பத்தாங்கிளாஸ் பரிட்சைப் பஞ்சாயத்து

பட்டி மன்றங்கள் எல்லாம் பாட்டி மன்றங்கள் ஆகி வருகின்றனவோ என்கிற பயம் அவ்வப்போது எனக்கு வரும்.

இரண்டு பட்டி மன்ற சூப்பர் ஸ்டார்களை வைத்து ‘வாங்க பேசலாம்’ என்கிற நிகழ்ச்சியை சன் டிவி வழங்குகிறது.(விஜய் டிவியில் டில்லி கணேஷும், பெரியார்தாசனும் ஹோஸ்ட் செய்யும் நிகழ்ச்சிக்கு என்ன பேர்?)

ராஜாவும், பாரதி பாஸ்கரும் கலந்து கொள்ளும் இது, ஒரு குறுகிய உரையாடல் நிகழ்ச்சி.

செய்தி விமர்சனம் மாதிரி.

சுவாரஸ்யமாகவும் இருக்கிறது, நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்ளவும் பயன்படுகிறது.

காலை எட்டு இருபதுக்கு திடீரென்று மாட்டியது. தினமுமா, செவ்வாய் மட்டுமா தெரியவில்லை.

பத்தாம் கிளாசுக்கு பரிட்சை வேண்டாம் என்று தீர்மானித்தது சரியா தப்பா என்பது இன்றைய தலைப்பு.

பாரதி பாஸ்கர் சரிதான் என்று வாதிட்டார்.

அவர் சொன்ன காரணங்கள் :

பரிட்சை என்பது வருஷ முடிவில் படித்ததை எல்லாம் கொட்டி மார்க்கு வாங்குகிற சடங்காக இருக்கக் கூடாது.

மார்க்குக்காக படிக்கிற சிஸ்டம் சரியில்லை.

கண்டின்யுவஸ் எவால்யுவேஷன் வேண்டும்.

தப்பு என்று சொன்ன ராஜா சொன்ன காரணங்கள் :

கோல் இல்லாத எந்த விஷயமும் உருப்பட முடியாது. ஆகவே பரிட்சையே இல்லை என்று சொல்லிவிட்டால் படிப்பில் எஃபெக்டிவ்னெஸ் இருக்காது.

நிறையப் பேர் படிக்கும் போது ஒவ்வொருத்தரையும் மதிப்பீடு செய்ய மார்க்கைத் தவிர சிறந்த முறை கிடையாது. இல்லாவிட்டால் இரண்டு மாணவர்களை தரம் பிரிக்கவே முடியாது.

கல்லூரியில் எதன் அடிப்படையில் சேர்த்துக் கொள்வார்கள்?

பரிட்சை வேண்டுமா வேண்டாமா என்பது ஒரு மிஸ்நாமராக இருக்கிறது.

பரிட்சைதான் கோல் என்று நினைக்கும் மாணவர்கள் படிக்காமல் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

பரிட்சை என்பது ஒரு எவால்யுவேஷன் முறையே ஒழிய கோல் இல்லை.

எவால்யுவேஷன் என்று வந்துவிட்டால் க்ரேட் தந்துதான் ஆக வேண்டும். க்ரேட் தந்து விட்டால் அதுவும் பரிட்சைதான். ஒரே ஒரு வித்யாசம் பாண்ட் விட்த் அதிகம். ஒவ்வொரு மதிப்பெண்ணிலும் சில நூறு மாணவர்களுக்கு பதில் ஒவ்வொரு க்ரேடிலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இருப்பார்கள்.

கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு அவசியமாகி விடும்.

எவால்யுவேஷன் செய்யப் பயன்படுத்தும் முறையைப் பொறுத்தே இந்த சிஸ்டம் சரியானதா இல்லையா என்று தீர்மானிக்க இயலும்.

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisements

6 comments

  1. Continuous Evaluation முறையில், Bandwidth அதிகமானாலும், control இருப்பதாகத்தான் எனக்கு படுகிறது. இதனால் குழந்தைகளுக்கும் Stress குறையும், Performance & Effectivness அதிகரிக்கும் என்றே எனக்கு தோன்றுகிறது.

  2. I think marks make a better choice than grading systems for evaluating students. This might avoid entrance exams which make them prepare again and again which is also a stress. The basic problem with our education system is, it encourages mug and throw up in your exam papers. So this needs attention first.

  3. வருட கடைசியில் வைக்கும் தேர்வை வைத்து கணிப்பது சரியாக இருக்காது என்பது என் எண்ணம். வருட முழுவதும் உள்ள Constant Evaluation சரியாக வரும். அதற்கு முன் நமது பாடத்திட்டம் புத்தகத்தில் இருந்து செயல்முறை கல்வியாக எல்லா மாணவர்களுக்கும் மாற்ற வேண்டும். மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கும் முறையினை ஒழிக்கவேண்டும். அவர்கள் புரிந்து கொண்டு படிக்கும்போது நுழைவுத்தேர்வுகள் பிரச்சினையாக இருக்காது என்பது எனது என்ன்னம்.

  4. பார்த்திங்களா … படிப்பு விஷயம் பசங்களுக்கு மாதிரியே பெரியவங்களுக்கும் அலர்ஜி ஆயிருச்சு …. கண்டிப்பா தேர்வு முறை வேண்டும் எல்லா நிலையிலும் …. அந்த சமயத்துல மட்டும் தான் புத்தகமே திறக்கப்படுகிறது ….. திருப்பி திருப்பி தேர்வு வைத்து தான் மாணவர்களை தேர்த்த வேண்டும் .. தேர்வு முறையில் நிறைய ப்ராக்டிகல் க்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் .

  5. ஒரு முழு ஆண்டுக்குமான தொடர்முறை மதிப்பீடு முறைதான் இப்போதும் புழக்கத்தில் உள்ளது ( காலாண்டு , அரையாண்டு ,முழுஆண்டு தேர்வுகள் ) . தேர்ச்சியுறுதல் முழு ஆண்டை மட்டும் வைத்து இருப்பதும், மதிப்பீட்டு முறையின் முறையும்தான் சிறிது சரி இல்லை .புத்தகத்தில் படித்த ஒன்றையே வேறு வார்த்தைகளிலோ அல்லது செயல்முறை உதாரணங்களை கொண்டோ கேட்டால் கூட “out of syllabus ” என்று சொல்லும் நிலைதான் இன்றும் உள்ளது.புரிந்து படித்தல் சிறிது குறைவே.

    விஜய் தொலைகாட்சியில் வரும் அந்த நிகழ்ச்சியின் பெயரும் “வாங்க பேசலாம்” தான் .

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s