கடவுள் கணக்கில் வீக்கா?

ராமுவும் சோமுவும் நண்பர்கள்.

சோமு மகா பேராசைக்காரன். ராமுவுக்கு எது கிடைத்தாலும் அது மாதிரி இரட்டைப் பங்கு தனக்கு வேண்டும் என்று நினைப்பான். அதனால் ராமுவை நைச்சியம் செய்தோ, ஏமாற்றியோ, மிரட்டியோ எப்படியாவது சாதித்துக் கொண்டு விடுவான்.

கடவுள் சோமுவுக்கு பாடம் கற்பிக்க விரும்பினார்.

ஒரு நாள் இரண்டு பெரும் நடந்து போய்க் கொண்டிருந்த போது அவர்கள் எதிரில் தோன்றினார்.

“நான் உங்கள் இருவருக்கும் பணம் தரப் போகிறேன். ஆனால் ஒரு கண்டிஷன், முதல் ஆளுக்கு எவ்வளவு தருகிறேனோ, அதனுடைய வர்க்கத்தை (Square ) இரண்டாம் ஆளுக்குத் தருவேன்” என்றார்.

ஆஹா, நல்ல கண்டிஷனாக இருக்கிறதே, அவனுக்கு எக்ஸ் என்றால் எனக்கு எக்ஸ் ஸ்கொயர், என்று சந்தோஷப்பட்ட சோமு, வழக்கப் படி,

“ராமு முதல்ல நீ கேளு” என்றான்.

இது கடவுள் எதிர்பார்த்ததுதான்.

“ஐம்பதாயிரம் ரூபாய் வேணும்” என்றான் ராமு.

“முட்டாள், கடவுள் எவ்வளவு கேட்டாலும் தருவார், ஜாஸ்தி கேள்” என்றான்.

“ம்ம்ஹூம். எனக்கு ஒரு நிலம் வாங்குகிற அளவு பணம் போதும்” என்றான் ராமு.

பரவாயில்லை.

பெருக்கிப் பார்த்தான். எத்தனை சைபர் என்று கூட எண்ண முடியவில்லை. இருநூற்று ஐம்பது கோடி வரும், போதாதா?

கடவுள் ராமுவுக்கு ஐம்பதாயிரம் கொடுத்தார்.

சோமு, ஒரு கோடியையே சூட் கேசில் வைக்க முடியாது என்று என்கிறார்களே, இருநூற்று ஐம்பது கோடியை எங்கே வைப்பது? என்று யோசித்தான். எல்லாம் ஆயிரம் ரூபாயாகக் கொடுத்தால் கூட இருபத்தைந்து லட்சம் நோட்டுக்கள் வருமே?

இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த போது கடவுள் சோமுவிடம் இருபத்தைந்தாயிரம் ரூபாயைக் கொடுத்தார்.

சோமு கடவுளைக் கிண்டலாகப் பார்த்தான்.

“சாமி, என்ன கணக்கில வீக்கா? ஐம்பதாயிரம் இண்ட்டு ஐம்பதாயிரம் என்ன விடைன்னு தெரியாதா?” என்று கேட்டான்.

அதற்குக் கடவுள் சொன்ன பதில் அவனுக்குத் தலை சுற்றியது. அதிர்ச்சியாக இருந்தது.

அன்றோடு பேராசையை விட்டு விட்டான்.

கடவுள் சோமுவிடம் என்ன சொன்னார்?

Advertisements

17 comments

 1. மோசமான வர்க்கம் நீங்க… கணக்கு வரலன்னுதானே நான் பள்ளிகூடத்தை விட்டு ஒடிவந்தேன்… மறுபடியுமா?.. கடவுளே இந்த மனசங்கிட்டருந்து என்ன காப்பாத்து.

 2. ஒரு நாளுக்கு 2 ஸ்கொயர் மீல்ஸ், என்றால் சரி சமம்.

  இரண்டால் பெருக்கினாலும் ஸ்கொயர் வரும்!

  ஒருவனின் இரு மடங்கு?

  *

  உங்க நம்பர் மிஸ்ஸாகி ஹோசூரில் இன்று மதியம் மீட் பண்ணலே. புது போன் மாற்றியதில் குழப்பம். இமெயில் பண்ணுங்கோ. ஸாரி.

 3. கணக்கு டீச்சர் மண்டையை உடைத்து பள்ளிகொடத்தை விட்டு ஓடி வந்தவன் நான்… எங்கிட்டயா கேள்வி கேட்கறீங்க… நேர்ல வாறன்.

 4. Gods logic is this:
  god used ‘thousand’ as unit of measurement.
  like if 2 ‘houses’, square of it is = 4 ‘houses’

  so if ramu get 5 ‘something’ somu gets square of it = 5^2=25 ‘something’ . here something is thousand.

  but still somu get more money than ramu 🙂

 5. வர்க்கம், வர்க்க மூலம் படிச்ச வர்க்கம் தான் என்றாலும் வர்க்கம் வர்க்கம்ன்னு வர்க்கத்தைப் பத்தி நீங்க கேட்கும்போது வர்க்கம் பற்றி வர்க்கம், வர்க்கமா வருத்தம் வருகிறது.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s