என்.எஸ்.கிருஷ்ணன் நகைச்சுவையும் விஞ்ஞானமும்

என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு காகிதத்தின் மீது நீர் நிரம்பிய டம்ளர் ஒன்றை வைப்பார்.

அருகிலிருக்கும் மனிதரிடம் (தங்கவேலு?) ஒரு சவாலை முன் வைப்பார்.

“இந்த டம்ளரை தொடக் கூடாது. அதில இருக்கிற தண்ணி ஒரு துளி கூட சிந்தக் கூடாது. ஆனா அந்தக் காகிதத்தை வெளியே எடுக்கணும்”

தங்கவேலு எப்படி எப்படியோ மெதுவாகவும் நளினமாகவும் காகிதத்தை எழுத்துப் பார்ப்பார். ஆனால் டம்ளரும் சேர்ந்தே நகரும். தோல்வியை ஒப்புக் கொண்டு விடுவார்.

என்.எஸ்.கே. அந்தக் காகிதத்தை வெடுக்கென்று இழுப்பார். டம்ளரை அங்கேயே விட்டு விட்டு காகிதம் மட்டும் வெளியே வரும்.

இதற்குப் பின்னால் இருக்கும் விஞ்ஞானம் என்ன?

ஒரு டம்ளர் நீருக்கு ஒரு எடை இருக்கிறது (நீரின் பொருட்திணிவையும் புவி ஈர்ப்பையும் பெருக்கி வரும் தொகை). அந்த எடைதான் காகிதத்தின் மீது செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் விசை. அதைக்காட்டிலும் அதிக விசை இருந்தால்தான் அந்த விசையை எதிர்த்து ஒரு வேலையை செய்ய முடியும். விசை என்பது பொருட் திணிவையும் (Mass) கதியையும் (Acceleration) பெருக்கி வரும் தொகை. மெதுவாக இழுக்கிற போது புவி ஈர்ப்பைக் காட்டிலும் குறைந்த கதியில் இழுப்போம். அப்போது நாம் உண்டாக்கும் விசை நீரும் புவி ஈர்ப்பும் சேர்ந்து உண்டாக்கும் விசையைக் காட்டிலும் குறைவு. வெடுக்கென்று இழுக்கும் போது கதி அதிகமாவதால் விசை இரட்டிப்போ அதை விடக் கூடுதலோ ஆகிறது. டம்ளரை எதிர்த்துக் கொண்டு காகிதம் வெளியே வருகிறது.

Pressure Die Casting இல் செய்த பொருட்களை விட Drop Forging செய்த பொருட்கள் சக்தி வாய்ந்தவையாக இருப்பதும் மேற்சொன்ன சித்தாந்தத்தின் படியே!

என்.எஸ்.கே. பொறியியல் துறையைத் தேர்ந்தெடுத்திருந்தால் நமக்கு இன்னொரு ஜி.டி.நாயுடு கிடைத்திருப்பார்.

ஜி.டி.நாயுடு என்றதும் நினைவு வருகிறது.

அவர் ஒருதரம் சிட்டிசன் வாட்ச் கம்பெனிக்குப் போயிருந்தாராம். உள்ளே போகிறவர்களை எல்லாம் ‘யாரு, என்ன, படிப்புத் தகுதி என்ன’ என்றெல்லாம் கேட்டு சிற்சில இடங்களைப் பார்க்க அனுமதி மறுத்து விடுவது அந்தக் கம்பெனியின் வழக்கமாக இருந்தது. நாயுடுவுக்கு எந்தத் தடையும் சொல்லாமல் எங்கே வேண்டுமானாலும் போகலாம் என்று சொல்லி விட்டார்களாம். ஏன் என்று கேட்டதற்கு ‘எங்கள் தொழிற் நுட்பம் காப்பி அடிக்கப் பட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் இத்தனை கட்டுப்பாடுகள். உங்கள் படிப்புத் தகுதிக்கு நீங்கள் அப்படி எதுவும் செய்து விட மாட்டீர்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஆகவே எங்கே வேண்டுமானாலும் போகலாம்’ என்றார்களாம்.

நாயுடு எதுவும் பேசவில்லை.

அமைதியாகச் சுற்றிப் பார்த்து விட்டு வந்து விட்டார்.

இந்தியா வந்த பிறகு, சில நாட்களில் அச்சசல் சிட்டிசன் வாட்ச் போலவே இருக்கும் ஒரு வாட்சை தயாரித்து சிட்டிசன் கம்பெனி நிர்வாகத்துக்கு அனுப்பினாராம். அத்துடன் அவர் அனுப்பியிருந்த கடிதத்தில்,

“என் நாணயத்தைக் குறித்து நீங்கள் வைத்திருந்த நம்பிக்கை மிகச் சரியானது. ஆனால் என் திறமை குறித்து நீங்கள் வைத்திருந்த நம்பிக்கை தவறானது என்பதை சுட்டிக் காட்ட உங்கள் முதல் நம்பிக்கையை உடைக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டதற்கு வருந்துகிறேன்”

Advertisements

15 comments

 1. //“என் நாணயத்தைக் குறித்து நீங்கள் வைத்திருந்த நம்பிக்கை மிகச் சரியானது. ஆனால் என் திறமை குறித்து நீங்கள் வைத்திருந்த நம்பிக்கை தவறானது என்பதை சுட்டிக் காட்ட உங்கள் முதல் நம்பிக்கையை உடைக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டதற்கு வருந்துகிறேன்”//

  அருமையான சுட்டிக்காட்டல் மற்றும் பகிர்விற்கு நன்றி ஜவஹர்ஜி.

