வெற்றி வாகையும் கார் பார்க்கிங்கும்

”வெற்றி வாகை சூடினான்னு சொல்றாங்களே, அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?”

“வெற்றி மாலை சூடினான்ன்னு அர்த்தம்”

“சரி, அதுக்கு வெற்றி மாலைன்னே சொல்லலாமே, ஏன் வாகைன்னு சொல்லணும்?”

“வாகைன்னா மாலைன்னு அர்த்தம்”

“வாகைன்னா வாகைதான், அதெப்புடி மாலைன்னு அர்த்தம் வரும்?”

“வாகைன்னா என்ன அர்த்தம்?”

“வாகைங்கிறது ஒருவகை மரம்”

“சரி அந்த வார்த்தையை ஏன் மாலைக்கு யூஸ் பண்றாங்க?”

“அதைத்தான் நான் உன் கிட்ட கேட்டேன்”

“தெரியாததாலதான திருப்பி உன்னையே கேக்கறேன்”

“தெரியாதுங்கிறதை நீ முதல்லயே சொல்லியிருக்கணும்”

“உன் கிட்ட இது ஒரு கெட்ட பழக்கம். எதையாவது தெரிஞ்சிகிட்டு வந்துடுவே. அதை சாமானியமா சொல்லிட மாட்டே. அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பைய்யா மாதிரி கைகட்டி மண்டி போடணும்ன்னு எதிர்பார்ப்பே”

“அதென்ன அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பைய்யா?”

“அதை அப்புறம் வெச்சிக்கலாம். நீ முதல்ல சொல்லு”

“வாகைன்னா மாலைன்னுதான் அர்த்தம்”

“பின்ன எதுக்கு இவ்வளவு பில்ட் அப்பு?”

“அர்த்தம்ன்னா அர்த்தம் இல்லை, அது ஒரு மாதிரி ஆகு பெயர்”

“என்ன ஆகு பெயர்?”

“என்ன ஆகு பெயர்ன்னா, பண்பாகு பெயர்”

“அடச்சீ… உன்னை என்ன இலக்கணக் குறிப்பா கேட்டேன். எப்படி ஆகு பெயர்ன்னு கேட்டேன்”

“கொற்றவைங்கிற வெற்றி தேவதைக்கு வாகைப் பூக்களால ஆன மாலையைப் போடற வழக்கம் சங்க காலத்தில இருந்திருக்கு”

“சங்க காலம்ன்னா?”

“தமிழ்ச் சங்க காலம்”

“ஓ, அதுவா…”

“பின்னே, நீ என்ன தொழிற்ச் சங்கமோ அல்லது கூட்டுறவு சங்கமோன்னு நினைச்சியா?”

“ம்ம்ம்…. மேலே”

“அதனாலே வெற்றி அடைஞ்சவன்களுக்கெல்லாம் வாகைப் பூ மாலை போடற வழக்கம் வந்திருக்கு. வெற்றி வாகைன்னாலே வெற்றி மாலையைத்தான் குறிக்கும்ன்னு ஆகிப் போச்சு”

“அதாவது ஜிராக்ஸ்ங்கிற வார்த்தை மாதிரி”

“அதே… அதே…”

“சங்க காலத்துக்குப் போற அளவுக்கு உனக்கு என்ன கஷ்ட காலம்?”

“அதுவா… கார் ஷெட் வைக்கிற அளவுக்கு வசதியில்லை. செவுத்தோரமா ஒரு மரத்தை வெச்சோம்ன்னா அழகா நிழல் வருமேன்னு, சீக்கிரமா வளரக் கூடிய மரங்கள் பத்தி படிச்சிகிட்டு இருந்தேன்.”

