எல்லாருக்கும் தெரிந்த மொழி
எதுவென்று யாரைக் கேட்டாலும்
மெளனம்.
********************************************************************************************************
மெளனமாயிருந்தால் முட்டாளென்று சந்தேகித்தார்கள்
பேச ஆரம்பித்தேன் – இப்போது
யாருக்கும் சந்தேகமில்லை
********************************************************************************************************
மெளனமும் ஒரு மொழிதானாமே?
அதிலும் உண்டா
இலக்கணப் பிழைகள்?
********************************************************************************************************
வருத்தம் தருவது வார்த்தைகள்தான்
வருத்தமே இதுவரை இல்லை – என்
மெளனங்களால்
********************************************************************************************************
பேசக் கிடைத்த வாய்ப்புகளை
விட்டதில் – கிடைத்தவை
மெளனத்தின் வெற்றிகள்
********************************************************************************************************
பேசினால் திரித்துக் கூறுவார்கள்
மொழிபெயர்ப்பில் தவறே வராதது
மெளனம்
********************************************************************************************************
காதலில் மட்டும் சொற்களை விட
தப்பர்த்தம் அதிகமாக வருவது
மெளனங்களில்தான்
********************************************************************************************************
பெண்களுக்கு உங்களைப் பிடிக்கும்
நீங்கள் கவனிப்பதாய்க் காட்டும்
மெளனம்
********************************************************************************************************
இதயத் துடிப்பென்ற தாளத்தில்
இனிய சங்கீதம்
மெளனம்
********************************************************************************************************
வாதங்களை ஜெயித்து விடுகிறார்கள்
எப்போதுமே எனக்குத்தான் வெற்றி
மெளனத்தில்
….(மௌனம் )
” “
அதிர்வுகளால் மனதை அளந்தேன்
எனக்கு புரியவில்லை
மௌனம்?
வார்த்தை ஏதும் வரலை….
20,000 Hz , kalluli mangan, vaaila kozhukattai, mozhi jyothika ,Beethoven, vipassana diyanam ,,,ennoda left ear
//இதயத் துடிப்பென்ற தாளத்தில்
இனிய சங்கீதம்
மெளனம்//
மௌனராகம்… ம்.. கலக்குங்க…
வெற்றி மெளனத்தில்தான்…..
very nice
Uma,
I am honoured! Thank you.
நீங்க ட்விட்டருக்கு வந்து விடலாம்… 🙂
மனதுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்..
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய் !!
நல்ல தொகுப்பு ஜாவர் அண்ணா !!!
ramana maharishi புத்தகம் படிங்க. மௌனம் பத்தி நல்லா எழுதியிருப்பார்.(சொல்லியிருப்பார்)
சுவையான வரிகள் ஜவகர்!
ஊமையின் இலக்கியம் என்று எப்போதோ படித்தது அறைகுறையாக நினைவுக்கு வருகிறது.
மௌனம் … உலகில் பல சமயங்களில் சிறந்த மொழி .. ( நான் பதில் தெரியாமல் உட்கார்ந்து இருக்கும் பல சமயங்களில் என் நண்பர்கள் ” என்ன அமைதி, அடக்கம் …….. என்று அடுக்கி கொண்டே போவார்கள் எனவே மௌனம் சில சமயங்களில் அழகான தப்பிப்பு மொழியும் கூட..) .. உங்கள் டச்சில் மௌனம் நன்றாகவே பேசுகிறது ..
மௌனம் கலக நாஸ்தி. இதன் அர்த்தம் இதுதான். என்ன மொழியோ?
மௌனம் சம்மதம் .