மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு

சென்னை வாசியானதும் பல வருஷங்களாக மறந்து போயிருந்தவைகளை ஞாபகப் படுத்துகிறார்கள்.

முதலாவது, சாயந்திரம் ஐந்தரை மணிக்கு மாம்பலம் ஸ்டேஷனில் இறங்கி ரங்கனாதன் தெருவில் லாண்ட் ஆவது.

உங்களுக்கு எவ்வளவு அவசரமாக இருந்தாலும், எவ்வளவு வேகமாக நடக்க முடிந்தாலும் எதுவுமே பிரயோஜனப்படாது. செக் அண்ட் மேட் செய்யப்பட்ட ராஜா மாதிரி எல்லாப் பக்கமும் ஜனங்கள். அதுவும் அமர் ஜவான் ஜோதிக்கு மலர் வளையம் வைக்கப் போவது போன்ற வேகத்தில் நடக்கும் ஜனங்கள்.

கிடைத்த இண்டு இடுக்கில் புகுந்து வேகமாகப் போக முயற்சித்தால் பிக் பாக்கெட் அடித்துக் கொண்டு ஓடுவதாக நினைத்து அப்ப ஆரம்பித்து விடுவார்கள்.

ரங்கநாதன் தெருவும், உஸ்மான் ரோடும் சந்திக்கிற இடம் வரைதான் இந்த டார்ச்சர் முன்பெல்லாம்.

இப்போது,

பனகல் பார்க் வரை தொடர்கிறது.

ஓசூரில் தேர்த் திருவிழா அன்றைக்கு மட்டும்தான் இப்படி இருக்கும்.

*******************************************************************************************************
குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொள்ள பயப்படுகிற ஆம்பிளைகளுக்கு முன்னர் ஒரு ஆல்ட்டர்னேட் இருந்தது. காலை எட்டிலிருந்து ஒன்பதரைக்குள் தாம்பரத்திலிருந்து பீச் போகிற சபர்பன் வண்டிகளிலோ அல்லது மாலை ஐந்தரையிலிருந்து ஒன்பது மணி வரை பீச்சிலிருந்து தாம்பரம் போகும் வண்டிகளிலோ பயணம் செய்வதுதான் அது.

பிராட் கேஜ் ஆன பிறகு பீக் அவர் ஃப்ரீக்வன்ஸி லீன் அவர் ஃப்ரீக்வன்ஸி என்றெல்லாம் தனியாக இருப்பதாகத் தோன்றவில்லை. நாள் முழுக்க ஒரே சீரான ஃப்ரீக்வன்ஸி. எப்போதுமே சராசரிக்கு அதிகக் கூட்டம். ஆனாலும் மேற்சொன்ன பிதுங்கல் இல்லை.

*******************************************************************************************************
ஓசூரில் தினமும் மூன்றரை மணி நேரம் மின்சாரத்தைத் துண்டித்து பிராணனை வாங்கினார்கள்.

இங்கே எப்போதாவது பதினைந்து நிமிஷம் அல்லது அதிக பட்சம் அரைமணி நேரம் போகிறது.

ஆனால் அந்த அரைமணி ராத்திரியாக இருந்தால் கதை கந்தல். ஓசூரில் அந்த காரண்டி இருந்தது.

ஆயினும் சுகமே.

ராத்திரி ஒரு மணிக்கு கரண்ட் போனதும் ஒரு நாடாக் கட்டிலைக் கொண்டு போய் மொட்டை மாடியில் போட்டுக் கொண்டு,

‘கைப்புள்ள, காலை முட்டுக் குடுத்துகிட்டு முரட்டுத்தனமா தூங்குடா’ என்று தூங்குவதும் ஒரு சுகம்தான்.

பல வருஷங்களுக்குப் பிறகு அந்த சுகத்தை அனுபவித்தேன்.

*******************************************************************************************************
லாண்ட் மார்க்கிலும் ஹிக்கின் பாதம்சிலும் நாம் என்னென்ன புத்தகங்கள் கேட்கிறோமோ அதைத் தவிர மீதி எல்லாம் கிடைக்கிறது.

கங்காராமையும் சப்னாவையும் விட்டுவந்தது துக்கமாக இருக்கிறது.