“ஒருவகை மூங்கில் சீக்கிரமா வளரும்ன்னு கேள்விப்பட்டிருக்கேன்”

“மூங்கில் மர நிழல்லே என் பேரன் விளையாடற பொம்மைக் காரைக் கூட பார்க் பண்ண முடியாது”

“ஓ… அப்டி ஒண்ணு இருக்கா… சொல்லு”

“அப்போ Albizia lebbeck ன்னு ஒரு வகை மரம் பத்தி படிச்சேன். ரொம்ப சீக்கிரம் வளர்றது மட்டுமில்லை, நாற்பது மீட்டர் உசரம் கூடப் போகுமாம். கனம் ஒரு கன செண்ட்டி மீட்டருக்கு 0.6 கிராம். மர வேலைக்கு சரியான கட்டை”

“Albizia lebbeck…. ஏதோ அரேபியக் கெட்ட வார்த்தை மாதிரி இருக்கு”

“அது பொட்டானிக்கல் நேம். என்ன மரம்டான்னு பார்த்தா நம்ம வாகை மரம்”

“நம்ம வாகை மரம்…”

“ஆமாம்”

“அதாவது அந்தக் காலத்திலே நீ, நானு, நக்கீரர், தொல்காப்பியர் எல்லாம் சோம பானம் அருந்திட்டு சோலைகள்ளே நிக்கிற சொக்கும் அழகிகளை……………”

“நிறுத்து, சங்க காலத்து மரம்ன்னா இப்ப இல்லைன்னு நினைச்சியா?”

“இருந்திட்டுப் போகட்டும். ஷெட்டுக்கு ஏற்பாடு பண்ணிட்டியா இல்லையா?”

“அதுல ஒரு பிரச்சினை”

“என்ன அது?”

“நாப்பது மீட்டர் உசரத்துலேர்ந்து நிழல் விழுந்தா அடுத்த தெருவிலதான் விழும். அங்கே வண்டியை நிறுத்த எனக்கு செளகர்யப்படாது”

“வேறே என்ன மரம் வைப்பே?”

“சிங்கப்பூர் செர்ரின்னு ஒரு மரம், பொட்டானிக்கலா அதோட பேரு…………….”

“பொட்டானிக்கலாவது பட்டாணிக்கட்லயாவது… இதுக்கு மேல தாங்காது. இன்னிக்குப் போறும்”

“சரி, அது என்ன அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பைய்யா?”

“உனக்குத் தெரியாதா?”

“இது…. அது வந்து….. கேள்விப்பட்டிருக்கேன்….”

“என்னன்னு?”

“நீ சொல்லேன்”

“அப்ப உனக்குத் தெரியாது?”

“தெரியாது”

“அப்டி வா வழிக்கி”

“வழுக்கர்த்துக்கு இங்க என்ன சாணியா இருக்கு…. சொல்டா”

“சிவபெருமானுக்கு, பிரணவ மந்திரத்தோட அர்த்ததை சொல்லும் போது சுப்ரமணியர் அதாவது அவரோட புள்ளை கத்துக்கிறவன் கை கட்டி வாய் பொத்தி கீழேதான் உட்காரணும்ன்னு சொன்னாராம். சுவாமிமலை உங்க ஊர்ப்பக்கம்தானே?”

“அடக் கடவுளே…. இவ்வளவு சிம்ப்பிளா!”

“பின்னே, நீ என்ன எஸ்.வி. சுப்பைய்யா பத்தி கிசு கிசுன்னு நினைச்சியா?”

Advertisements

27 comments

 1. தென்கச்சி சுவாமிநாதன் அமரரான பிறகு அவரது இடம் நிரப்பபடாமல் தான் இருக்கிறது. நீங்க முயற்சி பண்ணலாம். ஒரே பிரச்னை நீங்க பேச வேண்டும். குரல் சரோஜ் நாராயண் சுவாமி மாதிரி இருக்கனும். ரெடியா ?

  1. itsmeena : சரோஜ் நாராயணசாமி ஆம்பிளையா பொம்பளையாங்கிற குழப்பம் உங்களுக்கும் இருக்கா! அதை விட டைனமிக்கான இன்னோரு லேடி கூட இருந்தாங்க ஆல் இந்தியா ரேடியோவில, பேரு விஜயம். மெட்ராஸ் டிவியில ஆங்கிலச் செய்தி வாசிச்ச சசிகுமார்தான் என்னுடைய ஆதர்ஸ ஆண் குரல்!

