சென்னை ஹோட்டல் டார்ச்சர்கள்

சென்னையில் அந்த குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ் இந்த குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ் என்று நிறைய வந்து விட்டன.

விலை எல்லாம் பகல் கொள்ளையாக இருந்தாலும் உட்கார இடம் கிடைப்பதில்லை. செலவு பண்ணுகிற சோர்ஸ்களைத் தேடி அலைகிற ஜனங்கள் நிறைய ஆகி விட்டார்கள்.

இது மாதிரி ஓட்டல்களில் கல்யாணம் ஆகாத விடலைப் பையன் – பெண் காம்பினேஷன்களை நிறைய பார்க்க முடிகிறது. அவர்கள் ஒரணா பெறாத விஷயங்களைக் கிறக்கத்துடன் பேசுகிறார்கள். ஒருத்தருக்கொருத்தர் ஊட்டி விடுகிற ரசாபாசங்களைச் செய்கிறார்கள். ஊடல்கள், சிணுங்கல்கள், வாடா – போடா விளிப்புகள்…….

நான் எழுத வந்தது அதை இல்லை. வேறொரு முக்கியமான வயிற்றெரிச்சலைப் பகிர்ந்து கொள்ளத்தான் இந்தப் பதிவு.

சமையல் கலைக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிற தமிழ் இலக்கியக் கதாநாயகனின் பெயரைத் தாங்கிய குரூப் ஹோட்டல் அது.

சூப்பர்வைசர்கள் தவிர மீதி எல்லாரும் கோர்காலாண்ட், அஸ்ஸாம் பக்கத்திலிருந்து வந்தவர்கள். ரோபாட் மாதிரி சொன்ன வேலையைச் செய்கிறார்கள்.

மெனு கார்டில் இட்லி, பூரி, பொங்கல் மாதிரி பழகின பெயர்கள் எதுவும் இல்லை.

கல் தோசை என்று ஒரு ஐட்டம் இருந்தது.

மற்ற தோசையை எல்லாம் எதில் செய்கிறார்கள்?

ரெண்டு தோசை இருபத்தாறு ரூபாயாம். அடேடே அப்படி ஒன்றும் கிராக்கியாக இல்லையே…..

சரிதான் என்று ஆர்டர் செய்தோம்.

ரொம்ப ஜபர்தஸ்தாக ஆர்டரை பிளாக் பெரியில் பதிவு செய்து கொண்டார்கள்.

கொஞ்ச நேரத்தில் சீனாக்காரி மாதிரி இருந்த ஒரு குட்டைப் பாவாடைப் பெண் தோசையைக் கொண்டு வந்தாள்.

புளிச்ச மாவில் வார்த்த மாவு தோசை.

தட்டில் ரெண்டு தோசை மட்டுமே இருந்தது. சட்டினி சாம்பார் ஒரு இழவும் இல்லை.

சரிதான் கொண்டு வருவார்கள் என்று காத்திருந்தால், பதினைந்து நிமிஷமாகியும் எதுவும் வரவில்லை.

கொஞ்ச நேரத்தில் அதே சீனாக்காரி எதிர் சீட் ஆட்களுக்கு லாரியில் அடிபட்ட கோழி மாதிரி ஒரு சிவப்புக் கூழைக் கொண்டு வந்தாள்.

“என்னம்மா, தொட்டுக்கற ஐட்டம் ஹோட்டல் மூடறதுக்குள்ள வந்துடுமா?” என்று கேட்டேன்.

நான் ஏதோ கெட்ட வார்த்தை பேசினது மாதிரி தலையைக் குனிந்து சிரித்தாள்.

எரிச்சலாகி சூப்பர்வைசரை அழைத்தேன்.

“என்னங்க இது, செந்தில் கிட்ட ஆர்.சுந்தரராஜன் வெறும் இட்லி வாங்கிட்டு வரச் சொன்ன மாதிரி வெறும் தோசையைக் கொண்டு வந்து வச்சிருக்கீங்க… தொட்டுக்க ஒண்ணும் கிடையாதா?”

“டிஷ் தனியா ஆர்டர் பண்ணனும் சார்”

“கிழிஞ்சது கிருஷ்ணகிரி”

மெனு கார்டை வாங்கிப் பார்த்தால் எல்லா டிஷ்ஷும் எழுபது ரூபாய், எண்பது ரூபாய்க்கு மேலே!

