அத்தனை கோடி இன்பமும் எனக்கே!

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என்று பாரதி எழுதின பாட்டு தன்யாசி ராகத்தில் மனசில் ஒலிக்கிறது. (லலித், ராஜ்குமார் பாடினது தன்யாசிதானே?)

நான் விரும்புகிற விஷயங்களுக்காக முழு நேரத்தை செலவிடுகிற நிலைக்கு வந்தாயிற்று.

என் பிரியமான அசோக் லைலாண்டுக்குப் பிரியாவிடை கொடுத்தாயிற்று!

நான் வேறே எங்கேயும் வேலைக்குப் போகவில்லை, எழுத்தில் இருக்கிற, சங்கீதத்தில் இருக்கிற ஆர்வத்தில்தான் போகிறேன் என்று சொன்னால், காய்ச்சல் அடிக்கிறதா என்று தொட்டுப் பார்க்கிறார்கள்!

“உனக்கு மெட்ராஸ் போக வேண்டும் என்பதுதான் ஆசை என்றால் நான் டிரான்ஸ்ஃபர் கொடுத்திருப்பேனே?” என்றார் என் அன்பான பொது மேலாளர் ஹரிஹர்.

“அதுக்கு எதுக்கு சார் டிரான்ஸ்ஃபர், டிக்கெட் இருந்தா போறாதா?” என்று சிரித்தேன்.

“நீ ஒரு அன் ப்ரெடிக்டபிள் ஆள் என்கிறதை கடைசி வரைக்கும் மெயிண்ட்டைன் பண்ணிட்டே”

“நான் அன் பிரெக்ட்டபிள் என்கிறதை பிரெடிக்ட் பண்ண வெச்சிருக்கேனே, அப்ப நான் பிரெக்ட்டபிள்தானே?”

“ம்ம்ஹூம்… நீ போய்டு… அதான் சரி. இல்லைன்னா நிறைய பேர் கீழ்ப்பாக்கம் போக வேண்டியிருக்கும்”

“பாத்தீங்களா… செத்தும் கொடுத்தான் சீதக்காதிங்கிற மாதிரி நான் போறதில கூட எத்தனை பெரிய சர்வீஸ் இருக்கு பாருங்க”

நிறையப் படிக்க வேண்டும். நிறைய எழுத வேண்டும்.

அப்புறம் படிக்கலாம் என்று வாங்கி வைத்த புத்தகங்கள் ஒரு அலமாரி நிறைய இருக்கின்றன. டாவின்சி கோடை முழுசாகப் படிக்க வேண்டும். என் எல் பி யை முழுசாகப் படிக்க வேண்டும்.

என் எல் பி யை தொழிலாளிகள் புரிந்து கொள்கிற மாதிரி, ஸ்ரீதரனின் வானமே எல்லை மாதிரி ஒரு புரோகிராம் பண்ண வேண்டும்.

நிறைய மேலாண்மை, தர நிர்ணய சங்கதிகளை கொஞ்சம் நகைச்சுவையாக புத்தகமாக எழுத வேண்டும்.

தியாகராஜ கீர்த்தனைகளை நவீன இசைக்கருவிகளோடு 5.1, 3டி, பைனாரல் யுக்திகளைப் பயன்படுத்தி குறுந்தகடுகளாக கொண்டு வரவேண்டும்.

உயர்ந்த புத்தகங்களைப் படிக்கிற சிரமமின்றி ஒலி நூல் நிலையமாகக் கொண்டு வந்து, சவுண்ட் எஃபெக்ட்களோடு கேட்கிறமாதிரி செய்ய வேண்டும்.

எவ்வளவோ ஆசைகள்!

எல்லாம் நிறைவேறுமோ இல்லையோ, பொழுது போய் விடும், சரிதானே?

Advertisements

29 comments

 1. //எவ்வளவோ ஆசைகள்!

  எல்லாம் நிறைவேறுமோ இல்லையோ…//

  முயற்சி செய்வதிலும் உழைப்பதிலும் நீங்கள் தளரமாட்டீர்கள்.

  ஐயம் வேண்டா; ஆசைகள் நிறைவேறும்.

 2. பிரியம் , விருப்பம் நூலிழை தான் இடைவெளி ..ஆனால் அதற்குள் ரசனை ,சுவாரஸ்யம் கூடவே சுதந்திரமும் அடங்கி இருக்கிறது. உங்களின் இந்த நியாயமான ஆசைகள் நிறைவேறி, அனைவரும் பயன் பெற்றிட நல்வாழ்த்துக்கள். குறிப்பாக இளைஞர்களுக்கு மிக அவசியமான மேலாண்மை பற்றிய எளிய பயிற்சிகள் உங்களிடமிருந்து நிறைய கிடைக்கும் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி . எல்லாம் நிறைவேறும் ஏனென்றால் எல்லோரின் ஆசைகளும் அதில் அடங்கி இருக்கிறது. நன்றி ..

 3. //எல்லாம் நிறைவேறுமோ இல்லையோ, பொழுது போய் விடும், சரிதானே?//

  சார், பொழுது போகுதோ இல்லையோ, காலையில் பொழுது விடிந்து நீங்கள் எழுந்து விடுவிர்கள்…

 4. “நிறைய மேலாண்மை, தர நிர்ணய சங்கதிகளை கொஞ்சம் நகைச்சுவையாக புத்தகமாக எழுத வேண்டும்.”

  இத தான் சார் உங்ககிட்ட முன்னமே கேட்டேன்…சீக்கிரமா செய்யுங்க சார்…வாழ்த்துகள்

 5. அது சரி… எங்க ஸ்கூலுக்கு வர்றதுக்கு ஒத்துக்கிட்டதைப் பத்தி ஒரு வரி இந்த இடுகையிலே இல்லியே..

  நாளைக் காலை முதல் உங்க வீட்டு வாசலில் e-உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளேன்..

  அன்புடன்
  சீ மாச்சு…

 6. வருக வருக என சென்னையும் வெயிலுமாக வரவேற்கிறோம். இது போன்ற ஆசை எனக்கு பத்தாம் வகுப்பிலேயே வந்து விட்டது. அப்போது தந்தை அடிப்பார் என பயம், இப்பொழுது பூவா-விற்கு என்ன செய்வது என பயம். ஏதேனும் யோசனைகள் இருந்தால் கொடுத்து உதவுங்கள், திருப்பி தந்து விடுகிறேன்!

 7. ஜவஹர், இப்போதுதான் இந்த இடுகையைப் பார்க்கிறேன்.

  ராஜ் குமார் பாரதி பாடிக் கேட்டதில்லை. உன்னி கிருஷ்ணன் பாடிக் கேட்டிருக்கிறேன். அது திலங் ராகம்.

  சென்னை வாசம் சிறப்பானதாய் அமைய வாழ்த்துகள்.

  http://carnaticmusicreview.wordpress.com/

 8. வருக வருக சென்னைக்கு வருக. என்னடா இது, சென்னையிலிருந்து இவ்வுலகில் அதிக தூரம் பயணித்தால் வரும் ஊர் கால்கரி. அங்கிருந்து சென்னைக்கு வரவேற்பா என நினைக்கிறீர்களா? என்ன செய்வது சென்னையையும் மதுரையையும் என் நினைவியிலிருந்து எடுத்து எரிய முடியவில்லை

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s