தீவிரவாதிகளிடமிருந்து எப்படித் தப்பினேன்?

போன வாரம் புனா போயிருந்த போது அந்த பயங்கரம் நடந்தது.

சோரி பசார் என்று அழைக்கப்படும் அந்த இடம் புனாவில் என் அபிமான இடம். மூர் மார்க்கட் மாதிரியான இடம். ஆயிரத்தைன்நூறு ரூபாய்க்கு டிரில்லிங் மிஷின், அறுநூறு ரூபாய்க்கு ஸ்ப்ரே பெயிண்டிங் கன், ஐநூறு ரூபாய்க்கு காருக்கு கம்ப்ளீட் டூல் கிட் என்று ஆச்சரியமான விலைகளில் அபூர்வமான பொருட்கள் கிடைக்கும்.

இது எல்லாவற்றையும் விட பழைய ஆர்.டி.பர்மன் பாடல்கள் அடங்கிய குறுந்தகடுகள் மாட்டும்.

அன்றைக்கும் பீராய்ந்து கொண்டிருந்தேன்.

திடீரென்று பின்னால் பரபரப்பு.

சினிமா ஷூட்டிங்கா, நிஜமா என்று ஆச்சரியப்படுகிற மாதிரி சம்பவம்.

போலீஸ் ஜீப்புக்குள் டமால் டுமீல் என்று அடிதடி. ஜீப் தடுமாறி சாலையில் இடமும் வலமுமாகப் போயிற்று. எல்லாரும் சிதறி ஓடினார்கள். ஜீப்புக்குள்ளிருந்து கையில் விலங்கிடப்பட்ட இரண்டு பேர் துள்ளி விழுந்து சாலையில் புரண்டு எழுந்து நின்றார்கள்.

போலீஸ்காரர்கள் சரமாரியாக சுட இவர்கள் இரண்டு பேரும் இசட் இசட்டாக ஓடி சமாளித்தார்கள். அப்படியும் ஒரு குண்டு அவர்கள் மேல் பாய்ந்து விட்டது. ஒருத்தன் கையில் அடிபட்டு விழுந்தான். விலங்கு உடைந்ததில் இன்னொருத்தன் தப்பி ஓடினான்.

விழுந்தவனைப் போலீஸ்காரர்கள் திரும்பப் பிடித்து விட்டார்கள். தப்பினவனை நோக்கி சுட்டார்கள்.

அப்போதுதான் நான் சற்றும் எதிர்பாராத அந்த சம்பவம் நடந்தது.

ஓடியவன் கையை வி மாதிரி வளைத்து என் கழுத்தைப் பிடித்துக் கொண்டான்.

சினிமா ஹீரோக்கள் மாதிரி அப்படியே துள்ளித் திரும்பி அவன் முகத்தில் ஒரு குத்து-

விட வேண்டும் என்று ஆசைதான், நகரவே முடியவில்லை.

“டிரிக் ஏதாவது பண்ணென்னா இதுதான் உன் வாழ்க்கையோட கடைசி நாள்” என்று ஹிந்தியில் காதருகே சொன்னான்.

போலீஸ்காரர்கள் சுடுவதை நிறுத்தினார்கள்.

எங்கிருந்தோ ஒரு மாருதி ஜிப்சி வந்தது.

அதில் என்னையும் ஏற்றி அவனும் ஏறிக் கொண்டான். போலீஸ்காரகளைப் பார்த்து,

“இந்த ஆள் உயிறோட வேணும்ன்னா அவனை நீங்க ரிலீஸ் பண்ணி ஆகணும்” என்றான்.

“அதெல்லாம் நடக்காது” என்றார்கள் போலீஸ்.

“அதுவரைக்கும் நான் இவனை விடறதில்லை” என்று வண்டியை எடுத்தார்கள்.

எனக்கு மரண பயத்தில் நாக்கு வரண்டு கைகால் எல்லாம் உதறியது.

இப்போது என்ன செய்வது?