செட்டினாடு ஸ்பெஷல் வெஜிடபிள் க்ரேவி என்கிற சமாச்சாரத்தை ஆர்டர் செய்தோம்.

மினியேச்சர் முதியோர் தாழி மாதிரி இருந்த ஒரு வாணாவில் கொண்டு வந்தார்கள்.

சுடப் பண்ணின நேற்றைய கத்தரிக்காய் ரசவாங்கி மாதிரி இருந்தது.

சுண்டைக்காய் கால் பணம், சுமைக்கூலி முக்கால் பணம் என்கிற மாதிரி, இருபத்தாறு ரூபாய் தோசைக்கு அறுபத்தொன்பது ரூபாய் டிஷ்!

இதைப் பார்த்து, நம்முடைய மிடில் கிளாஸ் ஹோட்டல்கள் கெட்டுப் போகிற அபாயம் இருக்கிறது.

இட்லி பதினைந்து ரூபாய், சட்டினி நாலு ரூபாய், சாம்பார் எட்டு ரூபாய் என்றெல்லாம் அவர்கள் மாறினால்,

என் மாதிரி சாமானியர்கள் கதை கந்தல்.

அடுத்த தரம் இந்த மாதிரி ஹோட்டல்களுக்குப் போகிற போது ஒரு மிளகாய்ப் பொடி பொட்லமும், கொஞ்சம் எண்ணையும் எடுத்துப் போக உத்தேசம்.

உங்கள் அனுபவம் எப்படி?

Advertisements

35 comments

 1. மிளகாய்ப் பொடி எண்ணெய் கலந்து சின்ன பாக்கெட்டுகளில் பேக் செய்து ஷாம்பூ மாதிரி விற்பனை ஆரம்பிக்கலாமா? நன்றாக வியாபாரம் ஆகும். எனக்கு வயது போறாது அதான் பார்க்கிறேன். கல்தோசைக்கு
  எள்ளுப் பொடி எடுத்துண்டு போகலாமே !!

 2. //அடுத்த தரம் இந்த மாதிரி ஹோட்டல்களுக்குப் போகிற போது ஒரு மிளகாய்ப் பொடி பொட்லமும், கொஞ்சம் எண்ணையும் எடுத்துப் போக உத்தேசம்.//

  விட மாட்ட. இந்த மாதிரி முதல்ல ஆரமிச்சது பஞ்சாபி தாபதான்

 3. உங்களுக்கு நகைச்சுவை சரளமாக வருகிறது சார்! எதை எழுதினாலும் சகலையாக, சாரி…ரகளையாக எழுதுகிறீர்கள். ரசிக்கிற மாதிரியும் இருக்கிறது! படிக்கிறபோதே சிரிப்பும் வருகிறது!

 4. ஒரு கரண்டி மாவுக்கு 50 ரூபாய் கொடுக்கவேண்டிய அவலம் பரவலாகிவிட்டது. அதையே ஏஸி ரூமில் உட்கார்ந்து சாப்பிட்டால் எக்ஸ்ட்ரா. சத்யம் தியேட்டர் வளாகத்தில் ஒரு கப் மெஷின் காப்பி ரூ.20. ஆறு மாதத்துக்கொரு எல்லோரும் முறை புதிதாய் மெனு கார்டு புதிய விலையோடு அச்சடித்துக் கொள்கிறார்கள். கொஞ்சநாளில் மேஜை நாற்காலி ஃபேனுக்கு, கைகழுவுவதற்கு டிஸ்யூ பேப்பருக்கு என தனித்தனியாகக் காசு கொடுக்கவேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்.

 5. ஹாஹாஹா…இங்கெல்லாம் எப்பவுமே சப்பாத்தி ஒண்ணு ரெண்டு ரூபாதான் சைட் டிஷ் 70 ரூபாய்க்குக் குறைஞ்சு எதுவும் கிடையாது!

 6. //இதைப் பார்த்து, நம்முடைய மிடில் கிளாஸ் ஹோட்டல்கள் கெட்டுப் போகிற அபாயம் இருக்கிறது//

  எ.கொ.ச. ?
  அதனால்தான் நாங்கள் உஜாலாவிற்கு மாறிவிட்டோம்.

 7. கொடுப்பதால்தானே வாங்குகிறார்கள்!

