இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்

ஒரு தனி நபரையோ, ஒரு குடும்பம் அல்லது கூட்டத்தையோ, ஒரு இனத்தையோ, ஜாதியையோ, மதத்தையோ எந்நேரமும் சேர் வாரி இரைக்கிறவர்களைப் பார்த்திருப்பீர்கள்.

டிரான்ஸாக்‌ஷனல் அனாலிசிஸ் ரீதியாக இவர்களது மனோதத்துவத்தைக் கொஞ்சம் பார்க்கலாம்.

இந்த மாதிரி மனிதர்கள் விவாதங்களில் நாட்டமுடையவர்கள்.

விவாதம் என்பது அறிவு வளர்ச்சிக்குப் பயன்படுகிற ஒரு சக்தி வாய்ந்த கருவி. பள்ளிக்கூடங்கள் வராத காலத்தில், ஒரு குருவிடம் கற்கிற வழக்கம் இருந்த காலத்தில் தர்க்கம் என்பது ஒரு கலையாக போதிக்கப்பட்டது. வழக்கறிஞர் படிப்புக்கு வித்திட்ட கலை.

நம்முடைய பேச்சுக்களும், எழுத்துக்களும் இருவேறு மனநிலைகளின் கலப்படம்.

ஒன்று அறிவு, இன்னொன்று உணர்வு.

இந்தக் கலப்பின் விகிதாச்சாரம் ஆளுக்கு ஆள் வேறுபடும்.

உணர்வு மேலோங்கி இருக்கிறவர்களை ஈகொயிஸ்டிக் என்போம். அறிவு மேலோங்கி இருப்பவர்களை இண்டெல்லக்ச்சுவல் என்போம்.

ஆரோக்யமான விவாதங்கள் செய்கிறவர்கள் உணர்வுகளை ஆஃப் செய்து வைத்து விடுவார்கள். அவர்களுக்கு தங்கள் அறிவின்பால் அசாத்யமான நம்பிக்கை இருக்கும். நாம் முன் வைக்கிற ஒவ்வொரு கருத்துக்கும் உணர்வுக்கலப்படம் இல்லாத ஒரு லாஜிக்கல் மறுப்பு வைத்திருப்பார்கள்.

ஒரு எளிமையான உதாரணம் சொல்கிறேன்.

தேர்தல்களில் பணத்தை வாரி இரைத்து வோட்டு வாங்குவதைப் பற்றிய விவாதம் வந்தது.

“அவ்வளவும் கறுப்புப் பணம்ய்யா. வாங்கற ஜனங்க என்ன ரசீதா குடுக்கப் போறாங்க? கணக்கில வராத பணமும் தொலைஞ்சுது. வோட்டும் கிடைச்சுது.” என்றார் ஒருவர்.

“கறுப்புப் பணமோ செகப்புப் பணமோ குடுக்கணும்ங்கிற மனோபாவத்தைத்தானே அது காட்டுது?” என்றார் இன்னொருத்தர்.

“பணத்தை செலவு பண்ணி பதவிக்கு வர்ரது எதைக் காட்டுது? பதவிக்கு வர்ரது சேவைக்காக மட்டுமில்லை. விட்டதை திரும்ப சம்பாதிச்சிடலாம்ங்கிற நம்பிக்கை.”

இவர்கள் ஒரு சாராரைப் பற்றி ஃபார் அண்ட் அகைன்ஸ்ட் பேசினாலும் எந்த வார்த்தையுமே உணர்விலிருந்து வரவில்லை என்பதை கவனியுங்கள். மூன்று வாக்கியங்களிலுமே லாஜிக் இருப்பதை கவனியுங்கள்.

என்னிடம் எந்த லாஜிக்கும் இல்லை. ஆனால் எதிராளி சொல்வதை ஒப்புக் கொள்ளவும் முடியவில்லை. இந்த இடத்தில் கட்டாயம் உணர்வு நுழைந்து விடும். இயலாமையும், தன்னம்பிக்கை இன்மையும், தோல்வியும் கலந்த உணர்வு.

