கால் மேல் கால் போட்டா தப்பா?

நேற்று விஜய் டிவியில் நீயா நானாவில் எடுத்துக் கொண்டது ஒரு எவர் கிரீன் தலைப்பு.

மூத்த தலைமுறைக்கும், இளைய தலைமுறைக்கும் மரியாதையிலும் கீழ்படிதலிலும் புரிதலில் இருக்கும் வேறுபாடுகள்.

திருநெல்வேலியிலிருந்து வந்திருந்த ஒரு மூத்த தலைமுறைப் பெண்மணிக்கு சிறப்பாகப் பேசியதற்கு பரிசு தந்தார்கள். அந்தப் பெண்மணியின் தோற்றம் எதிர் அணியில் உட்காரப் பொருத்தமாக இருந்தது!

ரொம்பப் பரவலாகச் சொல்லப்பட்ட ஒரு புகார், பெரியவர்களுக்கு எதிரில் கால் மேல் கால் போட்டு உட்காருவது.

எதிரில் கால் மேல் கால் போட்டு உட்காரும் இளசுகளைப் பார்த்தால் உறுத்தலாகவும், வருத்தமாகவும் இருக்கும் என்று எல்லாருமே குறிப்பிட்டார்கள். இதைக் கேட்ட பிறகும் யாரும் எடுப்பதாகத் தெரியவில்லை. அதை கோபி ஹைலைட் செய்தும் புண்ணியமில்லை.

கால் மேல் கால் போடுவது அவமரியாதை இல்லை என்பது இளையவர்களின் வாதம். அது தன்னம்பிக்கையாம்!

இதை கோபி சுட்டிக் காட்டி சிறப்பு விருந்தினர் ஞானிக்கு விளக்கினார்.

ஞானி உடனே கால் மேல் கால் போட்டுக் கொண்டார்.

ஞானியின் மனித நேயம் சிலிர்க்க வைத்தது.

இந்த விஷயத்தில் நான் பெரியவர்கள் கட்சிதான்.

ஒரு நேர்முகத் தேர்வுக்குப் போகிறேன். அங்கே என்னை விட வயதில் பெரியவர் உட்கார்ந்திருக்கிறார். நான் கால் மேல் கால் போடுவது என் தன்னம்பிக்கையைக் காட்டுவதாக நான் நினைக்கலாம். அவர் அதை அவமதிப்பாகத்தான் கருதுவார். என்னளவு திறமை இருந்து, மரியாதையாக உட்கார்ந்தவனுக்குத்தான் முன்னுரிமை தருவார் என்பது வெளிப்படை.

தலைமுறை ரொம்ப மாறி விட்டது.

பாசையும், புருஷனையும் பெயர் சொல்லி அழைப்பது, ஒருமையில் விளிப்பது, (என் நண்பரின் மகள் மாமியாரிடமே ரங்கு வந்துட்டானா? என்று விசாரிப்பாள். அந்த அம்மாளுக்கு முகம் இஞ்சி கடித்த மாதிரி ஆகும்) இதெல்லாம் மியூச்சுவலி அக்ரீ ஆன விஷயங்கள் என்பதால் ஓக்கே.

எதிராளி வருத்தப் படுகிறார் என்று தெரியும் போது அப்படிச் செய்யாமல் இருப்பதுதானே நாகரீகம்?

ரயிலில் போய்க் கொண்டிருந்தார் ஒருவர்.

பக்கத்தில் ஒரு இளம் பெண்.

“நான் கால் மேலே கால் போடறதிலே ஆட்சேபனை இல்லையே?” என்றார் இவர்.

இவருடைய நாகரிகத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டு, “சேச்சே… இதுல என்ன சார் இருக்கு?” என்றாள் அவள்.

உடனே இவர் பச்சக் என்று காலைத் தூக்கி அவள் கால் மேல் போட்டாராம்.

கால் மேல் கால் போடுவது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? (இந்த ஜோக்கில் போட்டவர் பற்றி இல்லை)

Advertisements

17 comments

 1. //கால் மேல் கால் போட்டா தப்பா?//-
  இந்த கேள்விக்கு…

  //எதிராளி வருத்தப் படுகிறார் என்று தெரியும் போது அப்படிச் செய்யாமல் இருப்பதுதானே நாகரீகம்?// – இதுதான் பதில்…..

  //உடனே இவர் பச்சக் என்று காலைத் தூக்கி அவள் கால் மேல் போட்டாராம்.//

  கை மேல் கை விழுந்திருக்குமே இவர் முதுகில்… 🙂

 2. குளிர்ப்ரதேசங்களில் குளிருக்கு அடக்கமாக கால் மேல் கால் போட்டுப் பழக்கப் பட்டவர்கள் அதையே வழக்கமாகக் கொண்டுவிட்டார்கள். இப்படிச் சொலபவர்கள் உண்டு. அதெல்லாம் நாகரீகம் என்று நம்மவர்கள் நினைத்து விட்டார்கள்.
  மரியாதைக் குறைவாகப் பட்டால் பெரியவர்கள் அந்தயிடத்தைவிட்டு பார்த்தும் பார்க்காதது போல் அகன்று விடுவதுதான் நாகரீகமாக இருக்கிரது.
  வேறு வழியில்லை. இது உத்தியோக
  லட்சணம். சொல்கிறவர்கள் நாகரீகமற்றவர்கள் என்ற எண்ணம் தான் மேலோங்கும்.

 3. கால் மேலே கால் போடுவர் வயது 30க்குள் இருக்கவேண்டும்.

  பெண்ணாக இருக்கவேண்டும்.