  கம்பெனியிலிருந்து கிடைக்கும் ஓசி பார்ட்டிகளுக்காக மட்டுமே இந்த மாதிரி ஹோட்டல்களுக்கு போவதுண்டு.

  உழைத்து சம்பாதித்த பணத்தை இப்படி வீண் விரயம் செய்வதை என் மனசாட்சி ஒத்துக்கொள்ளாது.

 8. நல்ல முன்னெச்சரிக்கை.

  சில ஓட்டல்களில் வெஸ்டர்ன், பஞ்சாபி, முகலாய், ச்வுத் இந்தியன் என்று தனிதனித்தனியாக மெனு இருக்கும்.

  சவுத் இந்தியனைத் தேர்ந்தெடுதால், நீங்கள் விரும்பும் காம்பினேசன் இருக்கும். அதில் நம்மூர் ஒட்டல் மாதிரி எல்லாமே இருக்கும்.

  காசு அவர்க்ள் பன்மடங்காக கூட்டுவது தேவையானது. இல்லாவிட்டால் அந்தச்சீனப்பெண்ணுக்கு எப்படி சம்பளம் தருவது?

 9. antha “thamayanthi purushan” oru dubaakooru Aasami…
  “இதைப் பார்த்து, நம்முடைய மிடில் கிளாஸ் ஹோட்டல்கள் கெட்டுப் போகிற அபாயம் இருக்கிறது.”

  intha paniya pala varudangalukku munbey …………………. hotel senchiduchi

 10. தலை தெரியாத்தனமா ஒருதரம் மகிந்த்ரா க்ளப் ஹாலிடேஸ் போயிட்டேன் வெறும் சாதம் 100 ரூ சாம்பார் 100ரூ ரசம் 100 ரூ தயிர் 75 ரூ.

  நம்ப முடியலைல்ல ஒரு எட்டு போயிட்டு வந்து ஒரு பதிவு போடுங்களேன்.
  🙂

 11. இந்த மாதிரி விடுதிகளில் அதிக கட்டணம் கொடுப்பது fine-dining எனப்படும் உண்ணும் அனுபவத்திற்காகவே.

  சேவை என்றாலே கிலோ என்ன விலை என்று கேட்கும் உணவகங்களும் வாடிக்கையாளரிடம் மொட்டை அடிக்கக் காரணம் எந்த விலை வைத்தாலும் அதைத் தர தயாராக இருக்கும் பொதுமக்கள் கூட்டமே.

 12. //சமையல் கலைக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிற தமிழ் இலக்கியக் கதாநாயகனின் பெயரைத் தாங்கிய குரூப் ஹோட்டல் அது.//

  தைரியமா அந்த ஹோட்டல் பேரைச் சொல்லலாமே!…..நாங்களும் போக மாட்டோமுல்ல!…..

 13. குரோம்பேட்டையில் வெற்றி தியேட்டர் தாண்டி டி டி கே மாப்ஸ் அருகே, ஒரு பிரபல ஆனந்த ஹோட்டலுக்கு சமீபத்தில் சென்றிருந்தேன், காலைச் சிற்றுண்டி உண்பதற்கு. இரண்டு இட்லி ஒரு வடை, ஒரு ரவா தோசை ஒரு சாத்துக்குடி ஜூஸ். பில் வந்தது நூற்று ஆறு ரூபாய்.

 14. நளபாகத்தை எதிர்பார்த்து சென்ற உங்களை தீயவைத்த மன்னிக்கவும் காயவைத்த அவர்கள் உண்மையிலேயே கல்(தோசை) நெஞ்சக்கார்கள்தான். அடுத்தமுறை கையேந்தி பவனிலிருந்து இடியாப்பம் பாயா வாங்கிவந்து அவர்களை உண்டு இல்லை என ஆக்கிவிடலாம்.

 15. ஆத்துலேயே போன வாரம் அரைச்சு வச்சு, பவர் கட்ல அணைஞ்சு போன பிரிட்ஜ்ஜுக்குள்ள புளிச்ச்ச்ச்ச மாவு எப்போதும் இருக்கும். அதையே வெங்காயம் போட்டு தாளிச்சு வார்த்து சாப்பிட்டு விடறது. வேற வழியே இல்லன்னா, எப்போதும் கங்கோத்ரில பேல்பூரி, பாணி பூரி, தஹி பூரின்னு மூணு விதமா சாட் அயிட்டங்களை வெட்டிட்டு, ஜில்லுனு ஒரு லஸ்ஸியை குடிச்சா வயிறு நிறைஞ்சுரும். பர்சும் கொஞ்சம் சில்லரையாலே நிறைஞ்சாப்லையே தோணும்.