 2. வார்த்தை விளையாட்டு அழகு … செய்தியோடு கூடிய தகவல்கள் , இளைஞர்களுக்கே உரித்தான இலக்கண , சங்க கால சலிப்புகள் ,
  இது சுப்பையாக்கள் யுகம் … கை கட்டி வாய் பொத்தி கேட்டா பிழைத்து கொள்ளலாம் .. வார்த்தை பின்னி பின்னி .. செய்திகளையும் சேர்த்து
  இதயம் பின்னுகிறது …

 3. சுப்பையா ஸ்பீகிங்க்.. வெற்றி வாகைக்கு வாகை மரத்துனால தான் அப்படிப் பேர் வந்ததுனு சொல்றீங்களாமே? வாகை மரத்துக்கு வாகைனு ஏன் பேர் வந்ததுனு யோசிச்சீங்கன்னா வெற்றி வாகைனு ஏன் சொல்றாங்கன்னு தெரிஞ்சு போகுமே? மாலைன்னாலும் வாகைன்னாலும் அதே அதே சபாபதேனு சொல்றீங்களாமே? அதெப்படி? முத்து வாகை பவள வாகைனு கேள்விப்பட்டதில்லையே? அவ்வளவுதான். வச்சுடவா?

  1. ஹ்லோ, சிவபெருமான் ஹியர், வாகை மாலைக்கு ஆகி வந்தது வெற்றி மாலைக்கு மட்டும் என்பதால்தான் ஒரு மாதிரி ஆகு பெயர்ன்னு சொன்னேன். தொல்காப்பியரை விசாரிச்சேன்னு சொல்லுங்க. வெச்சிடட்டுமா?

 4. சார் ,

  “நாப்பது மீட்டர் உசரத்துலேர்ந்து நிழல் விழுந்தா அடுத்த தெருவிலதான் விழும்”.

  அடுத்த தெரு ராமநாதன் சார் (யாராவது இருக்கனுமே) வீட்டு விசேஷத்துக்கு வாகை மரத்தை பிரசன்ட் பண்ணிட்டு, நீங்களே chief guest ஆகா இருந்து மரத்த நட்டுடுங்க. (மரம் நடுவதுக்கு இடம் தேர்வு செய்ய இந்த லிங்க் கிளிக் செய்யவும் : https://kgjawarlal.wordpress.com/2009/11/12/%e0%ae%95%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%bf/

  உங்கள்ளுக்குதான் தெரியுமே எப்பிடி கணக்கு பண்ணறதுன்னு. பண்ணிடுங்க. சீக்கிரம் கார் வாங்கி கரெக்ட் place ல பார்க் பண்ணிடுங்க.

  அது இருக்கட்டும் சார்,
  சைக்கிள் கேப் ல இது என்ன??

  ““அதாவது அந்தக் காலத்திலே நீ, நானு, நக்கீரர், தொல்காப்பியர் எல்லாம் சோம பானம் அருந்திட்டு சோலைகள்ளே நிக்கிற சொக்கும் அழகிகளை ….”

  யாரு சார் அவரு? நீங்க முடிக்கறதுக்குள்ள அடுத்த கேள்விய கேட்டு கேடுத்துட்டரே 🙂
  உங்கள்கிட்ட நெறைய சரக்கு (!!) இருக்கு சார்…..
  ———————————————————–
  சார் அந்த நாவல் படிச்சீங்களா? எப்பிடி இருந்தது?

  1. இராமன அழகிய மணவாளன் : நல்ல ஐடியாவெல்லாம் தர்றீங்க…. பழைய இடுகை எல்லாம் மெமரியில பளிச்சுன்னு வெச்சிருக்கீங்க…. நன்றி, நன்றி… எந்த நாவல்? கொஞசம் கோபப்படாம அந்த லின்க் ஐ எனக்கு kgjawarlal@yahoo.com க்கு மெயில் பண்ண முடியுமா?