வடிவேலு போல அய்ய்ய்ங் என்று அழுவதா இல்லை எதுவுமே நடக்காத மாதிரி கேஷுவலாக உட்கார்வதா?

“யோவ், நான் வெளியூர்க்காரன். கொஞ்சம் கூட முக்கியத்துவம் இல்லாத ஒரு வெத்து வேட்டு. என்னைக் காப்பாத்தணும்ன்னு போலீசுக்கு எந்தக் கவலையும் கிடையாது. நான் செத்தா கூட சத்தமில்லாம புதைச்சிட்டு போய்கிட்டே இருப்பாங்க” என்றேன் கூடுமான வரைக்கும் அசர்ட்டிவாக.

“அப்படியெல்லாம் போலீஸ்காரங்க ஒருத்தனை சாக விட மாட்டாங்க”

“என்னை யாருன்னே அவங்களுக்குத் தெரியாதுய்யா”

“போனப்புறம் போன் பண்ணலாம். அப்ப சொல்லு அவங்களுக்கு விளக்கமா”

“அவங்கதான் எனக்குக் கவலை இல்லேன்னு சொல்லிட்டாங்களே”

“முதல்லே அப்படித்தான் சொல்வாங்க’

அவர்கள் விடுவதாக இல்லை.

எனக்குப் பால் புனாவில்தான்.

ஏசு, அல்லா, வெங்கடாசலபதி எல்லாரையும் வேண்டிக் கொண்டேன். வேளாங்கன்னி மாதாவுக்கு வெள்ளியில் ஆள் உருவம் போடுவதாக வேண்டிக் கொண்டேன்.

என்னைக் கொண்டு போய் அத்வானத்தில் இருந்த ஒரு வீட்டில் இருட்டான அறையில் தள்ளினார்கள்.

“இங்கேயே கிட, நாங்க சாப்ட்டு வறோம்” என்று போய் விட்டார்கள்.

எல்லாரும் போனப்புறம் சுதந்திரமாக அழுதேன். கடவுளை கண்டபடி திட்டினேன்.

கொஞ்ச நேரத்தில் அறைக்கதவு திறந்தது.

மெல்லிய கீற்றாகத் தெரிந்த வெளிச்சத்தில் ஒரு அழகான பெண் தெரிந்தாள்.

அசப்பில் தமன்னா மாதிரி இருந்த அவள்,

“நான் என் புருஷனுக்கு துரோகம் செய்யப் போகிறேன்” என்று சொல்லிக் கொண்டே என்னை நெருங்கினாள்.

(மீதி நாளை)

Advertisements

9 comments

 1. இதெல்லாம் 19 வருஷத்துக்கு முன்னாடியே நாங்க ஒரு படத்துல பார்த்தாச்சே.. அதான் சார், ரோஜா! காதல் ரோஜாவேன்னு பாட்டு பாடுவீங்கன்னு பார்த்தா அதுக்குள்ள அடுத்த ஃபிகர் எண்ட்ரீயா?
  எல்லாரும் போனப்புறம் சுதந்திரமாக அழுதேன். கடவுளை கண்டபடி திட்டினேன்.
  :-)).. எப்படி சார் இப்படி எல்லாம்? உங்க கீபோர்டுல தான் எழுத்துக்கள் இப்படி விழுமோ? அதகளம்!

 2. //அசப்பில் தமன்னா மாதிரி இருந்த அவள்…//

  தமன்னோவோட படம் ஒண்ணு போட்டிருக்கலாமே….

  இப்படிக்கு
  தமன்னா ரசிகரின் ரசிகன்

  🙂

 3. //“நான் என் புருஷனுக்கு துரோகம் செய்யப் போகிறேன்” என்று சொல்லிக் கொண்டே என்னை நெருங்கினாள்.//

  எனக்கு புரிஞ்சிடுச்சு.. அவங்க உங்கள தப்ப விட்டுடாங்க சரியா?

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s