 2. கலைவாணர் மாதிரியே சாதாரணமா ஆரம்பித்து ஒரு பெரிய சித்தாந்தத்தை எளிமையாக புரியவைத்துவிட்டீர்கள்.. உடனே பக்கத்தில் இருக்கிற கப்பை வைத்து செய்முறை விளக்கமும் செய்து பார்த்துவிட்டேன் ..யுரேகா…..

  //Pressure Die Casting இல் செய்த பொருட்களை விட Drop Forging செய்த பொருட்கள் சக்தி வாய்ந்தவையாக இருப்பதும் மேற்சொன்ன சித்தாந்தத்தின் படியே// கோவை கம்பெனிகளில் பணிபுரிந்த காலங்களில் இருவகையிலும் நிறைய செய்து இருக்கிறேன் ..இன்று தான் வித்தியாசம் பற்றிய ஞானம் கிட்டியது .

  நன்றியும் இதுபோல் தொடர வாழ்த்துக்கள் .

 3. >>என்.எஸ்.கே. பொறியியல் துறையைத் தேர்ந்தெடுத்திருந்தால் நமக்கு இன்னொரு ஜி.டி.நாயுடு கிடைத்திருப்பார்.
  நல்ல வேளை, பிழைத்தோம். காமெடி சித்தர் கிடைத்தார். என்.எஸ்.கே. goofy dense naidu ஆகியிருப்பார்.

  சரியாகப் புரிந்து கொள்ளப்படாத அங்கீகரிக்கப்படாத அறிவாளி ஜி.டி.என். அவர் நினைவுகளைக் கொண்டு வந்ததற்கு நன்றி.

  1. நன்றி அப்பாதுரைஜி, நான் ரொம்பவும் வியக்கிற மனிதர்களில் ஒருவர் ஜி.டி.நாயுடு. தொழிலையும் சொந்த வாழ்க்கை மற்றும் அரசியலையும் தனித் தனி என்டைட்டியாக அவர் பார்த்திருந்தால், இன்றைக்கு ரிலையன்ஸ் க்ரூப்பை விட பெரிய க்ரூப்பாக அவர் நிறுவனம் வளர்ந்திருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

 4. //Pressure Die Casting இல் செய்த பொருட்களை விட Drop Forging செய்த பொருட்கள் சக்தி வாய்ந்தவையாக இருப்பதும் மேற்சொன்ன சித்தாந்தத்தின் படியே!//

  Athu eppadi-nga oru porul Pressure die casting-la senchatha illa Drop forging-la senchatha-nnu kandupudikarathu?…simple-a iruntha sollunga…

 5. கலை வாணர் ஒரு படத்திலே ஒரு பாடல் படுவார். முழு பாடலையும் வார்த்தைகளை மாற்றி போட்டு பாடுவார். ரொம்ப வித்தியாசமான பாட்டு.
  அந்த பாடலை You TUbe il சர்ச் செய்த போது தான் La Paloma” பற்றி தெரியவந்தது. எனது சிற்றறிவுக்கு எட்ட வில்லை சபையிடம் விளக்கம் அளிக்கும் பொறுப்பை விட்டு விடுகிறேன்.

  அந்த பாடலின் லிங்க்: http://www.youtube.com/watch?v=UavhQCkuVxA

  ஜவஹர் சார், இத பத்தியும் ஒரு பதிவு போடுங்க.

 6. //கேட்டதற்கு ‘எங்கள் தொழிற் நுட்பம் காப்பி அடிக்கப் பட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் இத்தனை கட்டுப்பாடுகள். உங்கள் படிப்புத் தகுதிக்கு நீங்கள் அப்படி எதுவும் செய்து விட மாட்டீர்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஆகவே எங்கே வேண்டுமானாலும் போகலாம்’ என்றார்களாம்.

  நாயுடு எதுவும் பேசவில்லை.

  அமைதியாகச் சுற்றிப் பார்த்து விட்டு வந்து விட்டார்.

  இந்தியா வந்த பிறகு, சில நாட்களில் அச்சசல் சிட்டிசன் வாட்ச் போலவே இருக்கும் ஒரு வாட்சை தயாரித்து சிட்டிசன் கம்பெனி நிர்வாகத்துக்கு அனுப்பினாராம். அத்துடன் அவர் அனுப்பியிருந்த கடிதத்தில்,

  “என் நாணயத்தைக் குறித்து நீங்கள் வைத்திருந்த நம்பிக்கை மிகச் சரியானது. ஆனால் என் திறமை குறித்து நீங்கள் வைத்திருந்த நம்பிக்கை தவறானது என்பதை சுட்டிக் காட்ட உங்கள் முதல் நம்பிக்கையை உடைக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டதற்கு வருந்துகிறேன்”

  //

  Urban legend?

 7. //“என் நாணயத்தைக் குறித்து நீங்கள் வைத்திருந்த நம்பிக்கை மிகச் சரியானது. ஆனால் என் திறமை குறித்து நீங்கள் வைத்திருந்த நம்பிக்கை தவறானது என்பதை சுட்டிக் காட்ட உங்கள் முதல் நம்பிக்கையை உடைக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டதற்கு வருந்துகிறேன்”

  நன்று! ரொம்ப பிடித்த வாசகமாகிவிட்டது எனக்கு!

  அன்புடன்
  கார்த்திகேயன்
  http://kaaranam1000.blogspot.com

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s