கேரளாவில் பீருக்கு பஞ்சமாம்!

இன்றைய தினமலரில் படித்த ஒரு செய்தி தமாஷாக இருந்தது.

ஏர்டெல் நிறுவனமும், நோவாடியம் நிறுவனமும் இணைந்து வைரஸ் தாக்காத கம்ப்யூட்டர் தயாரித்துள்ளதாம்.

மிகவும் சக்திவாய்ந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் கூட ஆறு மாசத்துக்கு ஒருதரம் அப்டேட் செய்ய வேண்டியிருக்கிறது. அப்படி இல்லாவிட்டால் புதிதாக வந்த வைரஸ்களை அந்த புரோகிராமால் தடுக்க இயலாது.

அப்படி இருக்கும் போது வைரஸ் தாக்காத கம்ப்யூட்டர் எப்படி சாத்தியம்?

புதுசாக வைரஸ்கள் வருவதில்லையா?

அல்லது ஹார்ட் டிரைவை சுத்தமாக ரைட் ப்ரொடக்ட் செய்துவிட்டார்களா?

சில வருஷங்களுக்கு முன்பு, கிராமத்தில் படித்த பெண் ஒருத்தி பாங்க்கில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தாள். எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள். ஹாலில் வைத்திருந்த கம்ப்யூட்டரைப் பார்த்து அவள் கேட்டது,

“என்ன அங்க்கிள், கம்ப்யூட்டரை வெளியில வெச்சிருக்கீங்க? வைரஸ் வந்துடாதா? எங்க பாங்க்கில தனியா ஏசி ரூம்ல வச்சிருக்காங்க”

ஏர்டெல் நிறுவனத்தின் புரிதல் நிச்சயம் இந்த லெவலில் இருக்காது. எனக்கு விஷயம் புரியவில்லை.

புரிந்தவர்கள் சொல்லலாம்.

*******************************************************************************************************

கேரளாவில் பீருக்குப் பஞ்சமாம்.

இதர மாநிலங்களில் இருந்து வாங்க முடிவு செய்திருக்கிறார்களாம். (அவங்களுக்குக் கொடுத்து விட்டு நாம என்ன செய்வது?)

போன வருஷம் மட்டும் கேரளாவில் பீர் உபயோகிப்பு 45% உயர்ந்திருக்கிறதாம்.

பீர் சாப்பிடுவது ஆரோக்யத்தை எந்த வகையிலும் பாதிக்காது என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஒருபடி மேலே போய் அது உடம்புக்கு நல்லது என்று கூட ஒரு கருத்து இருக்கிறது.

தப்பு.

ஆல்கஹால் எல்லா ரூபத்திலுமே தொந்தரவுதான்.

விஸ்கி, பிராந்தி போன்ற பானங்களால் வரும் தீவிரமான குடல் நோய்கள் வரும் வாய்ப்பு வேண்டுமானால் குறைவாக இருக்கலாம்.

ஆனால்,

எல்டிஎல் கொலஸ்ட்ரால் எனப்படும் அசத்து உடம்பில் சேரும்.

தொப்பை, கண்ணுக்கடியில் தொள தொளா சதை, ஜளபுள ஜிங்ஸாக கன்னங்கள், குலுங்கும் மார்புகள் என்று தேவையில்லாத சதை உடம்பில் சேரும்.

நிறைய பீர் சாப்பிடுகிறவர்கள் காலைத் தரையில் அடித்தால் மார்பு பாம்பே படத்து மனிஷா கொய்ராலா மாதிரி குலுங்கும்.

ரத்தக் குழாய்களில் ஒரு சொர சொரா லேயர் ஏற்பட்டு ரத்த ஒட்டத்தைக் குறைக்கும். நாளாவட்டத்தில் இந்த சொர சொரா லேயர் அதிகமாகி இதயத்துக்குப் போகும் ரத்தத்தையே நிறுத்தி விடலாம்.

ஆகவே, பீர் சாப்பிடும் வழக்கமுள்ளவர்கள் காலையில் ஓட்ஸ் கஞ்சி மட்டும் சாப்பிடுங்கள். பதினைந்து நிமிஷமாவது பிரிஸ்க்காக நடங்கள்.

*********************************************************************************************************

போன வாரம் என்னுடைய கன்சல்டன்சி பணிகள் தொடர்பாக பிரபல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இரண்டுக்கு மீட்டிங்கிற்காகப் போயிருந்தேன்.

சில புதிய திட்டங்களைச் சொல்லி,

“இதையெல்லாம் சின்சியரா ஃபாலோ பண்ணா நிச்சயம் ஒரு மாசத்தில பலன் இருக்கும். ஆனா யூனியன் சைடிலேர்ந்து இம்ப்ளிமெண்டெஷனுக்கு நிறைய எதிர்ப்பு இருக்கும். உங்க ஹெச் ஆர் டிபார்ட்மெண்ட் ஸ்ட்ராங்கா இருக்கணும்” என்றேன்.

“யூனியன்னா என்ன சார்… ரெண்டு பக்கமும் ஃபெர்ரூல் நட்டு போட்டு ஸ்ட்ரைட்டா, 90 டிகிரி பெண்டோட எல்லாம் ஜி.ஐ. ல வருமே…. அதுவா? அது எப்டி இம்ப்லிமெண்டேஷனைத் தடுக்கும்?” என்று கேட்டார்.

