சட்டை தைக்கப் பதினைந்து வருஷம்

என்ன எழுதலாம் என்று சட்டைப் பொத்தானைத் திருகியபடி யோசித்துக் கொண்டிருந்தேன்.

யோசிக்கும் போது பொத்தானை திருகுவது, தலையை சொறிவது, மீசையை முறுக்குவது, தாடியை வருடுவது, விரல்களைச் சொடுக்குவது, நகத்தைக் கடிப்பது என்று பல விதமான மானரிசங்கள் உண்டு.

எட்வர்ட் டி போனோ சொன்ன சிந்தனை முறையில் சட்டைப் பொத்தான் பற்றியே யோசிக்க ஆரம்பித்தேன்.

அடிப்படையில் பொத்தான்கள் இணைப்பான்கள். (Fasteners). நைலான் ஜிப்களை சிப் ஃபாஸ்ஸனர்ஸ் என்று சொல்வது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அந்தப் பொத்தான்களுக்கு ஆபரண மதிப்பும், அந்தஸ்து அடையாளமும் கொடுத்த காலங்கள் உண்டு.

பொத்தானின் அடிப்படை அவதாரம் நூல் உருண்டை.

அதற்கப்புறம் தேங்காய் நார் பட்டன்கள். பெரிய பணக்காரர்களும், ஜமின்தார்களும் தங்கப் பொத்தான்கள் வைத்த சட்டை போடுவதைப் பார்த்திருக்கிறேன்.

என் அம்மா வழித் தாத்தாவின் தாத்தா சரபோஜி வம்சத்தின் கடைசி அரசன் சிவாஜி ராவ் போன்ஸ்லே இன் (1833முதல் 1855 வரை)அரண்மனையில் வேலை பார்த்தவராம். அவர் தங்கத்தில் வைரம் வைத்த பொத்தான் போட்ட சட்டை போடுவாராம். (இன்சிடெண்ட்டல்லி, தையற்காரர்களில் முக்கால் வாசிப் பேர் மராட்டியர்கள் என்பதை நினைவில் கொள்க)

“அரண்மனை வாசல்ல ஈட்டியோட நிக்கறதுக்கு இந்த ஜபர்தஸ்த் எல்லாம் எதுக்கு?” என்று கேட்டால் அம்மாவுக்குக் கோபம் வரும்.

நான் படிக்கிற காலத்தில் சட்டைகளில் ஏராளமான பொத்தான்கள் வைத்துத் தைப்பது ஒரு ஸ்டைல். கைகளில் வி கட் வைத்து பொத்தான், சட்டைப் பையில் ஒன்று, தோள் பட்டையில் ஒன்று, முதுகுப்பக்கம், காலர் முனைகள்…….

அரை மீட்டர் துணியும் ஒரு கிலோ பொத்தான்களும் வாங்கித் தந்தால் போதும் சட்டை தைக்க.

வண்ணானுக்குப் போட்டால் காரண்ட்டியாக வரும் போது ஒரு பொத்தான் இருக்காது (ஒவ்வொரு தரமும்). அது மட்டுமில்லை, பளிங்கு மாதிரி இருக்கும் நைலான் பொத்தான்கள் வெள்ளாவியில் டிரான்ஸ்பரன்சியை இழந்து கூழாங்கல் மாதிரி ஆகி விடும்.

டிரான்ஸ்பரண்ட் ஆஃபிஸ்தான் கஸ்டமருக்கு சாடிஸ்ஃபாஷன் தரும் என்று தரக் கட்டுப்பாட்டு விதிகள் சொல்லும் போது எனக்கு இதுதான் ஞாபகம் வரும்.

வண்ணான்களை டிஃபீட் செய்ய நம் முன்னோர்கள் ஒரு வேலை செய்தார்கள்.

சட்டையில் ரெண்டு பக்கமும் காஜா எடுத்து, பொத்தான்களை ஒரு தனி துணிப்பட்டையில் தைத்து வைத்திருப்பார்கள். அதை உறித்து வைத்து விட்டுத்தான் வெளுக்கப் போடுவார்கள்!

காஜா என்றதும் ஒரு பழைய ஜோக் ஞாபகம் வருகிறது.

ஒரு ஆள் வீட்டை ஒழிக்கும் போது பதினைந்து வருஷத்துக்கு முந்தைய தையற்கடை ரசீது ஒன்று கிடைத்ததாம். நாளைக்கு ஆய்டும், நாளான்னிக்கு ஆய்டும் என்று இழுத்தடித்ததில், சட்டையை வாங்காமலே மறந்து போனது ஞாபகம் வந்தது அவருக்கு.

தையற்காரரை கிண்டல் அடிப்பதற்காக அதை எடுத்துக் கொண்டு தையற்கடைக்குப் போயிருக்கிறார்.

“என்னப்பா, இப்பவாவது ரெடியாச்சா?” என்று ரசீதைக் கொடுத்திருக்கிறார்.

அதை வாங்கிப் பார்த்த தையற்காரர் சொன்னது அவருக்குத் தலை சுற்றியதாம்,

“காஜா எடுக்க அனுப்பியிருக்கேன். வேறே ஏதாவது வேலை இருந்தா போய்ட்டு வந்துடுங்க, ஒன் அவர்ல ரெடியாய்டும்”

Advertisements

11 comments

 1. //“காஜா எடுக்க அனுப்பியிருக்கேன். வேறே ஏதாவது வேலை இருந்தா போய்ட்டு வந்துடுங்க, ஒன் அவர்ல ரெடியாய்டும்”//

  எல்லா ஊர்லயும் ஒரே மாதிரியாத்தான் இருபபாங்களா..

 2. நல்லவேளை சட்டை காணாமல் போயிடுச்சின்னோ,துணியே இன்னும் வெட்டலைன்னோ சொல்லாம இருந்தாரே….. 🙂

  சார், தாத்தாவோட தாத்தா சட்டையிலே இருந்த தங்க, வைரப்பொத்தான்கள் ஏதும் வீட்டில் இருக்கா…. 🙂

  பொத்தான் பொதுவான ஆராய்ச்சி அருமை சார்…

 3. பொத்தானைப்பத்தி கூட இப்படி போஸ்ட் போட முடியுமா? கலக்கல்ஸ்.
  Cufflinks பற்றியும் எழுதுவீர்கள் என்று நினைத்தேன். தாத்தாவின் ஜுப்பாவில் இந்த வகை பொத்தான்களை பார்த்திருக்கிறேன். என்னை மிகவும் கவர்ந்தவை.
  டெய்லர் ஜோக் அல்ட்டிமேட்.

 4. “நோ க்கரிய நோக்கே நுணூக்கரிய நுண்ணுண்ர்வே”

  மாணிக்க வாசகர் வழியில் நல்ல thinking sir,

 5. பொத்தானில் கூட இத்தனை கித்தாப்பு உள்ளதா ? …டெய்லர் உடனே தைக்கிறாரோ இல்லையோ , துணி வந்தவுடன் வெட்டி வைத்து விடுவார் ( இல்லை வெட்டியாச்சு என்று சொல்லிவிடுவார் ) 15 வருடம் — இதோ ஒரு மணிநேரம் …நல்ல ப்ராக்டிகல் நகைச்சுவை .

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s