  வேறென்ன செய்யறது?

  ஆம்மா, தோசையை போய் கடையிலே சாப்பிடுவானேன்??? அதும் நளாஸ், தோசா காலிங் அப்டீங்கற பேர்ல தோசையை கில்லிங் பண்ணி கொடுப்பவர்களிடம்!!!!!!!!

 16. ஒண்ணும் பெரிய‌ விச‌ய‌மா தெரிய‌ல‌ சார்.. நான் 10th ப‌டிக்கும் போதே chennai Railway station க்கு எதிர்புற‌ம் ஒரு ஒட்ட‌ல்ல‌ ஒரு ப‌ரோட்டா 2.50ருபாய் , சால்னா 20 ருபாய்னு சாப்டேன். அதாவ‌து 12years முன்னால.. Actually நான் சொல்ல‌ வ‌ந்த‌து இந்த‌ க‌லாச்சார‌ம் உடுப்பி ஒட்ட‌ல்ல‌ எப்ப‌வோ ஆர‌ம்ப‌ம் ஆயிடுச்சி.

 17. ரொம்ப நாளா ரசிச்சுட்டு இந்த பதிவுக்கு கமெண்ட்
  எழுதறேன்!
  நல்ல சிரமங்களையும் தமாசா மாத்துற சக்தி உங்க
  கிட்ட சரளமா இருக்கு!
  வாழ்த்துக்கள்!!

 18. நீங்க‌ சொன்ன‌ மேற்ப‌டி ஹோட்ட‌லில் ஆப்ப‌மும் தேங்காய் பாலும் சூப்ப‌ரா இருக்கும். ஆனா இங்கும் தேங்கா பால் காசு குடுத்து வாங்க‌னும்

 19. / அவர்கள் ஒரணா பெறாத விஷயங்களைக் கிறக்கத்துடன் பேசுகிறார்கள். //

  நமக்கு தெரிகிறது.. எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம்.. அவங்க இப்பத்தானே ஸ்டார்ட் பண்றாங்க..:) நாளாகும்

 20. தொண்ணூறுகளில் மவுன்ட் ரோட் அலங்கார் தியேடர் எதிரில் அன்னபூரணா (அதான் பெயரென்று நினைக்கிறேன்) என்று ஒரு ரெஸ்டாரெண்டில் சாப்பிடப் போய் வீட்டை விற்றுப் பணம் கட்ட வேண்டிய நிலை வந்தது நினைவுக்கு வருகிறது. இன்றைக்கு அந்த ரெஸ் இருக்கிறதா தெரியவில்லை.

  சைட் டிஷ் யானை விலை பிசினஸ் ப்ரேக்டிஸ் தென்னாட்டிற்கப்பால் சாதாரணமென்று நினைக்கிறேன். இருந்தாலும் இரண்டு இட்லி எட்டணா பக்கட் சாம்பார் இலவசம் காலமெல்லாம் திரும்பவே திரும்பாது.

  இதற்குக் காரணம் விலைவாசியா? டிமேந்ட் சப்ளை சூட்சுமமா?

 21. //சமையல் கலைக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிற தமிழ் இலக்கியக் கதாநாயகனின் பெயரைத் தாங்கிய குரூப் ஹோட்டல் அது.//

  ஹோட்டல் பேரை போட கூட தைரியம் இல்லையா? இதெல்லாம் ரத்த பூமி, கருணாநீதி, சோனியாவையே இங்க அப்படி கலாய்பாங்க, நீங்க ஹோட்டல் பேரை கூட எதோ தினமலர் துனுக்குமூட்டை மாதிரி எழுதுறீங்க.

 22. அந்த நளபாகமான ஆப்ப கடைல இதே மாதிரி என் கிட்டயும் சொன்னனுங்க, நான் கூச்சமே படல, அந்த ரசகுல்ல பொண்ணு கிட்ட போட்ட சத்தத்துல காசு வாங்காம சாம்பார் குடுத்தானுவோ, தயிர் சாதம் மாதிரி பேசினா சரியாய் வராது சாரே.