லாஜிக் இருந்தவரை என் பேச்சுக்கள் எதிராளியின் அறிவை அட்ரஸ் செய்தன. லாஜிக் இல்லாததால் மேலெழுந்த என் உணர்வுகள் எதிராளியின் உணர்வை அட்ரஸ் செய்ய ஆரம்பிக்கும்.

எப்படி?

தோல்வியும் இயலாமையும் சைல்ட் ஈகோ என்று சொல்லப்படும் மனநிலையைத் தூண்டிவிடும். தான் எதிராளியைவிடக் குறைந்த நிலையில் இருப்பதாக கருதிக் கொள்கிற உணர்வு அது.

இந்த மாதிரி மனநிலையில் எதிராளியை மட்டம் தட்டி, அவன் மேல் சேர் வாரி இரைத்து அவனைக் கீழே கொண்டு வர எனக்குள் ஒரு அவசரமும் ஆத்திரமும் இருக்கும். கோபம் என்பதே இயலாமையின் வெளிப்பாடு.

மேற்சொன்ன விவாதத்தில் எதிராகப் பேசிக் கொண்டிருந்தவர் இந்த நிலைக்கு வந்தால் என்ன செய்வார்?

தொடர்புடைய ஆசாமியை தரக் குறைவாகத் திட்ட ஆரம்பிப்பார்.

“என்ன பெரிய குடுக்கிற மனோபாவம். ஊர்ல பிச்சை எடுத்துகிட்டு இருந்தவந்தானே? பொறுக்கித் தின்னவந்தானே?” என்றெல்லாம் பேச ஆரம்பிப்பார்.

உடனே எதிராளி, “நீ சொன்னா சரியாத்தான் இருக்கும். அடுத்தவன் தின்னு போட்ட இலையை நக்கினவந்தானே நீ?” என்பார்.

“யாரைப்பாத்து எச்ச பொறுக்கின்னு சொன்னே? நீ கூட்டிக் குடுக்கிறவன்னு எனக்குத் தெரியாதா?”

அவ்வளவுதான்.

கொஞ்ச நேரத்தில் நாறி விடும்.

தாழ்வு மனப்பான்மையில் இருப்பவர்கள் இரக்கத்துக்குரியவர்கள். அரவணைக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு தைரியம் சொல்ல வேண்டும். அவர்கள் நிலைக்கு நாம் இறங்கிப் போவதற்கு பதில் நம் உயரத்துக்கு அவர்களை அழைத்துக் கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் அது ஒரு தீவிரமான மன நோயாகப் போய் விடுகிற அபாயம் இருக்கிறது.

Advertisements

43 comments

 1. அறிவு நிலை , உணர்வு நிலை அருமையான போற்றி பாதுக்காக்கவேண்டிய கட்டுரை .. ஒரு மனிதனுக்கு உயர்வு மனப்பான்மை எந்த அளவிற்கு மன விகாரத்தை அளிக்கிறதோ அதற்க்கு சற்றும் குறையாமல் தாழ்வு மனப்பான்மை மன வியாதியை அளித்து விடுகிறது … தேர்தல் -பணம், மிக எளிய நச் உதாரணம் .
  வாக்கு வாதங்கள் எப்படி விதண்டா வாதங்களாக மாறுவதை காட்டியது நல்ல படபிடிப்பு … மனித குரங்கிலிரிந்து மனிதனாக மாறியது முதல் இன்று வரை அறிவு கொண்டு படிப்படியாக பலவீனங்களை இழந்து பலம் அடைந்து வருகிறோம் . உணர்வு கொண்டு பின் செல்லாமல் இருப்பது நல்லது …
  சாதீயத்திற்கு மட்டுமல்ல , எல்லா தீயத்திற்க்கும் அறிவுபூர்வமான அணுகுமுறை தான் நல்ல தீர்வாக அமையும்

  1. ரத்தினச் சுருக்கமா உங்க கருத்தைப் பதிவு பன்ணியிருக்கீங்க. பாராட்டுக்கள் கண்ணன்ஜி.

