்தன் தெரிஞ்சுது, அவள் கன்ணகீன்னு”.

    அதுக்கப்புறம் டி.ஆர். படங்களை பார்க்க பைத்தியமா என்ன?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

      1. I used to write like this at times; very surprised there is another siva namesake with writing / scripting skills like me, wonderful. Thanks Mr Jawahar, for your fantabulouslyextraordinarealtogethereisnocontemporariessaywriterslikeyouthere!!!

  11. இந்த பக்கதை படிக்க நெர்ந்தது என்னுடைய போதாத நெரமாக நினைக்கிறேன்….. உங்களுடைய வலை பக்கத்தை அலங்கரிக்க ஏன் இலக்கியத்தை இழிவு படுத்துகிறீர்கள். இதில் என்ன கொடுமை என்றால் தமிழின் பெருமையை சொல்ல கூடிய காவியத்தில் உள்ள கதாபாத்திரத்தையும் அதை எழுதியவர்களையும் இப்படி கொச்சை படுத்தி இருப்பதுதான். இப்படி பெயரினை வைத்து ஆய்வு செய்த உங்கள் பெயரினை வாசிக்கும் பொழுது இது போன்ற நிகழ்வுகள் புதிதல்ல என்பது புரிகிறது.

    -தமிழருளி

  12. //தமிழின் பெருமையை சொல்ல கூடிய காவியத்தில் உள்ள கதாபாத்திரத்தையும் அதை எழுதியவர்களையும் இப்படி கொச்சை படுத்தி இருப்பதுதான்.//தமிழருளி, நான் எழுதியிருப்பது புரிந்ததா? முழுவதும் படித்துவிட்டுத்தான் எழுதியிருக்கிறீர்களா?

எதுவா இருந்தாலும் எழுதுங்க!