மங்கையாழ்வார் சொன்ன மருத்துவர் யார்?

டாக்டரைப் பார்க்கப் போகும்போதெல்லாம்  Patient என்கிற வார்த்தைக்குப் பொருத்தமில்லாதவன் என்று நிரூபித்து விடுவேன்.

பொறுமையே சுத்தமாக இருக்காது.

பெரும்பாலும் தலைவலி, ஜுரம், ஜலதோஷம், வாயுத் தொல்லை என்கிற மாதிரி ஆபத்தில்லாத சீக்குகளுக்குத்தான் டாக்டரைப் பார்க்கப் போகிறோம். அதற்குப் போய் எம்டி, எப்ஆர்சிஎஸ் எல்லாம் அவசியமே இல்லை. எத்தனை பெரிய டாக்டரைப் பார்க்கப் போகிறோமோ அத்தனை டார்ச்சர் இருக்கும்.

ஒரு டோக்கனை வாங்கிக் கொண்டு ‘எங்கப்பன கண்டியோ’ என்று உட்கார்ந்திருக்க வேண்டும்.

சில பேஷன்ட்டுகள் டாக்டரோடு கிகிக்கீ என்று இளித்து பொறுமையாகப் பேசிக் கொண்டு இருப்பார்கள். கசினுடைய மச்சினிக்கு காம்பஸ் இன்டர்வ்யூவில் மோட்டரோலாவில் செலெக்ட் ஆனது, கிரிஸ் கேல் வரிசையாக சிக்சர் அடித்து பந்துகளை சாக்கடைக்கு அனுப்பினது என்று அடுத்தவனின் பிராணம் போவது தெரியாமல் பேசுவார்கள்.

நம்முடைய டர்ன் வரும்போது ஒரு சேல்ஸ் ரெப் உள்ளே போவான்.

இதெல்லாமாகச் சேர்ந்து டாக்டர் பிபியும், பல்சும் பார்க்கிற போது பயமுறுத்தும்.

“ஆபிஸ்ல டென்ஷன் ஜாஸ்தியா?” என்பார் டாக்டர்.

“அதை விட உங்க கிளினிக்லதான் டென்ஷன் ஜாஸ்தி” என்பேன்.

இது பரவாயில்லை.

டோக்கன் இல்லாத கிளினிக்குகள் இன்னும் மோசம்.

டாக்டர் ரூமுக்கு வெளியே தீ விபத்து ஆன இடத்து எமர்ஜன்சி எக்சிட் மாதிரி கூட்டம் நிற்கும். மராத்தான் ரேசுக்கு ஒன் டூ த்ரீ சொல்லக் காத்திருக்கிற மாதிரி காத்திருப்பார்கள். முன்னால் போன பேஷன்ட் முழுசாக வெளியே வருமுன் ஏழு பேர் கேட் கிராஷ் செய்து அவரை மல்லாக்க விழ வைத்து மேலே ஏறி நடந்து போவார்கள்.

இதையெல்லாம் பார்த்து விட்டுத்தான் ஓசூர் வந்த புதிசிலேயே கூட்டமே இல்லாத ஒரு டாக்டரைத் தேர்ந்தெடுத்தேன்.

இஎஸ் ஐ யில் வேலை பார்த்து ரிடையர் ஆனவர். மலிவான மருந்துகளை எழுதித் தருவார். இருபது ரூபாய்க்கு மேல் பீஸ் வாங்குவதில்லை. போனால் உடனே பார்த்து விட்டு வந்து கொண்டே இருக்கலாம். அவருடைய திறமைக்கு மிஞ்சின சீக்கு இதுவரைக்கும் வந்ததில்லை. (கூத் கொள்ளு மேட்டர் வேறே. அது மாதிரி பிரச்சினைகள் வருஷத்தில் ஒரு தரம் வந்தால் ஜாஸ்தி)

ஓசூரை விட்டுக் கிளம்ப சில தினங்களே இருப்பதால், ஆஸ்தான டாக்டரிடம் விடை பெறப் போயிருந்தேன்.

அங்கே, கையில் கட்டி வந்த என் சிகை அலங்காரக் கலைஞர் வந்திருந்தார்.

டாக்டர் அந்தக் கட்டியை லாவகமாகக் கத்தி வைத்து ஒப்பன் செய்து சீழை எடுத்துக் கொண்டிருந்தார்.

நண்பர், மலச்சிக்கல் வந்தவன் ஆய் போவது போல முகத்தை வைத்துக் கொண்டு பொறுமையாகக் காட்டிக் கொண்டிருந்தார். முடிந்ததும் குரலில் அன்பு சுரக்க,

“தாங்க்ஸ் டாக்டர்” என்றார்.

டாக்டர் சிரித்து விட்டு “வெட்டினதுக்கு தாங்க்ஸ் கிடைக்கிற ஒரே புரபஷன் நம்முதுதான்” என்றார்.

“அதனாலதான் டாக்டர் திருமங்கை ஆழ்வார், கடவுள் மேல இருக்கிற பிரியத்தை ‘வாளால் அறுத்துச் சுடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் நோயாளன் போல்ன்னு’ சொன்னார் ” என்றேன்.

“வாளால அறுக்கிறது சரி. அதென்ன சுடறது?” என்றார் டாக்டர்.