 2. பெரியவங்க பெரியவங்க தான் சார்..
  சம்பந்தமில்லாமல் வீண்வாதம் பண்ணி பெயரைக் கெடுத்துக் கொள்கிறவர்கள் பார்த்து.. நானும் வருத்தப் பட்டதுண்டு..
  நிச்சயமாய் இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்கு உரியவர்களே.. ஏனெனில், அடுத்தவர் மீது சேற்றை வாரி இறைப்பதற்காக இவர்கள் தன்னையறியாமல் தன் கைகளையே பயன்படுத்துகிறார்கள்..

 3. உங்க பரந்த மனப்பானமை அந்த பரந்தாமனையே நினைக்க வைக்கிறது,இதே வலையுலகில் எத்தனையோ அருவருப்புகள்,மலங்களை மிதித்து வேதனைப்படும் எங்களுக்கு உங்கள் எழுத்து மணக்கிறது

 4. பைத்தியத்தை கல்லால் அடிக்கும் உலகில் அதை அரவணைத்து அன்பு காட்டும் ஒருவர் வாழ்வது வியப்பளிக்கிறது ஜவஹர்ஜி,இனி நானும் இரக்கப்படுவேன்.இது எனக்கு வியப்பளிக்கிறது நானே நானா?யாரோ தானா?காட்

 5. இவ்வளவு பட்டறிவு இருந்தும் அடக்கமாக இருக்கும் உங்கள் மேல் மதிப்பு கூடுகிறது.இனி தொடர்ந்து படித்தும் இதை ஃபார்வர்ட் செய்தும் ஆதரவை தொடர்வேன் ஜி.உங்கள் நிலைப்பாடை அருமையாக எடுத்துரைத்தீர்கள்,நான் முதலில் உங்களை ஜாதி பார்க்கும் ஆசாமி என எண்னியதற்காக வருந்துகிறேன்.

  1. நன்றி காயத்ரிஜி. ஜாதி என்கிற வியாதி இல்லாத ஆரோக்யமான சமுதாயம் வரணும்ன்னா அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல இருக்கப் பழகணும். அன்பு எல்லாத்தையும் ஜெயிச்சிடும்.

 6. இரண்டு நாளா இப்படி ஒரு பதிவை / எதிர்வினையை எதிர்பார்த்தேன் ..

  நல்ல கட்டுரை எளிமையாக சொன்னாலும் பல சிந்தனைகளை தூண்டியுள்ளது.

  நன்றி

 7. கொஞ்சம் சைகாலஜிகலாய் யோசித்திருப்பதை உணர்கிறேன். “முட்டாள்களிடம் விவாதம் செய்யாதீர். செய்தால் நீ அவன் உயரத்திற்கு இறங்க வேண்டி வரும். ஆனாலும் அவனது (முட்டாள்) அனுபவம் காரணமாக அவனே ஜெயிக்க நேரிடும்” எனும் மொழி ஞாபகம் வருகிறது. நன்றி !

 8. தாழ்வு மனப்பான்மையில் இருப்பவர்கள் இரக்கத்துக்கு உரியவர்கள். தங்களிடம் இருக்கும் திறமையை/வலிமையை ( எதாவது ஒன்னு இருக்கத்தானே வேணும்?) உணராமல் தன்னிரக்கத்தால் வெம்பி அதை மறைக்க வீராப்பு வேஷம் போட்டு எதிராளியைத் தூக்கி அடிச்சுப்பேசுறவங்களைப் பார்த்து நொந்த அனுபவம் உண்டு.

 9. எளிய முறையில் விளக்கம்… பின்னிப் பெடல் எடுக்கிறிர்கள் போங்கள். இன்னும் நிறைய இந்த மாதிரி எழுத வேண்டுகிறோம்.

 10. அட புதுமையான நடையில் மூடர்களுக்கு உபதேசம்,ரசித்தேன்.அடுத்தவரைப்பார்த்து பொறாமை படுவதால் அவரின் நிறமோ,குணமோ வந்துவிடாது அதற்காக உழைக்கனும்,அய்யோ அவன் மட்டும் வண்டியில் போறானே அப்படி என்று வயிறெறிவதை விட உழைத்து அந்த வண்டியில் போகவேண்டும்.காலுக்கு புது ஷூக்கள் இல்லை என பொறுமும் முன் கால்கள் இல்லாதவனை பார்க்கவேண்டும் சார்,பார்ப்பார்களா?மேற்படியார்?