கங்காராமில் ஐந்து ஃப்ளோர் நிறைய புத்தகங்கள்!

“இந்த புக் எல்லாம் யாரும் கேட்கிறதே இல்லையா?”

“ஓ… கேட்கிறாங்களே?”

“அப்போ அதையெல்லாம் பப்ளிஷ் பண்றவங்க பெரிய ஆள் ஆயிடலாம்”

“அதைத்தானே ஏற்கனவே பண்ணிகிட்டு இருக்காங்க”

“யாரு?”

“கிழக்கு பதிப்பகம்”

Advertisements

20 comments

 1. என்னது அரைமணி நேரமா . எந்த இடத்துல இருக்கீங்க நீங்க? ரெண்டு வாரமா வடபழனில இரவு நேரத்தில எப்ப மின்சாரம் போகும் எப்ப வரும்னு தெரியல

  1. கார்த்திக், வடபழனி குரோம்பேட்டையை விட பெட்டரா இருக்கணுமே? ஏன்னா நாங்கள்ளாம் சிட்டி லிமிட்ல இல்லை. செங்கை மாவட்டத்து ஆட்கள்!

 2. //அதுவும் அமர் ஜவான் ஜோதிக்கு மலர் வளையம் வைக்கப் போவது போன்ற வேகத்தில் நடக்கும் ஜனங்கள்// இடம் பொருள் ஏவல் எதுவுமே இல்லாம பெருசா சிரிச்சுட்டேன் சார். வேலை கிடைச்சா உங்க ப்ளாகை ஆஃபீஸில் படிக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்..
  எப்படி சார் இது? கலக்கறீங்க போங்க!

  1. அநன்யா, உங்களுக்கு வேலை கிடைக்கப் போகுது. என் பிளாக்கை ஆஃபீஸ்ல படிக்கப் போறீங்க. சிரிக்கப் போறீங்க. எதைப் படிச்சிட்டு இப்படி சிரிக்கறேன்னு பாஸ் கேக்கறப்போ பிளாக்கைக் காட்டப் போறீங்க. அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு அப்புறமா நீங்களே எழுதுங்க!

   1. ஆமா சார், கையும் களவுமா பிடிபட்டுட்டு, பாஸுக்கு உங்க ப்ளாக் காட்டினா என்னாகும்? (எந்த மொழிக்காரராக இருந்தாலும், ) அந்தாள் உங்க ஃபாலோயர் ஆயிடுவார். நிச்சியம் இதான் நடக்கப்போறது. 🙂

 3. //கிடைத்த இண்டு இடுக்கில் புகுந்து வேகமாகப் போக முயற்சித்தால் பிக் பாக்கெட் அடித்துக் கொண்டு ஓடுவதாக நினைத்து அப்ப ஆரம்பித்து விடுவார்கள்./

  எப்பொழுதுமே அந்த பக்கம் செல்லும்போது இந்த பயம்தான் அதிகம்! அதுவும் பயம் + பதட்டத்தில் செல்லும்போது எச்சாட்டிலி திருட்டு பயலாட்டமே தெரியும் 🙂

 4. //குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொள்ள பயப்படுகிற ஆம்பிளைகளுக்கு முன்னர் ஒரு ஆல்ட்டர்னேட் இருந்தது. காலை எட்டிலிருந்து ஒன்பதரைக்குள் தாம்பரத்திலிருந்து பீச் போகிற சபர்பன் வண்டிகளிலோ அல்லது மாலை ஐந்தரையிலிருந்து ஒன்பது மணி வரை பீச்சிலிருந்து தாம்பரம் போகும் வண்டிகளிலோ பயணம் செய்வதுதான் அது//

  He He He….

 5. /லாண்ட் மார்க்கிலும் ஹிக்கின் பாதம்சிலும் நாம் என்னென்ன புத்தகங்கள் கேட்கிறோமோ அதைத் தவிர மீதி எல்லாம் கிடைக்கிறது.//

  //அமர் ஜவான் ஜோதிக்கு மலர் வளையம் வைக்கப் போவது போன்ற வேகத்தில் நடக்கும் ஜனங்கள்.//

  கலக்கல்.. பிரமாதம்!

