பள்ளித்தலமனைத்தும் பிசினஸ் செய்குவோம்

போன கல்வியாண்டின் துவக்கத்தில் என் சக ஊழியர் ஒருவர் கணினிக்குப் பக்கத்தில் கவலையோடு உட்கார்ந்திருந்தார்.

ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் அணு விஞ்ஞானியைவிட அதிக டென்ஷனில் இருந்தார்.

எட்டிப்பார்த்தேன்.

Column களாக பல பள்ளிகளின் பெயர்களையும், Row க்களாக தேர்ச்சி சதவீதம், மதிப்பெண் சதவீதம், ஆசிரியர்களின் சம்பளம், ஆசிரியர்கள் நிலைத்திருத்தல் உள்ளிட்ட பல யோக்யதாம்சங்களையும் போட்டிருந்தார். ஒவ்வொரு யோக்யதைக்கும் பத்து மதிப்பெண் அளவு கோலில் மதிப்பெண்ணும் போட்டிருந்தார். போட்டு மொத்த மதிப்பெண்களைக் கூட்டி பள்ளிகளை ஒன்று, இரண்டு, மூன்று என்று கே.பி.சுந்தராம்பாள் மாதிரி வரிசைப்படுத்திப் பாடுவார் மாதிரி இருந்தது.

நான் போனதைப் பார்த்ததும்,

“அப்பாடா, உங்களைத்தான் எதிர்பார்த்தேன். ஒரு கையெழுத்துப் போடுங்க” என்று கடன் விண்ணப்பத்தை நீட்டினார்.

இரண்டு லட்சத்துக்கு கடன் விண்ணப்பித்திருந்தார்.

“செக்யூரிட்டி கையெழுத்து சார்”

“செக்யூரிட்டின்னா வாசல்ல நிக்கறான்.போய் வாங்கிக்க. ஷியூரிட்டின்னா நான் போடறேன். உனக்கெதுக்கு இவ்வளவு பணம் இப்போ? பள்ளிக்கூடம் எதையாவது விலைக்கு வாங்கப் போறியா?”

“இல்லை சார், என் பொண்ணை ஸ்கூல்ல சேர்க்கணும்”

“பிளஸ் ஒண்ணா?”

“ம்ம்ஹூம். யு.கே.ஜி.”

ஓசூரில் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க குறைந்தது முப்பதாயிரமும் அதிக பட்சம் ஒரு லட்சமும் வாங்குகிறார்களாம்! போதாததற்கு நுழைவுத் தேர்வு, அப்பா அம்மா நேர்முகத் தேர்வு, அவர்கள் கிராஜுவேட்டாக இருக்க வேண்டும்….இத்யாதி.

நான் வேலைக்குப் போகிற வரை படித்து முடிக்க ஆன செலவு இதில் இருபதில் ஒரு பங்கு கூடக் கிடையாது.

“நாங்க படிக்கிறப்போ இவ்வளவு டார்ச்சர் இல்லைப்பா”

“உங்கப்பா கிராஜுவேட்டா இருந்திருப்பாரு”

“அதெல்லாமில்லை, அவர் வெறும் தெனாவேட்டுதான். அந்தக் காலத்திலே கிராஜுவேட்டா, வெத்துவேட்டான்னு கேட்டுக்கிட்டு இருந்தாங்கன்னா அருவாவெட்டுதான்!”

என்னைப் பள்ளியில் சேர்க்க இத்தனை ஹோம் வொர்க் எங்கப்பா செய்யவில்லை.

ஐந்து ரூபாய் ஸ்பெஷல் பீஸ் கட்டினால் எந்தக் கழுதையை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்வார்கள்.

புண்டரி குளம் வடகரையில் இருந்த ஒரு ஓட்டு வீடு, கீழக்கரையில் இருந்த ஒரு ஓட்டு வீடு இரண்டும் சேர்ந்ததுதான் பள்ளிக்கூடம். வெவ்வேறு தெருக்களில் இருந்த இந்த வீடுகளை இணைத்தது ஒரு தோட்டம். அந்தத் தோட்டத்தில் இருந்த வாதா மரத்தின் அடியில் இரண்டொரு வகுப்புகள் நடக்கும்!

ஓட்டுக் கூரைக்கு அடியில் சில வகுப்புகள், மிச்ச வகுப்புகள் எல்லாம் கீற்றுக் கொட்டகை.

மழை பெய்தால் ஓட்டுக் கூரை கீற்றை விட அதிகம் ஒழுகும்.

கீற்றுக் கொட்டகை வகுப்பில் இரண்டு வகுப்புக்களைப் பிரிப்பது பனை வாரைத் தட்டிகள். தட்டியில் இருக்கும் நாடா மாதிரி சமாச்சாரத்தை உடைத்து இரண்டு துண்டுகளுக்கு இடையில் வாழை இலையை வைத்து ஊதி, இசைக் கருவி தயாரிப்பில் ரிசர்ச் செய்திருக்கிறோம். இதனால் எல்லாத் தட்டிகளும் கீழ் லெவலில் எலி கொரித்தது போல ஓட்டைகளாக இருக்கும். அந்த ஓட்டை வழியே பலப்பம், இலந்தப் பழம் உள்ளிட்ட விஷயங்கள் பண்டமாற்று நடைபெறும்.

கழிப்பறையே கிடையாது. தட்டி மறைத்த வெட்ட வெளிதான் டாய்லேட்.