 5. அலோ சிவபெருமான்.. சிவபெருமான் அலோ…என்ன இது லைன் கொரகொரன்னுது.. அலோ அலோ.. சுப்பையா ஹியர்… வெற்றி வாகைக்கு வெற்றி மாலைனு சொல்லக் காரணம் ஆகுபெயரா? சரிங்க. வெற்றி வாகைனு ஏன் சொல்றாங்கன்னு நீங்க கேட்டது சரியா புரியாம பதில் கேள்வி கேட்டுட்டங்க. இப்போ புரிஞ்சு.. போச்சுங்க. வெற்றித் தும்பையோ வெற்றி மல்லிகையோ அணிந்தான்னு ஏன் சொல்றதில்லேனு யோசிச்சீங்கன்னா வெற்றி வாகைக்குப் பின்னால் இருக்குற சூச்சுமம் புரியும்னு மண்டியிட்டு தண்டனிட்டு சொல்றங்க.. அலோ அலோ இருக்கிங்களா… தொல்காப்பியர் கூட ஒங்களை ரொம்ப சாரிச்சதா சொன்னாரு……அலோ அலோ.. என்ன லைன் கட்டாயிடுச்சா.. இல்லை இவர் பாட்டுக்கு நெத்திக்கண்ணைத் தேடி எடுக்கப் போயிட்டாரா..?

  1. வேலு,

   எனக்குத் தெரிஞ்சி P யில ஆரம்பிச்சி T யில முடியற வார்த்தை Petticoat
   தான்.

   அதை ட்ரை பண்றேன்னா அர்த்தம் அனர்த்தமா வருதே?

   பின் குறிப்பு : உங்க மாதிரி ஆட்களைத்தான் எங்க ஊர்லே ‘அனுகூலச் சத்ரு’ ந்னு அன்பா கூப்பிடுவாங்க

 6. உஙகள் கட்டுரையை படிச்சதன் மூலம் மணவாளன் friend ஆகிவிட்டார் you are a golden link.அற்புதமான நடை,எளிமை,material worth, fantastic sir,write more sir,

 7. சிவபெருமான்… என்னா அதுக்குள்ள மறந்துட்டீங்களே? இந்த சுப்பையா தருமியோட பரம்பரைங்க… கேக்க மட்டும் தான் தெரியும்.

  இருந்தாலும், சுட்டெறிக்காம இருந்தா சொல்லி வைக்கிறேன். மண்டபத்துல எழுதிக் கொடுத்து வாங்கிட்டு வரலீங்கோ; குறுந்தொகை, அக/புற நானூறு நூல்கள்ல இருந்ததை எடுத்துட்டு வந்தேங்கோ.

  வாகைக்கும் போருக்கும் ரொம்ப கச்சாமிச்சா நெருக்கம். வாகை மரத்தடி அந்த நாள்ல அரசமாருங்க போர்க்களத்துக்குப் போவறதுக்கு முன்னாடி தவம் செய்யுற இடம். ஆக, வாகைக்கு தவம்னும் ஒரு பொருள் இருக்கு. வாகைப்பூ வெள்ளைனு சங்க இலக்கியங்கள்ல சொல்லியிருக்கு. வெற்றி வாழ்த்தோட வாகைப்பூ சூடிப் போருக்குப் போவாங்க. வெற்றி கிடைச்சதும் வாகை மாலை அணிஞ்சு திரும்பி வருவாங்க. (சூடுறதுக்கும் அணியறதுக்கும் சின்ன வித்தியாசம் இருக்கு). வாகை மாலையோட ஊருக்குள்ளாற வந்தாங்கன்னா வெற்றியோட வந்தாங்கனு பொருளாம். அதனால போர்ல வெற்றின்னாலே வாகைப்பூ தான் ஆஸ்தான மலர். வெற்றியோட வந்தா தான் மாலை – அதனால தான் வெறும் வாகை வெற்றி வாகையாச்சு.

  இன்னொண்ணு கேட்டீங்கன்னா – புறமுதுகு காட்டி ஓடி வந்தவங்களுக்கு வாகை மாலை கிடையாது. அதே லைன்ல பாத்தோமுன்னா, போர்ல வீரமரணத்தோட வந்தவங்களுக்கு வாகைப்பூ உண்டு; வாகை மாலை கிடையாது. ஒரு வேளை செண்டா கொடுத்தாங்களோ என்னவோ. (போர்ல தோத்து போனா என்ன மாலை போட்டாங்களோ தெரியலையே?)