 11. ரசித்துப் படித்தேன். ‘play the ball, not the player’ என்ற ஆங்கில (பின்னே தெலுங்கா?) idiom நினைவுக்கு வருகிறது.

  மற்ற சூழல்களுக்குப் பொருந்தினாலும் அறிவுபூர்வமான விவாதம் அரசியலுக்குப் பொருந்துமா? பொருந்தினாலும் பார்வையாளருக்கு சுவைக்குமா? முப்பது வருடங்களுக்கு முந்தைய அரசியல் நிலவரம் தான் இன்றைக்கும் இருக்கிறது என்று நினைக்கிறேன். அப்போது பல்லாவரம் பம்மல் அனகாபுத்தூர் குன்றத்தூர் வட்டாரப் பொதுக்கூட்டங்களில் திமுக சார்பில் இந்திரகுமாரி சந்திரகுமாரி என்று சில பேர் பேசுவார்கள். திடுக்கிட வைப்பார்கள் . ஒருமுறை இந்திரகுமாரிக்கு முன்னால் பேசியவர் தர்க்க ரீதியாக அதிமுக ஆட்சியின் அனுபவமின்மையை எடுத்துச் சொன்னார் – கருத்து நினைவிருந்தாலும் ஆளும் சொல்லும் மறந்து விட்டது. இந்திரகுமாரி அடுத்துப் பேசினார். ‘டேய் தொப்பித் தலையா..’ என்று தொடங்கி அவர் பேசிய நிறைய கருத்துக்கள் அப்படியே நினைவிலிருக்கிறது. திடீரென்று பாதிப் பேச்சில் ‘இங்க வாடா.. இத்த …டா பேமானி தொப்பித் தலையா’ என்று சர்ரென்று புடவையை உயர்த்தினார். ஆடிப்போய் விட்டோம். (கைத்தட்டலும் நிற்கவில்லை.)

  எதற்குச் சொல்கிறேனென்றால் விவாதங்களில் பருப்பு சாம்பாரும் உண்டு; கார கோங்குராச் சட்டினியும் உண்டு. கலந்துகொள்பவர்கள் எடுத்தெறிந்து பேசினாலும், பேசாமலே இருந்தாலும் மனப்பான்மையை குறிக்கிறதா? இருக்கலாம். நீங்கள் சொல்வது போல் சிலதுக்கெல்லாம் லாஜிக் பார்க்க முடியாது. தாழ்வு மனப்பான்மைக் காரர்கள் over compensate செய்யும் போது விபரீதமாக முடிவதும் உண்டு.

  எனக்கென்னவோ இந்திரகுமாரி பேச்சு நினைவிலிருக்கும் அளவுக்கு மற்ற அமைதிக்காரர்கள் பேச்சு நினைவிலில்லை (சத்தியமாகப் பேச்சு தான் – நான் தொலைவில் நின்று கொண்டிருந்ததால் சரியாகப் பார்க்க முடியவில்லை :-).

  1. அப்பாதுரைஜி, நீங்க சொல்ற ஸ்பெஷல் எஃபெக்ட்டைக் கேட்கிறப்பவே இது மாதிரி கூட்டத்துக்கு ஷகிலா படம் மாதிரி கூட்டம் பிச்சிக்கும்ன்னு தெரியுது. சொல்ல முடியாது, சிலர் பைனாகுலரோடு கூட வரலாம்!

   எண்பத்தி ரெண்டுல தாம்பரத்தில ஒரு மீட்டிங்.

   அப்ப சிவாஜி ஆக்டிவ் பாலிடிக்ஸ்ல இருந்தாரு.

   ஒரு ஆள் பேசறாரு, “எங்க தலைவர் படத்தில கதாநாயகி ‘அம்மம்மா எனக்கந்த சுகம் சுகம்… அப்பப்பா எப்போது வரும் வரும்’ ந்னு பாடறாங்க. உன் படத்தில அதே கதாநாயகி ‘கூட்டத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ’ ந்னு பாடறாங்க.