  அவர் வெள்ளைக்காரிமாதிரி அரைக்கால் சட்டைபோட்டிருக்க வேண்டும்.

  அவர் அப்படி உட்கார்ந்தால், மரியாதையாவது மண்ணாங்காட்டியாவது?

 4. //இந்த விஷயத்தில் நான் பெரியவர்கள் கட்சிதான்.

  ஒரு நேர்முகத் தேர்வுக்குப் போகிறேன். அங்கே என்னை விட வயதில் பெரியவர் உட்கார்ந்திருக்கிறார். நான் கால் மேல் கால் போடுவது என் தன்னம்பிக்கையைக் காட்டுவதாக நான் நினைக்கலாம். அவர் அதை அவமதிப்பாகத்தான் கருதுவார். என்னளவு திறமை இருந்து, மரியாதையாக உட்கார்ந்தவனுக்குத்தான் முன்னுரிமை தருவார் என்பது வெளிப்படை.

  //

  I agree with you.

 5. எதிராளி வருத்தப் படுகிறார் என்று தெரியும் போது அப்படிச் செய்யாமல் இருப்பதுதானே நாகரீகம்//

  சகல விதத்திலும் அதுதான் நாகரீகம்.
  மேலும்,

  இப்போதைக்கு பாத்ரூம் பக்கம் போக முடியாது என்ற நிலை வரும்போது கால் மேல் கால் போட்டு உட்காருவது …தப்பில்லை இல்லை வேறு வழி இல்லை…!

 6. Boys Padathula indha kaal mel kaal potu ukkarathu pathi solliruparu shankar.

  Ilasukalukku kaal mel kaal pottu ukkanthathan control pannmudiyum apdingara podhu thappilla.

  Andtha padam paartha piragu kaal mel kaalpottu ukkarum pengal la paatha romba moodla irukkanganuu than thonum

 7. இது இடத்திற்கு இடம், கலாசாரத்திற்கு கலாச்சாரம் வேறுபடுகிறது. உதாரணமாக நான் சிறுவனாக வளரும் காலத்தில் “எப்போ பார்த்தாலும் வள வளன்னு பேசக்கூடாது” என்று சொல்லி வளர்க்கப்பட்டது, இங்கிலாந்து சென்ற போது நான் சோசியல் ஸ்கில்ஸ் இல்லாதவனாக சுட்டி காட்டப்பட்டேன். எவ்வளவு முயற்சி செய்து பார்த்தாலும் அந்த conditioning சென்ற பாடில்லை. இதன் காரணமாகவே என்னுடைய பதவி உயர்வுகள் பல எனக்கு கிடைக்கவில்லை. இதற்க்கு அந்த பெரியவர்கள் என்ன சொல்ல போகிறார்கள்?

 8. கால் மேல் காலுக்கு ஒரே கால் மேல் காலா இருக்கு .. ஒருக்கால் ,இது அனைவரும் கடந்த விஷயமாக இருக்கும். சில உடல் மொழிகள் நிச்சயம் அருகில் இருக்கும் பெரியவர்களை எரிச்சல் ஏற்படுத்தும் . அதில் கால் மேல் காலும் , காலாட்டலும் முன்னணியில் இடம்பெறுகின்றன.. ”பச்சக்” அப்பறம் ”சப்பக்” ஆகி இருக்குமே…

  1. பத்மநாபன், எனக்கு எரிச்சல் தருகிற சில விஷயங்கள்லே முக்கியமானது பப்பிள் கம் மென்று கொண்டே பேசுவது. எங்க ஆபீஸ்ல சில பொறியாளர்கள் நச்சக் நச்சக் என்று மென்று கொண்டே ‘ப்ராஜக்ட் ப்ராக்ரஸ் ரிப்போர்ட் வெச்சிருந்தேனே பாத்தீங்களா?’ என்று கேட்கும் போது உன் ஆன்னுவல் ரிப்போர்ட்டுல சுழிச்சிடறேன் என்று சொல்லத் தோன்றும்.

 9. இது போன்ற பழக்கங்கள் வருவதற்கு பெற்றோரே காரணம்.

  தங்கள் பாஸைப் பற்றி வீட்டில் பேசும்போது அவன் இவன் என்று பேசுவது, சில நேரங்கள் கெட்ட வார்த்தை பிரயோகப் படுத்துவது

  உறவினர்களில் சில மூத்தவர்களைப் ப்ற்றி பேசும்போது அவன் இவன் என்று குறிப்பிடுவது சாதாரணமாகத் தோன்றினாலும் இவை குழந்தைகள் மனதில் நன்கு பதியும். அவர்களுக்கு வித்தியாசப் படுத்த தெரியாத காரணத்தால் பொது இடத்தில் எல்லாப் பெரியவர்களையும் அவர்களைப் பற்றி பேசும்போது அவன் இவன் என்று சொல்கிறார்கள்.

  குழந்தைகளின் பல செயல்களுக்கு பெற்றோரே காரணம். காலையில் வெகுநேரம் தூங்கும் பெற்றோரின் குழந்தைகள் அதையே பழகுகின்றன. பாஸிடம் பொய் செல்லும் பெற்றோரின் குழந்தைகள் பெற்றோரிடம் பொய் சொல்லிப் பழகுகின்றன.

  கால் மேல் கால் போட்டு அமர்வது தன்னம்பிக்கைதான் இதில் எந்த சந்தேகமும் இல்லை. எதிரில் அமர்பவரை விட நாம் சற்று உயர்ந்தவர் என்ற தன்னம்பிக்கை. ஆனால் அது என்றுமே ஆபத்தில்தான்கொண்டு போய் விடும்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s