  பூ இல்லாத நேரத்துல போர் செஞ்சா என்னாகும்ன்றீங்களா? என்னையே திரும்பிக் கேக்குறீங்களா? அட?

  1. உபரித் தகவல்களுக்கு நன்றி அப்பாதுரைஜி.

   வாகைப் பூக்கள் செவ்வந்திப் பூக்களை விட சற்றே மங்கிய மஞ்சள் நிறமுடையவை.

 8. சார்,
  ராஜ மாணிக்கம்,திருப்பூர் // மார்ச் 25, 2010 இல் 4:55 –

  முந்திக்கொண்டு விட்டார்.

  சார் நேற்று திருப்பூரில் நடந்த ஒரு செமினார் (எங்கள் company அளித்தது) மூலம் உங்கள் வாசகர்கள் நண்பர்கள் ஆகிவிட்டோம்.

  சொன்னால் நம்ப மாட்டீர்கள். !

  செமினார் முடிந்த பின்பு ஊர் உலக விசயமெல்லாம் பேசும் பொது நண்பர் ராஜ மாணிக்கம் இவ்விதம் கூறினார், “சார், ஜவர்லால் னு ஒருத்தர் எழுதறார் சார், என்னமா குவாலிட்டி கோன்செப்த்ஸ், சிக்மா உப்புமானு சிம்பிள்ஆ எக்ஸ்ப்ளின் பன்னிருக்கார் சார் னு” சொன்னதும் எனக்கு இங்க சிக்னல் பாப் அப் ஆயிடித்சு.

  கிட்டத்தட்ட ஒரு ஒன்னரை மணி நேரம் நட்ட நாடு ரோட்டில் (TEA exporters Association ) வாசலில் பேசி விட்டு வீடு திரும்பினோம்.

  எழுத்து மூலம் முகம் தெரியாத ((profile lil) தெரிந்தாலும்) மனிதர்கள் கூட நண்பர்கள் ஆகலாம். மேலும் உலகம் ரொம்ப சின்னது.
  முதல் நாள் உங்களுக்கு மெயில் தொடர்பு ஆரம்பம் அடுத்த நாள் உங்கள் வாசகர்கள் இருவர் நட்பு பாராட்டியயிடுச்சு.

  பின் குறிப்பு:
  ராஜ மாணிக்கம் சார் ஒரு construction businessman, அவரது construction னில் சிஸ்டம் implement செய்ய எங்கள் டீம்முக்கு ஒரு பிசினஸ் தருவதாக சொல்லிருக்கார்.

  எங்கள் கம்பெனி : http://www.wisemgmtsys.com

  வடிவேல் ஸ்டைலில் சொல்லனும்னா, “ஜவர்லால் சார் எழுதறது நம்ம business சுக்கு சாதகமா தான் இருக்கு” .

  தாங்கள் ஊர் பக்கம் வந்தால் ஒரு மெயில் போட்டு விடவும், நான் இல்லாவிட்டாலும்,

  காத்திருக்க தேவை இல்லை! பெருமாளை திவ்யமாய் தரிசிக்கலாம்.

  1. ராமன்/ராஜ மாணிக்கம், ரொம்பப் பெருமையா இருக்கு. நன்றி, ஒரு எழுத்தாளனுக்கு இதை விட என்ன பெருமை வேணும்!

 9. நானும் வெள்ளை வாகைப்பூ பார்த்ததில்லை; ஆனால் சங்க இலக்கியங்களில் காணப்படும் வெற்றி ‘வாகை’ வெள்ளை நிறம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரு வேளை வேறு ஏதாவது இருக்குமோ என்னவோ?

  நல்ல பதிவு; கருத்துப் பரிமாற்றத்துக்கு நன்றி.

 10. வாகை…..சுப்பு ஆறுமுகம்……சரோஜ் நாராயணசாமி…….தென்கச்சி சுவாமிநாதன் ………………சசிகுமார்……எஸ்.வி. சுப்பைய்யா…………கொற்றவை………. சங்க காலம்……

  Ippave Thalaiye Suttuthe……..

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s