   எப்டியெல்லாம் ஃபீல் பண்ணி பேசறாங்கய்யா நாட்ல!!

 12. //நான் தொலைவில் நின்று கொண்டிருந்ததால் சரியாகப் பார்க்க முடியவில்லை//வேறு எப்பொழுதாவது அதை சரியாக பார்த்தீர்களா?இல்லையா?:),இதை மட்டுறுத்த மாட்டீர்கள் தானே?

  1. கண்ணன்ஜி, யார் மனசும் புண் படாமல் எதைச் சொன்னாலும் எனக்கு அதில் அபிப்ராயபேதமில்லை. அதிலும் நகைச்சுவை எனக்கு எப்போதுமே டபிள் ஓக்கே.

  1. கண்ணன், இதை எழுதறப்போ பெரும்பாலும் அடல்ட் ஈகோவிலேர்ந்துதான் எழுதினேன். கொஞ்சம் நர்ச்சரிங் பேரண்ட் இகோவோட பாதிப்பு தெரியும்.

 13. பல நாட்களாக ஏன் அவர்கள் அப்படி என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். உங்கள் அருமையான பயனுள்ள பதிவின் மூலம் பதில் கொடுத்து விட்டீர்கள் .

  நன்றி

 14. நாம் விரும்புகிறோமோ இல்லையோ இதுபோன்ற சொல்லாடலை
  ஜனங்க ரசிக்கத் துவங்கி வெகுநாட்களாக ஆகிறது. அண்ணா அவா்களே ஒருமுறை நடிகையை தொடா்பு குறித்து பேச்சு வந்தபோது, அவரு(ளு)ம் படிதாண்டா பத்தினியுமல்ல, நானும் முற்றும் துறந்த முனிவனுமல்ல எனக் கூறியது
  பத்திாிகையில் வெளிவந்து வெகுஜனங்களால் வெகுவாக ரசிக்கப்பட்டதாக ஒரு செய்தி உண்டு!

  1. நிஜம்தான் பாலகிருஷ்ணன். அந்த வாக்கியத்தில இருக்கிற துணிச்சலான ஒப்புதலை மக்கள் ரசிச்சிருக்கலாம். ஆனால் சொன்னவர் அதில இன்வால்வ் ஆகியிருக்கிற இன்னோரு ஏஜன்ஸிக்கு எம்பாரஸ்மெண்ட் தராம இருந்திருக்கலாம்!

 15. மேலே பம்மியிருக்கிறீர்கள்,நாங்கள் உஷாராகி வெகு நாட்கள் ஆகிறது,பகவத்கீதையே ஒரு உட்டாலக்கடி என்னும் பார்ப்பனர் முகமூடி கிழிக்கும் பதிவை படித்துவிட்டு முடிந்தால் கிழிக்கவும்,பார்ப்பனர்கள் எல்லோருமே தொடைநடுங்கி என உலகுக்கு உரைக்கும் அது.நடுங்குவீர்கள் விரைவில்.

  1. வாங்க முருகேசன். முதல் தடவையா வந்திருக்கீங்க. அல்லது முதல் தடவையா பின்னூட்டம் போட்டிருக்கீங்க. நன்றி.

   தொடை நடுக்கம்ன்னு நீங்க சொல்றது அச்சத்தைன்னு நினைக்கிறேன்.

   விலகிப்போறது எல்லாமே அச்சம் இல்லை. அசிங்கத்தைப் பார்த்தும் விலகுவாங்க, சிங்கத்தைப் பார்த்தும் விலகுவாங்க. நாம இந்த ரெண்டில எதுவாவும் இருக்க வேண்டாம். அன்பான மனிதனா இருந்து யாரையும் விலகிப் போக வைக்காம சேர்ந்து சந்தோஷமா இருப்போம்.