என்னால் பெருமூச்சுதான் விட முடிந்தது.

Advertisements

13 comments

 1. //பீர் சாப்பிடுவது ஆரோக்யத்தை எந்த வகையிலும் பாதிக்காது என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஒருபடி மேலே போய் அது உடம்புக்கு நல்லது என்று கூட ஒரு கருத்து இருக்கிறது.

  தப்பு.

  ஆல்கஹால் எல்லா ரூபத்திலுமே தொந்தரவுதான்.//

  எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளியை நல்ல கொள்ளி என்று சொல்ல?

  எல்லாக் கொள்ளியும் எரிக்கவே செய்யும்.

  குடித்து மகிழ:

  `அடடா, அடடா, அருமையான குளிர்ச்சியான பீர்!’

  http://nanavuhal.wordpress.com/2010/04/13/liver-alcohol/

 2. //என்ன அங்க்கிள், கம்ப்யூட்டரை வெளியில வெச்சிருக்கீங்க? வைரஸ் வந்துடாதா// வைரஸ் என்ன அரிசி/ பருப்புல வர்ற வண்டுன்னு நினைச்சுண்டாங்களோ? :)))))

 3. கேரளாவில் பீருக்கு பஞ்சமா – கஷ்டம் தான் “குடி”மக்களுக்கு (அப்படியாச்சும் அந்த கொடுமைய நிறுத்தறாங்களானு பாப்போம்)

  அந்த வைரஸ் ஜோக் சூப்பர்… ac ரூம்ல தான் வெக்கணுமா…. ஹா ஹா ஹா

 4. //யூனியன்னா என்ன சார்… ரெண்டு பக்கமும் ஃபெர்ரூல் நட்டு போட்டு ஸ்ட்ரைட்டா, 90 டிகிரி பெண்டோட எல்லாம் ஜி.ஐ. ல வருமே…. அதுவா// சரியான கப்ளிங் பண்ணிட்டிங்க … பீர் புத்திமதி ஆண் பெண் பாகு பாடு இல்லாமல் எல்லோருக்கும் போய் சேர வச்சிட்டிங்க .. குலுங்கல் கொஞ்சம் ஜாஸ்திதான் இருந்தாலும் … இந்த குடி கலாச்சார மக்களுக்கு சரியான டோஸ் ..

 5. முதல் முதலாக மனுச கொரிலா பெயரைக் கேட்ட போது ஆச்சரியப்பட்டேன் – மனசை கொய்யராளாவும் சரி தான். இந்திய சினிமாவுக்குக் கிடைத்திருக்கும் ஒரு திறமைசாலியை இப்படிக் கொச்சைப்படுத்துவது உங்களுக்கு நன்றாக இருக்கிறதா? (ஹிஹி..எங்களுக்கு நன்றாக இருந்தாலும்). சரி, எந்தப் படத்தில் வருகிறது நீங்கள் சொல்லும் bumper draw, அதாவது அதிர்ஷ்டக் குலுக்கல்?

  பீர், சிங்கில் மால்ட் ஸ்காச் விஸ்கியை விட குடலுக்குக் கெடுதல் என்று படித்திருக்கிறேன். (அளவோடு குடித்து வளமோடு வாழணும்)

 6. பி எஸ் என் எல் ஏற்கனவே நவோடியதுடன் இவ்வாறான கணினி யை கொடுத்தார்கள்.இதில் ஹர்ட் டிஸ்க் நாம் வாங்கும் சி பி யு வில் இருக்காது.அனைத்துமே பி எஸ் என் எல் அல்லது ஐர்டேல் செர்வரில் தான் சேமிக்கப்படும்.நாம் கணணியை எப்பொழுதுமே ஆன் லைனில் தான் உபயோகிக்க முடியும்.இதில் முன் கூட்டியே மேன் பொருட்களை நிருவி இருப்பார்கள்.

 7. //நிறைய பீர் சாப்பிடுகிறவர்கள் காலைத் தரையில் அடித்தால் மார்பு பாம்பே படத்து மனிஷா கொய்ராலா மாதிரி குலுங்கும்.//

  Innuma athai marakkalai !!!!

 8. //சில வருஷங்களுக்கு முன்பு, கிராமத்தில் படித்த பெண் ஒருத்தி பாங்க்கில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தாள். எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள். ஹாலில் வைத்திருந்த கம்ப்யூட்டரைப் பார்த்து அவள் கேட்டது,

  “என்ன அங்க்கிள், கம்ப்யூட்டரை வெளியில வெச்சிருக்கீங்க? வைரஸ் வந்துடாதா? எங்க பாங்க்கில தனியா ஏசி ரூம்ல வச்சிருக்காங்க”//

  ஜவஹர் சார் ஏன் ”கிராமத்து ” கம்பியூட்டர் அவ்வளவாக தெரியாத என்றால் போதாதா?

  கிராமத்திலிருந்து இப்போதெல்லாம் நிறைய மென்பொருளாலர்கள் வருகிறார்கள்.

  இதை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை. ஒரு ஹ்யூமர் வால்யூக்காக என்றால் சரி

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s