 6. நேற்றுதான் சுப்புவிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன், என்ன சார் தலைவரிடம் தொடர்பு கொண்டு ரொம்ப நாள் ஆயிடுச்சு, அவரும் ப்ளாக் ல லேட்டஸ்ட் பதிவு ஒன்னும் போடல என்ன ஆச்சுன்னு தெரியலையே னு……

  முத்தாய்ப்பாக ஒன்று 🙂 ….

  இது எல்லாவற்றையும் விட ஒன்று …
  முதல் முறை சென்னை சென்ற போது (1996) விலாசம் விசாரிக்க ஆங்கிலத்தில் பேசியதுதான். எதோ சென்னையில் எல்லாருமே ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்ற நினைப்பில்…. இன்றும் நினைத்தாலும் சிரிப்பு தான் வருகிறது.

  முதல் முறை பஸ்சில் கண்டக்டர் “எங்க இறங்கணும்? டிக்கெட்ட வாங்கு, என்ன இறங்குறியா ? என்று ஒருமையில் அழைத்ததை மறுநாள் வரை நினைத்து வருந்தியது….

  ஆனாலும் சார் சென்னை வாழ்க்கை சுகமே. நிறைய சொந்தங்கள், நட்புகள். இங்க திருப்பூர்ல எங்க சார்? நேத்தி கூட பாருங்க, காலைல டிபன் சாப்பிட 20KM சுத்தினேன் சார். எல்லா கடையும் மூடிட்டாங்க பந்த்னால. ஆனா பாருங்க பச்சை கலர் போர்டு போட்ட கடை (சாராய கடைதான்) மட்டும் திறந்து இருந்துது. போய் கேட்டாக்க அரசு அலுவலகங்களுக்கு பந்த் கிடையாதாம்.
  எதையோ எழுத ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டேன்.

  இப்போதும் நான் சென்னை வந்தால் எனக்கு சலிக்காமல் விலாசமும் ரோடு மேப், பஸ் நம்பர் லாம் போட்டு கொடுக்கும் என் அக்காவையும், அத்திம்பேரையும் நான் கிரேட் என்று தான் சொல்லுவேன். (ஓசில வேற யாரு சாப்பாடு போடுவா? இவங்கள விட்டா??)

 7. ///கைப்புள்ள, காலை முட்டுக் குடுத்துகிட்டு முரட்டுத்தனமா தூங்குடா’ //// இங்க முரட்டுத்தனம் கொசுக்கடிக்கு தானே . நாங்களும் இப்போதுதான் கோவையிலிரிந்து தலைநகருக்கு குடிபெயர்ந்தவர்கள்.. மரியாதைக்கு கொஞ்சம் கூட மரியாதை இல்லை . என்னவோ பேருந்து போக்குவரத்தில் கொஞ்சம் முன்னேற்றம் இருப்பதாக தெரிகிறது . உச்ச நேரங்களில் மின் ரயிலில் தான் கூட்டம் பிதுங்கிறது.
  என்றும் தேர் கூட்டம் இருக்கும் ரங்கநாதன் தெரு நடை பயணம் ..சரியான உவமை ..

 8. நாடாக்கட்டில் மொட்டைமாடி… இவையெல்லாம் சென்னையில் இன்னும் சாத்தியமென்பது வியப்பு. வைகேரியஸ் (இதற்கு ஒரு எளிமையான தமிழ்ச்சொல் தெரியவில்லை) இனிமை.

  1. நிஜம்தான் அப்பாதுரைஜி, அது ஒரு நல்ல வார்த்தைப் பிரயோகம். ஒற்றை வார்த்தையில் மொழி மாற்றுவது கடினம். நம்பி சார் மனது வைத்தால் ஏதாவது முயற்சிக்கலாம். சார் இதைப் படித்தால் டக்கென்று சரியான வார்த்தையோடு வருவார்.

 9. எப்பிடித்தான் சென்னைல ஒரு 6 வருஷம் குப்பை கொட்டினேன்னு இப்ப நினைச்சாலும் மலைப்பா இருக்கு. இனிமே கஷ்டம்தான். இப்பல்லாம் எதும் விசேஷத்துக்கு வர்றதோட சரி.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s