 16. இந்த இடுகையில் பகவத்கீதையும் இல்லை , பார்ப்பானும் இல்லை ஆனாலும் சம்பந்தமில்லாமல் ஆஜராகி, பம்மல் ,கும்மல் பதங்கள் வேறு…யார் பம்மியிருக்கிறார்கள் என்பது பின்னூட்டம் இட்டு விட்டு திருப்பி படிக்கும் பழக்கம் இருந்தால் , படித்து பார்த்து சித்தூரார் தெரிந்து கொள்ளட்டும்..
  ஒரு விஷயம் மட்டும் சம்பந்தமாக உள்ளது… அது ஈகோயிஸ்டிக் / இண்டெல்லக்ச்சுவல் க்கு மீண்டும் ஒரு உதாரணம் .
  ///பகவத்கீதையே ஒரு உட்டாலக்கடி என்னும் பார்ப்பனர் முகமூடி கிழிக்கும் பதிவை படித்துவிட்டு முடிந்தால் கிழிக்கவும்,பார்ப்பனர்கள் எல்லோருமே தொடைநடுங்கி என உலகுக்கு உரைக்கும் அது.நடுங்குவீர்கள் /// படபடப்பு கூடிப்போய் , தாழ்வுமனப்பான்மையின் உச்சத்தில் இருந்து வந்து விழுந்த பதிவிற்க்கு சம்பந்தமில்லாத,ஈகோயிஸ்டிக் வரிகள் ……..
  ///அன்பான மனிதனா இருந்து யாரையும் விலகிப் போக வைக்காம சேர்ந்து சந்தோஷமா இருப்போம்./// மிக மிக குளிர்ச்சி நிலையில் இருந்து வந்தஇண்டெல்லக்ச்சுவல் வரிகள்….
  வாசகர்கள் நிம்மதியாக படித்துக்கொண்டிருக்கும் இந்த வலை ப்பூவில் , இடுகைக்கு சம்பந்தமாக நல்லன எதாவது இருந்தால் எழுதுங்கள்…

  1. மன்னிப்பு கின்னிப்புன்னு பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாங்க ஷண்முகம். நீங்கள்ளாம் என்னைப் புரிஞ்சிகிட்டிருக்கீங்கங்கிறதே ரொம்ப சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு. நன்றி.

  2. ஷண்முகம் சார், உணர்வுகளுக்கு தயவுசெய்து இடந்தர வேண்டாம். வார்த்தைப் பிரயோகங்கள் கவனமா வரணும். என்னை நீங்கதான் இப்போ மன்னிக்கணும்.

 17. அன்பு ஜவஹர் அவர்களுக்கு,

  ஆரம்ப காலகட்டத்திலிருந்தே உங்களின் பதிவை படித்து ரசித்து கொண்டிருக்கிறேன்.

  அதிலும் உங்களிடம் இருக்கும் சுஜாதா வாசனையை நன்றாக உணர்ந்து கொண்டிருந்தேன்.

  வெர்ட்ப்ரஸ் வலைப்பூவில் தனியாக விவரங்கள் எழுதி பின்னூட்டமிட சலிப்பு ஏற்பட்டு பின்னூட்டமிடாமலேயே போயிருக்கிறேன்.

  இந்த இடுகை அந்த சலிப்பை போக்கியது.

  தொடர்ந்து கலக்குங்கள் 🙂

 18. திடீர்னு எதற்கு இந்த மாதிரி பதிவு என்று யோசித்தேன். இப்பதான் இதற்கு முந்தைய இடுகை மற்றும் பின்னூட்டங்களையும் பார்த்தேன். நல்லா சொல்லி இருக்கிறீர்கள். Appreciate your mature approach.

  அனுஜன்யா

 19. திரு.கோவி.கண்ணன்
  அவர்களையும் ஜவஹர் சாரையும் நான் பாராட்டுகிறேன்.அவர் இப்படியே இருந்துவிட்டால் யாருக்கும் எந்த பாதகமோ சஞ்சலமோ இல்லை.கீப் இட் அப்.

  1. காயத்ரிஜி, கண்ணன் நாகப்பட்டினம்காரர். நாகப்பட்டினம்காரங்க நட்பை விட்டுக்குடுக்கமாட்டாங்க! அதே சமயம் தங்களோட கருத்தையும் விட்டுக்குடுக்கமாட்டாங்க!!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s