கடைசி வகுப்பான லில்லி புஷ்ப்பம் டீச்சரின் வகுப்பில் படித்த பிள்ளைகள் சிறுநீர் வாடையிலேயே வளர்ந்தவர்கள். ஆயுத பூஜைக்கு சந்தனம் பன்னீர் எல்லாம் வைத்ததும்,

“எதோ நாத்தம் வருதில்லே?” என்றார்கள்

மதிய உணவு இடைவேளையின் போது தோட்டத்துக்குப் போய் விடுவோம். புளிச்சங்காய் என்று நாங்கள் அழைத்த உயரமில்லாத பீர்க்கங்காய் மாதிரியான (இதற்கு என் அம்மா சொல்லும் பெயர் தம்பரத்தம் காய்) காயை கல்லால் அடித்து சாப்பிடுவோம். வாயில் போட்டால் எலும்பு வரைக்கும் புளிக்கும்.

உளுத்தவடை என்று பட்டப்பெயர் இடப்பட்ட வாத்தியார் ஒருத்தர் இருந்தார்.

அவர் தினமும் பதினோரு மணிக்கு ஒரு பையனை அழைத்து,

“கொல்லை வழியாப் போய் ஒரு வடை” என்பார்.

கொல்லை வழியாக அனுப்புவதால் ஹெட் மாஸ்டர் ராதாகிருஷ்ணய்யருக்கு தெரியாது என்பது அவர் நம்பிக்கை.

ஒரு சமயம் மூன்று நாள் தொடர்ந்து மழை பெய்து மரங்கள் எல்லாம் விழுகிற ஸ்டேஜில் இருந்தன. அப்போது ராதாகிருஷ்ணய்யர் ஒவ்வொரு வகுப்பாக வந்து “கொல்லைப் பக்கம் போறது, புளிச்சங்காய் அடிக்கிறதெல்லாம் கொஞ்ச நாளைக்கு வேணாம்.” என்று அதட்டிக் கொண்டிருந்தார். உளுத்தவடை வாத்யார் கிளாசுக்கு வந்ததும்,

“விஸ்வநாதன், இன்னைக்கு வடை வாங்கப் போற பையனைக்கூட வாசல் வழியாவே அனுப்புங்க” என்றார்.

Advertisements

14 comments

 1. //“எதோ நாத்தம் வருதில்லே?” என்றார்கள்// 🙂

  அமெரிக்காவில் இருந்த சமயம், வீட்டிற்கு ஒரு அமெரிக்கரை அழைத்து வந்தேன். What is that different smell என்றார். Incense Stick என்றதற்கு. Cant you just use a room spray என்றார். 🙂

  //“விஸ்வநாதன், இன்னைக்கு வடை வாங்கப் போற பையனைக்கூட வாசல் விழியாவே அனுப்புங்க” என்றார்.//

  Super landing!

 2. 26 letters are taught to build over 26 million words! For teaching every letter, they charge close to Rs.2000 to Rs.2500 – building very very strong foundation – obviously charges are legitimate, as far as they are concerned!

  I don’t know whether they teach when and how to use the words to form appropriate sentence! Obama’s “YES WE CAN” punch created renaissance – will they create one to revolutionize or modernise our education system!

 3. //கடைசி வகுப்பான லில்லி புஷ்ப்பம் டீச்சரின் வகுப்பில் படித்த பிள்ளைகள் சிறுநீர் வாடையிலேயே வளர்ந்தவர்கள்//

  இப்ப மட்டும் என்ன வாழுதாம். மாநகராட்ச்சி பள்ளிகளுக்குச்சென்று பாருங்கள்.. 300 பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு ஒரேஒரு கழிப்பிடம் (அதுவும் நடுவில் ஒரு சுவரிட்டு ஆண் பெண் என)

 4. நிஜம் … நமக்கு செலவும் வைத்து ..குழந்தைகளுக்கு பாரத்தையும் ஏற்றிவிடுகிறார்கள்.. புத்தக சுமை ஒரு புறம் ..இறுக்கமான கல்வி முறை ஒருபுறம் … எல்லோர் காலத்து பள்ளி நினைவுகளையும் ஞாபகப்படுத்தி விட்டீர்கள் .. எனக்கும் ,பிச்சனூர் பள்ளியில் ஓலை குடிசையில் ஏழாம் வகுப்பு படித்தபொழுது தடுப்பு ஓட்டை வழியாக கடலை மிட்டாய் (நிஜ கடலை ) பரிமாறி கொண்ட ஞாபகங்கள்.. தமிழ் வாத்தியாருக்கு” கொக்கரவெட்டி ” என்று பெயர் வைத்த சைவ .. அசைவ காரணங்கள்.. எல்லாம் சுகம்..
  நிறைய நசுக் நகைச்சுவையோடு பதிவு … தலைமை ஆசிரியர் கேட்டவுடன் , வடை வாத்தியாரின் முகம் ”ங்க்னே” என்று ஆகியிருக்குமே ?

 5. //அந்த ஓட்டை வழியே பலப்பம், இலந்தப் பழம் உள்ளிட்ட விஷயங்கள் பண்டமாற்று நடைபெறும்.//
  //இரண்டு துண்டுகளுக்கு இடையில் வாழை இலையை வைத்து ஊதி, இசைக் கருவி தயாரிப்பில் ரிசர்ச் செய்திருக்கிறோ//
  //எலும்பு வரைக்கும் புளிக்கும்//

  ரொம்பவும் ரசித்தேன்! உளுந்துவடை சாருக்கு பல்பு வடை!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s