 23. ஒரு முறை தமிழ்நாட்டுக்கு வந்த போது பார்க் ஹோட்டலில் 2 பேர் டின்னர் சாப்பிட்ட செலவு அதிகமில்லை ஜெண்டில்மேன் 5000.00 (சைபர் சரியாத்தான் இருக்கு) . கம்பெனி க்ளெம் என்றாலும் அஜீரணமாகிவிட்டது 😦

 24. FRIDAY, APRIL 23, 2010ல் நான பதிவு செய்தது http://simulationpadaippugal.blogspot.com/2010/04/blog-post_23.html
  சாப்பிட வாங்க ! சென்னையில் இப்போ விலை கம்மிதான்

  சென்னையில் உலகத் தரத்தில் பல உணவகங்கள் வந்து விட்டதாம். அதிலும் இப்போ கோடை விடுமுறையை முன்னிட்டு விலையும் ரொம்ப ரொம்ப மலிவாம். எங்கே என்னென்ன ரேட்டு தெரியுமா?

  க்ரீன் பார்க் – தாலி மீல்ஸ் – Rs.149
  நியூ யார்க்கர் – லஞ்ச் பஃபே – Rs.172
  பெராரி – பென்ஸ் பார்க் டுலிப் – ஓவர்நைட் பெஸ்டிவல் – Rs.199
  க்ரீன் சில்லீஸ்- அம்பிகா – மிட்நைட் பபே – Rs.200
  டுலிப்ஸ் – க்ரீன் பார்க் – மிட்நைட் பிரியாணி – Rs.235
  ஷோகன் – சீன உணவு – Rs.250
  காரைக்குடி – க்ரேட் சீன விருந்து – Rs.250
  கோலி ஸ்மோக் ரெஸ்ட்டாரென்ட்- சிசிலிங் லஞ்ச் – Rs.275
  நியூ தந்தூர் தடக்கா – Rs.279
  மெயின் ஸ்ட்ரீட் – தி ரெஸிடென்ஸி டவர்ஸ் – மிட்நைட் பபே – Rs.400
  சதர்ன் அரோமாஸ் – தி ரெஸிடென்ஸி டவர்ஸ் – சன்டே பைட்ஸ்- Rs.450
  பாட் உண்வகம் – ட்ராடோரியா லஞ்ச் – Rs.599
  பியானோ ரெஸ்ட்டாரென்ட் – சவேரா – மீல் டீல் லஞ்ச் – Rs.625
  கேரமல் – ஏசியானா – சன்டே ப்ரஞ்ச் – Rs.799
  பாப்ரிகா கஃபே – கோர்ட்யார்ட் – பைசாகி விழா உணவு – Rs.845
  ஸீஸன்ஸ்- அக்கார்ட் மெட்ரொபாலிடன் – சன்டே ப்ரஞ்ச் – Rs.895
  ரெயின்போ- ரெயின்ட்ரீ – சன்டே ப்ரஞ்ச் – Rs.900
  கார்டன் கபே – ரேடிசன் ஜி,ஆர்.டி – சன்டே ப்ரஞ்ச் (நீச்சலுடன்) – 984
  சிலான்ட்ரோ – லெ ராயல் மெரிடியன் – சன்டே ப்ரஞ்ச் – Rs.1100
  தக்ஷின் – பார்க் ஷெரட்டன் – சன்டே ப்ரஞ்ச் – Rs.1100
  ஷாங்காய் க்ளப் – ஷோளா ஷெரட்டன் – சன்டே ப்ரஞ்ச் – Rs.1000
  காபுசினோ – ஷெரட்டன் பார்க் – ஜாஸ் வீக் என்ட் ப்ரஞ்ச்- Rs.1500
  லோட்டஸ் – த பார்க் – சன்டே ப்ரஞ்ச் – Rs.1687
  இவையெல்லாமே ஒரு ஆளுக்குத்தானாம். வரிகள் தனி.

 25. even in banglore rental cost high, but they are giving food items at cheaper compared to chennai. here all hotels saravanabhavanai paarthu kettu poitanga. anga idly 2o rupanna mathavanga 16-18 anga pongal 35 inna mathavang 25- 30 ippadia pona ivangala naragathula kadaiyla poottu fry panniduvanga.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s