“அப்பல்லாம் எம்பிபிஎஸ் எபார்சிஎஸ் எல்லாம் ஏது டாக்டர்? செப்டிக் ஆகாம இருக்க சூடு வைப்பாங்களாம். இப்பக் கூட பாம்புக்கடி முதலுதவியில கடி வாய்ல சூடு வைக்கணும்ன்னு எழுதியிருக்கிறதைப் படிச்சிருக்கேன்”

“கடிச்ச வாயை சூடு வைக்கணும்ன்னு எழுத நினைச்சி தப்பா எழுதியிருப்பாங்க”

குறுக்கிட்ட என் சிகை அலங்கார கலைஞர்,

“திருமங்கை ஆழ்வார் செய்யுள் ஏதோ சொன்னீங்களே, திரும்ப சொல்லுங்க?” என்று கேட்டார்.

சொன்னதை மறு ஒலிபரப்பு செய்தேன்.

சிரித்துக் கொண்டார்.

“ஏன் சிரிக்கிறீங்க?” என்றேன்.

“நாங்கள்லாம் கூட வாளால சில நேரம் முகத்தை அறுத்திடறோம். இப்பன்னா ஆண்ட்டி செப்டிக் லோஷன் போட்டுடறோம். அந்தக் காலத்தில சூடு வெச்சிருப்பாங்க. எங்களுக்குக் கூட மருத்துவர்ன்னு பேரு உண்டு சார். திருமங்கை ஆழ்வார் சொன்ன மருத்துவர் நாங்களாக்கூட இருக்கலாம்!” என்றார்.

Advertisements

7 comments

 1. //மராத்தான் ரேசுக்கு ஒன் டூ த்ரீ சொல்லக் காத்திருக்கிற மாதிரி காத்திருப்பார்கள். முன்னால் போன பேஷன்ட் முழுசாக வெளியே வருமுன் ஏழு பேர் கேட் கிராஷ் செய்து அவரை மல்லாக்க விழ வைத்து மேலே ஏறி நடந்து போவார்கள்.//

  Ha…ha..ha…..a haaaa….

 2. அழகான கோர்வை …அனேகமாக அனைவர்க்கும் வரி தப்பாமல் கிடைக்கும் அனுபவம் … டோக்கன் விஷயம் ஊட்டி டாக்டர் ஒருவரிடம் அனுபவ பட்டிருக்கிறோம் ..திருப்பதி தரிசினம் கூட்டம் மொய்க்கும் ..அதே போல் கோவையில் டோக்கன் இல்லா டாக்டர் ஒரே சமயத்தில் எழு ,எட்டு பேர்
  அஷ்டவதானி மாதிரி , வைத்தியம் பார்ப்பார் ..ஒன்னு ரெண்டு வைத்தியம் , மருந்து, மாத்திரை, ஊசி மாறும் .. இருந்தாலும் கை ராசியான டாக்டர் ..அதோடு ரெண்டு ரூபாய்க்கு ஊசி போட்டு மனசுலேயே வியாதியே குணமாய்டும் … ப்ராக்டிகல் பதிவு .. சிகை நிபுணர்கள் தான் பெரும்பாலான கிராம , சிறுநகரங்களில் ஆல் இன் ஆல் ஆழகு ராசாக்கள் … மருத்துவர் என்ற பெயர் சரியாக பொருந்தும் .. குலிகை கொடுப்பார்கள் குறிப்பாக சுளுக்கு எடுப்பார்கள் அதிலும் கழுத்து சுளுக்கு நிபுணர்கள் .. அரை நொடி சடக்.. சடக் ..தலை இருந்தால் கண்டிப்பாக கழுத்தில் சுளுக்கு போயிருக்கும் ..நன்றாக சிரிக்க வைத்த பதிவு …நன்றிகள் ..

 3. டாக்டர்கள் குறித்த கருத்துக்கள் அனைத்தும் அருமை. எனக்கு தெரிந்த குழந்தை மருத்துவர் ஒருவர் இரண்டு மணி நேரத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பார்ப்பார். என்ன என்று கேட்பார். மருந்து எழுதி கொடுப்பார். குழந்தைகளை தொட்டு கூட பார்ப்பது கிடையாது. நிமிர்ந்து கூட பார்க்கமாட்டார். நமக்குதான் மனம் பதைபதைக்கும்.அவரைப் பொறுத்தவரை அந்த இரண்டு மணி நேரத்தில் எவ்வளவு சம்பாதிக்கலாம்.
  அவர் எழுதி தரும் மருந்துகளும் அவரின் மருந்தகத்தில் மட்டுமே கிடைக்கும். வெளியில் எங்கும் கிடைக்காது. 😦

  மனதிற்கு இதம் தரும் கருத்துக்களை சொல்லும் நீங்களும் எங்களுக்கு மருத்துவர்தான் சார். 🙂

  அப்போ இனிமேல் சென்னைவாசியா..

  சென்னை உங்களை வம்புடன் வரவேற்கிறது. 🙂

 4. (கூத் கொள்ளு மேட்டர் வேறே. அது மாதிரி பிரச்சினைகள் வருஷத்தில் ஒரு தரம் வந்தால் ஜாஸ்தி)

  இது மட்டும் புரியலை!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s